CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, June 12, 2012

எடோ கோபி ஞான் கேரளா போயி – 5


"டேய்...எவன்டா அது. இந்த சூனா பானா ஒரு நாள் ஊர்ல இல்லனா மலைய பேத்துருவீங்களா? கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன? மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே? ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது? (தள்ளாடாம) வாங்க..பார்க்கலாம்.

                                                                   image: madrasbhavan.com

மன்னபள்ளி எனும் ஊரை சுற்றி வருகையில் ஒரு கடையில் நீண்ட க்யூ நிற்க என்னவென்று நண்பர் மகேஷிடம் விசாரித்தேன். மதுக்கடை என்றார். அருகில் ஒரு போலீஸ்காரர் வேறு. விவரம் கேட்டதில் கிடைத்த தகவல்கள்: இங்குள்ள(பெரும்பாலான கேரளப்பகுதிகளில்) மதுக்கடைகளில் க்யூவில் நின்றவாறு எந்த ஒரு பிரச்னையும் செய்யாமல் மதுவை வாங்கிச்செல்வர் சோமபான பிரியர்கள். ‘உக்காரு. ஊத்தி அடி’ என தமிழ்நாட்டில் இருப்பது போல டாஸ்மாக் பார்களை அரேஞ்ச் செய்து தருவதில்லை சேர அரசு. ‘வாங்குனையா. கெளம்பிக்கிட்டே இரு' என்கிறார் போலீஸ். எனவே விற்பனை செய்யும் இடத்தருகே கலாட்டாக்கள் மிகக்குறைவு. பாட்டில்களை டூ வீலர்களில் போட்டபடி நடையை கட்டுகிறார்கள் மக்கள். போகும் வழியில் போலீஸ் வழிமறித்து பாட்டிலை செக் செய்கிறார்கள். சீல் ஓப்பன் செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பில்லை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். உட்கார்ந்து உற்சாகபானம் அருந்த ஒன்று அரசு லைசன்ஸ் வாங்கி நடக்கும் கள்ளுக்கடை அல்லது தனியார் பாருக்கு மட்டுமே செல்ல வேண்டும்.

மன்னபள்ளி பேருந்து நிறுத்தத்தை தாண்டி சில நிமிடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போது மகேஷின் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி: “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அங்க ஒருத்தன் போதைல செங்கல் எடுத்து அடிச்சி ஒரு ஆளை கொன்னுட்டான்”. அது மட்டுமல்ல. புன்னவெளி கிராமத்தின் ஆற்றங்கரையில் நீராட சென்ற இடத்திலும் மற்றொரு செய்தி பகிரப்பட்டது. ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த தொங்கு பாலத்தின் வழியே ஒரு குடும்பம் சென்று கொண்டிருக்கையில் குடித்துவிட்டு நான்கைந்து இளைஞர்கள் அந்த பாலத்தை வேகமாக அசைக்க, அச்சத்தில் உறைந்து விட்டனர் அக்குடும்பத்தினர். அவர்களில் ஒரு இளம்பெண்ணும் அடக்கம் என்பதே அப்பயல்களின் வெறியாட்டத்திற்கு காரணம். போலீசுக்கு தகவல் பறந்து வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டதாம் அந்த கும்பல்.

                                                                         image: madrasbhavan.com 

குறுக்கு வழியில் சட்டென சரக்கு வாங்குவது கடினம் என்பதால் பரவச நிலைக்கு தயாராகும் முன் நீண்ட வரிசையில் கடுந்தவம் செய்கின்றனர் சியர் பாய்ஸ் அண்ட் அங்கிள்ஸ். “அப்ப நான் கேரளா போனா இவ்ளோ நேரம் க்யூவுல நின்னே தீரணுமா?” என்று அங்கலாய்க்கும் சரக்கப்பர்களுக்கு ஒரு யோசனையை அள்ளி விட்டனர் அங்கிருக்கும் இளசுகள். காலை, மதியம் மற்றும் மாலை என முப்பொழுதும் முறையே வேலையை விறுவிறுவென செய்ய, லஞ்ச் உண்ட களைப்பில் இளைப்பாற, வேலை முடிந்த அலுப்பில் சிலுப்பு தட்ட..சேட்டன்கள் மதுக்கடை முன்பாக வெகுவாக திரள்கின்றனர்.  எனவே முற்பகல் 11 முதல் 12.30, மாலை 3 முதல் நான்கு வரை கடையை நோக்கி படையெடுத்தால் குட்டி க்யூவில் நின்று புட்டியை சடக்கென வாங்கி வரலாம் என்கிறார்கள்.


குடிமகன்கள் உடல்நலத்திற்கு தன்னால் ஆன பேருதவியை செய்கின்றன மதுக்கடைகள். உண்பதற்கு பெரும்பாலும் மீன் வகைகள்தான். வாய் நாறும் கருவாடு அல்ல பாஸ். ஆறு மற்றும் ஏரிகளில் பிடித்த ப்ரெஷ் ஆன வெரைட்டி மீன்கள். கேரளத்து கள்ளுக்கடை கிச்சனை பாக்கணுமா? காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்(!) நாறிக்கினு கீது. அங்க என்னய்யா இவ்ளோ சுத்தமா இக்குது. எட்றா கேரளாக்கு ஒரு டிக்கட்டை” என்று சொல்லவைக்கும் வீடியோ பதிவு.


போலீசுக்கு டிமிக்கி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள், குடியால் அழியும் குடும்பத்து பெண்களைக் காக்க கேரள அரசு கொண்டு வந்த திட்டம்,  கள்ளுக்கடை கலக்கல் கானா ....மேலும் சில சரக்குகள். விரைவில்.


தொடரும்..


FYI: I am a tee-totaller boss!! :)

............................................................................


...............................
My other site:
agsivakumar.com
...............................


9 comments:

முத்தரசு said...

நம்ம "மேட்டர்" இருக்கும் போல சரி படிப்போம்

முத்தரசு said...

// (தள்ளாடாம) வாங்க..பார்க்கலாம்.//

இல்ல நாங்க தள்ளிகிட்டு தான் வருவோம்

முத்தரசு said...

விறுவிறுப்பா கீது - அடுத்த பதிவை போடுங்க - கீயுவில் நிற்க வச்சிபுட்டீயலே.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் உடனே எதிர்பதிவு போடுலேய் மனோ....!

MANO நாஞ்சில் மனோ said...

பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துகள்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சேட்டா... இன்னும் தொடருமா? எந்தா கோபி என்ன இது சோதனை........?

கோவை நேரம் said...

கிக்குனு இருக்கு...கேரளா கிளம்பறேன்..ஞாபக படுத்திடீங்க...கையெல்லாம் நடுங்குது...

கோவை நேரம் said...

ரொம்ப விரிவா இருக்கே...அனுபவமோ...நான் கேரளா செல்லும் போது சுத்த கேரளா காரன் ஆகிவிடுவேன்..காவி வேட்டி கட்டி கொண்டு ...

Unknown said...

சூப்பரப்பு!!

//FYI: I am a tee-totaller boss!! :)//

ச்சே மேற்கொண்டு கேள்வி கேட்கவிடாம...இது போங்காட்டம்! :-)

Related Posts Plugin for WordPress, Blogger...