CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 30, 2012

ஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்


                       
         
ஹாரி போட்டர், பேட்மேன், ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்கள் ஒன்றைக்கூட பார்க்கும் எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. ஆங்கில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது ஜூனியர் ஆர்டிஸ்ட்டிடம் ஹீரோ சும்மா பேசும்போது திடீரென “சூப்பரப்பு” என்று கைதட்டி அரங்கில் ஒரு சிலுப் சிலுப் காட்டும் வகையறா நான் என்பதால், இதுகாறும் கதை புரியாதோ என்ற பீதியில் பாகம் 1,2,3 படங்களை தவிர்த்தே வந்தேன். ஒரு சில மட்டும் விதிவிலக்கு. பெரம்பூரில் சத்யம் தியேட்டரின் கிளை புதிதாக ஓப்பன் ஆகி இருப்பதால் நண்பருடன் ஸ்பெக்ட்ரம் மாலுக்கு ஒரு விசிட் அடித்தேன்.

சிலந்தி கடித்து ஸ்பைடர் மேன் ஆகும் இளைஞன். ஒரு மார்க்கமான ஜந்துவாக மாறும் விஞ்ஞானி. பாசம், ரொமான்ஸ், சண்டை என கலந்து கட்டி உள்ளனர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் இரண்டு சீன்களில் வந்து மறைகிறார். ஹீரோ கட்டிடங்களில் தவ்வும் காட்சிகள் அனைத்தும் நைட் எபெக்டில் இருப்பதால் 3-D கண்ணாடிக்கு குடுத்த காசு பணால். எனினும் போர் அடிக்காத ஒரு அபவ் ஆவரேஜ் மூவி என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்பெக்ட்ரம் மால்..பெரம்பூர் வீனஸ் தியேட்டர்தான் இப்படி உருமாறி உள்ளது. கொச கொச ட்ராபிக் இருக்கும் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ளது இந்த மால். அனைவர் கண்ணிலும் படும் வண்ணம் இல்லாமல் சின்ன சந்தின் உள் பதுங்கி இருக்கிறது. பிக் பஜார், புட் கோர்ட், ஒரு சில கடைகள் அவ்வளவுதான். எக்ஸ்ப்ரெஸ் அவின்யூவின் சாம்பிள் சைசில்தான் உள்ளது ஸ்பெக்ட்ரம்.

                                                                    
இரண்டாம் தளத்தில் எஸ்-2 எனும் பெயரில் சத்யம் ஐந்து ஸ்க்ரீன்களை  ஓப்பன் செய்துள்ளது. நாங்கள் சென்றது ஸ்க்ரீன் - 3. தெளிவான ஸ்க்ரீன், குடுத்த காசுக்கு மேலே ஏசி போடுதல், முன்னே இருப்பவர் தலை மறைக்காத சீட் அமைப்பு , நல்ல லெக் ஸ்பேஸ், படு சுத்தமான சூழல் என எஸ்கேப், சத்யம்(ராயப்பேட்டை) காம்ப்ளக்ஸ்களுக்கு இணையாக உள்ளது எஸ்-2. டஸ்ட் பின் எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால் சீட்டின் தரம் சாதாரணம்தான். குஷன், புஷ்பேக் இல்லை. ஒரு தியேட்டர் மட்டும் பெரிய சைஸ் என்றும் மற்ற அனைத்தும் மினி/மீடியம் என்றும் சொன்னார் ஊழியர் ஒருவர்.


                                               கடுபு இட்லியை ருசிபார்க்கும் தோழர் மகேஷ்

உணவு நீதிமன்றத்தில் (புட் கோர்ட்) மற்ற மால்களில் இருப்பது போல கார்ட் சிஸ்டம் தான். காசு வாங்குவதில்லை உணவகங்கள். கிரெடிட் கார்டில் புட்கோர்ட் கார்ட் வாங்கினால் பத்து ரூவாய் அதிகம் சார்ஜ் செய்கின்றனர். அத்தொகை ரீபன்ட் கிடையாதாம். பாலிமர் எனும் உணவகத்தில் கடுபு எனும் இட்லி வகையை ருசிபார்த்தோம். கிண்ணத்தில் வார்த்தெடுத்த வடிவில் இரு இட்லிகள். நான்கு சாதா இட்லிகளுக்கு சமமான அளவில். விலை ரூ.55. சாம்பார் படு சுமார்தான். இவ்வகை இட்லி கர்நாடத்தில் கிடைக்கும் என்றார் சமையல்காரர்.                                                            

                                                                                          
'இந்தியாவின் சரவணா ஸ்டோர்ஸ்' ஆக வீற்றிருக்கும் பிக் பஜார் வழக்கம்போல் இந்த மாலிலும் கீழ் தளத்தில் கடை விரித்து உள்ளது. ஒண்ணு வாங்குன ஒண்ணு இலவசம் ரேஞ்சில் பல பொருட்கள் உள்ளன. பேக் செய்யப்பட பல உணவுப்பொருட்களின் தரம் பல்லிளிக்கிறது. சொத்தையான வேர்க்கடலை பாக்கெட், மட்ட ரக எண்ணையில் பொறித்த சிப்ஸ் போன்றவற்றை கண்டு எரிச்சல் வந்தது. சாதாரண கடையில் திடுதிப்பென புகுந்து போலி/கலப்பட பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற மேல்தட்டு கடைகளை கண்டு கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் பெரம்பூர் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் மால் ஓரளவுக்கு சரிப்படலாம். குறுகலான  பேப்பர் மில்ஸ் சாலை, சிறு எண்ணிக்கையில் உள்ள கடைகள்  போன்றவற்றை வைத்து பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பெரிதாக மக்களை கவர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

நஸ்ருதீன் ஷா நடித்த மாக்ஸிமம், மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல்....மினி விமர்சனம் விரைவில்.
.................................................................................
  
Images: madrasbhavan.com    9 comments:

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!விமர்சனம்???????????!!!!!

Unknown said...

சனிக்கிழமை கோட்டா முடிஞ்சுது..!!!

M.G.ரவிக்குமார்™..., said...

வீனஸ் தியேட்டர் ஓனரை ஏமாத்திப் புடுங்குன எடமாமே அது!வழக்கம் போல பதிவு நல்லா இருக்கு!

முத்தரசு said...

ஸ்பெக்ட்ரம் மால்......ம்

முத்தரசு said...

//மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல்....மினி விமர்சனம்//

மினி மீல்ஸ்... ம்

”தளிர் சுரேஷ்” said...

இது திரை விமரிசனமா? தீனி விமரிசனமா? எனிவே ஐட்டம் சூப்பர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஷ்பூ இட்லி கேள்விப்பட்டிருக்கேன், அது என்னய்யா கடுபு இட்லி?

உணவு உலகம் said...

/ சாதாரண கடையில் திடுதிப்பென புகுந்து போலி/கலப்பட பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற மேல்தட்டு கடைகளை கண்டு கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.//
1.கடைக்காரரிடமே தரம் குறித்து வினவியிருக்கலாம்.
2.தரம் குறைந்ததென சந்தேகம் வந்துச்சா, பில்லோட மூணு பாக்கட் வாங்குங்க. பகுபாய்விற்கு அனுப்புங்க.தரம் குறைந்திருந்தா, தண்டனை நிச்சயம் உண்டு.
3.அங்கிருந்தே அலைபேசியில், உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவித்திருக்கலாம்/வெள்யில் வரவேண்டுமே என்று பயமாயிருந்தால், வந்த பின்னராவது எழுத்து மூலம் புகார் தெரிவித்திருக்கலாம்.
தகவலுக்காக, நன்றி சிவா.

CS. Mohan Kumar said...

ஆஹா உங்க பதிவை படிக்கும் போதே ஆபிசர் சாரை பற்றி நினைதேன். சரியா வந்து தீர்வும் சொல்லிருக்கார். அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...