CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 2, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (02/06/12)
அரும்பு மீசை(!) குறும்பு பார்வை:

                                                                     
அடுத்த மாதம் 30 ஆம் தேதி அகவை முப்பத்தி ___ இல் அடி எடுத்து வைக்கும் பாசமிகு அண்ணன் ‘நவீன கர்ணன்’ புதுகை அப்துல்லாவே!! 


எங்கள் வெண்சூரியனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இணையத்தில் சில்லி பாலிடிக்ஸ் செய்யாமல் ஜென்டில்மேனாக வலம் வரும் அசல் உடன்பிறப்பே..நீ வாழி!!

இவண்
புதுகை அப்துல்லா பாசக்கார பயல்கள் பாசறை,
சென்னை.
..........................................................................................


ஆனந்தம்:
ரஷ்யர்கள் மட்டுமே பல்லாண்டு காலம் கோலோச்சி வந்த செஸ் உலகில் இப்போது நமது தேசத்தின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாம் முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது போற்றத்தக்கது. சந்தேகமின்றி சச்சினை விட பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்கள் பட்டியலில் ஆனந்துக்கும் இடமுண்டு. லியாண்டர் பெயஸ்உலக மகளிர் பாக்சிங் சாம்பியன் மேரி கோம் போன்றோரும் அவ்விருது பெற சரியான ஆட்களே என்பது எனது கருத்து.
..........................................................................................

மதிகெட்டான் சாலை:
                                                                        Spot: Mount Road
  
வாழும் வள்ளுவர், வாழும் காமராஜர்....அடுத்து வாழும் வல்லபாய் பட்டேலாமுல்ல!! புழுதி வாரி தூற்றுவோர் சரி. அது யாருப்பா அது போற்றுவோர்?'. ஏம்பா போஸ்டர் உபயமணி..உன்னைத்தான்.                                                                 
....................................................................................

ரௌடி ராத்தோர்:
கார்த்தி நடித்த சிறுத்தைதான். அக்சய் குமார் நடிக்க பிரபுதேவா இயக்கி உள்ளார். நம்ம நாசருக்கு வில்லனாக நடிக்க நிறைய சீன்ஸ். ப்பனிங் சாங்கில் ஒரு சில நொடிகள் தலைகாட்டிவிட்டு மறைகிறார் இளையதளபதி விஜய். அவரைப்பார்த்து ‘சூப்பர் ஸ்டார்’ என அலறுகிறார் அக்சய். பாடல்கள் அனைத்தும் படுசுமார். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அலுப்பு. சுமாரான மசாலா.
...................................................................................

The Raid Redemption:

                                                                     
சொல்லிக்கொள்ளும்படி வெளிநாட்டு அதிரடி ஆக்சன் படங்கள் நம்மூரில் நெடுநாட்களாக வராமல் இருந்த வறட்சியை போக்க வந்திருக்கும் இந்தோனேசிய படம். ஆங்கிலத்தில் டப் செய்துள்ளனர். ஆரம்பம் முதல் இறுதிவரை அசல் ஸ்டன்ட் காட்சிகள் அமர்க்களப்படுகின்றன. ஒவ்வொரு கொலையும் படு நேச்சுரல். ரத்தவாடை அதிகம்.நாயகன் இகோ மற்றும் இரண்டாம் பாதியில் நீள்முடி வைத்த வில்லன் இருவரின் பைட் சீன்கள் அபாரம். சண்டைப்பட ரசிகர்கள் தவற விட வேண்டாம். 
.......................................................................................


வாய்க்கொழுப்பு:
சென்ற வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை மட்டுப்படுத்தி கோட் கோபி பேசியது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது முற்றிலும் சரிதான். தனக்கென ரசிகர் படை, கட் அவுட், பால், பீராபிஷேக படாடோபங்களை கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களும் மெளனமாக வரவேற்கத்தான் செய்கின்றனர். இதில் பவர் ஸ்டாரை மட்டும் காமடி பீஸ் ரேஞ்சுக்கு சபையில் அழைத்து கோபி அவமானம் செய்திருப்பது சிறுபிள்ளைத்தனமானது. அனைத்தையும் சகித்துக்கொண்டு அமைதியாக பதில் சொன்ன பவர் ஸ்டாரின் பக்குவத்திற்கு ஒரு சபாஷ்.

இதே போல பெரிய நடிகர்களை அழைத்து கேள்வி கேட்கும் துணிவு இருந்தால் அப்போது அடிக்கலாம் கோபிக்கு ஒரு விசில். வர வர நீயா நானா நிகழ்ச்சியும் மொக்கையாக மாறி வருவது கண்கூடு. கோட்டை ஹாங்கர்ல மாட்டுங்கப்பு.
......................................................................................... 


திருப்பாச்சி:
தமிழ் இணைய எழுத்தாளர்களை கண்டு ஆரம்பத்தில் முன்னணி பத்திரிக்கைகள் கேலி செய்த காலமுண்டு. ஆனால் சமீபகாலமாக சிறப்பாக எழுதும் பல இணைய நண்பர்களை அரவணைத்து அவர்களின் படைப்புகளை வெளியிடும் கட்டாயம் பிரிண்ட் மற்றும் விசுவல் மீடியாக்களுக்கு வந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இந்நிலை பல நாட்களுக்கு நிலைக்கக்கூடாது என்பதில் ஒரு சில முன்னணி/பின்னணி/ஏதோ ஒரு அணி (அட போங்கய்யா) நபர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்களோ என்ற உணர்வு மேலோங்கி உள்ளது. (மேலோங்கி, ஆகச்சிறந்த, அவதானிப்பு...ஸ்..யப்பா..இன்டெலெக்சுவல் பதிவர் ஆக என்ன பாடு பட வேண்டி இருக்கு).


பதிவர் மீதான கோபம் இருப்பின் அலைபேசி, இ-மெயில் அல்லது பதிவு கூட போட்டு பொளக்கலாம். உச்சகட்டமாக நேரில் அழைத்து கொமட்டையில் கூட குத்தலாம். ஆனால் அநாகரீகமாக பதிவர்களின் மனைவியை வைத்து பதிவு போட வேண்டிய அளவுக்கு லோ கிளாஸ் ஆக இறங்க வேண்டுமா என்ன? சிபி குறித்து ராஜன்(லீக்ஸ்) எழுதிய பதிவிற்கு எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அதற்கான லிங்க்:


கெட்ட வார்த்தையால்சில இணைய நண்பர்கள் பதிவு/ட்வீட்/பின்னூட்டம் போட்டு பதிவர்கள் மீதான மரியாதை(!)யை ‘குலைத்து’ வருவதும் சரியெனப் படவில்லை. ‘எக்கேடோ கெட்டு போங்க’ (யோவ் பிலாசபி...ஒரு ப்லோவுல வந்துருச்சி..நீ டென்ஷன் ஆகாத...பலாப்பழம் மேட்டர்...டோன்ட் வொர்ரி பீ ஹாப்பிலே தம்பி).
....................................................................................


நீதிக்கு தண்டனை:
‘என் தேசம், என் மக்கள்’ என இரவு பகல் பாராது உழைத்த கர்மவீரர் குறித்து நெஞ்சை நெகிழ வைக்கும் குரலில் இசைஞானி பாடிய பாடல். அப்பேற்பட்ட அப்பழுக்கற்ற தலைவன் வாழ்ந்த மண்ணில் இன்று ஊழலில் திளைத்த தலைவனுக்கு உற்சாகம் பொங்க பிறந்த நாள் கொண்டாடுகின்றது ஒரு கூட்டம். என்றோ செத்தது நீதி. செழித்தோங்கட்டும் கள்ளநிதி.


....................................................................................

.................................
My other site:
................................15 comments:

கோவை நேரம் said...

கடைக்கு முதல் கஸ்டமர்

MARI The Great said...

வல்லபாய் பட்டேல் மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தால் என்ன ஆகிருக்கும் ..?

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!சாட்டையடி ஒவ்வொன்றும்!!!கள்ளநிதி............ஹ!ஹ!ஹா!!!!!!!!

kanagu said...

வெல்கம் பேக் தல.. :)

வழக்கம் போல மீல்ஸ் அருமை :)

முதல் இந்த போஸ்டருக்கு ஐடியா கொடுக்குறவனுங்க எல்லாத்தையும் புடிக்கணும். தொல்லை தாங்க முடியல...

பெட்ரோல் உயர்வு பத்தியும், தட்டுப்பாடு பத்தியும் எதுவுமே சொல்லலியே தல :(

சேலம் தேவா said...

இந்தநாளில் காமராஜரைப் பற்றி குறிப்பிட்டது அருமை.

Unknown said...

அண்ணன் அப்துல்லா அவர்களின் நாற்பத்திஏழாவது!? பிறந்த நாளுக்கு கோவை பாசக்கார பாசறையின் சார்பில் வாழ்த்துகள்!!!???

Unknown said...

வாழும் வல்லபாய் பட்டேல்
/////////////////////////
போஸ்டர் அடிச்சவன கொமட்டுல ஒன்னு குத்துலே....!

Unknown said...

சிபி குறித்து ராஜன்(லீக்ஸ்) எழுதிய பதிவிற்கு எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
//////////////////////////////////////
விடுய்யா....விடுய்யா......அவரு எந்த சந்திப்புக்கு போனாலும் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிட்டு வருவாரு! அக்கபோரு “ராசா”வின் கமெண்ட்டுக்கு என் வன்மையான கண்டனங்கள்!

CS. Mohan Kumar said...

கலைஞர் மற்றும் புரட்சி தலைவர் கூட உட்கார்ந்து சாப்பிடுறாரே அப்து அண்ணன். அப்போ அவருக்கு ஒரு 80, 85 வயசு இருக்குமா? :))

நீங்க சொன்ன ஆங்கில படம் பார்க்க முயற்சி பண்றேன். இன்று டைம்ஸ் தின பத்திரிக்கையிலும் விமர்சனம் போட்டுள்ளனர்

உணவு உலகம் said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO THIRU.PUTHUKAI ABDULLAH. PLEASE CONVEY.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இணையதளபதியார் புதுகை அப்துல்லாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிபி குறித்து ராஜன்(லீக்ஸ்) எழுதிய பதிவிற்கு எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அதற்கான லிங்க்://////

கண்டனங்கள்.

Philosophy Prabhakaran said...

வல்லபாய் பட்டேலை விடுங்க... இன்னும் நூறு வருஷத்துக்கு அப்புறம் எவனுக்காவது வாழும் ப.சிதம்பரமே'ன்னு போஸ்டர் அடிப்பாங்களே... அதை நினைச்சா தான் எனக்கு பீதியா இருக்கு...

ஆங்... நீங்க எழுதினா பகடி... மத்தவங்க எழுதினா தனி மனித தாக்குதலா... பலாப்பழத்தை நேரில் பார்த்தால் உரிக்கிறேன்...

புதுகை.அப்துல்லா said...

அடங்கொய்யா!!! இந்த ஃபோட்டாவை இன்னைக்குத்தான் பாக்குறேன். அடங்கமாட்டியாண்ணே நீயி? :))

! சிவகுமார் ! said...

ஆழ்நிலை சுனாமிகள் அடங்குவதில்லை. அநியாயத்தை கண்டு அண்ணனின் தம்பிகள் முடங்குவதில்லை. ஆர்ப்பரிப்புகள் தொடரும்!!

Related Posts Plugin for WordPress, Blogger...