CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, June 15, 2012

எடோ கோபி ஞான் கேரளா போயி – 6

                                                           
                                       கேரளத்து பெண்கள் போட்டோ கேட்டு நச்சரித்த நல்லவர்களுக்கு..

சில ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் விளைவாக கண்பார்வையை சேர நாட்டு ஆண்கள் இழக்க துவங்கியதும் ஏ.கே.ஆண்டனி அவர்கள் அதை தடுக்க எண்ணினாராம். எனவே அரசு அனுமதி பெற்ற கள்ளுக்கடைகள் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டூப்ளிகேட் சரக்கு கொடிகட்ட பறந்த நாட்களில் திருடன் போலீஸ் விளையாட்டுக்கு பஞ்சமா என்ன? ஆறுகளை ஒட்டிய வனப்பகுதிகளில் கேன் சாராய வியாபாரம் களைகட்டிய நாட்களில் போலீஸ் ரெய்டு வந்தால் நம்ம வியாபாரி சாராய கேனை ஆற்றில் போட்டுவிட்டு துள்ளி நீந்தி எதிர்க்கரைக்கு ஜம்ப் ஆகி விடுவார். அப்படியே ஆற்றின் கீழே இருக்கும் சகாவுக்கு ஒரு சிக்னலும் பாஸ் ஆகிவிடும். நீந்தி வரும் கேனை சகா சாவகாசமாக எடுத்துக்கொண்டு எஸ்கேப். இதைத்தடுக்க மப்டியில் வந்து பம்ப் அடிக்க ஆரம்பித்தது போலீஸ். உடனே நம்ம ‘அன்றாடங்காய்ச்சிகள்’ அடுத்த பிளானை போட்டனர். உதாரணத்திற்கு சைக்கிள் கடைகளில் இருக்கும் ட்யூபுக்குள் சரக்கை நிரப்பி வைப்பது. ‘மாமூலை வெட்டிட்டு வேலையைப்பாரு’ என்று பணத்திற்கு அலைவதை விட ‘நமக்கு டிமிக்கி குடுக்கற பசங்களை பிடிச்சாத்தான் ஆச்சு’ என்கிற கௌரவ பிரச்சினையில்  மும்முரமாக தேடுதல் வேட்டையில் பெரும்பாலான போலீஸ் பட்டாளம் இயங்கியதாம் அப்போது.

                                                          ஞான் உண்ட கள்ளுக்கடை ஸ்பெஷல் டிஷ்


குமரகம் அருகே அரசு லைசன்ஸ் பெற்ற கள்ளுக்கடை ஒன்றில் அருமையான உணவு சாப்பிடலாம் வாங்க என்று மதிய நேரமொன்றில் அழைத்துப்போனார் நண்பர் மகேஷ். அதிக நாற்றமும், சத்தமும் இருக்குமோ என்று சலித்தவாறு உள்ளே நுழைந்த நான் அப்படி எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி அடைந்தேன். நம்மூர் டாஸ்மாக் போல இல்லாமல் நான்கு பேர் மட்டும் அமர தனித்தனியே சுவர் தடுப்புகள் கட்டி வைத்து இருந்தனர். சண்டை நடந்து மண்டை உடைந்தாலும் ஒரு க்ரூப்பால் மற்ற க்ரூப்புக்கு சேதாரம் இல்லை. நண்பரின் ஆர்டரின் பேரில் இரண்டு செட் கப்பக்கிழங்கு, பிரெஷ் ஆன வழு வழு வாலை மீன் மற்றும் பொடிமீன். ருசி டாப் க்ளாஸ். மொத்தம் இருநூற்று சொச்சம்தான் விலை. தண்ணியடித்து உடம்பை கெடுத்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க இம்மாதிரி கலப்பட பொருட்கள் கலக்காத உணவுகள் உறுதுணையாக உள்ளன அங்கே.

குடியால் ஏகப்பட்ட குடும்பங்கள் நாசமாவதைக்கண்ட கேரள அரசு இல்லத்து அரசிகளுக்கு கொண்டு வந்த திட்டம்தான் குடும்பஸ்ரீ. அத்திட்ட உறுப்பினர் அட்டையை மகேஷின் தாயார் என்னிடம் கொண்டு வந்து காட்ட, அது குறித்து மேலும் சில விவரங்களை கேட்டேன். கணவன் தரும் சொற்ப வருமானத்தை நம்பி இராமல் பெண்களே பொருளீட்டும் சுய வேலை வாய்ப்பு திட்டமது. சாலைகள், வீட்டை ஒட்டியுள்ள தோட்டங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது அந்த உறுப்பினர்களுக்கு தரப்படும் வேலை. அதை ஒரு சூப்பர்வைசர் கண்காணிப்பார். வேலைகள் அனைத்தும் கேமராவில் பதியப்பட்டு இணையத்தில் ஏற்றப்படும். சரியாக வேலை நடந்ததை உறுதி செய்தபின் அந்தந்த பெண் உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு உருப்படியான திட்டத்தை செயல்படுத்தும் கேரள அரசுக்கு வாழ்த்துகள் பல. தமிழக அரசின் பார்வைக்கு இது சென்று சேர எத்தனை யுகங்கள் ஆகுமோ. அப்படியே திட்டம் வந்தாலும் கட்சி ஆட்கள் வீட்டு பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமோ?


குடும்பஸ்ரீ இணையதளம்: kudumbashree.org

‘நம்ம ஊர்ல தண்ணி போட்டா கானா பாடி கலக்க ஒரு கூட்டம் இருக்கே அங்க எப்படி?’ என்று கேள்வி எழுமல்லவா? கேரள கள்ளுக்கடை கானா கேக்கலாம் வாங்க..படகுப்போட்டி, சபரிமலை, கோயில் யானைகள், கொஞ்சும் இயற்கை..இது போக கேரளத்தின் புகழை உலகெங்கும் பரப்பும் ஒரு ஸ்பெஷல் விஷயம்..அடுத்த பதிவில். 
27 comments:

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் முதல் படத்துல இருப்பது ஐஸ்வர்யா ராய், கர்நாடகா ஃபிகரு...!

MANO நாஞ்சில் மனோ said...

கேரளா காரன் தண்ணி அடிச்சுட்டா டி வி நியூசுக்கே டான்ஸ் ஆடுற கொடுமையை நேரில் பார்த்துருக்கேன்...!

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா சைட் டிஷை காட்டிட்டு மெயின் டிஷை ஏன்யா காட்டலை...?

MANO நாஞ்சில் மனோ said...

கல்லு ச்சே கள்ளு இல்லைன்னா தெய்வத்தின் நாடு என்னைக்கோ தற்கொலை பண்ணி செத்து இருக்கும் தெரியுமா..?!!!

உணவு உலகம் said...

எங்கள் மனோவிற்குப் போட்டியாய் படங்கள் பகிரும் சிவா!!!

உணவு உலகம் said...

முதல் படம் தவிர்த்து மற்ற படங்கள் நல்லாருக்கு.

உணவு உலகம் said...

குடும்பஸ்ரீ உருப்படியான திட்டம்தான். நல்ல தகவல் பகிர்வு.

வவ்வால் said...

ஆஹா ,என்னா ஒரு கிக்கு ,லுக்கு ... ரோசு கலர் தாவணி பாப்பா கண்ணுல இருக்க கிக்குக்கு கள்ளுக்கடை கிக் கால் தூசி பெறாது :-))

ஆமாம் சேச்சிகள் கள்ளுக்கடையிலா இருக்காங்க?

கோவை நேரம் said...

கள் சாப்டீங்களா ...எனக்கு ரொம்ப பிடித்தவை.ஆனாலும் கள்ளும் கலப்படமாக கிடைக்கிறது.பாலக்காட்டில் இருந்து அனைத்து கேரளா பகுதிகளுக்கும் இந்த கள்ளு சென்றடைகிறது.கொல்லம் அருகில் வர்கலா என்கிற ஊர் இருக்கிறது.அங்கு ஒருமாதம் தங்கி இருந்த போது ஒரு மரத்து கள் மட்டுமே குடித்தேன்.

CS. Mohan Kumar said...

Dashboard-ல் அழகான படம் இருந்தா தான் மக்கள் மகிழ்ச்சியா உள்ளே வருவாங்க.

இக்காலத்தில் உங்களை மாதிரி குடிக்காதோர் மிக குறைவு. இந்த பதிவு படிப்போரிலேயர் பலர் குடிப்பவர்களாய் தான் இருப்பர் :((

MARI The Great said...

///கேரளத்து பெண்கள்///

ரெண்டுபேரும் ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்காங்களே.?

KUTTI said...

very nice...

not only the photo... your article too...

mano

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!(கள்ளு)மனம் கலக்காம எழுதியிருக்கீங்க!பனை மரத்துக்குக் கீழ உக்காந்து பாலு குடிச்சாலும்,கள்ளு ன்னே சொல்லுற இந்த உலகத்துல சைஸ் டிஷ் சாப்பிட மட்டும் உள்ள போற தைரியம் உங்களுக்கு மட்டுமே வரும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரே.. ஈ குட்டிகளெ ஞான் முன்னே கண்டு.........

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

மெயின் டிஷ் வேணுமா..நீங்க அடிக்காத சரக்கா?

! சிவகுமார் ! said...

@ உணவு உலகம்

மனோ ஒரு மெட்ரோ விஞ்ஞானி. பதிவில் போட்டோ போடுவதில் அவரை வெல்ல அவரே மறு ஜென்மம் எடுத்தால்தான் உண்டு.

! சிவகுமார் ! said...

@ உணவு உலகம்

மனோ ஒரு மெட்ரோ விஞ்ஞானி. பதிவில் போட்டோ போடுவதில் அவரை வெல்ல அவரே மறு ஜென்மம் எடுத்தால்தான் உண்டு.

! சிவகுமார் ! said...

@ வவ்வால்

அம்மாதரின் கண்களைப்பாருங்கோ.

! சிவகுமார் ! said...

@ கோவை நேரம்

ஐ நோ தண்ணி பார்ட்டி. ஒரு மாதம் தங்கி கல்லடித்த ஜீவா போற்றி.

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
Dashboard-ல் அழகான படம் இருந்தா தான் மக்கள் மகிழ்ச்சியா உள்ளே வருவாங்க. //

அப்படியா?

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
இக்காலத்தில் உங்களை மாதிரி குடிக்காதோர் மிக குறைவு. இந்த பதிவு படிப்போரிலேயர் பலர் குடிப்பவர்களாய் தான் இருப்பர் :((//

நிதர்சனம்.

! சிவகுமார் ! said...

//வரலாற்று சுவடுகள் said...
///கேரளத்து பெண்கள்///

ரெண்டுபேரும் ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்காங்களே.?//

எஸ் பாஸ். இ மெயிலில் வந்த ஸ்டில் அது.

! சிவகுமார் ! said...

@ மனோ

தேங்க்ஸ் மனோ

! சிவகுமார் ! said...

@ யோகா

சரக்கு போடலன்னாலும் சத்தம் ஜாஸ்தியா விடுவேன். அப்போது என் மீசை துடிப்பதை பார்க்க வேண்டுமே நீங்கள். எனக்கே அச்சம் உச்சத்தில் இருக்கும்.

! சிவகுமார் ! said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சாரே.. ஈ குட்டிகளெ ஞான் முன்னே கண்டு.........//

ஓ கண்டல்லோ. அது ஒரு ப்ரண்டு மெயிலில் அனுப்பிய படமல்லோ.

Unknown said...

கள்ளு நல்ல பாணம்! அதை தினமும் குடிப்பதால் உடலுக்கு எந்த கேடும் வருவதில்லை...ஆனால் கேரளத்தில் கள் குடிப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்களும் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களும்தான்..இளைஞர்கள் அனைவரும் செல்வது பிராந்திகடை நோக்கித்தான்..........காரணம் கலப்படம்!

வவ்வால் said...

கோவை நேரம்,ஜீவா,

// வர்கலா என்கிற ஊர் இருக்கிறது.அங்கு ஒருமாதம் தங்கி இருந்த போது ஒரு மரத்து கள் மட்டுமே குடித்தேன்.//

ஒரு மரத்து கள்ளையும் ஒரே ஆளா குடிச்சு இருப்பீங்க போல இருக்கு ,இப்போ தான் உங்க "செழுமை"யின் ரகசியம் தெரியுது :-))

அது எப்படிப்பா போட்டோல மட்டும் "இந்த பூனையும் பால் குடிக்குமா" போல ஒரு அப்பாவி லுக்கு :-))

Related Posts Plugin for WordPress, Blogger...