CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, June 5, 2012

எடோ கோபி..ஞான் கேரளா போயி - 2குமரகம் செல்லும் வழியில் இருந்த ஒரு சர்ச் அருகே வண்டியை நிறுத்தி உள்ளே சென்றோம். ஞாயிறு மதிய நேரத்தை தாண்டிவிட்டதால் தேவாலயத்தினுள் ஒரு தேவதை மட்டும் இறைவனை பிரார்த்தித்து கொண்டிருந்தாள். ஆடுகளம் தப்சி பாணி உடையில் ஒரு ஆங்கிலோ இண்டியன் கேர்ள். சத்தியமாக அழகின் உச்சம். சர்ச்சினுள் குறுகுறுவென அவளைப்பார்க்காதே என்று மனசாட்சி மண்டையில் கொட்டியது. பிரார்த்தனை முடிந்து சர்ச்சின் உட்புறம் இருந்த தோட்டத்தில் பூக்களை ரசித்து (ரசித்தவாறு நடித்து) கொண்டிருந்தேன். ஒரு சில வினாடிகள் தாமதித்து திரும்பி பார்த்ததன் விளைவு...தன் மம்மியுடன் எமக்கு பாராமுகம் காட்டி நடந்து கொண்டிருந்தாள்.

                                                                      அந்த தேவ(தை) ஆலயம்..
                                                                    
எதிரில் சில அடிகள் தள்ளி பார்க் செய்த பைக்கை நண்பர் கிளப்ப மீண்டும் எதிர்திசையில் நடந்து வந்து கொண்டிருந்தாள் சேர நன்னாட்டிளம் தப்சி. ‘இம்முறையேனும் மூன்று நொடிகளாவது முகத்தை பாரடா முட்டாப்பயலே’ என்று மனது படபடத்தாலும்....இவளை பார்ப்பதற்கென்ற அவ்விடத்தை சுற்றிவருகிறோம் என்று அவள் நினைப்பாள். அப்புறம் நம்ம கௌரவம் என்னாவது என்று ஞானத் தெளிவு பிறந்ததால் என் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். நண்பர் மகேஷ் மட்டும் அவளை ஒத்தக்கண்ணால பார்க்க பைக் பறந்தது. பட்டாம்பூச்சி மறைந்தது.

நேற்று என் நண்பர் மகேஷிடம் இது குறித்து பேசுகையில் ‘நீங்க மிஸ் பண்ணிட்டீங்க சிவா. அவள் கொள்ளை அழகு’ என்று பரவசப்பட்டார். போனால் போகட்டும். நமக்கு ப்ரெஸ்டீஜ் முக்கியமோ இல்லியோ? என்ன சொல்றேள்?

                                      குமரகம் பேக் வாட்டர்ஸில்..கோயிலில் உணவருந்திவிட்டு..              


சேரநாட்டை சுற்றிப்பார்த்ததில் பெரும்பாலான பெண்களின் கூந்தல் அக்மார்க் கருமை நிறத்தில் ஜொலித்தன. ஒரு செம்பட்டை அல்லது செயற்கையாக வடிவமைக்கப்பட்ட கூந்தலையோ பார்க்க இயலவில்லை. நம்மூரில் இருப்பது போல பூச்சூடிய பெண்கள் அங்கு மிகக்குறைவு. மாடர்ன் பெண்கள் கண்ணில் பட்டில்லா.


இயற்கையை சுரண்டும் கற்குவாரிகள், படுகொலை பாலிடிக்ஸ், பசுமைக்காவலன் கோபி சேட்டன், வசூலை அள்ளும் சரக்கு கடைகள், கேரளா ஸ்பெஷல் உணவுகள்...இன்னும் பல. இனிவரும் பதிவுகளில்.
...............................................................................................


11 comments:

Prem S said...

//சர்ச்சினுள் குறுகுறுவென அவளைப்பார்க்காதே என்று மனசாட்சி மண்டையில் கொட்டியது.//ம்ம் சர்ச்சுக்குள்ளேயேவா

Yoga.S. said...

வணக்கம்,சிவா சார்!!!!!மிஸ்ஸிங்!!!!!!!!!!!!!!ஹ!ஹ!ஹா!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எந்தா சாரே........ வல்லிய சமாச்சாரம் ஏதும் கிட்டில்லா?

Philosophy Prabhakaran said...

இவ்வளவு பில்டப் கொடுத்து எழுதாம விடுறதுக்கு நேரடியா அந்த பொண்ணை பத்தியே எழுதியிருக்கலாம்...

முனிவரின் சீடன் ஒருவன் பெண்ணை தொட்டு தூக்குவதும், முனிவர் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது :)

Philosophy Prabhakaran said...

// அப்புறம் நம்ம கௌரவம் என்னாவது என்று ஞானத் தெளிவு பிறந்ததால் என் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். //

அதானே... புத்தருடைய ஞானம் முதுகு வழியாக இறங்கி மூளையை குதறி இருக்குமே...

Unknown said...

பய புள்ள ஒரு ”ஆடுகளம்” ஆடி வந்து இருக்கு போல ஹிஹி!

! சிவகுமார் ! said...

@ பிரேம்

ஆமாங்கங்கோ..

! சிவகுமார் ! said...

@ யோகா

விடுங்க பாஸ். திவ்யா இல்லன்னா திரிஷா..

! சிவகுமார் ! said...

@ ப.ராமசாமி

கிட்டி. கிட்டி. எழுதறேன் சேட்டா..

! சிவகுமார் ! said...

@ பிலாசபி

தம்பி..இந்த டீலிங் நமக்குள்ளயே இருக்கட்டும். ப்ரமாதம்..

! சிவகுமார் ! said...

@ விக்கி

இட்ஸ் ஆல் இன் தி கேம் அல்லோ.

Related Posts Plugin for WordPress, Blogger...