CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, June 11, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (11/06/12)


சிங்கம்புலி:

                                                   
ஊர்ல இருக்குற பயபுள்ளைக எல்லாம் ப்ளாஸ்டிக் பந்து, நண்டு ஊருதுன்னு விளையாடிட்டு இருக்கையில ‘எனக்கு சிங்கம், புலி, சிறுத்தை பொம்மைதான் வேணும்னு அடம் புடிச்ச பயடா நீ. எதுக்கு பொம்ம. நெசமாவே மூணு சிங்கம், ஒரு சிறுத்தையை வாங்கிப்போட்டா பய ஆசை தீர ஆடிட்டு போகட்டுமேன்னு நாந்தான் ரோசனை சொன்னேன். அஞ்சாறு வருஷம் அதுகளோட நீ வெளையாடுனப்ப எடுத்த படம் இது. வச்சிக்க’ என்று இந்த அரிய போட்டோவை பரிசாய் தந்த ரெண்டு விட்ட சித்தப்பாவை எண்ணி என் மனசு கொக்குகிறது.
..................................................................................


விண்ணைத்தாண்டி வருவாயா:
புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு மேடம் போன இடங்களில் கெண்டை மேளம் முழங்க, மகளிர் தலையில் முளைப்பாரி ஏந்தி க்யூ கட்டி நிற்க..இன்னும் எத்தனை வெரைட்டியான வரவேற்புகள். அரசின் ஓராண்டு சாதனை(?)களை விளக்கி இன்னும் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வண்ண வண்ணமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இது போக ஆளுங்கட்சி விழாக்களில் கரண்ட் கண்டமேனிக்கு செலவாகிறது. பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஆடம்பரம் இன்றி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மேடம் இப்போது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் ஒரு துளி வியர்வை சிந்தாமல் இருக்க டெம்போ ட்ராவலர் குளு குளு பெட்டிக்குள் இருந்தவாறு அல்லது வண்டிக்கு மேலே பிரம்மாண்ட பந்தல் இருக்கும்போது மட்டும் பேசுகிறார். வேர்வை சிந்தி உழைக்கும் பாமரன் வெயிலில் காய்ந்தவாறு வேடிக்கை பார்க்கிறான். ஜனநாயகம் ஜெ(ய்) ஹோ!!
.......................................................................................


எல்லாம் அவன் செயல்:
தம்பதியர்களை அழைத்து ஆட வைத்து அழகு பார்க்கும் தமிழ் சேனல்களின் சேட்டை அடங்கிய பாடில்லை. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு உள்ளது சோடிகள் பலர் செய்யும் காரியங்கள்..ஸ்ஸ்..யம்மா. இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி?) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.
.........................................................................................ஊருக்கு உபதேசம்:
முன்னாள் சென்னை மேயர் சுப்ரமணியம் அண்ணா சாலையில் சுவரொட்டி ஒட்டுவதை அண்ணா சாலை முழுக்க தடை செய்ததோடு மட்டுமின்றி, சுவர்களில் எல்லாம் அழகிய ஓவியங்களைத்தீட்டி பாராட்டு பெற்றார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் வேலைகளுக்காக அண்ணா சாலை முழுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஒன்று விடாமல் ‘நேசத்தலைவனுக்கு நீராட்டு விழா’ ‘எங்களை பெறாமல் பெத்த தாயே’ என  கட்சி பேதமின்றி நாற அடிக்கிறார்கள். கரண்ட் மேயர் சைதை துரைசாமி அந்த சாலை பக்கமே போவது இல்லையா..??
.............................................................................................


பல்லவன்:
முன்பு இரண்டு ரூபாய் டிக்கட் வாங்க பத்து ரூபாய் நீட்டினால் ‘சில்ர இல்ல..எறங்கு’ என்று நடத்துனர் ஆர்டர் போடுவார். ஆனால் டிக்கட் விலையை மகமாயி புண்ணியத்தில் இரண்டு மடங்கு ஏற்றிய பிறகும் அதே நிலைதான். நான்கு ரூபாய் டிக்கட்டுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட சில்லறை கேட்கிறார்கள் பெரும்பாலான கண்டக்டர்கள். போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.
.................................................................................................


இன்று போய் நாளை வா:
தானைத்தலைவன் ரபேல் நடாலும், டோஜோவிக்கும் ஆடிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று மாலை தூர்தர்ஷனில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் தடை பட போட்டியை திங்கள் மாலைக்கு தள்ளி வைத்து விட்டனர். ‘2017 ஆம் ஆண்டு கூரை போடப்போகிறோம். அதன் பின் அடைமழை அடித்தாலும் ஆட்டம் நிற்காது’ என்கிறார்கள் பிரெஞ்ச் ஓப்பனை நடத்துபவர்கள். குட் நியூஸ்.
...............................................................................................ராட்டினம்:
‘என்ன மாதிரி ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்க பாப்போம்’ - அரசியலில் தொபக்கடீர் என்று குதித்த காலத்தில் கேப்டன் விட்ட சவுண்டு. தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து (கல்லா) டப்பா டான்ஸ் ஆடிய பிறகு தி.மு.க.வை பெருக்கித்தள்ளி ஓனிக்ஸ் வண்டியில் போட்டால்தான் த.நாடு சுத்தமாகும் என்பதற்காக ஜெவுடன் கூட்டு அணி வைத்தார். அது இப்போது அவியல் ஆகிப்போக, இறுதியாக அண்ணி பிரேமலதா மூலமாக பெரிய டார்ச் லைட்டுக்கு (உதயசூரியன் கட்சித்தல..கலைஞர்) ஹாப்பி பர்த் டே சொல்ல வைத்துள்ளார். ஆக...அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..!
.........................................................................................


மன்மதன் அம்பு:
ஹீரோக்கள் பெண்களை சைட் அடித்து கலாய்க்கும் பாட்டுகள் தமிழில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நம்ம தல தியாகராஜ பாகவதருக்கு இணையாக ஒரு ஸ்டாரும் இதுவரை பிறக்கவில்லை. ஜம்மென குதிரையில் குந்தியவாறு தெருவோரம் நடந்து போகும் சிட்டுக்களை சட்டென கண்ணடித்து ‘வாழ்விலோர் திருநாளை’ 1944 ஆம் ஆண்டிலேயே என்னமாய் கொண்டாடுகிறார் பாருங்கள். படம்: ஹரிதாஸ். இசை: பாபநாசம் சிவன்.ஹோய்...வாழ்விலோர் திருநாள்...!!!

....................................................................................


..............................
My other site:
agsivakumar.com
.................................


...............................................

சமீபத்தில் எழுதியது:

ஷாங்காய் – விமர்சனம்
.................................................12 comments:

CS. Mohan Kumar said...

Lot of Political news. Arasiyalil kuthikka poreengalo? Aanaa ellaa katchiyaiyum thittureengalae? Entha katchiyil seruveenga?

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள் ! நன்றி !

Unknown said...

எஞ்சாய் சாரே!

முத்தரசு said...

சாப்பாடு திருப்தியா இருக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி?) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.////////

டீவில மூஞ்சி வரும்னா என்ன வேணா செய்வானுங்க நம்மூர்ல......... இவனுங்கள மொதல்ல செருப்பால அடிக்கனும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.//////

சில்லற கேட்கறதாவது சும்மா கேட்டா பரவால்ல, அதோட சாவுகிராக்கி, மாதிரி வசவுகளும் சேர்த்துல்ல கிடைக்குது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..!////////

நீங்க பாராட்ட வேண்டியது அவங்க வூட்டு அம்மணிய........ அவுங்கதாங்கோ அல்லா முடிவும்.......!

Unknown said...

அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.
////////////////////
மணடையில் களிமண் இருப்பவர்களும் பார்க்கலாம்!

Prem S said...

போங்க பாஸ் மதுரைல 9 ரூபாய் லோக்கல் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் நீட்டுனா 4ரூபா தாங்க 5 ஆ தாறோங்கா ங்க என்ன பண்ண ?

உணவு உலகம் said...

அந்த குட்டி பையன் ரொம்ப க்யூட்!

உணவு உலகம் said...

நாலு பக்கமும் நனைச்சு அடிச்சிருக்கீங்க சிவா. நல்லா உரைக்கணும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.///\

பாஸ்... சீரியல் பாக்க ஆரம்பிச்சுட்டிங்க போல..

Related Posts Plugin for WordPress, Blogger...