CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, July 16, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(16/07/12)தங்கைக்கோர் கீதம்:

                                                                       Image:madrasbhavan.com
                                                                    
சனியன்று காலை அண்ணா சாலை தேவி தியேட்டர் அருகே எடுத்த புகைப்படம். வடநாட்டை சேர்ந்த அண்ணன், தங்கை  இருவரும் பெரியோர் துணையின்றி நகரத்தின் பிரதான வீதியில் வித்தை காட்டும் இடம் நோக்கி வேகமாக நடைபோட்ட தருணத்தில்... 
.......................................................................

குள்ளநரி கூட்டம்: 
காமராஜர் பிறந்த நாளுக்கு புதுமையான போஸ்டர் ஒன்றை அடித்து இருந்தனர் சத்யமூர்த்தி பவன் வாசிகள்: 'விரைவில் காமராஜர் ஆட்சி அமைப்போம்'. இந்த வரிகளை படித்து வெறியாகி வருடா வருடம் கட்சி ஆபிஸ் வாசலில் ஒரு தேசத்தியாகி "ஏண்டா..காமராஜர் ஆட்சியைத்தான் காமராஜரே அமைச்சிட்டாரே. நீங்க தங்கபாலு, ஏ.பி.சி.டி. இளங்கோவன் ஆட்சி அமைப்போம்னு சொல்லிப்பாருங்களேன். படுவாக்களா" என்று கத்தி விட்டு செல்வதை காது குடுத்து கேட்பார் இல்லை. பாவம். தங்கபாலு ஆட்சியில் நாங்களும் வாழ்ந்தோம்னு சொல்லிக்கற அந்த பொற்காலம் எப்ப வருமோ? 
........................................................................ 

பிடிச்சிருக்கு: 
பில்லா - 2 குறித்த பல்வேறு விமர்சனங்களை படித்து இருப்பினும், உச்சபட்ச நையாண்டி என்றால் அது கார்க்கி எழுதிய பதிவை சொல்லலாம். வஞ்ச புகழ்ச்சிக்கு சரியான எடுத்துக்காட்டு. ஏற்கனவே மங்காத்தா சீட்டை இவர் கலைத்து போட்ட பதிவும் மெகா ஹிட். இரு பதிவுகளையும் படிக்க:


.........................................................................

பல்லவன்: 
நேற்று மதியம் தி.நகர் பேருந்து நிலையத்தினுள் இருந்த 5A பேருந்தில் சில சாகசங்கள் செய்து ஒரு வழியாக சீட் பிடித்தேன். உள்ளே கூட்டம் நிரம்பி வழிந்தது.  நிலைய வாசலை தாண்டி எங்கள் பேருந்து வலது காலை வைக்க காத்திருக்கையில், அதற்கு முன்பு இன்னொரு 5A நால்வரை மட்டும் ஏற்றிக்கொண்டு பறந்து சென்றது. ஒரே எண்ணை கொண்ட இரு பேருந்துகளில் ஒன்று அதிக கூட்டத்துடனும், மற்றொன்று ஈ ஓட்டிக்கொண்டும் செல்வதைக்கண்டு சிலர் புலம்பினர். யாரேனும் ஒருவர் மேற்பார்வை செய்து காலியாக செல்லும் பேருந்தை சற்று நிறுத்தி  மற்றொரு பேருந்தில் நின்றவாறு பயணிக்கும் மக்களை ஏற்றி விடலாமே? 
..............................................................................

வெற்றிக்கொடி கட்டு: 
ஒலிம்பிக் விழாக்கோலம் பூண்டிருக்கும் லண்டன் நகரம். உலகின் மிகச்சிறந்த திறமைசாலிகள் ஓரிடத்தில். லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் பதினொரு நாட்களே மிச்சம். இந்த பிரம்மாண்ட திருவிழா குறித்த சிறப்பு பதிவுகளின் தொடர்ச்சி விரைவில் மெட்ராஸ் பவன் தளத்திலும், பேஸ்புக் 'வெட்டி ப்ளாக்கர்ஸ்' வாயிலாகவும். 


தொடர்புடைய பதிவுகள்: ஒலிம்பிக்கும் இந்தியாவும்,  லண்டன் ஒலிம்பிக் - 2   
................................................................................

மன்னவன் வந்தானடி: 
"ஜனாதிபதி தேர்தல் முடியட்டும். பிறகு பாருங்கள். எங்கள் ராகுல் காங்கிரசின் பெரிய பதவியில் அமர்த்தப்படுவார். அவர் பிரதமர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" - சொல்லி இருப்பவர் திக்விஜய் சிங். நம்ம ராகுல் தொம்பிதான் காங்கிரசின் அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. இதுல என்ன வெளக்கெண்ணைக்கு நாங்கள் ஆச்சர்யப்பட வேண்டும்? 


பரம்பரை பரம்பரையாக பதவியில் அமரும் 'தியாகி'களுக்கு கவுண்டர் வைத்த ஆப்பு:
   
..................................................................................


பாயும் புலி: 
தேசத்தில் வேகமாக அழிந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க NDTV செய்யும் முயற்சிகள் மகத்தானது. அமிதாப் பச்சனை இம்முறை முன்னணியில் அமர்த்தி புலிகள் குறித்த பல்வேறு செய்திகளை ஒளிபரப்பு செய்தனர். மீடியாக்கள் செய்யும் ஒரு சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சபாஷ்.
.................................................................................... 
முகமூடி: 
எப்படியாவது தமிழ் ஈழத்தை வாங்கித்தந்தே ஆக வேண்டும் என்று ராப்பகலாக, பகல் ராவாக லைவ் வள்ளுவர் தனித்தவில் வாசித்தாலும், கூட இருக்கும் கூட்டணி ஆட்கள் அபஸ்வரம் வாசிப்பதால் கச்சேரி களை  கட்டவில்லை. டேசொவிற்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் கூறிவிட்டது. சும்மா பாகவதர் கச்சேரி எல்லாம் எங்களுக்கு வேண்டாமென மக்களும் கூறிவிடுவர். அதன்பின் உடன்பிறப்பும், தலைவரும் பேசப்போகும் கரகாட்டக்காரன் வசனம்:

"அண்ணே..தனித்தவில், தனித்தவில்னு சொல்லுவீங்களே..அங்க பாருங்க உங்க தவில் உருண்டு போறத.."

"ஏண்டா..தவில கெட்டியா புடிச்சிக்க சொன்னா, உருட்டி விட்டு வேடிக்கையா பாக்குற"
..............................................................................

கற்றது களவு: 
கேபிள் சங்கர் புதிதாக போட்ட கொத்து பரோட்டாவில் 'கமலின் ஆளவந்தான் தாக்கத்தில் கில் பில் அனிமேஷன் காப்பியை வைத்தேன்' என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவாண்டின் டொராண்டினோ (திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் அப்டின்னு வெள்ளைக்காரன் வாயில பூர்ற மாதிரி வச்சிக்கிட்டான். நாமளும் அப்படி ஒரு அகராதிய உருவாக்கணும்)  சொன்னதாகவும், கமல் காப்பி அடித்தார் என்று கூவும் சிலர் இதற்கு என்ன சொல்வீர்களோ? என்றும் கேபிள் கேட்டுள்ளார்.

அது சரி சார். அந்த துரை வெளிப்படையாகத்தானே பேட்டி அளித்துள்ளார். அவர்கள் அதிசயமாக வெகு சில படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆவதற்கும், நம்மூர் ஆட்கள் அதையே குலத்தொழிலாக செய்வதற்கும் வித்யாசம் இல்லையா? இதுவரை தான் சுட்ட படங்கள் குறித்து கமல் இப்படி ஒரு பேட்டி அளித்தது உண்டா?  ஸ்டக் ஆன் யூ படத்தை சுட்ட 'மாற்றான்'  கே.வி. ஆனந்த் காப்பி குறித்து நிருபர்கள் கேள்வி கேட்கையில் சப்பைக்கட்டு கட்டி எஸ்கேப் ஆகி ஓடுவது ஏன்? கமல் தாராளமாக அந்த துரை மீது வழக்கு தொடரலாமே? ஆனால் ஹாலிவுட் ஆட்கள் அதற்கு போட்டியாக வழக்கு தொடர்ந்தால் புருனே சுல்தானின் சொத்தை விற்றாலும் கமலால் திருப்பி தர இயலாது என்பதுதானே நிதர்சனம்? டொராண்டினோ கமலிடம் தெரிவிக்காமல் அக்காட்சிகளை படமாக்கியது தவறுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் குறைந்த பட்ச நேர்மை கூட இன்றி 'ரத்தம் சிந்தி உழைத்தேன்' என்று நம் நாயகர்கள் மேடையில் பேசுவதைத்தான் சகிக்க இயலவில்லை. நானும் கமல் ரசிகனே. ஆனால் அதற்காக ஆழ்வார்பேட்டை ஆண்டவர் செய்யும் செயலுக்கு எல்லாம் மகுடி வாசிப்பது சரியல்ல என்பது என் நிலைப்பாடு.       
...............................................................................

திருடாதே: 
ஸ்டக் ஆன் யூ ட்ரெயிலரும், மாட்டுனான் 'மாற்றான்' ட்ரெயிலரும்:

   

  

.................................................................................

...................................
My other site:
agsivakumar.com    
....................................

...............................................................
சமீபத்தில் (புலம்பி) எழுதியது:

...............................................................   31 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்பெஷல் மீல்ஸ்... சூப்பர் ...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

! சிவகுமார் ! said...

திண்டுக்கல் தனபாலன் சார். 'உங்களைப்போன்றவர்களின்' 'ஊக்குவிப்பால்' தான் நான் பதிவுலகில் இயங்குகிறேன். சூப்பர். நன்றி. தொடருங்கள்.

வெளங்காதவன்™ said...

//தங்கபாலு ஆட்சியில் நாங்களும் வாழ்ந்தோம்னு சொல்லிக்கற அந்த பொற்காலம் எப்ப வருமோ? ///

வாண்ணே! என் இனம் நீ என்பதைத் திரும்பத்திரும்ப நிருபிக்கிறாய்!!!!

ஆங்....

வெளங்காதவன்™ said...

//! சிவகுமார் ! said...

திண்டுக்கல் தனபாலன் சார். 'உங்களைப்போன்றவர்களின்' 'ஊக்குவிப்பால்' தான் நான் பதிவுலகில் இயங்குகிறேன். சூப்பர். நன்றி. தொடருங்கள்.////

என்னவோய்? தலப்பா கட்டி பின்னுறீர்? எதுவும் கட்சி ஆரம்பிக்கலாம்னு ஐடியாவா?

முத்தரசு said...

வெளுத்து கட்டியாச்சி புல் மீல்ஸ்

ப்ளீஸ் ஸ்மால் ரிகுஸ்ட்:: என்னான்னா, லிங்க் கொடுத்தால் அது தனியா ஓபன் ஆகுற மாதிரி... கிளிக் பண்ணிட்டு உங்க பதிவை தொடரலாம் - இப்ப என்னாவுதுன்னா கிளிக் பண்ணா உங்க கதவு மூடி அதே பக்கத்தில் லிங்க் திறக்குதுங்க

கொஞ்சம் கவனிங்க

Unknown said...

கமல் விசயத்தில உங்கள் நிலைப்பாடுதான் நானும்...!ஆனா இரவுவானம்ன்னு ஒருத்தர் நம்ப மாட்டார்....!

ஹாலிவுட்ல நம்ம கமல் படத்தில் இருந்து ஒரு ஒன்லைன் மட்டும் எடுத்திருக்காங்க...மொத்த படத்தையும் காட்சி மாறாம சுடுல...அதற்கே நேர்மையா சொல்லியிருக்கிறார் குவாண்டின் டொராண்டினோ! நம்ம தமிழ் இயக்குனர்கள் மொத்தபடத்தையும் சுட்டாலும் நேர்மையா யாரும் சொல்லுவதில்லை

Unknown said...

கமலின் படத்தில் இருந்து....எடுத்த இயக்குனர் பற்றிய செய்தி
http://www.mid-day.com/entertainment/2012/jul/150712-Quentin-Tarantino-inspired-by-Abhay.htm

அஞ்சா சிங்கம் said...

தனி தவில் வித்வான் நீங்க தான் பாஸ் ........ (டங்கு)வாறு கிழியிர வரைக்கும் வாசிங்க

! சிவகுமார் ! said...

@ வெளங்காதவன்

நம்ம எப்பவுமே 'கட்சியில் சேராதோர் கட்சி'தாங்க.

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

நீங்கள் கூறியது சரிதான். கண்டிப்பாக சரி செய்கிறேன்.

! சிவகுமார் ! said...

@ வீடு சுரேஸ்குமார்

இரவுவானம் என்ன சொன்னாரு?

! சிவகுமார் ! said...

@ அஞ்சாசிங்கம்

கரகாட்ட கோஷ்டில எல்லாரும் ஒண்ணுதேன்!!

பால கணேஷ் said...

ஃபுல் மீல்ஸ். வயிறு நிரம்ப சாப்பிட்டேன் (படித்தேன்). மனசாட்சி சொன்ன அதே குற்றச்சாட்டுதான் என்னுடையதும். சரி செய்ங்க.

MARI The Great said...

///திருடாதே:
ஸ்டக் ஆன் யூ ட்ரெயிலரும், மாட்டுனான் 'மாற்றான்' ட்ரெயிலரும்///

இதை கூட ஒத்துகிரலாம்.., பழைய படத்தை அப்பிடியே ரீமேக் புதுசா ரிலீஸ் பன்னுராங்களே அதை பத்தி என்ன நினைக்கிறார் இந்த மெட்ராஸ் பவன் ஓனர் :)

வவ்வால் said...

//நானும் கமல் ரசிகனே. ஆனால் அதற்காக ஆழ்வார்பேட்டை ஆண்டவர் செய்யும் செயலுக்கு எல்லாம் மகுடி வாசிப்பது சரியல்ல என்பது என் நிலைப்பாடு. //

ஹி...ஹி இதே போல பேசப்போய் தான் தலைவரு எனக்கு பட்டமெல்லாம் கொடுத்தார், ஆனாலும் ஒரே பாசறையில இருந்துக்கொண்டே கேள்விக்கேட்கிற உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு :-))

நேராப்பார்க்கும் போது மண்டையில கொட்டு வைக்கப்போறார் கேபிள்ஜி :-))

நாய் நக்ஸ் said...

:)))))))))))))))))))))))

எப்பதான் சண்டை போடுவீங்க....
காத்துக்கிட்டு இருக்கேன்....
ம்ம்ம்ம்...சீக்கிரம்....

MANO நாஞ்சில் மனோ said...

அந்த தங்கைக்கோர் கீதம் படம் நெஞ்சை தொட்டது...!

MANO நாஞ்சில் மனோ said...

வெளங்காதவன்™ said...
//தங்கபாலு ஆட்சியில் நாங்களும் வாழ்ந்தோம்னு சொல்லிக்கற அந்த பொற்காலம் எப்ப வருமோ? ///

வாண்ணே! என் இனம் நீ என்பதைத் திரும்பத்திரும்ப நிருபிக்கிறாய்!!!!

ஆங்....//

வெளங்காம போச்சே மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

அஞ்சா சிங்கம் said...
தனி தவில் வித்வான் நீங்க தான் பாஸ் ........ (டங்கு)வாறு கிழியிர வரைக்கும் வாசிங்க//

அதான் ஏற்கனவே கிளிச்சாச்சே இன்னுமா இருக்கு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ! சிவகுமார் ! said...
திண்டுக்கல் தனபாலன் சார். 'உங்களைப்போன்றவர்களின்' 'ஊக்குவிப்பால்' தான் நான் பதிவுலகில் இயங்குகிறேன். சூப்பர். நன்றி. தொடருங்கள்./////

...க்க்கும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லவேள கமல் மேல கையவெச்சதோட விட்டீங்க, பவர்ஸ்டார் பத்தி ஏதாச்சும் சொல்லி இருந்தா தமிழ்நாடே கொந்தளிச்சிருக்கும்.....!

! சிவகுமார் ! said...

@ பால கணேஷ்

நன்றி சார்

! சிவகுமார் ! said...

@ வரலாற்று சுவடுகள்

ஒரிஜினல் படத்தை என்றுமே அசைக்க முடியாது நண்பரே.

! சிவகுமார் ! said...

@ வரலாற்று சுவடுகள்

ஒரிஜினல் படத்தை என்றுமே அசைக்க முடியாது நண்பரே.

! சிவகுமார் ! said...

@ வவ்வால்

என்னது கேபிள் பாசறையா?

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்

உங்கள வேணும்னா தூக்கி போட்டு மிதிக்கறோம்.

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

மனோ வருது. அன்பா பேசுது.

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

பவர் ஸ்டார் எனும் 10,000 வாட்ஸ் ட்ரான்ஸ்பார்மருக்கு பயந்துதான் ஆகணும்.

angusamy said...

இங்க தமிழ் நாட்டுல காப்பி அடிக்கிற எந்த ஜென்மத்துக்கும் வெக்கம் இல்லை

சொந்த சரக்குனு கடைசி வரை சாதிப்பானுங்க . latest example தெய்வதிருமகள் விஜய்

அந்த படம் i am sam in காபி இல்லையாம். ஓலக பட விழ எல்லாம் போச்சாம் . எதோ ஒரு பொண்ணு

அழுதுகிட்டே அது வச்சிக்கிட்டு இருந்த சாக்லேட் எல்லாம் சாப்டாம இவருகிட்ட குடுதுசாம்?

யப்பா போன் வயறு அந்து ரொம்பா நாளாச்சு!!

”தளிர் சுரேஷ்” said...

ஃபுல்கட்டு! செம டேஸ்ட்!

காப்பிகாரன் said...

சூப்பர் சூப்பர் சூப்பர்

Related Posts Plugin for WordPress, Blogger...