CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, July 2, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (02/07/12)தங்கப்ப  தக்கம்: 

                                                                            
மணமகன் மருதநாயகம்,மணமகள் மருதநாயகி..இதக்கூட பொறுத்துக்கலாம்.   கடைசில 'தேவி பாரடைஸ் கமலஹாசன் பக்தர்கள்'ன்னு எழுதி இருக்கே. அடங்கப்பா!! போஸ்டர் ஒட்டுற போட்டி மட்டும் வச்சா லண்டன் ஒலிம்பிக்ல நம்ம பயலுகதான் கிளீன் ஸ்வீப் அடிப்பாங்க போல இருக்கப்போய்.
.........................................................................................

மாயா பஜார்:
அக்காவா பீனா, பிஸ்லரி போன்ற காலி தண்ணீர் பாட்டிலையே சில நாட்களுக்கு மேல் உபயோகிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். ஆனால் அதனினும் நான்கு மடங்கு மெல்லிய மறுசுழற்சி செய்யப்பட மட்டரக தண்ணீர் பாட்டிலை 55 ரூபாய்க்கு விற்கின்றனர் பிக் பஜாரில். ராஸ்கோல்ஸ்.
.............................................................................

தேன்மழை: 
பழைய பாடல்களை விரும்பும் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்துள்ளது முரசு சேனல். 'ஹலோ..இந்த பாட்டை எங்க ஆயாவோட அங்கிளுக்கு டெடிக்கேட் பண்ணுங்க', 'நீங்க முட்ட தோச சாப்டீங்களா?' என்று காம்பியர் கொடச்சல் இல்லாமல் தெள்ளிய நீரோடையாக பாடல்கள் ஒலிக்கின்றன. இந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் கலைஞருக்கு சின்ன ஜெ 'ஜே' போட்டுட்டு ஓடிடறேன். 
...............................................................................     

திருவிழா:

                                                                     
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை தொடர்ந்து பார்த்து வந்தாலும் யூரோ கோப்பை போட்டிகளை நேரடியாக பார்ப்பது இதுதான் முதன் முறை. இத்தாலியை 4-0 என்று துவைத்து எடுத்து விட்டது ஸ்பெயின். 2008 யூரோ கோப்பை, 2010 உலக கோப்பை, தற்போது மீண்டும் யூரோ கோப்பை என தொடர் வெற்றிகளை பெற்று உலகின் சிறந்த அணியாக திகழ்கிறது ஸ்பெயின். நான்காவது கோல் தான் அடிக்க வாய்ப்பு இருந்தும் இன்னொரு வீரருக்கு பந்தை பாஸ் செய்த டொரெஸ் போன்ற சுயநலம் இல்லாத வீரர்கள் ஸ்பெயினின் பலம்.


ஜெர்மனிக்கு பிறகு யூரோ கோப்பையை மூன்று முறை வென்ற அணி எனும் பெருமையை பெற்றுள்ளது ஸ்பெயின். ஒருபக்கம் இத்தாலி வீரர்கள் கண்களில் நீர் தேங்க நிற்க மேடையில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டது ஸ்பெயின் வீரர்களால். கண்கவர் வாணவேடிக்கையுடன் முடிந்த இந்த ஐரோப்பிய திருவிழாவை அதிகாலை மூன்று மணிவரை நேரடியாக ஒளிபரப்பிய நியோ ப்ரைம் சேனல் வாழ்க. 
................................................................................... 

தலைநகரம்: 
அண்ணா சாலையில் கிண்டி, சைதை, தேனாம்பேட்டை முதல் சென்ட்ரல் சுரங்கப்பாதை அமைத்த அரசுகள், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நந்தனம் சிக்னல் அருகில் மட்டும் ஒரு சுரங்கப்பாதை/மேம்பாலம் அமைக்க இதுவரை என் முன்வரவில்லை என்பது ஆச்சர்யம்தான். எஸ்.ஐ.இ.டி. கல்லூரி முதல் தேவர் சிலை வரை அடிக்கடி வாகனங்கள் க்யூ கட்டி நிற்பதை இன்னும் எத்தனை ஆண்டுகள் பார்க்கப்போகிறோமோ?
....................................................................................

கலகலப்பு:
ஜூலை 4 அன்று அறப்போராட்டம்(?) நடத்த தி.மு.க. தயாராகி வருகிறதாம். நெருப்பில் இறங்கவும், நெடுநாள் பட்னி கிடக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்என்று கலைஞர் தம் கட்டி பேசி உள்ளார். உச்ச கட்ட காமடி எதுவெனில் போராட்டத்தில் சதிகாரன் எவனாவது ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு நாம்தான் போட்டோம் என வன்முறையை தூண்டுவான். உஷாரு. கைதானால் ஜாமீன் கேட்கக்கூடாது” என அறிவித்து உள்ளார். அதுவும் சரிதான். கட்சியோட வி.ஐ.பி. ஜாமீன்ல வந்தா முரசு கொட்டு, போஸ்டர் ஒட்டி வரவேற்பு தரலாம். உங்களுக்கெல்லாம் கட்சி காசு எதுவும் செலவு பண்ணாது. உள்ளயே கெடங்கஎன்கிறார் போல.
..................................................................................


தில்லாலங்கடி:

குமுதம் ஏகத்துக்கு பில்ட் அப் ஏற்ற, உலகநாயகன் மேடையில் ஒத்து ஊத இசைஞானி எளிமை, தர்மம் பற்றி நெகிழ்வாக பேச அற்புதமாக அரங்கேறியது ‘பால் நிலாப்பாதை’ மற்றும் ‘எனக்கு எதுவோ உனக்கும் அதுவே’ நூல்களின் வெளியீட்டு விழா. உள்ளே என்ன உள்ளது என்பதை மேலோட்டமாக பார்க்கவிடாமல் கவருக்குள் போட்ட புத்தகங்களாக இருந்தன இரண்டும்(மொத்த விலை ரூ.275). பிரித்து பார்த்ததில் ஏமாற்றம் மிஞ்சியதுதான் பாக்கி. பால்நிலாப்பாதையில் இரண்டு அல்லது மூன்று வரியில் ராசா சொல்லும் தத்துவங்கள்/கவிதைகள். அதற்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி உள்ளனர் சில இடங்களில். பகல் கொள்ளை. சரி ‘எனக்கு எதுவோ உனக்கும் அதுவோ’வை புரட்டி பார்ப்போம் என்றால் அங்கும் நமக்கு அல்வாதான். பெரிய சைஸ் எழுத்துகளை அச்சிட்டு பக்கத்தை நிரப்பி உள்ளது குமுதம். இப்படி ஒரு மட்டரக வியாபார தந்திரம் சாமான்ய ரசிகனை ஏமாற்றும் செப்படி வித்தை. வாழ்க குமுதம், ராசா, கமல் காம்பினேஷன்.
......................................................................................

சிவாஜி:
குழந்தை நட்சத்திரங்களுடன் அன்யோன்யமாக நடிப்பதில் நாடகர் திலகத்தை மிஞ்ச எவருமில்லை எனலாம். சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா பாடலில் எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை படாத பாடு படும். இன்ன பிற பாடல்கள் சிலவற்றிலும் அதே போலத்தான். ஆனால் சிவாஜி சம்திங் ஸ்பெஷல். பாபு படத்தில் 'இதோ எந்தன் தெய்வம்' பாடலில் இவருடைய முகபாவம் ஒன்று போதும். உண்ணாத குழந்தையும் ஒரு பிடி அதிகம் உண்ண. டி.எம்.எஸ்ஸின் அற்புத குரலில் இதோ அந்த பாடல்:     
...........................................................................

..................................
My other site:
.................................


...............................................
சமீபத்தில் எழுதியது:

................................................. 


15 comments:

முத்தரசு said...

மீல்ஸ் செமையா மொறையா இருக்கு.

MARI The Great said...

என்னா டேஸ்ட்டு .., ஸ்பெஷல் மீல்ஸ், ஸ்பெஷல் மீல்ஸ் தான்!

CS. Mohan Kumar said...

ஜிவாஜின்னா (எங்க ஊர் பக்கம் அப்படி தான் சொல்வாங்க) உங்களுக்கு ரொம்ப இஷ்டம் போல இருக்கு

நாய் நக்ஸ் said...

இப்படி ஒரு மட்டரக வியாபார தந்திரம் சாமான்ய ரசிகனை ஏமாற்றும் செப்படி வித்தை. வாழ்க குமுதம், ராசா, கமல் காம்பினேஷன்./////

சிவா..நீங்க கலகுரல் படிப்பது இல்லையா....????

அதான் ஏமாந்துட்டீங்க....

! சிவகுமார் ! said...

நன்றி மனசாட்சி, வரலாற்று சுவடுகள்.

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

எனக்கு மட்டுமா?

! சிவகுமார் ! said...

@ நக்ஸ்

படிச்சது இல்லையே...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஸ்பெஷல் சாப்பாடு! கவர்ச்சியில் ஏமாற்றும் தந்திரத்தை குமுதம் இன்றா நேற்றா செய்கிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீல்ஸ்... விருந்து.....!

Unknown said...

மவராசன் கமல் இன்னும் வரல !!!?

Philosophy Prabhakaran said...

// கமல் அருளுடன் //

இதையெல்லாம் மெளனமாக ஆதரிக்கும் கமலை மொதல்ல உதைக்க வேண்டாமா...

Philosophy Prabhakaran said...

// ராசா சொல்லும் தத்துவங்கள் //

வெளங்கிடும்... இறைவன் அனுக்கிரகம் இல்லாம உங்களால ஒரு புல்லைக் கூட நகர்த்திப் போட முடியாதுன்னு சொல்லியிருப்பாரே...

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!மீல்ஸ் அருமை!கடைசி பஞ்ச் செம!!!!

Unknown said...

போஸ்டர பார்த்து மெர்சலா கீதுப்பா....!

திண்டுக்கல் தனபாலன் said...

மீல்ஸ் + கண்ணொளி பாடல் அருமை ! நன்றி !

Related Posts Plugin for WordPress, Blogger...