இதற்கு முன்பாக சங்கர் அவர்கள் எழுத்தில் வெளிவந்த ஐந்து புத்தகங்களில் நான்
படித்தது ‘சினிமா வியாபாரம்’ மட்டுமே. அடுத்து காத்திருந்தது ‘சினிமா என் சினிமா’விற்காக.
உலக சினிமாக்களை பார்த்து விட்டு ‘ப்ளடி..என்ன படம் எடுக்கறாங்க இங்க?’ என்று சதா
சர்வகாலமும் உள்ளூர் படங்களை வெறுத்தொதுக்கும் நபர்கள் ஒரு வகை. நம்பியார் நம்ம
வாத்தியார் உதட்டோரம் ரெண்டு தரம் தக்காளி சட்னி ஊற்ற வைத்ததும் அதைக்கண்டு
பொறுக்காமல் கையில் இருக்கும் கத்தியை திரை கிழியும் அளவிற்கு தூக்கி வீசி ‘அதாலேயே
அவன் தொப்புளை கீறு தலைவா’ என்று பொங்கும் பட்டாளம் இன்னொரு வகை. இப்படி இரு
எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே யதார்த்தமாக பயணித்தவாறு சினிமா குறித்த நல்ல புரிதலோடு அத்துறையில் நீண்ட
காலம் இயங்கும் லைவ் வயர்தான் கேபிள் சங்கர். இவர் எழுதும் வெள்ளித்திரை சார்ந்த புத்தகங்களை
படிப்பதற்கு ஆவல் வர முக்கிய காரணம் - காசுவல் ரைட்டிங். அவ்வகையில் முதல் பிரதியை வாங்கி சுடச்சுட நான் படித்த ‘சினிமா என் சினிமா’ பற்றிய எனது பார்வை உங்கள்
பார்வைக்கு.
ஜான்சிராணி எனும் புதிய பதிப்பகத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இந்நூலின்
விலை 70 ரூபாய். திக்கான பளபளா அட்டையுடன் மொத்தம் 102 பக்கங்கள். அழகாக டிசைன் செய்து இருக்கிறார் சென்னைப்பதிவர்
‘வலைமனை’ சுகுமார். சமீப காலங்களில் வெளியான 27 திரைப்படங்கள் குறித்த
விமர்சனங்களின் தொகுப்பே இப்புத்தகம். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல. பாத்துருவோம் பாஸ்’
‘அட...படம் நல்லா இருக்கும் போல’ ‘நேர்த்தியான விமர்சனம். அருமை’, அனைத்திலும்
உச்சமாக முழு விமர்சனத்தையும் படித்து விட்டு ‘படம் பாக்கலாமா? வேணாமா?’ என்று
கேபிளின் இணையத்தில் திரை விமர்சனங்களுக்கு கமன்ட் போட்டு எகிறி ஓடிய அன்பர்கள்
பரிகாரம் தேட ஒரு வாய்ப்பை தந்துள்ளது இந்நூல். ஏழாம் அறிவு, அவன் இவன், அரவான்
போன்ற படங்களுக்கு நிறைய இடம் ஒதுக்கி கொத்து பரோட்டா போட்டுள்ளார் ஆசிரியர்.
டெல்லி பெல்லி, சாஹிப் பீவி அவுர் கேங்க்ஸ்டர், வெங்காயம் என நான் பார்க்காத
படங்களை எப்படியும் பார்த்தாக வேண்டிய ஆவலை தூண்டுகின்றன விமர்சனங்கள்.
முதல் சில பக்கங்களை திருப்புகையில் ‘முன்னுரை, என்னுரை, புகழுரை’ என்று
எதுவுமின்றி நேரே எங்கேயும் எப்போதும் விமர்சனத்துடன் ஆரம்பித்துள்ளது நன்று. ‘இந்த
நூலின் ஆசிரியர் உலக சினிமா டிவிடியை மிக்சியில் அரைத்து முப்பொழுதும் நாலு க்ளாஸ்
குடுக்கும் அளவிற்கு வித்தகர்’ ரீதியில் வழக்கமாக புல்லரிக்கும் புத்தகங்களின்
முதற்பக்க க்ளிஷேவை தவிர்த்துள்ளார் கேபிள். பக்கங்களை தாண்ட தாண்ட கமா,
முற்றுப்புள்ளி மற்றும் எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. இதைக்கவனிக்க
எப்படி தவறினர் என்பது முக்கியமான கேள்வி. Dirty
Picture – dirtry picture, Vicky donor – Vicky doner என தலைப்பிடப்பட்டு
உள்ளதும் குறையே. இனி வெளியிடவுள்ள புத்தகங்களில் கடுமையான ப்ரூப் ரீடிங் அவசியம் சாரே.
‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனத்தில் ‘அஞ்சலியை பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றுகிறது’ என துள்ளி குதிக்கிறார் ஆசிரியர்.
பாத்து சார். டபுள் கோட்டிங் கையோட வந்துற போகுது. மயக்கம் என்ன படத்தில் ‘கண்
கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ்’ இருந்ததாக சொல்கிறார். போங்க சார் ஆனாலும்
நீங்க ரொம்ப தமாசு. ‘ஆடுகளத்தில் பெரியவர் ஜெயபாலன் மற்றும் கிஷோருக்கு முறையே
ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி டப்பிங் தந்துள்ளனர்’ போன்ற தகவல்கள் சராசரி
ரசிகனுக்கு புதிது. மங்காத்தா எங்கிருந்து சுடப்பட்டது என்று லிஸ்ட் போட்டு, ஒரிஜினல்
எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஒரு சில பதிவர்களை லேசாக
சுரண்டியும் பார்க்கிறார் சங்கர் நாராயண். நூலில் வந்த விமர்சனங்களில் குட் நைட் குட் மார்னிங்(ஆங்கிலம்) மற்றும் விக்கி
டோனர்(ஹிந்தி) இரண்டையும் பரிந்துரைத்து என்னை தியேட்டருக்கு அழைத்து சென்றார் கேபிள்.
இரண்டுமே சிறப்பு. குட் நைட் குட் மார்னிங் சில நாட்களே தியேட்டர்களில் வலம்
வந்தது. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி.யில் தவறாமல் பாருங்கள்.
சிறந்த சினிமா விமர்சகர் ஆவதற்கு முக்கிய தகுதிகள் சில உண்டு.
ஒளிப்பதிவு, பின்னணி இசை பற்றி போதிய அறிவு/தீவிர ஆர்வம், படத்தில் நடித்த சிறு
கேரக்டர்கள் குறித்த தகவல்களை கூறுதல், படம் தேறுமா, தேறாதா என்பது குறித்த வணிக சூட்சுமம் உள்ளிட்ட சில. இது போன்ற நுட்பமான மற்றும் புதிய விஷயங்களை விமர்சனங்களின் ஊடே தருவது கேபிள்
சங்கரின் ப்ளஸ் என்பதற்கு ‘சினிமா என் சினிமா’ ஒரு சாம்பிள். வரும் ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் இந்நூல் வெளியீடு நடக்க உள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாசர், அம்புலி இயக்குனர்கள் ஹரீஷ் நாராயண் – ஹரி சங்கர்,
கிருஷ்ணவேணி பஞ்சாலை இயக்குனர் தனபாலன் ஆகியோர் வரவுள்ளனர். வாழ்த்துகள் கேபிள்
சங்கர். ‘சாப்பாட்டுக்கடை’ புத்தகம் சீக்கிரம் ரிலீஸ் செய்க!!
சினிமா என் சினிமா – பெப்பர் பாப்கார்ன்
.............................................................................
10 comments:
விமர்சனத்துக்கு விமர்சனம்.....
:-)
அஞ்சலியை பற்றி தப்பாக சொன்ன சிவாவை வன்மையாக கண்டிக்கிறோம்
கேபிள் மோசமான ஆளு. கலகலப்பு மூலம் அஞ்சலி கூட பேச ஆரம்பிச்சிருக்கார். இந்த புக்கை கொண்டு போய்
அஞ்சலியிடம் குடுத்து " எங்கேயும் எப்போதும் விமர்சனம் படிங்க" என புக்கையே லவ் லெட்டர் ஆக்க சாத்திய கூறுகள் உண்டு
அக்கு வேறா, ஆணி வேறா அலசிட்டீங்க போங்க.
நல்லதொரு கலைஞன் மட்டுமே இப்படியொரு படைப்பை ரசித்துப் படைக்கமுடியும். ரசித்துப் படைத்த ’தலை’க்கும், அதை ருசித்து பகிர்ந்த சிவாவிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.
இப்பவே டிஸ்கவரி புக் பேலஸிற்கு புத்தகம் வேண்டி அட்வான்ஸ் மெயில் அனுப்பிடலாமா?
பாஸ் இது என்ன இலவச பொஸ்தவமா?
70 ரூ என்பது ரொம்ப விலை ஜாஸ்தி , அதுக்கு ரொம்ப ஓவர் வாசிப்பு உங்களுது :-))
102 பக்கத்துக்கு 15 ரூ தான் விலை வைக்கணும் ,பதிவு எழுதுறவங்க எல்லாமே ஜமீந்தார் குடும்பம் போல :-))
படிச்சதும் கமெண்ட் போட்டுட்டேன் , இதை வச்சு ஆள் ஆளுக்கு பஞ்சாயத்து பண்ண கிளம்பிடுவாங்க பொழப்பத்தவங்க, 102 பக்கம் உள்ள சினிமா விமர்சன புத்தகத்துக்கு 70 ரூ விலை என்பது அதிகம். அதையே சொன்னேன். சினிமா பார்க்கிறதே காசுக்கு தண்டம் இதுல விமர்சனம் செய்ததை வேற காசு கொடுத்து வாங்கி படிக்கணுமா? என நினைப்பவன் நான்.
பொன்னியின் செல்வன் ஒரு பாகம் 15 ரூ னு பெல்ஸ் ரோட்டில வாங்கிற ஆளு ,எனவே இது என் கருத்து பணக்கார பதிவர்கள் எல்லாம் இது போல நூல்கள் வாங்கி வாசிக்கலாம்!
புத்தகம் ஒரு லட்சம் பிரதி தாண்டி விற்க வாழ்த்துகள்.........(அப்பத்தானே கேபிள் பார்ட்டி வைப்பாரு)
சூப்பரான அலசல்....!!!
புத்தகவிமரிசனம் அருமை!
Post a Comment