CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, June 6, 2012

எடோ கோபி..ஞான் கேரளா போயி - 3
சில நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மணி பேசிய அதிரடி பேச்சு இந்திய அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. திருவல்லா ரயில் நிலையத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பின் முதல் பக்கத்தில் அச்செய்தியை படித்தேன். அதில் மணி: “எங்கள் அரசியல் எதிரிகள் பலரை கொன்று குவித்துள்ளோம்” என்று பகிரங்கமாக கூறிய விஷயம் சற்று அதிர்வை ஏற்படுத்த நண்பர் மகேஷிடம் கேரளா அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். அதற்கு அவர் “ஆம். இங்கு படுகொலை பாலிடிக்ஸ் சாதாரணம். எதிரிகளை கொல்ல அரசியல்வாதிகள் அணுகும் நபர்களை இங்கு ‘Quotation’ (கூலிப்படை) என்று அழைப்பார்கள். குடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் கில்லாடிகள்” என்றார். மணியின் பேச்சால் பழைய அரசியல் கொலை வழக்குகளை எல்லாம் தூசு தட்ட ஆரம்பித்து உள்ளது அம்மாநில உளவுத்துறை. திரும்பிய பக்கமெல்லாம் பசுமையை போர்த்திக்கொண்டிருக்கும் கேரளத்தின் மறுபக்கம் ரத்த சரித்திரத்தால் நிரப்பப்பட்டிருப்பது முற்றிலும் முரணாக பட்டது.                                                                  

சிறிது நேரம் கழித்து புன்னவெளி அருகே ஒரு கற்குவாரி இருக்குமிடத்திற்கு சென்றடைந்தோம். செழிப்பாக இருந்த வனப்பகுதியை குடைந்து பெரிய காண்ட்ராக்டர் ஒருவர் தலைமையில் ஜரூராக வேலை கொண்டிருந்தது. முன்பொரு காலத்தில் ஏகப்பட்ட மனிதர்களின் உழைப்பால் கற்கள் வெட்டப்பட்ட காலம் போய் அதிக பட்சம் பத்து நபர்களை மட்டுமே வைத்து மொத்த ப்ராசசையும் முடிக்கிறார்கள் இங்கே. அதுவும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை இயக்க மட்டுமே அவர்களும் தேவைப்படுகின்றனர். விரைவில் ரோபோ தொழில்நுட்பம் வந்த பின் அவர்களையும் வீட்டுக்கு அனுப்ப உத்தேசித்து உள்ளனராம் முதலாளிகள்.

                                                                       
குவாரி வேலைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஒரு சில மணிநேரம் பார்த்தோம். தோண்டப்பட்ட மலையின் அடிவாரத்தில் ஒரு சில மிஷின்கள் கற்களை உடைத்து அருகில் இருக்கும் லாரியில் போடுகின்றன. அவற்றை சுமந்து கொண்டு மேலே வரும் லாரி அக்கற்களை அரவை மிஷினில் கொட்டுகிறது. கற்கள் மேல் படிந்திருக்கும் தூசிகளை நீக்கிவிட்டு அருகிலுள்ள இன்னொரு மிஷினுக்கு அவற்றை தாரை வார்க்கிறது. அக்கற்களை மூன்று வடிவத்தில் தனித்தனியே பிரித்து அனுப்புவது அந்த மிஷினின் வேலை. சில நிமிடங்களில் குவாரி கேட் அருகே பாஸ் போட்டுவிட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வண்டிகள் உள்ளே வந்து கட்டிடம் கட்ட தமக்கு தேவையான பொருட்களை ஏற்றிச்செல்கின்றனர். 

கற்கள் வெட்டுவது முதல் விற்பனைக்கு அனுப்பப்படுவது வரை ஒரு சுற்று முடிவடைய வெறும் முப்பது நிமிடமே ஆகிறது என்பதை நேரில் காண்கையில் ஆச்சர்யம் மேலிட்டது. அதே நேரத்தில் இவ்வளவு துரித கதியில் இயற்கை சுரண்டப்பட்டால், அடுத்த காண்ட்ராக்ட் எடுக்க அருகில் உள்ள அழகிய வனப்பகுதிகள் மேலும் அழிக்கப்படும் என்பதை எண்ணுகையில் வருத்தமாகத்தான் இருந்தது. 

உபரி செய்தி: நம்மூரில் தாள்களை பிரதி எடுக்க பயன்படுத்தும் வார்த்தை ஜெராக்ஸ். ஆனால் அங்கு ‘போட்டோஸ்டாட்’ என்கிறார்கள்.
...........................................................................................


குமரகம் ஏரிக்கரை பூங்காற்றே.... நீ போற வழி தென்கிழக்கோ...


‘படகின் முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணிற்காக படமெடுக்கவில்லை’ என்று அடித்து சொன்னார் நண்பர் மகேஷ். நெசமாத்தானா? ஞான் அறியில்லா..                                 

                                               படகோரம் வாங்கிய காற்று..இதமாக இருந்தது நேற்று.


தொடரும்..

..........................................................................................


11 comments:

CS. Mohan Kumar said...

Who is that Malayalam hero in the last photo?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////திரும்பிய பக்கமெல்லாம் பசுமையை போர்த்திக்கொண்டிருக்கும் கேரளத்தின் மறுபக்கம் ரத்த சரித்திரத்தால் நிரப்பப்பட்டிருப்பது முற்றிலும் முரணாக பட்டது.///////

படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் சத்தமில்லாமல் இப்படி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அதே நேரத்தில் இவ்வளவு துரித கதியில் இயற்கை சுரண்டப்பட்டால், அடுத்த காண்ட்ராக்ட் எடுக்க அருகில் உள்ள அழகிய வனப்பகுதிகள் மேலும் அழிக்கப்படும் என்பதை எண்ணுகையில் வருத்தமாகத்தான் இருந்தது.///////

எல்லா இடத்தையும் மொட்டையடிக்காம விடமாட்டாங்க....... என்ன பண்றது, ஆற்று மணலும் அப்படித்தான் போய்ட்டு இருக்கு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////உபரி செய்தி: நம்மூரில் தாள்களை பிரதி எடுக்க பயன்படுத்தும் வார்த்தை ஜெராக்ஸ். ஆனால் அங்கு ‘போட்டோஸ்டாட்’ என்கிறார்கள்.////////

தமிழகத்தைத் தவிர மற்ற இடங்களில் அப்படித்தான் சொல்கிறார்கள். போட்டோகாப்பி என்றும் கூறுகிறார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////‘படகின் முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணிற்காக படமெடுக்கவில்லை’ என்று அடித்து சொன்னார் நண்பர் மகேஷ். நெசமாத்தானா? ஞான் அறியில்லா.. ///////

ஞான் ஜூம் போட்டு கண்டு......... ஈ ஆயான் ராங்கா பறஞ்சு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மோகன் குமார் said...
Who is that Malayalam hero in the last photo?///////

அஞ்சரைக்குள்ள வண்டி படம் பார்க்கலையா சார்?

bandhu said...

photostat is the correct work. xerox is the name of one of the companies manufacturing photostat machines. of course, they invented the technology!

Unknown said...

ENNA KODUMAI SIR ITHU????

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்
கொஞ்சம் கேரளா. அப்புறம் டெல்லி, பி.எம். அது போதும் சார்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மோகன் குமார் said...
Who is that Malayalam hero in the last photo?///////

அஞ்சரைக்குள்ள வண்டி படம் பார்க்கலையா சார்?//

எந்தா இது. ஒபீஸ் சீக்ரெட்டை வெளிய பரஞ்சு ப்ரதரே.

! சிவகுமார் ! said...

//Mahesh Kumar M said...
ENNA KODUMAI SIR ITHU????//

உண்மைய சொன்னேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...