CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 9, 2012

Shanghai


         
சமீபத்தில் வெளியான விக்கி டோனர் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சிறந்த படைப்பை காணும் வாய்ப்பு கிடைத்தது இச்சினிமா மூலமாக. “இந்திய நகரங்களை லண்டன், ஷாங்காய், டோக்யோ ஆக்குவோம்” என்று அவ்வப்போது அரசியல்வாதிகள் அள்ளிவிடுவதையே டைட்டிலாக வைத்துவிட்டார் இயக்குனர் திபாகர் பானர்ஜி. ‘நல்லாத்தான போயிட்டு இருக்கு’ ரேஞ்சில் இருந்த ஹிந்தி சினிமா இப்போது தென்னிந்திய ரீமேக் படங்களின் மூலம் வசூலை அள்ளிக்கொண்டிருக்க, தனக்கேயுரிய தனி ட்ராக்கில் மீண்டும் பயணித்துள்ளார் திபாகர். இவர் இயக்கத்தில் பெரிதும் பேசப்பட்ட ‘லவ், செக்ஸ் அவுர் தோகா’வை இதுவரை காண சந்தர்ப்பம் அமையவில்லை. எனவே ஷாங்காயை தவற விடக்கூடாது என்பதால் விமர்சனங்களுக்கு காத்திரமால் முன்பதிவு செய்திருந்தேன். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

மகாராஷ்டிரத்தில் இருக்கும் பாரத் நகர் எனும் குடியிருப்பை அகற்றிவிட்டு சர்வதேச வணிகப்பூங்கா அமைக்க முடிவு செய்கிறார் ஆளுங்கட்சியின் (பெண்) முதல்வர். அதற்கு எதிராக குரல் எழுப்ப அயல்நாட்டில் இருந்து வரும் அலி என்பவரை மினி ட்ரக் ஒன்று வேகமாக மோதி ரத்தவெள்ளத்தில் சாய்க்கிறது. அவரின் மாணவி ஷாலினி, ஒரு போட்டோகிராபர் மற்றும் ஒரு நேர்மையான கலெக்டர் ஆகியோரின் செயல்பாடுகளால் அவ்விபத்தின் விசாரணை போகும் பாதைதான் இப்படைப்பின் மையம். மாற்று சினிமாக்களுக்கே உரித்தான ஒளிப்பதிவு. பல காட்சிகள் நேரில் பார்ப்பதை போன்ற உணர்வைத்தருகிறது நிகோஸின் கேமரா ஆளுமை. பெரும்பாலும் இருட்டில் படமாக்கப்பட்டிருப்பது பார்ப்போருக்கு கொஞ்சமே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

அலி எனும் சிந்தனாவாதியாக ப்ரோசென்ஜித், போட்டோக்ராபராக இம்ரான் ஹாஸ்மி, தமிழ்நாட்டை சேர்ந்த கலெக்டராக அபே தியோல். இவர்கள் அனைவருக்கும் சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு (வழக்கம்போல்) பெரிதாக இல்லை என்றாலும், குடுத்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி கதையை நகர்த்த பேருதவியாக உள்ளனர். ஷோர் இன் த சிட்டி போன்ற offbeat திரைப்படங்களில் நடித்து நல்ல துணை நடிகராக வளர்ந்து வரும் பிட்டாபோஷுக்கு கூட பெருமளவு திறமையை காட்டும் சந்தர்ப்பம் இல்லை. ‘தட் கேர் இன் யெல்லோ பூட்ஸ்’ எனும் படத்தில் இந்திய நாயகிகள் எவரும் துணியாத கதாபாத்திரத்தில் ‘கலக்கிய’ கல்கி இங்கும் சபாஷ் பெறுகிறார்.

ஒரு குடியிருப்பை அகற்ற அரசியல்வாதிகள், போலீஸ், கைக்கூலிகள் என அனைத்து தரப்பினரும் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை அங்குலம் அங்குலமாக அலசி இருக்கின்றனர் ஷாங்காயில். மொத்தம் இரண்டே பாடல்கள். பரபரப்பாக பேசப்பட்டு கோர்ட் படி வரை ஏறிய ‘பாரத் மாதா கி’ பாட்டு எகிறி அடிக்கிறது. இந்தியாவை சுரண்டும் ஆட்களின் அசுரக்குரலாக ஒலிக்கிறது இப்பாடல். சமூக போராளியாக அலி மைக்கில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. அவற்றில் ஒன்று: “உங்கள் நிலத்தை அபகரித்து விட்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவார்கள். நம்ப வேண்டாம். நாளை வணிகப்பூங்கா அமைந்த பின் நீங்கள் மீண்டும் இங்கு வந்தால் வாசலில் இருக்கும் செக்யூரிட்டு குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கூட காசைக்குடு என்றுதான் சொல்வான்”.

அபே தியோல் தலைமையில் நடக்கும் விசாரணை கமிஷன் சீன்கள்தான் படத்தின் முதுகெலும்பு. அதிலும் குறிப்பாக இறுதியில் பெரிய அதிகாரியை மடக்கி தியோல் பேசும் வசனங்கள் ஷார்ப். கருத்து சுதந்திரம் இந்நாட்டில் முழுமையாக இல்லை என்பதை ஆங்காங்கே தெளிவாக தோலுரிக்கிறார்  இயக்குனர்.க்ளைமாக்ஸ் சீனில் முக்கிய கேரக்டர்கள் என்ன ஆனார்கள் என்பதை வார்த்தைகள் போட்டு  விளக்குவது, ‘இதுதான் இந்திய ஜனநாயகம்’ என்பதை உணர்த்த ட்ரக் டிரைவர் மற்றும் அவர் மனைவி குறித்து ஓரிரு நொடி விஷுவல் மூலம் அழுத்தமாக பதிவது க்ளாஸ். அதிர்ந்து பேசும் வசனங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் என எதுவும் இன்றியே ஒரு அரசியல் த்ரில்லரை தர முடியும் என்பதற்கு ஷாங்காய் ஒரு சிறந்த உதாரணம். ஹாட்ஸ் ஆப் திபாகர்.

ஷாங்காய்சொல்லி அடித்த மாங்காய்

இந்திய சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படும் ‘பாரத் மாதா கி’ பாடலை இதுவரை ஏழெட்டு முறை கேட்டாகிவிட்டது. எலெக்ட்ரிபையிங்  சாங் பாஸ். கேட்டு(க்கிட்டே)பாருங்க:


................................................................................


................................
My other site:
agsivakumar.com
................................


........................................

சமீபத்தில் எழுதியது:

மிஷ்கின் ஆத்திய சொற்பொழிவு
......................................

13 comments:

Philosophy Prabhakaran said...

சகுனி படமும் இதே சாயலில் இருக்கக்கூடும்.... பொறுத்திருந்து பார்ப்போம்...

! சிவகுமார் ! said...

அப்டியா? சகுனியை சீட்டில் ரெண்டரை மணிநேரம் பொறுத்திருந்து பார்க்க முடிந்தால் சரி. தெலுங்கு டப்பிங் படமான டைகர் விஷ்வாவை நாளை பார்த்துவிட்டு முழுசாக தியேட்டரை விட்டு வெளியே வர வாழ்த்துகள் தம்பி. ஆனாலும் ஒனக்கு துணிச்சல் ஜாஸ்தி டோய்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்திலயும் சீரியஸ் படங்கள் ரெகுலரா வருது போல........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏர் மார் தோ துக்கடா.........

! சிவகுமார் ! said...

முன்பு வித்யாசமான படங்கள் அங்கு நிறைய வந்தது. தற்போது முன்னணி நடிகர்கள் மசாலா ரூட்டிற்கு திரும்பி இருப்பதால் கொஞ்சம் இறங்குமுகம் தான்.

! சிவகுமார் ! said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏர் மார் தோ துக்கடா.........//

என்னது....உங்க மார்ல வெங்காய பக்கோடாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ! சிவகுமார் ! said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏர் மார் தோ துக்கடா.........//

என்னது....உங்க மார்ல வெங்காய பக்கோடாவா?////////

அண்ணே ஏதோ இந்திப்பட விமர்சனம் எழுதி இருக்கீங்களே, போனா போகுதுன்னு எனக்கு தெரிஞ்ச ரெண்டு இந்தி வார்த்தைய போட்டு வாழ்த்தலாம்னு பார்த்தா அதுலயும் குறை கண்டுபுடிச்சா எப்படிண்ணே.......அப்புறம் நாங்களும் என்னிக்கு இந்தி படம் பாக்குறது?

Philosophy Prabhakaran said...

சிவா... டைகர் விஷ்வா பார்க்கவில்லை... உடன்வர ஆடு எதுவும் கிடைக்காததால் திட்டம் கைவிடப்பட்டது...

கோவை நேரம் said...

வர வர தமிழ் படங்கள் நல்ல இல்லை அப்படின்கிறதுக்காக இப்டி அநியாயத்திற்கு ஹிந்தி படமா விமர்சனம் போடறது ரொம்ப தப்புங்க...அதுவும் எனக்கு ஹிந்தி வேற தெரியாது...

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

இங்க மட்டும் என்ன வாழுதாம். ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா' தான்.

! சிவகுமார் ! said...

@ பிலாசபி

அந்த படத்துக்கு சோடி வேற கேக்குதா சோடி.

! சிவகுமார் ! said...

@ கோவை நேரம்

நானே ரொம்ப நாள் கழிச்சி ஒரு ஹிந்திப்பட விமர்சனம் போட்டுருக்கேன். தமிழ்ப்படங்கள் அப்படி ஒண்ணும் மோசமா இல்லியே. தடையற தாக்க நல்லாருக்காம்.

...αηαη∂.... said...

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த படம் ஆனாலும் பாக்க முடியாது எளவு ஹிந்தி தெரியாதே சப்டைட்டிலுடன் D.V.D வரும் வரை பொறுத்திருக்கனும்...,

Related Posts Plugin for WordPress, Blogger...