முப்பொழுதும் உன் கற்பனைகள்:
எக்ஸ்ப்ரஸ் அவின்யூ தரைத்தளத்தில் அவ்வப்போது சாம்சங் மொபைல் விளம்பரம்
மேற்கண்டவாறுதான் அரங்கேறுகிறது. நம்ம யூத் பசங்க ஒருத்தனும் அங்க போயி போன்
வாங்குதா சரித்திரமே இல்ல. சிட்டுக்குருவிங்களை ஒருமணி நேரமாவது சுத்தி சுத்தி பாத்துட்டு
வெறுங்கையோட எஸ்கேப் ஆவறானுங்க. நம்ம சமூகம் இப்படி குப்புற படுத்துருச்சே
அப்டிங்கற ஆதங்கத்துல ஸ்பாட்ல எடுத்த போட்டோ.
ஏம்பா உங்க தங்கச்சிங்கள கொஞ்சம் அதட்டக்கூடாதா?
.......................................................................................
குத்து:
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டை பிரிவில்
எட்டு பேர் இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் அதிகபட்சம் ஒரே ஒரு
பதக்கத்தை மட்டுமே வென்ற நம் தேசம் இம்முறை மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பெண்சிங்கம் மேரிகோம்
களத்தில் இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது.
...................................................................................
தமிழச்சி:
நமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:
.......................................................................................
தமிழச்சி:
நமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:
.......................................................................................
Gangs of Wasseypur:
அனுராக் காஷ்யப் இயக்கம், மனோஜ் பாஜ்பாய் ஹீரோ என பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான
மூவி. பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்த நாள் முதல் பல்லாண்டுகள் இரு மாபியா கும்பல்
இடையே நடக்கும் கேங்வார் தான் களம். பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். மொத்தம் 14 பாடல்கள். அதில் பல கேட்கத்தூண்டுபவை. மாபியா
வரலாற்றை பின்னணி குரலில் ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார். பெட்ரோல் பங்கில் மனோஜ்
கொள்ளை அடிக்கும் காட்சிவரை கொட்டாவி வர, அதன் பின் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
இடைவேளைக்கு பின் நேர்கோட்டில் செல்லாமல் இதர கேரக்டர்கள் பற்றிய அறிமுகத்தால்
நமக்கு தலை சுற்றுகிறது. படத்தின் நீளம் 2 மணி 40 நிமிடங்கள். ஜாம்பவான்
பதிவர் என்னருகே குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு ஜவ்வுக்காட்சிகள். இரண்டாம்
பாகம் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.
..................................................................................
அக்னி நட்சத்திரம்:
மெகா சைஸ் ஊழல் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட கோப்புகள் உள்ள இடங்களில் சில மாதங்களாக
தீப்பற்றி எரிந்து வருவதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இருக்கும் உள்துறை
அமைச்சக கட்டிடமும் அடங்கும். ஆதர்ஷ் ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் மொத்தமும் சில
நாட்களுக்கு முன்பு தீக்கிரையாகின. தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க!!
.................................................................................
கிளிப்பேச்சு கேட்க வா:
பதிவர்களுடன் சமீபத்தில் புதுச்சேரி சென்றபோது கடற்கரை அருகே கிளி ஜோசியம் பார்க்க
சொல்லி பிரபாகரனை கோர்த்து விட்டார் அஞ்சாசிங்கம். “உனக்கு ரெண்டு பொண்டாட்டி கன்பர்ம்.
மூணு பசங்க. உன் பையன் ஏரோப்ளேனை தலைகீழா ஓட்டுவான்(!!)” என்றெல்லாம் தூள்
கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால
ஒரு கண்டம் வந்துருக்கனுமே?” என்றார். “அப்படியெல்லாம் இல்லையே” என நான் அடித்து
கூற பிளேட்டை மாற்றினார். “அமாவாசை இருட்ல வழிப்போக்கன் கக்கா போன இடத்துல நீங்க
காலை வச்சிருப்பீங்க. அதுக்கு பரிகாரம் பண்ணுங்க” என்று டெர்ரர் காட்டினார். ‘ரீலு
அந்து போச்சி. ஆளை விடுங்க’ ரியாக்சன் காட்டி விட்டு காணாமல் போனோம்.
..............................................................................
பிடிச்சிருக்கு:
இந்த வாரம் நான் படித்ததில் சிறந்ததென கருதுவது நாஞ்சில் மனோ மண்பானை பற்றி எழுதிய பதிவாகும். தனது சொந்த அனுபவத்தை எளிய நடையில் அழகாக எழுதி உள்ளார். அண்ணனின் மகள் மண்பானை சுமக்கும் போட்டோக்கள் நன்று. மாதம் மூன்று தரமேனும் இது போன்ற பதிவுகளை எழுத சொல்லி உள்ளேன்.
பதிவிற்கான லிங்க்: மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு

தவமாய் தவமிருந்து:
..................................................................................
தவமாய் தவமிருந்து:
..................................................................................
புதிய மன்னர்கள்:
கலைஞர் டி.வி. நடத்தும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
சென்ற வாரம் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘ஒரு கோப்பை தேநீர்’ அருமையாக இருந்தது. பெண் போலீஸ்,
திருடி இருவரும் நடிப்பும் கச்சிதம். இன்று நடந்த அரை இறுதியில் ‘சட்டம் தன்
கடமையை செய்யும்’ குறும்படம் நகைச்சுவையாகவும், ‘தர்மம்’ நெகிழ வைப்பதாயும் இருந்தது.
தர்மம் இயக்குனருக்கு தன் தயாரிப்பு
நிறுவனமான சாலமன் ப்ரொடக்சனில் கதை சொல்ல வாய்ப்பு தந்துள்ளார் ‘மைனா’ பிரபு
சாலமன். பத்தே நிமிடத்தில் சிறப்பாக படம் எடுக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கோடம்பாக்கத்தின்
நல்வரவுகள்தான்.
..................................................................................
பாட்டொன்று கேட்டேன்:
டி.எம்.எஸ். குரலில் பொங்கி வரும் தேனிசை. படம்: சௌபாக்யவதி.
...............................................................................
............................
My other site:
agsivakumar.com
.............................
..............................................
சகுனி – விமர்சனம்
..............................................
............................
My other site:
agsivakumar.com
.............................
..............................................
சமீபத்தில் எழுதியது:
..............................................
16 comments:
அடடா என்னையா இது இப்படி ஆபாசமா படம் போட்டு ஆண்கள் மானத்தை வாங்கிட்டேறு
பல்சுவை விருந்து படைத்த மெட்ராஸ் பவனுக்கு நன்றி!
சிவா,நீங்ககூட வாரம் தவறாம எக்ஸ்பிரஸ் அவென்யூ போறீங்களே, இதுதான் காரணமோ!
காதில விசில் அடிக்காம, கதவுக்கு வெளியவாவது அடிக்கிறாரே!
// “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே?” //
சரிதானே, வந்துதில்லா? மறந்திடுச்சா?
முதல் படம் ஷ் யபா முடியல.
ஆமா ஆமா தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க!!
உண்மை தான் மனோ மக்கா எழுதியது மனசை உலுக்கியது.
நல்ல பல்சுவை பகிர்வு, பகிர்விற்கு நன்றி.
இந்த வாரம் நிறைய விஷயம் ரசிக்கும் படி இருந்தது. நமீதா கவிதை, அந்த டிரையின் போட்டோ, மனோ பதிவு பற்றிய பகிர்வு இப்படி.. அசத்துங்க !
போச்சிடா...மனோவை கிண்டி விட்டுடீன்களா?????
இனி செத்தான் சேகரு....
Gangs of Wasseypur: விமர்சனத்தை சிம்பிலாக முடித்து விட்டீர்கள் ... படம் சுப்ரமணியபுரத்தின் ரீமேக் என்று சொன்னார்கள் !?
nakks inga enna panraar..
நல்ல அப்பன் நல்ல புள்ள சூப்பர் எப்டிலாம் யோசிக்கிரான்கப்பா
நானும் சாம்சங் ல நல்ல android மொபைல் வாங்கனும்ன்னு நெனச்சேன் ,எக்ஸ்பிரஸ் அவன்யுக்கு பஸ் புடுச்சு வந்துடுறேன் ,நல்ல நல்ல பீசா இருக்கும் போலயே
போச்சிடா...மனோவை கிண்டி விட்டுடீன்களா?????
இனி செத்தான் சேகரு....
///////////////
ரிபிட்டு...!
அடல்ஸ் ஒன்லி, இது ஒரு ஆபாச பதிவு, மக்களே என்னை குத்தம் சொல்லாதீக ஆமா சொல்லிப்புட்டேன்.
//நமிதா கவிதை//
கடைசி வரி
மொத்தத்துல தமிளு வாளுது.
Post a Comment