ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரூன், பீட்டர் ஜாக்ஸன்...சினிமா
ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான இயக்குனர்கள். நான் முதன் முதலில் திரையில்
பார்த்து வெகுவாக பிரமித்த படம் ஜுராசிக் பார்க். அதன் பின் டைட்டானிக். ஆனால்
லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முதல் பாகத்தை பார்த்த பின்பு மந்திரித்து விட்டவன் போல அரங்கில்
இருந்து வெளியே வந்தேன். எப்பேர்பட்ட பிரம்மாண்டம்? அதை இயக்கிவர் தல பீட்டர்
ஜாக்ஸன் என்றதும் அண்ணாத்தையை நேரில் பார்த்து சலாம் போட மனது படபடத்தது. அடுத்த
சில மாதங்களில் மூன்று பாகத்தையும் தனியே நான்கைந்து முறை மீண்டும் மீண்டும்
பார்த்தேன். விஷுவல் எபக்ட், சிகை மற்றும் உடையலங்காரம், லொக்கேஷன், விறுவிறுப்பான
காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் மனதை கொள்ளை கொண்டன. இவ்வளவு கதாபாத்திரங்கள் எங்கிருந்து
வந்தன, பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்பதை அறியும் ஆவல் நீண்ட
நாட்கள் இருந்து வந்தது. முன்பொரு காலத்தில் ஸ்பென்சர் லாண்ட்மார்க் புத்தகக்கடையில்
லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முழுக்கதை கொண்ட மெகா சைஸ் புத்தகம் மற்றும் behind the scenes டி.வி.டி. இரண்டையும்
சேர்த்து 2,000 ரூபாய்க்கு விற்றனர்.
அதிக விலை என்பதால் வாங்காமல் வருத்தத்துடன் இல்லம் திரும்பினேன். ஆனால் தற்போது நண்பர்
கருந்தேள் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படைப்பில் வெளியாகி இருக்கும் வார் ஆப்
தி ரிங் மின்னூலை படித்ததன் மூலம் அக்குறை தீர்ந்ததில் பெருமகிழ்ச்சி.
ஒரு திரைப்படம் குறித்து 280 பக்கங்கள் எழுதுதல் என்பது ஒரு இமாலய
முயற்சி. அதுவும் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்ற அதி பிரம்மாண்ட களத்தை கொண்ட
படைப்பை அவ்வளவு எளிதில் தமிழில் மொழிபெயர்த்து சற்றும் சோர்வடைய வைக்காமல் வாசிக்க
வைப்பதென்பது மிகக்கடினமான வேலை. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் fanatic ஆல் மட்டுமே இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியும் என்பது நான்
உள்ளிட்ட LOTR Fanatics – களுக்கு மட்டுமே
முழுமையாக தெரியும். பீட்டர் ஜாக்ஸன் இந்த சீரிசை உருவாக்க பட்ட பாடுகள், கிராபிக்ஸ்,
இசை, ஓவியம் என சகல விஷயங்களையும் அருமையான விரிவாக்கம் மற்றும் எளிய தமிழில்
எழுதியுள்ளார் நூலாசிரியர். இது போன்ற அதிக பக்கங்களை கொண்ட படைப்பை படிக்கையில்
ஆங்காங்கே ஹ்யூமர் டச் இருந்தால் வாசிப்பு பயணம் தொய்வின்றி செல்லும் என்பதை
உணர்ந்திருக்கிறார் தி ஸ்கார்ப். உதாரணம்: சிறுவனாக இருந்த ஜாக்ஸன்
வளர்ந்தான்(சைக்கிள் பெடலை சுற்றாமலேயே). அதுபோல சின்ன சின்ன யூகிக்க முடியாத
ஆச்சர்யங்களை தருவதும் ஒரு எழுத்தாளனின் ப்ளஸ். WETA (பக்கம் 25)
என்பதன் விரிவாக்கம் உண்மை என்று படிக்கும் நமக்கு அதன் நிஜ
அர்த்தத்தை அடுத்த வரியில் காண்கையில் ஜெர்க் அடிக்காமல் இல்லை. ராபர்ட் ஷேய் என்பவரிடம்
வீடியோவை போட்டுக்காட்டிவிட்டு ஜாக்ஸன் படபடப்புடன் காத்திருக்கும் தருணத்தை
விளக்கும் வரிகள் க்ளாஸ். பக்கம் 33 இல் வைத்த சஸ்பென்ஸை 37 இல் உடைக்கும் கட்டம் நமது பல்ஸை எகிற
வைக்கிறது.
முதல் சில அத்யாயங்களில் லாஜிக்குடன்
விஜய், நடிகர் கமல்(ராஜேஷின் பேரபிமான ஹீரோ) போன்றோரையும் கொடுக்கினால் பதம் பார்க்கிறது
கருந்தேள்( திங்க் க்ளோபல். ஆக்ட் லோக்கல்!!). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும்
அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல? டோல்கீன் மற்றும் ஜாக்ஸனின் ‘ரிங்ஸ்’
எனும் மெகா தீம் பார்க்கில் குறுக்கு சந்தில் ஆட்டோ ஓட்டிய வண்ணம் இடதில் கையை
காட்டி வலதில் இன்டிகேட்டர் போட்டு நேராக செல்வோர் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் கருந்தேள். (ஆட்டோ எண்: LOTR-100). நூலை தொகுத்த விதத்தில் ஒரு சில திருத்தங்கள் இருந்திருக்கலாம்
என்பதை ராஜேஷிடம் கூறினேன். அவற்றில் ஒன்று: வலது ஓரத்தில் வரிகள் முடிகையில் அந்த
வார்த்தை முழுமை பெறாமல் அடுத்த வரியில் தொடர்வது. குறிப்பிட்ட ஒரு இடையூறால் அதை
சரி செய்ய இயலவில்லை என்றும் மறுமுறை அதை நிவர்த்தி செய்வதாயும் கூறியுள்ளார். அது
போல ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பின் ஆங்கில சொற்களுக்கு கீழே தமிழிலும் தலைப்பு
வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து. வார் ஆப் தி ரிங்ஸ் போன்ற மற்றொரு முயற்சியை (குறிப்பாக கமல் சுட்ட படங்கள்)
ராஜேஷ் அண்ட் கோ மேற்கொள்கையில் அப்படைப்பு வீடியோவில் பதிவு செய்யப்பட கலந்துரையாடலாக
இருப்பின் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ராஜேஷ் - Lord of the ring
‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ எடுக்கப்பட்ட லொக்கேஷன்கள்(நியூசிலாந்து) மற்றும் அதற்கென
இருக்கும் பிரத்யேக அரங்கங்களை சுற்றிப்பார்க்காமல்(முடிந்தால் ஜாக்ஸனையும்
கண்டுகொண்டு) எழுத்தாளரின் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பதென்னவோ உறுதி. இம்மின்னூல்
வெளிவந்த சில நாட்களில் தினகரனில் முழுப்பக்க கவரேஜ் வந்தது. ‘வார் ஆப் ரிங்ஸ்’ படைத்த குழுவினரின்
உழைப்பிற்கு கிடைத்த பெருமை.
தொடர்புடைய பதிவுகள்:
Massive எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு கேரக்டர்களை(உதாரணம்
போர்க்கள வீரர்கள்) தனித்தனியே சிந்திக்க வைப்பது குறித்த பக்கங்கள் நம்மை பிரமிப்பில்
ஆழ்த்துகின்றன. அயல்நாட்டில் எவனோ ஒருவனின் உழைப்பில் உருவாகும் படத்தை அனுமதி
இன்று அச்சு அசலாக சுட்டு இங்கு கல்லா கட்டுவதோடு மட்டுமின்றி ‘இந்த படத்துக்கு
ராப்பகலா நாயா உழைச்சேன். ஆந்தையா குலைச்சேன்’ என்று பேட்டி தரும்
பிரம்மாக்களுக்கு மத்தியில், LOTR போன்ற சினிமாவை எடுக்க
ஹாலிவுட் கலைஞர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியை திரைப்பட ரசிகர்களுக்கு வியாபார
நோக்கமின்றி விருந்தாக அளித்த இந்த பதிவுலக நண்பர்களுக்கு சபாஷ் போடலாம்.
பெல்லோஷிப், டூ டவர்ஸ், ரிடர்ன் ஆப் தி கிங் மூன்று பாகங்களையும் மறுமுறை
கணினியில் பார்க்கையில் அருகே வார் ஆப் தி ரிங் நூலின் தமிழாக்கத்தை படிக்க
உள்ளேன். அப்படியொரு பயணத்திற்கு இந்த ஹாப்பிட்டை(நாந்தேன்) அழைத்து செல்ல
காரணமாய் இருந்த ‘காண்டால்ப்’ கருந்தேள் மற்றும் அவருடன் பணிபுரிந்த நண்பர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
........................................................................................
9 comments:
அவர்களின் உழைப்பும், விரிவான அலசலும், விமர்சனமும் பிரமிக்க வைக்கின்றது......ராஜேஸ் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
நான் இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. ஒரு லுக் மட்டும் விட்டிருக்கிறேன். அதில் ராஜேஷ் அவர்கள் குழுவின் செய்நேர்த்தி பிரமிக்க வைத்தது சிவா. நீங்கள் எழுதியதால் உடனே படிக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது. நன்றி.
கருந்தேளின் பல்வேறு பதிவுகளும் வியக்க வைக்கின்றன. ஆனால் இவர் எப்படி சாருவை ரசிக்கிறார், ஆராதிக்கிறார் என்பது மட்டும் புரியாத புதிர். விரைவில் இவ்விஷயத்தில் தெளிவார் என நம்புவோம்
நான் சமீபத்தில்தான் படிக்கத் தொடங்கினேன்........ பார்த்துப் பார்த்து கோர்த்திருக்கிறார்கள்........ அட்டகாசம்....!
ஹாலிவுட்டில் திரைப்படம் எடுக்கவே புதிய தொழில்நுட்பங்களை கண்டுப்பிடிக்க,ஆய்வு செய்ய நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகப்பார்த்தால் நாம் 50 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறோம்.ரெட் ஒன் கெமராவுக்கே பெருமைப்பட்டு கொள்ளும் நிலை தான்.இன்செப்ஷன் படம் சூட்டிங்க் செய்தது மொத்தம் 60 நாட்கள் தான் ஆனால் படம் முடிக்க சுமார் 2 ஆண்டுகள் ஆச்சு, அவர்கள் நாட்களை செலவிடுவது பிரி ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு தான். இங்கே ஆரம்பிக்கிறது நமக்கும் ஹாலிவுட்டுக்குமான வித்தியாசம்.
மோஷன் கேப்சரிங் & பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்க் பற்றி எனது பதிவு.
கோச்சடையான்
நமக்கு இதை படிக்க எல்லாம் எங்கேய்யா நேரம் இருக்கு ம்ம்ம் நடக்கட்டும்.
எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ!
நண்பர் சிவகுமார். . . கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை. உங்கள் விரிவான அலசலுக்கு எங்கள் டீமின் மனமார்ந்த நன்றிகள்.
இந்த மின்புத்தகம் இந்த அளவு அட்டகாசமாக வந்திருக்கிறதென்றால், டிஸைன் தான் அதற்குப் பிரதான காரணம். அதை முற்றிலுமாக முடித்தவர் ஹாலிவுட் பாலா. இலங்கையைச் சேர்ந்த சஜீவன் மற்றும் மும்பையைச் சேர்ந்த மோகன் பொன்ராஜின் உதவியுடன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால், அதனை அழகாக present செய்தால் மட்டுமே அது மக்களுக்குப் போய்ச் சேரும் அல்லவா? ஆகவே டிஸைன் credits அவருக்கே :-)
நல்லா எழுதியிருக்கீங்க.
Post a Comment