CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, July 10, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(10/07/12)


புதுமைப்பித்தன்:


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணுமாம்ல........ 

                                       தமிழ் சினிமால டைட்டில் பஞ்சம் தலை விரிச்சி ஆடுதுடோய்..             
............................................................................


யார் நீ?
"உங்கள் சன் டி.வி.யில் ஹ்ஹாலிவுட் சூப்பர் ஹ்ஹிட்  க்கொண்டாட்டம். வரும் ஞாயிறு ம்மதியம் இரண்டு மணிக்கு   'அண்டங்காக்காவை துரத்தும் அட்லாண்டா பூனையும், அதற்கு தோள் குடுக்கும் ஆக்ரோஷ யானையும்'. காணத்தவறாதீர்". இப்படி ஹை பிட்ச்ல ஒரு ஆளு கத்துவாரே. அவர ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். போட்டோ இருந்தாக்கூட போதும். அனுப்புறவங்களுக்கு 1,000 பொற்காசுகள் சாமியோ!!
............................................................................

இயற்கை: 
இந்த வார இந்தியா டுடே இதழில் ஒரு பகீர் எச்சரிக்கை ரிப்போர்ட். ஏற்கனவே இதுபோன்ற எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எழுப்பாமல் இல்லை. இன்னும் சில வருடங்களில் நீருக்காக பெரும் போரே நடப்பதற்கான வாய்ப்பு நம் தேசத்தில் சாத்தியம் என்பதே அது. ஆம். அஸ்ஸாம், ஒடிசா, கோவா, அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் மட்டுமே தேவையை விட சற்று அதிகமாக நீர்வளம்  உள்ளது. ஆனால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பேராபத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றன. அதிலும் தமிழகம் சுத்தம். தேவையை விட மைனஸ் 49% நிலத்தடி நீர் இன்றி காய்ந்து போய் உள்ளதாம்.  
...............................................................................

மண்ணின் மைந்தன்: 
"தி..மு.க. மீது 703 லான்ட் சுருட்டும் கேஸ்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க.வினர் மீது வெறும் 42 லான்டை லபக்கிய கேஸ்கள் மட்டுமே உள்ளன. இது ஆளுங்கட்சியின் அராஜகம்" - சொன்னது நம்ம நேரடி வள்ளுவர்தான். ரெண்டு கட்சி ஆளுங்களும் போற வேகத்த பாத்தா மறதில அவங்கவங்க வீட்டு நிலத்தையே அபகரிப்பு செய்யாம இருந்தா சரிதான். சும்மாவா சொன்னாரு காமராசு 'ரெண்டுமே ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க'ன்னு.
.................................................................................  

ரன்: 
ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லாண்ட்மார்க்கில் ஏகப்பட்ட புத்தங்களை தள்ளுபடி விலையில் போட்டுள்ளனர். 'ரெண்டு வாங்குனா ஒண்ணு இனாம்' ரேஞ்சில் ஏகப்பட்ட தமிழ் புத்தகங்கள். சுஜாதாவின் நாடக, சிறுகதை தொகுப்புகள் உட்பட. ஹிட் புத்தகங்களை பலர் ஸ்வாகா செய்து விட்டனர். ஆங்கில நூல்களும் மலிவு விலையில் உள்ளன. நேரமிருப்பின் சென்னை வாசிகள் சென்று பார்க்க. 
.................................................................................

ஊருக்கு உழைப்பவன்:

                                              ஹேய்..தண்ணித்தொட்டி திறக்க வந்த கன்னுக்குட்டி நான்.              
 
என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே.நீங்க நெனச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே.

     நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற.
..............................................................................

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: 
இன்று காலை பசுமைக்காவலர் யோகநாதன் அவர்களிடமிருந்து ஒரு செய்தி வந்தது. ஓசூர் ராஜேந்திரன் எனும் நண்பர்  5,000 மரக்கன்றுகள் நட உறுதுணை புரிந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட்டு அவரை என்னுடன் பேச சொன்னார். ''இவ்வலைப்பூ வலது உச்சியில் உள்ள yogutree.com லிங்க் மூலம் யோகநாதன் அவர்களை தொடர்பு கொண்டேன்.  அதன்பின் அவருடன் இணைந்து திங்கள் காலை ஓசூரில் இருக்கும் பள்ளிகளில் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம்" எனக்கூறினார். ஓசூர் ராஜேந்திரன் மற்றும் யோகநாதன் இருவருக்கும் பாராட்டுகள். சென்னை யூத் பதிவர் சந்திப்பிற்கு முன்பு தனது இணைய தளத்தை 250 பேர் வாசித்து இருந்ததாயும், அதன் பின் தற்போது அந்த எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கி உள்ளதாகவும் யோகநாதன் அவர்கள் கூறினார். சென்னை யூத் பதிவர் சந்திப்பிற்கு உழைத்த/ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த இனிய செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.   
............................................................................


நெத்தியடி: 
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து உள்ளது. அவர்களால் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற இயலவில்லை. இதைக்கேட்கும்போது 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே'. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய விசாரணை ப.சிதம்பரம் தலைமையில் நடக்கும் என காங்கிரஸ் கூறியதும் அமோகம். கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமையாம். 
..............................................................................   

பொங்கலோ பொங்கல்: 
"ஆளும்கட்சியாக இருந்த'போதை' விட எதிர்க்கட்சியாக இருக்கையில்(!)தான் தி.மு.க. மிகவும் எழுச்சியாக உள்ளது" எனக்கூறி புளகாங்கிதம் அடைகின்றனர் இணைய உடன்பிரப்ஸ். கைல காசு 1,000 ரூவா நோட்டுக்கட்டு புழங்கும்போது வராத எழுச்சி நில அபகரிப்பு கேஸ்ல உள்ள தூக்கி போட்டா வரத்தான் செய்யும். இதுல என்ன பெருமையோ? கொஞ்ச நாளைக்கு அச்சடிச்ச சோறும், அவுன்ஸ் கிளாஸ்ல மோரும்தான் கதி. விதி...!!


நம்ம கவியரசு, டி.எம்.எஸ்., மெல்லிசை மன்னர்கள் கூட்டணில வந்த பலே பாண்டியா படப்பாடல். கழக கண்மணிங்களுக்குன்னே எழுதுன மாதிரி இருக்கு. நடிகர் திலகத்தோட முகபாவங்கள் பலே.  


யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே.
அட அண்டங்காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியலே.


பேரெடுத்து உண்மைய சொல்லி பிழைக்க முடியலே.
இப்போ  பீடிகளுக்கும், ஊதுபத்திக்கும் பேதம் தெரியலே. பேதம் தெரியலே.


நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்.
அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்.
நாளை எங்கே இருப்பார் அதுவும் தெரியலே.
இப்போ நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் பேதம் புரியல்லே.
அட என்னத்த சொல்வேன்டா..தம்பி என்னத்த சொல்வேன்டா.


தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்.
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்.
உண்மை இன்று கூட்டுக்குள்ளே கலங்கி நிற்குதடா.
அட உருட்டும்,பிரட்டும் சுருட்டிக்கொண்டு வெளியில் நிற்குதடா.
அட என்னத்த சொல்வேன்டா..தம்பி என்னத்த சொல்வேன்டா.    


                                                                                                -யாரை எங்கே...


மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா.
மோசம்,வேஷம்,நாசம் எல்லாம் நிறைந்திருக்குதடா.  
காலம் மாறும். வேஷம் கலையும். உண்மை வெல்லுமடா.
கதவு திறந்து பறவை (ஜாமீனில்) பறந்து  பாடிச்செல்லுமடா.
அட என்னத்த சொல்வேன்டா..தம்பியோ என்னத்த சொல்வேன்டா.  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே.
அட அண்டங்காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியலே.


......................................................................................


............................
My other site:
agsivakumar.com
............................11 comments:

முத்தரசு said...

பாட்டு கலக்கல்,... மொத்தத்தில் ஹெவி மீல்ஸ்

வெளங்காதவன்™ said...

//நெத்தியடி:
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து உள்ளது. அவர்களால் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற இயலவில்லை. இதைக்கேட்கும்போது 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே'. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய விசாரணை ப.சிதம்பரம் தலைமையில் நடக்கும் என காங்கிரஸ் கூறியதும் அமோகம். கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமையாம். ///

என்னவோய்? தி.மு.க.வ தாக்கிட்டு அப்புடியே காங்.யையும் சேத்துக் குத்துறீரு? எங்க தலீவர் தங்கபாலு இல்லைன்னதும், குளிரு வுட்டுப்போச்சும் ஓய் உமக்கு!

பால கணேஷ் said...

ஃபுல் மீல்ஸ். சூப்பர்.

நாய் நக்ஸ் said...

NICE SIVA....
:-)

கோவை நேரம் said...

அருமை...

”தளிர் சுரேஷ்” said...

அந்த கண்ணதாசன் பாட்டு வைச்சு பதிவை முடிச்சது செம கலக்கல்! சுவையான சாப்பாடு!

Unknown said...

தண்ணி சண்டை தமிழ்நாட்டுக்கு வராது அம்மாதான் 24 ஹவர்ஸ் தண்ணிவண்டி சேவையை ஆரம்பிக்கறதா சொல்லி இருக்காங்களே

rajamelaiyur said...

//ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய விசாரணை ப.சிதம்பரம் தலைமையில் நடக்கும் என காங்கிரஸ் கூறியதும் அமோகம்//

அடுத்து கன்னி பெண்கள் பாதுகாப்பு குழு தலைவராக நித்தியானந்தா நியமணமாம்

உலக சினிமா ரசிகன் said...

சிவா...முதன்முதலில் திமுக ஜெயித்து...காமராஜர் தோற்கடிக்கப்பட்டபோது...
கண்ணதாசனுக்கு ஏற்பட்ட கோபம்...வருத்தம்தான் அந்தப்பாடல்.

Unknown said...

ஓசூர் ராஜேந்திரன் வைத்திருக்கும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை நீண்டகாலமாக கொடுத்து வருகின்றார்.அவருடைய சேவைக்கு தலைவணங்குகிறேன்!

M.G.ரவிக்குமார்™..., said...

சன்டிவியில் உரக்கக் குரல் கொடுக்கும் அவர் பெயர் "தூரன் கந்தசாமி"!

Related Posts Plugin for WordPress, Blogger...