CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, July 24, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (24/07/12)


வண்ணக்கனவுகள்:
                                                                  Image: madrasbhavan.com
                                                             இடம்: டி.எம்.எஸ், தேனாம்பேட்டை.

அடர் மஞ்சள், கிளிப்பச்சை, ராமராஜன் லிப்ஸ்டிக் ரோஸ் நிற பெயிண்டுகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு விற்காமல் குடோனில் கிடந்ததை கண்டு குமுறி அழுத மொதலாளிகள் அவற்றை 'வாஸ்து கலர்' என்று பிரச்சாரம் செய்து அதில் வெற்றியும் பெற்றனர். இப்போது மம்மி அரசும் அதை சிரமேற்கொண்டு வேலையில் இறங்கி விட்டது. சென்னை நகரின் பல்வேறு சுரங்கப்பாதைகளின் நிறம் மேலிருப்பது போலத்தான் மாறியுள்ளது. இனி தமிழகம் வறுமையில்லா மாநிலம் ஆயிடும் போல்ருக்கே!!
..............................................................................     

Mere Dost Picture Abhi Bakhi Hai:
சுனில் ஷெட்டி ஹீரோவாக நடித்து சென்ற வாரம் வெளிவந்த ஹிந்தி பிக்சர் இது ஹை. சிறுவயது முதலே சினிமாவை சுவாசிக்கும் ஒருவன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சினிமா சார்ந்த மேற்படிப்பை லண்டனில் படிக்கிறான். மும்பை திரும்பி வந்து இயக்குனர் ஆக முயற்சிக்கிறான். பல்வேறு தயாரிப்பாளர்களிடம் தனது 'Cheekh' எனும் சீரியஸ் கதையை சொல்லும்போதெல்லாம் அப்படத்தில் கவர்ச்சி, ஹீரோயிசம் உள்ளிட்ட மசாலாக்களை கலக்க சொல்கின்றனர். அவனுக்கு அவற்றில் எல்லாம் சுத்தமாக உடன்பாடில்லை. இறுதியில் ஒருவர் மட்டும் அக்கதையை படமாக்க சம்மதிக்க ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. 

ஆனால் மும்பை பெரும்புள்ளி ஒருவன் தலையிட்டு தனக்கு தெரிந்தவர்கள் அதில் நடித்தே ஆக வேண்டும் என்று கூற நாளடைவில் ஒரு பக்கா கமர்சியல் படமாக உருமாறுகிறது. இப்படி ஒரு நல்ல சப்ஜெக்ட்டை தமிழில் ராஜேஷ் அல்லது சி.எஸ். அமுதன் போன்றோரிடம் தந்திருப்பின் அம்சமாக இருந்திருக்கும். சுனில் ஷெட்டியின் மொக்கையான நடிப்பால் நன்றாக வர வேண்டிய காட்சிகள் எல்லாம் நீர்த்துப்போகின்றன. ஒரே ஒரு வசனம் மட்டும் மனதில் நிற்கிறது. சுனிலின் நண்பன்: "எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக சினிமாவில் வர வேண்டிய என்னை..."  சுனில்: "ஆர்டினரியாக பார்க்கிறதா திரையுலகம்?" நண்பன்: "இல்லை. வெறும் எக்ஸ்ட்ராவாக". 
.................................................................................      


வெற்றி விழா: 
தனக்கு தானே விழா எடுக்கும் கலைஞரை விஞ்சும் வகையில் எனது 100-வது பதிவு,  ஒரு கோடி ஹிட்ஸ், பதிவுலகில் 25 ஆண்டுகள், பதிவுலகில் இருந்து நான்கு நாட்கள் ஓய்வு பெறுகிறேன் நண்பர்களே, பிரபல திரட்டியில் எனக்கு விழுந்த இரண்டாவது ஓட்டு....இதையெல்லாம் ஏற்கனவே நெஞ்சம் நெகிழும் வண்ணம் பலர் செய்து விட்டதால்... 'இன்ட்லி/யுடான்ஸில் எனது பதிவை இன்று இணைத்த வரலாற்று நிகழ்வை ஒட்டி' பள்ளி தோறும் பல்லி மிட்டாய் தர திட்டம் தீட்டி உள்ளேன். இந்த ஒப்பற்ற சமூக சேவையில் பங்கேற்க விரும்புவோர் 'உள்ளேன் ஐயா' என கை தூக்கவும்.
.................................................................................      

சூர்ய வம்சம்: 
சென்ற சனியன்று கலைஞர் அரங்கில் லியோனியின் சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம் பார்க்க சென்றேன்.தலைப்பு 'திரைப்படங்களில் பெரிதும் வலியுறுத்தப்படுவது காதலா? வீரமா?'. காதல் அணியில் முத்துநிலவன் மற்றும் சேலம் பாண்டியராஜன். வீரம் அணியில் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் இனியவன். மாலை 5.30 க்கு நிகழ்ச்சி எனினும் வழக்கம்போல் ஒரு மணி நேரம் முன்பாகவே அரங்கம் ஹவுஸ்புல். நால்வரில் அதிக ரம்பம் போட்டது பாண்டியராஜன்தான். நடுவர் உட்பட அனைவரும் தலைப்பை விற்று தடம் மாறி அடிக்கடி கலைஞர் துதி பாடுதல் மற்றும் ரெட் ஜெயன்ட் படங்களை குறிப்பிட்டு பேசி புல்லரிக்க வைத்தல்...தாங்கவில்லை.   

மேடமையும் நக்கல் செய்ய தவறவில்லை மேடையில் இருந்தோர். உதாரணம் 'ஆத்தா ஆடு தந்துச்சி, மாடு தந்துச்சி. கரண்ட் மாட்டும் தரல'. கிளுகிளு வார்த்தைகளுக்கும் நிகழ்ச்சியில் பஞ்சமில்லை. லியோனியின் பாட்டுத்திறன் மட்டுமே ப்ளஸ் ஆக பட்டது. மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்த பட்டிமன்றம் வரும் சுதந்திர தினத்தில் 45-50 நிமிட தொகுப்பாக கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
..............................................................................      

கொள்ளைக்காரன்:      
'திண்டுக்கல் தலப்பாக்கட்டி'...இந்த பிராண்ட் நேமை வைத்துக்கொண்டு சென்னையில் கிளைகளை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் ராமாவரத்தில் திறந்த புதிய கிளைக்கு நண்பர்களுடன் விஜயம் செய்தேன். ஒரு மட்டன் பிரியாணி விலை 155. பேருக்கு ஒரே ஒரு மீடியம் சைஸ் மட்டன் பீசும், சில உதிரி பீஸ்களும் மட்டுமே இருந்தன. ''இவ்வளவு பணம் வாங்கறீங்க? ரெண்டு பெரிய சைஸ் பீஸ் கூட போட மாட்டீங்களா? சென்னை தி.நகர், DLF தலப்பாக்கட்டி கடைங்கல்ல கூட இதே அராஜகம்தான் செய்றீங்க. அண்ணா சாலை புகாரி, ஈகா தியேட்டர் பின்புறம் உள்ள முகல் பிரியாணி போன்ற கடைகள் பல ஆண்டுகள் கழிச்சும் நிலைச்சி நிக்கறதுக்கு அவங்க மனசாட்சியோட சர்வ் செய்யறதுதான் காரணம். சென்னைல உணவுக்கலாச்சாரம் அசுர வேகத்துல வளந்துட்டு வருது. தலப்பாக்கட்டி   இல்லைன்னா அவங்களுக்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கு" என்று கூறிவிட்டு வந்தேன். இனி அவர்கள் பாடு.   
................................................................................
மங்கையர் திலகம்: 
பிரணாப் சனாதிபதியாக பதவியேற்றதை பற்றித்தான் நாடெங்கும் பேச்சு. ஆனால் பொட்டியை கட்டும் புண்ணியவதி பிரதீபா பாட்டீல் ஆத்துன சேவைய  பத்தி ஒரு பயலும் வாய தெறக்கல. நன்றி கெட்ட உலகமடா..நானறிந்த பாடமடா. பெரியம்மா 'பவரில்' இருந்த காலத்தில் ப்ளைட்டில் குடும்பத்துடன் வெளிநாடு பறந்த செலவு மட்டும் 205 கோடியாம். 'அம்மாம் பெரிய அமவுண்டு மொய் வச்சி பெரியம்மா சாதிச்சது என்ன?' அப்படின்னு கேள்வி கேட்டா கடவா பல்லுல சூடு வச்சிருவேன். 
..................................................................................  

உனக்காக எல்லாம் உனக்காக: 
புத்தகம் மற்றும் டி.வி.டி.களுக்கான அதிரடி தள்ளுபடி ஸ்பென்சர் பிளாசா லாண்ட்மார்க் கடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஞாயிறு அன்று புது வரவுகள் ஏராளம். டி.வி.டி.க்கள் 50% தள்ளுபடி விலையில். 'இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' ஆபரில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இதில் சாகித்ய அகாடமி விருது வென்ற காவல் கோட்டமும் அடக்கம். தலைநகர வாசிகள் தவற விட வேண்டாம்.
..................................................................................   

ஆயிரம் பொய்கள்: 
நேற்று காலை பல் விளக்கும்போது 'டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்து வற்புறுத்த மாட்டோம்' என்றார் ஆர்டிஸ்ட். ப.சி. வந்து காதில் மந்திரம் ஓதிய பின்பு பேசிய பேச்சது. ப.சி. வந்தால் பத்தும் பறந்து போகும். பத்தோட பதினொண்ணு. அத்தோட இதுவும் ஒண்ணு!!

இப்போது புதிதாக "தனி ஈழ கோரிக்கையில் மாற்றமில்லை. அது 'கை' விடப்பட்டதென்று யாரேனும் சொன்னால் அவர்கள் மக்களால் கைவிடப்படுவார்கள்" என்கிறார் ஆர்டிஸ்ட். இவரும் மக்களால் கைவிடப்பட்டவர் என்பதை நினைவு கூறும் இந்த வேளையிலே...ஒரு காளிமார்க் சோடா குடிக்க தோன்றுகிறது.   
..................................................................................


பிடிச்சிருக்கு: 
நண்பர் ராஜ் அவர்களின் வலைப்பூவில் 'Deforestation' எனும் தலைப்பில் வெளியான புகைப்படம் இயற்கையை அழித்து வாழும் மனித இனத்திற்கான சவுக்கடி. வெட்டப்பட்ட மரத்தின் சிறுநிழலில் இளைப்பாறும் குரங்கின் படம் இரு தினங்களாக மனதை நெருடி வருகிறது. நீங்களும் காண க்ளிக் செய்க: 

ஹால்லிவுட் ராஜ்
..................................................................................
    
பாயும் புலி: 
சல்மான், காத்ரீனா நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் ஆகவுள்ள ஏக் தா டைகர்' படப்பாடல். இந்திய கிளியோபட்ரா காத்ரீனா..மாஷல்லா. என்னத்த சொல்ல!!                                                                       

17 comments:

சென்னை பித்தன் said...

//இன்ட்லி/யுடான்ஸில் எனது பதிவை இன்று இணைத்த வரலாற்று நிகழ்வை //
தொடர்ந்து புதிய வரலாறு படைக்க வாழ்த்துகள் சிவா!

கோகுல் said...

உள்ளேன் ஐயா!

வீடு சுரேஸ்குமார் said...

புதுசு...புதுசா நிறைய வரட்டி..ச்சே திரட்டி அதிலையெல்லாம் இணைக்கலையாக்கும்...!ஆடி காத்துல அம்மியே நகருதாம்.!அரைக்காப்புடி நகருதுன்னு...!

வீடு சுரேஸ்குமார் said...

உமக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை வெட்டிபிளாக்கர்ல இணைச்சதை குறிப்பிடாததை வன்மையாக கண்ணடிக்கிறேன் ச்சே..!கண்டிக்கிறேன்!

வெளங்காதவன்™ said...

:)

வீடு சுரேஸ்குமார் said...

வெளங்காதவன்™ said...
:)
//////////
எலேய் இது என்னலே இது குருவி கக்கா போன மாதிரி!

s suresh said...

மீல்ஸ் பத்தலை! போய் சாப்பிட்டு வரேன்! அட மணி ஓண்ணாகுது வீட்ல லஞ்சுக்கு கூப்பிடறாங்கன்னு சொன்னேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பல்லி மிட்டாய் தர திட்டம் தீட்டி உள்ளேன். இந்த ஒப்பற்ற சமூக சேவையில் பங்கேற்க விரும்புவோர் 'உள்ளேன் ஐயா' என கை தூக்கவும்.////

Thalappaakatti Briyaani illiyaa?

சங்கவி said...

புல் மீள்ஸ் சாப்பிட்ட உணர்வு...

சங்கவி said...

தலைப்பாக்கட்டியில் முதல் ரவுண்டுக்கு ஒரு குழும்பு கொடுப்பாங்க இரண்டாவது ரவுண்டுக்கு ஒரு குழம்பு என அவுங்க டேஸ்ட் ஒவ்வொரு ரவுண்டுக்கும் மாறும்...

பேரை வைத்து ஏமாற்றுகிறார்கள்...

FOOD NELLAI said...

வாரம் ஒரு உணவ்கம் விசிட்டா? தவறைத் தட்டிக்கேட்கும் உங்கள் குணத்திற்கு ஹாட்ஸ் ஆஃப், சிவா.

விக்கியுலகம் said...

டபுள்....மீல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

மயிலன் said...

பிராட்வே யுனிவர்சல் ஷோரூமாண்ட இருக்குற தளப்பாக்கட்டி தரை பண்ணுங்கண்ணே... நல்லா இருக்கு... ஒரிஜினல் தளப்பாக்கட்டின்னு கொஞ்சம் டீஜன்டான கடையும் கூட... மத்த பயலுக எல்லாம் மஞ்ச போர்டு வெச்சு பீலா உட்ரானுங்க....

ராஜ் said...

எல்லாமே சுவாரிசியம்மா இருக்கு பாஸ்....
பட்டிமன்றம் எல்லாம் பார்க்கிறதை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு......
அப்புறம் பாஸ்.....அந்த Deforestation என்னை ரொம்பவே பாதித்தல் தான் பகிர்ந்தேன்...உங்களயும் அந்த படம் ரொம்பவே பாதித்து விட்டது என்று நினைக்கிறன்....

ஜீ... said...

//விற்காமல் குடோனில் கிடந்ததை கண்டு குமுறி அழுத மொதலாளிகள் அவற்றை 'வாஸ்து கலர்' என்று பிரச்சாரம் செய்து அதில் வெற்றியும் பெற்றனர்.//
இதுதான் காரணமா? ஏழு வருஷத்துக்கு முதலே யாழ்ப்பாணத்தில கிளப்பி விட்டுட்டானுங்க போல! பார்த்தா கலவரமாகிற கலர்ல அப்பவே ஆரம்பிச்சுட்டானுங்க..இப்பவும் தொடர்ரானுங்களா தெரியல!

மனசாட்சி™ said...

அட்ரா அட்ரா....யப்பா மூக்கு முட்ட சாப்பிட்டேன் - பரிமாறலுக்கு நன்றி

Jey said...

மெட்ராஸ்காரங்க நல்லாத்தான்யா எழுதுராய்ங்க.....

Related Posts Plugin for WordPress, Blogger...