இதுகாறும் அன்னை
பூமியாம் சென்னையை விட்டு கிஞ்சித்தும் அகலாத எனக்கு சென்ற
வாரம் முதன்முறை வெளிமாநிலம் சென்று இயற்கையை ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது.
பணிநிமித்தமாக மட்டுமே வேறு சில மாநிலங்களுக்கு சென்றிருந்ததால் ஆற அமர
அங்கிருக்கும் முக்கிய இடங்களை காணும் வாய்ப்பு கிட்டவில்லை. எனவே இப்பயணம்
சம்திங் வெரி ஸ்பெஷல். கேரளா மண்ணின் மைந்தன் மகேஷ் அழைப்பின் பேரில் கோட்டயம்
அருகில் உள்ள புன்னவெளி கிராமத்திற்கு பயணத்தை மேற்கொண்டேன். ஜூன், ஜூலை
மாதங்களில் சேரநாட்டில் மழை சீசன் என்பதை தூறல்கள் மூலம் உணர்த்தியது நாங்கள்
சென்றிறங்கிய திருவல்லா ரயில் நிலையம்.
புன்னவெளி நோக்கி பயணித்த வழிநெடுகிலும் பெரும்பாலும் கண்ணில் தென்பட்டது
ரப்பர் தோட்டங்கள்தான். நீடித்து உழைக்கும் ரப்பர் சாலைகளும் கணிசமாக இருந்தன.
ஏகப்பட்ட வளைவுகள், மேடு, பள்ளங்கள் தாண்டி நண்பரின் வீட்டை அடைந்தோம். கிராமம்தான்
என்றாலும் கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் இழைத்து கட்டப்பட்டுள்ளன. ஆண்கள் ஐக்கிய
அரபு எமிரேட்டில் வேலை செய்து அனுப்பும் பணம்தான் இதற்கு மூலாதாரம். ஒவ்வொரு
வீட்டை சுற்றியும் பலவகைப்பட்ட மரங்கள், செடிகள். சேர்ந்தார்போல இரண்டு வீடுகளை
காண்பது அரிதங்கே.
பிரசித்தி பெற்ற இடங்களை பிறகு பார்க்கலாம். முதலில் உங்கள் ஊரை சுற்றிப்பார்த்தால்
போதும் என்றேன் மகேஷிடம். பைக்கில் சுற்றுலாவை துவக்கினோம். மூன்று நாட்களும்
பைக்கில் மட்டுமே பிரயாணம். சென்னையின் செயற்கையான கருவிகள் மூலம் காற்றை
சுவாசித்த எனக்கு மூலிகைச்செடிகளின் நறுமணம் வீச பரிசுத்த காற்றின் அரவணைப்புடன்
வீதிகளை வலம் வந்தது அருமையான அனுபவம்.
முந்தைய பதிவில் ‘எங்கய்யா கேரள பெண்களின் படத்தை காணும்’ என்று
ஏங்கிய நல்ல உள்ளங்களே..உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி: ‘ஒரு போட்டோ கூட எடுக்கல’.
இதற்கு முன்பு மும்பை சென்றபோது நண்பன் விடுத்த எச்சரிக்கை ஒன்று: ‘மராட்டி
பொண்ணுங்க பயங்கர கோபக்காரிங்க. ஒரு முறை பஸ் ஸ்டாண்ட்ல கிண்டல் பண்ண பையனை
வெரட்டி வெரட்டி அடிச்சி தொவச்சா ஒருத்தி. அத நேர்ல பாத்து மெர்சல் ஆயிட்டேன். அது
போல இந்தியால வீரம் விளைஞ்ச பொண்ணுங்க இருக்குற இடம்தான் கேரளா பூமி. பீ கேர்புல்.
சேட்டை செஞ்சா வாய்க்குள்ள அருவாள வுட்டு ஆட்டுவாங்க’. இதுக்கெல்லாம் பயந்த ஆளு
நாங்க இல்ல என்பதுதான் உண்மை என்றாலும் இளம்பெண்களை ஏறிட்டு பார்க்க வேண்டும் எனும் எண்ணம் ‘அடிக்கடி’ தோன்றவில்லை. ஆனால் அதையும் மீறி.....
தொடரும்....
கேரளா - நிழற்படங்கள்:
கோவில் யானையை குளிப்பாட்டும் தோழர் மகேஷ்
கலைநயம் மிகுந்த கோவில்
15 comments:
// பதிர்மணல் தீவில் ஞான் //
அண்ணே பெண்கள் போட்டோ போடலைன்னா கூட பரவாயில்லை... அதுக்காக உங்க போட்டோவை போட்டு மெரட்டாதீங்க... யோவ் அட்லீஸ்ட் கூலிங் கிளாஸையாவது கழட்டுய்யா...
எனது சேச்சி படங்கள் இல்லையா?
இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு
அது போல இந்தியால வீரம் விளைஞ்ச பொண்ணுங்க இருக்குற இடம்தான் கேரளா பூமி.
////////////////////////////////
தம்பி பொய் சொல்லக்கூடாது!?
/////இதுக்கெல்லாம் பயந்த ஆளு நாங்க இல்ல என்பதுதான் உண்மை என்றாலும் இளம்பெண்களை ஏறிட்டு பார்க்க வேண்டும் எனும் எண்ணம் ‘அடிக்கடி’ தோன்றவில்லை. /////////
எந்தா கோபி..... இது என்ன சோதனை.....? மான்கொம்பு லேகியம் வாங்கி ஒரு மண்டலம் கழிக்கவும்..........
/////ஆனால் அதையும் மீறி.....///////
மீறி.............. கம்முன்னு வந்துட்டீங்க, அதானே...........?
@ பிலாசபி
கூலிங் கிளாசை கழட்டுனா இன்னும் கேவலமா இருப்பேன்.
@ மோகன்குமார்
எதுக்கு?
// yuvatirupur said...
அது போல இந்தியால வீரம் விளைஞ்ச பொண்ணுங்க இருக்குற இடம்தான் கேரளா பூமி.
////////////////////////////////
தம்பி பொய் சொல்லக்கூடாது!?//
இல்லையா பின்னே? உங்க சொந்த அனுபவம் இருந்தா சொல்லுங்கோ நண்பா.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இதுக்கெல்லாம் பயந்த ஆளு நாங்க இல்ல என்பதுதான் உண்மை என்றாலும் இளம்பெண்களை ஏறிட்டு பார்க்க வேண்டும் எனும் எண்ணம் ‘அடிக்கடி’ தோன்றவில்லை. /////////
எந்தா கோபி..... இது என்ன சோதனை.....? மான்கொம்பு லேகியம் வாங்கி ஒரு மண்டலம் கழிக்கவும்..........//
புனுகுப்பூனை கொம்பு லேக்கியம்தான் பேமசாம் அங்கன..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஆனால் அதையும் மீறி.....///////
மீறி.............. கம்முன்னு வந்துட்டீங்க, அதானே...........?//
நோ. அங்கன ஒரு தேவதையை ஞான் கண்டு. அடுத்த பதிவில் சொல்வேன். கேட்டோ..
வணக்கம் சிவா,சார்!பொண்ணுங்க போட்டோ,எதுக்கு?நீங்க அதெல்லாம் கண்டுக்காதீங்க!மீண்டு வந்தீங்களே?அதுவே போதும்!ஹி!ஹி!ஹி!!(இந்தியாவிலேயே வீரம் விளைஞ்ச பொண்ணுங்க இருக்கிற இடம் தான் கேரள பூமி,ஹ!ஹ!ஹா!!!!)
:)))))))))))))
இன்னும் வரட்டும்.....
அந்த 10949857875878172385789237 சொச்சம் போடோஸ்.....
அது முக்கியம்...
சகீலா குளிக்கிற போட்டோ ஒண்ணும் சேர்த்து போட்டிருக்கலாமே? ஹி ஹி
பெண் தன்னைத்தானே கண்ணாடியில் அணுஅணுவாக ரசித்து பார்ப்பாள்.ஆடவன் தன்னை ரசிப்பதையும் ரசிப்பாள்.
பச்ச மண்ணாயிருக்கிய...
கேரளாவுக்கு போயிட்டு கண்ணுக்கு குளிர்ச்சியா படம் போடாத சிவாவுக்கு கண்டனங்கள்...
Post a Comment