CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 30, 2012

ஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்


                       
         
ஹாரி போட்டர், பேட்மேன், ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்கள் ஒன்றைக்கூட பார்க்கும் எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. ஆங்கில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது ஜூனியர் ஆர்டிஸ்ட்டிடம் ஹீரோ சும்மா பேசும்போது திடீரென “சூப்பரப்பு” என்று கைதட்டி அரங்கில் ஒரு சிலுப் சிலுப் காட்டும் வகையறா நான் என்பதால், இதுகாறும் கதை புரியாதோ என்ற பீதியில் பாகம் 1,2,3 படங்களை தவிர்த்தே வந்தேன். ஒரு சில மட்டும் விதிவிலக்கு. பெரம்பூரில் சத்யம் தியேட்டரின் கிளை புதிதாக ஓப்பன் ஆகி இருப்பதால் நண்பருடன் ஸ்பெக்ட்ரம் மாலுக்கு ஒரு விசிட் அடித்தேன்.

சிலந்தி கடித்து ஸ்பைடர் மேன் ஆகும் இளைஞன். ஒரு மார்க்கமான ஜந்துவாக மாறும் விஞ்ஞானி. பாசம், ரொமான்ஸ், சண்டை என கலந்து கட்டி உள்ளனர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் இரண்டு சீன்களில் வந்து மறைகிறார். ஹீரோ கட்டிடங்களில் தவ்வும் காட்சிகள் அனைத்தும் நைட் எபெக்டில் இருப்பதால் 3-D கண்ணாடிக்கு குடுத்த காசு பணால். எனினும் போர் அடிக்காத ஒரு அபவ் ஆவரேஜ் மூவி என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்பெக்ட்ரம் மால்..பெரம்பூர் வீனஸ் தியேட்டர்தான் இப்படி உருமாறி உள்ளது. கொச கொச ட்ராபிக் இருக்கும் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ளது இந்த மால். அனைவர் கண்ணிலும் படும் வண்ணம் இல்லாமல் சின்ன சந்தின் உள் பதுங்கி இருக்கிறது. பிக் பஜார், புட் கோர்ட், ஒரு சில கடைகள் அவ்வளவுதான். எக்ஸ்ப்ரெஸ் அவின்யூவின் சாம்பிள் சைசில்தான் உள்ளது ஸ்பெக்ட்ரம்.

                                                                    
இரண்டாம் தளத்தில் எஸ்-2 எனும் பெயரில் சத்யம் ஐந்து ஸ்க்ரீன்களை  ஓப்பன் செய்துள்ளது. நாங்கள் சென்றது ஸ்க்ரீன் - 3. தெளிவான ஸ்க்ரீன், குடுத்த காசுக்கு மேலே ஏசி போடுதல், முன்னே இருப்பவர் தலை மறைக்காத சீட் அமைப்பு , நல்ல லெக் ஸ்பேஸ், படு சுத்தமான சூழல் என எஸ்கேப், சத்யம்(ராயப்பேட்டை) காம்ப்ளக்ஸ்களுக்கு இணையாக உள்ளது எஸ்-2. டஸ்ட் பின் எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால் சீட்டின் தரம் சாதாரணம்தான். குஷன், புஷ்பேக் இல்லை. ஒரு தியேட்டர் மட்டும் பெரிய சைஸ் என்றும் மற்ற அனைத்தும் மினி/மீடியம் என்றும் சொன்னார் ஊழியர் ஒருவர்.


                                               கடுபு இட்லியை ருசிபார்க்கும் தோழர் மகேஷ்

உணவு நீதிமன்றத்தில் (புட் கோர்ட்) மற்ற மால்களில் இருப்பது போல கார்ட் சிஸ்டம் தான். காசு வாங்குவதில்லை உணவகங்கள். கிரெடிட் கார்டில் புட்கோர்ட் கார்ட் வாங்கினால் பத்து ரூவாய் அதிகம் சார்ஜ் செய்கின்றனர். அத்தொகை ரீபன்ட் கிடையாதாம். பாலிமர் எனும் உணவகத்தில் கடுபு எனும் இட்லி வகையை ருசிபார்த்தோம். கிண்ணத்தில் வார்த்தெடுத்த வடிவில் இரு இட்லிகள். நான்கு சாதா இட்லிகளுக்கு சமமான அளவில். விலை ரூ.55. சாம்பார் படு சுமார்தான். இவ்வகை இட்லி கர்நாடத்தில் கிடைக்கும் என்றார் சமையல்காரர்.                                                            

                                                                                          
'இந்தியாவின் சரவணா ஸ்டோர்ஸ்' ஆக வீற்றிருக்கும் பிக் பஜார் வழக்கம்போல் இந்த மாலிலும் கீழ் தளத்தில் கடை விரித்து உள்ளது. ஒண்ணு வாங்குன ஒண்ணு இலவசம் ரேஞ்சில் பல பொருட்கள் உள்ளன. பேக் செய்யப்பட பல உணவுப்பொருட்களின் தரம் பல்லிளிக்கிறது. சொத்தையான வேர்க்கடலை பாக்கெட், மட்ட ரக எண்ணையில் பொறித்த சிப்ஸ் போன்றவற்றை கண்டு எரிச்சல் வந்தது. சாதாரண கடையில் திடுதிப்பென புகுந்து போலி/கலப்பட பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற மேல்தட்டு கடைகளை கண்டு கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் பெரம்பூர் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் மால் ஓரளவுக்கு சரிப்படலாம். குறுகலான  பேப்பர் மில்ஸ் சாலை, சிறு எண்ணிக்கையில் உள்ள கடைகள்  போன்றவற்றை வைத்து பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பெரிதாக மக்களை கவர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

நஸ்ருதீன் ஷா நடித்த மாக்ஸிமம், மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல்....மினி விமர்சனம் விரைவில்.
.................................................................................
  
Images: madrasbhavan.com    Friday, June 29, 2012

மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி   
சிலுசிலுவென குளிரடிக்குது. அடிக்குது. சிறு அரும்புகள் மலர் வெடிக்குது. வெடிக்குது. மரம் விட்டு மரம் வந்து மனம் கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே....

மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...

நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள. நீல வானம். அதில் எத்தனை மேகம். நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும். காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச. காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச. தேக்கும் பாக்கும் கூடாதோ. தோளை தொட்டு ஆடாதோ. பார்க்க பார்க்க ஆனந்தம். போகப்போக வாராதோ.

என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.

ஹேய்..மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...

ஹா..ஏலே லிலி லோ..ஏலே லிலி லோ..

தூறல் உண்டு. மழைச்சாரலும் உண்டு. பொன்மாலை வெய்யில் கூட ஈரமாவதுண்டு. தோட்டமுண்டு. கிளிக்கூட்டமும் உண்டு. கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு. நானந்த கிள்ளை போல வாழ வேண்டும். வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்.

எண்ணம் எண்ணும் சிட்டுத்தான் ரெக்கை கட்டிக்கொள்ளாதா. எட்டுத்திக்கும் தொட்டுத்தான் எட்டிப் பாய்ந்து செல்லாதா.

என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.

மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...    
................................................................................

Sunday, June 24, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (24/06/12)
முப்பொழுதும் உன் கற்பனைகள்:
 
                                                   
எக்ஸ்ப்ரஸ் அவின்யூ தரைத்தளத்தில் அவ்வப்போது சாம்சங் மொபைல் விளம்பரம் மேற்கண்டவாறுதான் அரங்கேறுகிறது. நம்ம யூத் பசங்க ஒருத்தனும் அங்க போயி போன் வாங்குதா சரித்திரமே இல்ல. சிட்டுக்குருவிங்களை ஒருமணி நேரமாவது சுத்தி சுத்தி பாத்துட்டு வெறுங்கையோட எஸ்கேப் ஆவறானுங்க. நம்ம சமூகம் இப்படி குப்புற படுத்துருச்சே அப்டிங்கற ஆதங்கத்துல ஸ்பாட்ல எடுத்த போட்டோ.

ஏம்பா உங்க தங்கச்சிங்கள கொஞ்சம்  அதட்டக்கூடாதா?
.......................................................................................                                                                          
         
குத்து:      
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டை பிரிவில் எட்டு பேர் இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் அதிகபட்சம் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்ற நம் தேசம் இம்முறை மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பெண்சிங்கம் மேரிகோம் களத்தில் இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது.
...................................................................................


தமிழச்சி:
நமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:


                                                                     
.......................................................................................

Gangs of Wasseypur:
அனுராக் காஷ்யப் இயக்கம், மனோஜ் பாஜ்பாய் ஹீரோ என பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான மூவி. பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்த நாள் முதல் பல்லாண்டுகள் இரு மாபியா கும்பல் இடையே நடக்கும் கேங்வார் தான் களம். பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். மொத்தம் 14 பாடல்கள். அதில் பல கேட்கத்தூண்டுபவை. மாபியா வரலாற்றை பின்னணி குரலில் ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார். பெட்ரோல் பங்கில் மனோஜ் கொள்ளை அடிக்கும் காட்சிவரை கொட்டாவி வர, அதன் பின் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

இடைவேளைக்கு பின் நேர்கோட்டில் செல்லாமல் இதர கேரக்டர்கள் பற்றிய அறிமுகத்தால் நமக்கு தலை சுற்றுகிறது. படத்தின் நீளம் 2 மணி 40 நிமிடங்கள். ஜாம்பவான் பதிவர் என்னருகே குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு ஜவ்வுக்காட்சிகள். இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது. 
..................................................................................

அக்னி நட்சத்திரம்:
மெகா சைஸ் ஊழல் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட கோப்புகள் உள்ள இடங்களில் சில மாதங்களாக தீப்பற்றி எரிந்து வருவதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இருக்கும் உள்துறை அமைச்சக கட்டிடமும் அடங்கும். ஆதர்ஷ் ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் மொத்தமும் சில நாட்களுக்கு முன்பு தீக்கிரையாகின. தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க!!
.................................................................................


கிளிப்பேச்சு கேட்க வா:
பதிவர்களுடன் சமீபத்தில் புதுச்சேரி சென்றபோது கடற்கரை அருகே கிளி ஜோசியம் பார்க்க சொல்லி பிரபாகரனை கோர்த்து விட்டார் அஞ்சாசிங்கம். “உனக்கு ரெண்டு பொண்டாட்டி கன்பர்ம். மூணு பசங்க. உன் பையன் ஏரோப்ளேனை தலைகீழா ஓட்டுவான்(!!)” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே?” என்றார். “அப்படியெல்லாம் இல்லையே” என நான் அடித்து கூற பிளேட்டை மாற்றினார். “அமாவாசை இருட்ல வழிப்போக்கன் கக்கா போன இடத்துல நீங்க காலை வச்சிருப்பீங்க. அதுக்கு பரிகாரம் பண்ணுங்க” என்று டெர்ரர் காட்டினார். ‘ரீலு அந்து போச்சி. ஆளை விடுங்க’ ரியாக்சன் காட்டி விட்டு காணாமல் போனோம்.
..............................................................................


பிடிச்சிருக்கு:
இந்த வாரம் நான் படித்ததில் சிறந்ததென கருதுவது நாஞ்சில் மனோ மண்பானை பற்றி எழுதிய பதிவாகும். தனது சொந்த அனுபவத்தை எளிய நடையில் அழகாக எழுதி உள்ளார். அண்ணனின் மகள் மண்பானை சுமக்கும் போட்டோக்கள் நன்று. மாதம் மூன்று தரமேனும் இது போன்ற பதிவுகளை எழுத சொல்லி உள்ளேன்.

பதிவிற்கான லிங்க்: மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு
..............................................................................

தவமாய் தவமிருந்து:


                             
..................................................................................


புதிய மன்னர்கள்:
கலைஞர் டி.வி. நடத்தும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சென்ற வாரம் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘ஒரு கோப்பை தேநீர்’ அருமையாக இருந்தது. பெண் போலீஸ், திருடி இருவரும் நடிப்பும் கச்சிதம். இன்று நடந்த அரை இறுதியில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ குறும்படம் நகைச்சுவையாகவும், ‘தர்மம்’ நெகிழ வைப்பதாயும் இருந்தது. தர்மம்  இயக்குனருக்கு தன் தயாரிப்பு நிறுவனமான சாலமன் ப்ரொடக்சனில் கதை சொல்ல வாய்ப்பு தந்துள்ளார் ‘மைனா’ பிரபு சாலமன். பத்தே நிமிடத்தில் சிறப்பாக படம் எடுக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கோடம்பாக்கத்தின் நல்வரவுகள்தான்.
..................................................................................


பாட்டொன்று கேட்டேன்:
டி.எம்.எஸ். குரலில் பொங்கி வரும் தேனிசை. படம்: சௌபாக்யவதி.யுகங்கள் பல தாண்டினாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடலல்லவா..

                                                            
...............................................................................


............................
My other site:
agsivakumar.com
.............................

..............................................

சமீபத்தில் எழுதியது:

சகுனி – விமர்சனம்
..............................................
                                                             

Thursday, June 21, 2012

கேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’


       
இதற்கு முன்பாக சங்கர் அவர்கள் எழுத்தில் வெளிவந்த ஐந்து புத்தகங்களில் நான் படித்தது ‘சினிமா வியாபாரம்’ மட்டுமே. அடுத்து காத்திருந்தது ‘சினிமா என் சினிமா’விற்காக. உலக சினிமாக்களை பார்த்து விட்டு ‘ப்ளடி..என்ன படம் எடுக்கறாங்க இங்க?’ என்று சதா சர்வகாலமும் உள்ளூர் படங்களை வெறுத்தொதுக்கும் நபர்கள் ஒரு வகை. நம்பியார் நம்ம வாத்தியார் உதட்டோரம் ரெண்டு தரம் தக்காளி சட்னி ஊற்ற வைத்ததும் அதைக்கண்டு பொறுக்காமல் கையில் இருக்கும் கத்தியை திரை கிழியும் அளவிற்கு தூக்கி வீசி ‘அதாலேயே அவன் தொப்புளை கீறு தலைவா’ என்று பொங்கும் பட்டாளம் இன்னொரு வகை. இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே யதார்த்தமாக பயணித்தவாறு சினிமா குறித்த நல்ல புரிதலோடு அத்துறையில் நீண்ட காலம் இயங்கும் லைவ் வயர்தான் கேபிள் சங்கர். இவர் எழுதும் வெள்ளித்திரை சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கு ஆவல் வர முக்கிய காரணம் - காசுவல் ரைட்டிங். அவ்வகையில் முதல் பிரதியை வாங்கி சுடச்சுட நான் படித்த ‘சினிமா என் சினிமா’ பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்கு.

ஜான்சிராணி எனும் புதிய பதிப்பகத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இந்நூலின் விலை 70 ரூபாய். திக்கான பளபளா அட்டையுடன் மொத்தம் 102 பக்கங்கள். அழகாக டிசைன் செய்து இருக்கிறார் சென்னைப்பதிவர் ‘வலைமனை’ சுகுமார். சமீப காலங்களில் வெளியான 27 திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பே இப்புத்தகம். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல. பாத்துருவோம் பாஸ்’ ‘அட...படம் நல்லா இருக்கும் போல’ ‘நேர்த்தியான விமர்சனம். அருமை’, அனைத்திலும் உச்சமாக முழு விமர்சனத்தையும் படித்து விட்டு ‘படம் பாக்கலாமா? வேணாமா?’ என்று கேபிளின் இணையத்தில் திரை விமர்சனங்களுக்கு கமன்ட் போட்டு எகிறி ஓடிய அன்பர்கள் பரிகாரம் தேட ஒரு வாய்ப்பை தந்துள்ளது இந்நூல். ஏழாம் அறிவு, அவன் இவன், அரவான் போன்ற படங்களுக்கு நிறைய இடம் ஒதுக்கி கொத்து பரோட்டா போட்டுள்ளார் ஆசிரியர். டெல்லி பெல்லி, சாஹிப் பீவி அவுர் கேங்க்ஸ்டர், வெங்காயம் என நான் பார்க்காத படங்களை எப்படியும் பார்த்தாக வேண்டிய ஆவலை தூண்டுகின்றன விமர்சனங்கள். 

முதல் சில பக்கங்களை திருப்புகையில் ‘முன்னுரை, என்னுரை, புகழுரை’ என்று எதுவுமின்றி நேரே எங்கேயும் எப்போதும் விமர்சனத்துடன் ஆரம்பித்துள்ளது நன்று. ‘இந்த நூலின் ஆசிரியர் உலக சினிமா டிவிடியை மிக்சியில் அரைத்து முப்பொழுதும் நாலு க்ளாஸ் குடுக்கும் அளவிற்கு வித்தகர்’ ரீதியில் வழக்கமாக புல்லரிக்கும் புத்தகங்களின் முதற்பக்க க்ளிஷேவை தவிர்த்துள்ளார் கேபிள். பக்கங்களை தாண்ட தாண்ட கமா, முற்றுப்புள்ளி மற்றும் எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. இதைக்கவனிக்க எப்படி தவறினர் என்பது முக்கியமான கேள்வி. Dirty Picture – dirtry picture, Vicky donor – Vicky doner என தலைப்பிடப்பட்டு உள்ளதும் குறையே. இனி வெளியிடவுள்ள புத்தகங்களில் கடுமையான ப்ரூப் ரீடிங் அவசியம் சாரே.

‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனத்தில் ‘அஞ்சலியை பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றுகிறது’ என துள்ளி குதிக்கிறார் ஆசிரியர். பாத்து சார். டபுள் கோட்டிங் கையோட வந்துற போகுது. மயக்கம் என்ன படத்தில் ‘கண் கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ்’ இருந்ததாக சொல்கிறார். போங்க சார் ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு. ‘ஆடுகளத்தில் பெரியவர் ஜெயபாலன் மற்றும் கிஷோருக்கு முறையே ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி டப்பிங் தந்துள்ளனர்’ போன்ற தகவல்கள் சராசரி ரசிகனுக்கு புதிது. மங்காத்தா எங்கிருந்து சுடப்பட்டது என்று லிஸ்ட் போட்டு, ஒரிஜினல் எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஒரு சில பதிவர்களை லேசாக சுரண்டியும் பார்க்கிறார் சங்கர் நாராயண். நூலில் வந்த விமர்சனங்களில் குட் நைட் குட் மார்னிங்(ஆங்கிலம்) மற்றும் விக்கி டோனர்(ஹிந்தி) இரண்டையும் பரிந்துரைத்து என்னை தியேட்டருக்கு அழைத்து சென்றார் கேபிள். இரண்டுமே சிறப்பு. குட் நைட் குட் மார்னிங் சில நாட்களே தியேட்டர்களில் வலம் வந்தது. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி.யில் தவறாமல் பாருங்கள்.

சிறந்த சினிமா விமர்சகர் ஆவதற்கு முக்கிய தகுதிகள் சில உண்டு. ஒளிப்பதிவு, பின்னணி இசை பற்றி போதிய அறிவு/தீவிர ஆர்வம், படத்தில் நடித்த சிறு கேரக்டர்கள் குறித்த தகவல்களை கூறுதல், படம் தேறுமா, தேறாதா என்பது குறித்த வணிக சூட்சுமம் உள்ளிட்ட சில. இது போன்ற  நுட்பமான மற்றும் புதிய விஷயங்களை விமர்சனங்களின் ஊடே தருவது கேபிள் சங்கரின் ப்ளஸ் என்பதற்கு ‘சினிமா என் சினிமா’ ஒரு சாம்பிள். வரும் ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் இந்நூல் வெளியீடு நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாசர், அம்புலி இயக்குனர்கள் ஹரீஷ் நாராயண் – ஹரி சங்கர், கிருஷ்ணவேணி பஞ்சாலை இயக்குனர் தனபாலன் ஆகியோர் வரவுள்ளனர். வாழ்த்துகள் கேபிள் சங்கர். ‘சாப்பாட்டுக்கடை’ புத்தகம் சீக்கிரம் ரிலீஸ் செய்க!!

சினிமா என் சினிமா பெப்பர் பாப்கார்ன்
.............................................................................


Tuesday, June 19, 2012

எடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புதுச்சேரி பதிவர் கோகுலின் திருமண வரவேற்பிற்கு படையெடுத்து கிளம்புகையில் எடுத்த நிழற்படங்கள்:

                                             ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் சொர்க்க வாசல்.

           கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள்.                


                               பாண்டி கட் அவுட்: விருச்சிகம்....காந்த்..விருச்சிகாந்த். நடிச்சா ஹீரோ சார்.       

                                              பாண்டியின் ஸ்நேக் பாபு ப்ளீச் தலை நாராயணசாமி.            

       
                               நக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள்.                

                                                ‘ஒரே ஒரு மூடி குடி செல்லம். மாமா சொல்றல்ல’...        

 
                                                   ‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. போயா அந்தப்பக்கம்’.

                                                   இறுக்க அணைச்சி ஒரு உம்மா தரோ..
               

                                ஆரூர் முனாவிற்கு நக்கீரன் நூறு ரூவாய் தந்ததன் மர்மமென்ன?          

                                       பிலாசபி மீது ஒன்றரை டன் அன்பை பிழியும் நக்கி & ஆரூர் முனா.


புதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி.                       
தொடர்ந்தாலும் தொடரும்..

                                                              
................................................................................................
                                                                            
    

Saturday, June 16, 2012

பதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரூன், பீட்டர் ஜாக்ஸன்...சினிமா ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான இயக்குனர்கள். நான் முதன் முதலில் திரையில் பார்த்து வெகுவாக பிரமித்த படம் ஜுராசிக் பார்க். அதன் பின் டைட்டானிக். ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முதல் பாகத்தை பார்த்த பின்பு மந்திரித்து விட்டவன் போல அரங்கில் இருந்து வெளியே வந்தேன். எப்பேர்பட்ட பிரம்மாண்டம்? அதை இயக்கிவர் தல பீட்டர் ஜாக்ஸன் என்றதும் அண்ணாத்தையை நேரில் பார்த்து சலாம் போட மனது படபடத்தது. அடுத்த சில மாதங்களில் மூன்று பாகத்தையும் தனியே நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன். விஷுவல் எபக்ட், சிகை மற்றும் உடையலங்காரம், லொக்கேஷன், விறுவிறுப்பான காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் மனதை கொள்ளை கொண்டன. இவ்வளவு கதாபாத்திரங்கள் எங்கிருந்து வந்தன, பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்பதை அறியும் ஆவல் நீண்ட நாட்கள் இருந்து வந்தது. முன்பொரு காலத்தில் ஸ்பென்சர் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முழுக்கதை கொண்ட மெகா சைஸ் புத்தகம் மற்றும் behind the scenes டி.வி.டி. இரண்டையும் சேர்த்து 2,000 ரூபாய்க்கு விற்றனர். அதிக விலை என்பதால் வாங்காமல் வருத்தத்துடன் இல்லம் திரும்பினேன். ஆனால் தற்போது நண்பர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படைப்பில் வெளியாகி இருக்கும் வார் ஆப் தி ரிங் மின்னூலை படித்ததன் மூலம் அக்குறை தீர்ந்ததில் பெருமகிழ்ச்சி.
  
ஒரு திரைப்படம் குறித்து 280 பக்கங்கள் எழுதுதல் என்பது ஒரு இமாலய முயற்சி. அதுவும் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்ற அதி பிரம்மாண்ட களத்தை கொண்ட படைப்பை அவ்வளவு எளிதில் தமிழில் மொழிபெயர்த்து சற்றும் சோர்வடைய வைக்காமல் வாசிக்க வைப்பதென்பது மிகக்கடினமான வேலை. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் fanatic  ஆல் மட்டுமே இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியும் என்பது நான் உள்ளிட்ட LOTR Fanatics – களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். பீட்டர் ஜாக்ஸன் இந்த சீரிசை உருவாக்க பட்ட பாடுகள், கிராபிக்ஸ், இசை, ஓவியம் என சகல விஷயங்களையும் அருமையான விரிவாக்கம் மற்றும் எளிய தமிழில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இது போன்ற அதிக பக்கங்களை கொண்ட படைப்பை படிக்கையில் ஆங்காங்கே ஹ்யூமர் டச் இருந்தால் வாசிப்பு பயணம் தொய்வின்றி செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறார் தி ஸ்கார்ப். உதாரணம்: சிறுவனாக இருந்த ஜாக்ஸன் வளர்ந்தான்(சைக்கிள் பெடலை சுற்றாமலேயே). அதுபோல சின்ன சின்ன யூகிக்க முடியாத ஆச்சர்யங்களை தருவதும் ஒரு எழுத்தாளனின் ப்ளஸ். WETA (பக்கம் 25) என்பதன் விரிவாக்கம் உண்மை என்று படிக்கும் நமக்கு அதன் நிஜ அர்த்தத்தை அடுத்த வரியில் காண்கையில் ஜெர்க் அடிக்காமல் இல்லை. ராபர்ட் ஷேய் என்பவரிடம் வீடியோவை போட்டுக்காட்டிவிட்டு ஜாக்ஸன் படபடப்புடன் காத்திருக்கும் தருணத்தை விளக்கும் வரிகள் க்ளாஸ். பக்கம் 33 இல் வைத்த சஸ்பென்ஸை 37 இல் உடைக்கும் கட்டம் நமது பல்ஸை எகிற வைக்கிறது. 

                 
முதல் சில அத்யாயங்களில் லாஜிக்குடன் விஜய், நடிகர் கமல்(ராஜேஷின் பேரபிமான ஹீரோ) போன்றோரையும் கொடுக்கினால் பதம் பார்க்கிறது கருந்தேள்( திங்க் க்ளோபல். ஆக்ட் லோக்கல்!!). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல? டோல்கீன் மற்றும் ஜாக்ஸனின் ‘ரிங்ஸ்’ எனும் மெகா தீம் பார்க்கில் குறுக்கு சந்தில் ஆட்டோ ஓட்டிய வண்ணம் இடதில் கையை காட்டி வலதில் இன்டிகேட்டர் போட்டு நேராக செல்வோர் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் கருந்தேள். (ஆட்டோ எண்: LOTR-100). நூலை தொகுத்த விதத்தில் ஒரு சில திருத்தங்கள் இருந்திருக்கலாம் என்பதை ராஜேஷிடம் கூறினேன். அவற்றில் ஒன்று: வலது ஓரத்தில் வரிகள் முடிகையில் அந்த வார்த்தை முழுமை பெறாமல் அடுத்த வரியில் தொடர்வது. குறிப்பிட்ட ஒரு இடையூறால் அதை சரி செய்ய இயலவில்லை என்றும் மறுமுறை அதை நிவர்த்தி செய்வதாயும் கூறியுள்ளார். அது போல ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பின் ஆங்கில சொற்களுக்கு கீழே தமிழிலும் தலைப்பு வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து. வார் ஆப் தி ரிங்ஸ் போன்ற மற்றொரு முயற்சியை (குறிப்பாக கமல் சுட்ட படங்கள்) ராஜேஷ் அண்ட் கோ மேற்கொள்கையில் அப்படைப்பு  வீடியோவில் பதிவு செய்யப்பட கலந்துரையாடலாக இருப்பின் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.                                                                           ராஜேஷ் - Lord of the ring

‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ எடுக்கப்பட்ட லொக்கேஷன்கள்(நியூசிலாந்து) மற்றும் அதற்கென இருக்கும் பிரத்யேக அரங்கங்களை சுற்றிப்பார்க்காமல்(முடிந்தால் ஜாக்ஸனையும் கண்டுகொண்டு) எழுத்தாளரின் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பதென்னவோ உறுதி. இம்மின்னூல் வெளிவந்த சில நாட்களில் தினகரனில் முழுப்பக்க கவரேஜ் வந்தது. ‘வார் ஆப் ரிங்ஸ்’ படைத்த குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த பெருமை. 

தொடர்புடைய பதிவுகள்:Massive எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு கேரக்டர்களை(உதாரணம் போர்க்கள வீரர்கள்) தனித்தனியே சிந்திக்க வைப்பது குறித்த பக்கங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அயல்நாட்டில் எவனோ ஒருவனின் உழைப்பில் உருவாகும் படத்தை அனுமதி இன்று அச்சு அசலாக சுட்டு இங்கு கல்லா கட்டுவதோடு மட்டுமின்றி ‘இந்த படத்துக்கு ராப்பகலா நாயா உழைச்சேன். ஆந்தையா குலைச்சேன்’ என்று பேட்டி தரும் பிரம்மாக்களுக்கு மத்தியில், LOTR போன்ற சினிமாவை எடுக்க ஹாலிவுட் கலைஞர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியை திரைப்பட ரசிகர்களுக்கு வியாபார நோக்கமின்றி விருந்தாக அளித்த இந்த பதிவுலக நண்பர்களுக்கு சபாஷ் போடலாம்.

பெல்லோஷிப், டூ டவர்ஸ், ரிடர்ன் ஆப் தி கிங் மூன்று பாகங்களையும் மறுமுறை கணினியில் பார்க்கையில் அருகே வார் ஆப் தி ரிங் நூலின் தமிழாக்கத்தை படிக்க உள்ளேன். அப்படியொரு பயணத்திற்கு இந்த ஹாப்பிட்டை(நாந்தேன்) அழைத்து செல்ல காரணமாய் இருந்த ‘காண்டால்ப்’ கருந்தேள் மற்றும் அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
........................................................................................
Friday, June 15, 2012

எடோ கோபி ஞான் கேரளா போயி – 6

                                                           
                                       கேரளத்து பெண்கள் போட்டோ கேட்டு நச்சரித்த நல்லவர்களுக்கு..

சில ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் விளைவாக கண்பார்வையை சேர நாட்டு ஆண்கள் இழக்க துவங்கியதும் ஏ.கே.ஆண்டனி அவர்கள் அதை தடுக்க எண்ணினாராம். எனவே அரசு அனுமதி பெற்ற கள்ளுக்கடைகள் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டூப்ளிகேட் சரக்கு கொடிகட்ட பறந்த நாட்களில் திருடன் போலீஸ் விளையாட்டுக்கு பஞ்சமா என்ன? ஆறுகளை ஒட்டிய வனப்பகுதிகளில் கேன் சாராய வியாபாரம் களைகட்டிய நாட்களில் போலீஸ் ரெய்டு வந்தால் நம்ம வியாபாரி சாராய கேனை ஆற்றில் போட்டுவிட்டு துள்ளி நீந்தி எதிர்க்கரைக்கு ஜம்ப் ஆகி விடுவார். அப்படியே ஆற்றின் கீழே இருக்கும் சகாவுக்கு ஒரு சிக்னலும் பாஸ் ஆகிவிடும். நீந்தி வரும் கேனை சகா சாவகாசமாக எடுத்துக்கொண்டு எஸ்கேப். இதைத்தடுக்க மப்டியில் வந்து பம்ப் அடிக்க ஆரம்பித்தது போலீஸ். உடனே நம்ம ‘அன்றாடங்காய்ச்சிகள்’ அடுத்த பிளானை போட்டனர். உதாரணத்திற்கு சைக்கிள் கடைகளில் இருக்கும் ட்யூபுக்குள் சரக்கை நிரப்பி வைப்பது. ‘மாமூலை வெட்டிட்டு வேலையைப்பாரு’ என்று பணத்திற்கு அலைவதை விட ‘நமக்கு டிமிக்கி குடுக்கற பசங்களை பிடிச்சாத்தான் ஆச்சு’ என்கிற கௌரவ பிரச்சினையில்  மும்முரமாக தேடுதல் வேட்டையில் பெரும்பாலான போலீஸ் பட்டாளம் இயங்கியதாம் அப்போது.

                                                          ஞான் உண்ட கள்ளுக்கடை ஸ்பெஷல் டிஷ்


குமரகம் அருகே அரசு லைசன்ஸ் பெற்ற கள்ளுக்கடை ஒன்றில் அருமையான உணவு சாப்பிடலாம் வாங்க என்று மதிய நேரமொன்றில் அழைத்துப்போனார் நண்பர் மகேஷ். அதிக நாற்றமும், சத்தமும் இருக்குமோ என்று சலித்தவாறு உள்ளே நுழைந்த நான் அப்படி எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி அடைந்தேன். நம்மூர் டாஸ்மாக் போல இல்லாமல் நான்கு பேர் மட்டும் அமர தனித்தனியே சுவர் தடுப்புகள் கட்டி வைத்து இருந்தனர். சண்டை நடந்து மண்டை உடைந்தாலும் ஒரு க்ரூப்பால் மற்ற க்ரூப்புக்கு சேதாரம் இல்லை. நண்பரின் ஆர்டரின் பேரில் இரண்டு செட் கப்பக்கிழங்கு, பிரெஷ் ஆன வழு வழு வாலை மீன் மற்றும் பொடிமீன். ருசி டாப் க்ளாஸ். மொத்தம் இருநூற்று சொச்சம்தான் விலை. தண்ணியடித்து உடம்பை கெடுத்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க இம்மாதிரி கலப்பட பொருட்கள் கலக்காத உணவுகள் உறுதுணையாக உள்ளன அங்கே.

குடியால் ஏகப்பட்ட குடும்பங்கள் நாசமாவதைக்கண்ட கேரள அரசு இல்லத்து அரசிகளுக்கு கொண்டு வந்த திட்டம்தான் குடும்பஸ்ரீ. அத்திட்ட உறுப்பினர் அட்டையை மகேஷின் தாயார் என்னிடம் கொண்டு வந்து காட்ட, அது குறித்து மேலும் சில விவரங்களை கேட்டேன். கணவன் தரும் சொற்ப வருமானத்தை நம்பி இராமல் பெண்களே பொருளீட்டும் சுய வேலை வாய்ப்பு திட்டமது. சாலைகள், வீட்டை ஒட்டியுள்ள தோட்டங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது அந்த உறுப்பினர்களுக்கு தரப்படும் வேலை. அதை ஒரு சூப்பர்வைசர் கண்காணிப்பார். வேலைகள் அனைத்தும் கேமராவில் பதியப்பட்டு இணையத்தில் ஏற்றப்படும். சரியாக வேலை நடந்ததை உறுதி செய்தபின் அந்தந்த பெண் உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு உருப்படியான திட்டத்தை செயல்படுத்தும் கேரள அரசுக்கு வாழ்த்துகள் பல. தமிழக அரசின் பார்வைக்கு இது சென்று சேர எத்தனை யுகங்கள் ஆகுமோ. அப்படியே திட்டம் வந்தாலும் கட்சி ஆட்கள் வீட்டு பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமோ?


குடும்பஸ்ரீ இணையதளம்: kudumbashree.org

‘நம்ம ஊர்ல தண்ணி போட்டா கானா பாடி கலக்க ஒரு கூட்டம் இருக்கே அங்க எப்படி?’ என்று கேள்வி எழுமல்லவா? கேரள கள்ளுக்கடை கானா கேக்கலாம் வாங்க..படகுப்போட்டி, சபரிமலை, கோயில் யானைகள், கொஞ்சும் இயற்கை..இது போக கேரளத்தின் புகழை உலகெங்கும் பரப்பும் ஒரு ஸ்பெஷல் விஷயம்..அடுத்த பதிவில். 
Tuesday, June 12, 2012

எடோ கோபி ஞான் கேரளா போயி – 5


"டேய்...எவன்டா அது. இந்த சூனா பானா ஒரு நாள் ஊர்ல இல்லனா மலைய பேத்துருவீங்களா? கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன? மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே? ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது? (தள்ளாடாம) வாங்க..பார்க்கலாம்.

                                                                   image: madrasbhavan.com

மன்னபள்ளி எனும் ஊரை சுற்றி வருகையில் ஒரு கடையில் நீண்ட க்யூ நிற்க என்னவென்று நண்பர் மகேஷிடம் விசாரித்தேன். மதுக்கடை என்றார். அருகில் ஒரு போலீஸ்காரர் வேறு. விவரம் கேட்டதில் கிடைத்த தகவல்கள்: இங்குள்ள(பெரும்பாலான கேரளப்பகுதிகளில்) மதுக்கடைகளில் க்யூவில் நின்றவாறு எந்த ஒரு பிரச்னையும் செய்யாமல் மதுவை வாங்கிச்செல்வர் சோமபான பிரியர்கள். ‘உக்காரு. ஊத்தி அடி’ என தமிழ்நாட்டில் இருப்பது போல டாஸ்மாக் பார்களை அரேஞ்ச் செய்து தருவதில்லை சேர அரசு. ‘வாங்குனையா. கெளம்பிக்கிட்டே இரு' என்கிறார் போலீஸ். எனவே விற்பனை செய்யும் இடத்தருகே கலாட்டாக்கள் மிகக்குறைவு. பாட்டில்களை டூ வீலர்களில் போட்டபடி நடையை கட்டுகிறார்கள் மக்கள். போகும் வழியில் போலீஸ் வழிமறித்து பாட்டிலை செக் செய்கிறார்கள். சீல் ஓப்பன் செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பில்லை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். உட்கார்ந்து உற்சாகபானம் அருந்த ஒன்று அரசு லைசன்ஸ் வாங்கி நடக்கும் கள்ளுக்கடை அல்லது தனியார் பாருக்கு மட்டுமே செல்ல வேண்டும்.

மன்னபள்ளி பேருந்து நிறுத்தத்தை தாண்டி சில நிமிடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போது மகேஷின் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி: “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அங்க ஒருத்தன் போதைல செங்கல் எடுத்து அடிச்சி ஒரு ஆளை கொன்னுட்டான்”. அது மட்டுமல்ல. புன்னவெளி கிராமத்தின் ஆற்றங்கரையில் நீராட சென்ற இடத்திலும் மற்றொரு செய்தி பகிரப்பட்டது. ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த தொங்கு பாலத்தின் வழியே ஒரு குடும்பம் சென்று கொண்டிருக்கையில் குடித்துவிட்டு நான்கைந்து இளைஞர்கள் அந்த பாலத்தை வேகமாக அசைக்க, அச்சத்தில் உறைந்து விட்டனர் அக்குடும்பத்தினர். அவர்களில் ஒரு இளம்பெண்ணும் அடக்கம் என்பதே அப்பயல்களின் வெறியாட்டத்திற்கு காரணம். போலீசுக்கு தகவல் பறந்து வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டதாம் அந்த கும்பல்.

                                                                         image: madrasbhavan.com 

குறுக்கு வழியில் சட்டென சரக்கு வாங்குவது கடினம் என்பதால் பரவச நிலைக்கு தயாராகும் முன் நீண்ட வரிசையில் கடுந்தவம் செய்கின்றனர் சியர் பாய்ஸ் அண்ட் அங்கிள்ஸ். “அப்ப நான் கேரளா போனா இவ்ளோ நேரம் க்யூவுல நின்னே தீரணுமா?” என்று அங்கலாய்க்கும் சரக்கப்பர்களுக்கு ஒரு யோசனையை அள்ளி விட்டனர் அங்கிருக்கும் இளசுகள். காலை, மதியம் மற்றும் மாலை என முப்பொழுதும் முறையே வேலையை விறுவிறுவென செய்ய, லஞ்ச் உண்ட களைப்பில் இளைப்பாற, வேலை முடிந்த அலுப்பில் சிலுப்பு தட்ட..சேட்டன்கள் மதுக்கடை முன்பாக வெகுவாக திரள்கின்றனர்.  எனவே முற்பகல் 11 முதல் 12.30, மாலை 3 முதல் நான்கு வரை கடையை நோக்கி படையெடுத்தால் குட்டி க்யூவில் நின்று புட்டியை சடக்கென வாங்கி வரலாம் என்கிறார்கள்.


குடிமகன்கள் உடல்நலத்திற்கு தன்னால் ஆன பேருதவியை செய்கின்றன மதுக்கடைகள். உண்பதற்கு பெரும்பாலும் மீன் வகைகள்தான். வாய் நாறும் கருவாடு அல்ல பாஸ். ஆறு மற்றும் ஏரிகளில் பிடித்த ப்ரெஷ் ஆன வெரைட்டி மீன்கள். கேரளத்து கள்ளுக்கடை கிச்சனை பாக்கணுமா? காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்(!) நாறிக்கினு கீது. அங்க என்னய்யா இவ்ளோ சுத்தமா இக்குது. எட்றா கேரளாக்கு ஒரு டிக்கட்டை” என்று சொல்லவைக்கும் வீடியோ பதிவு.


போலீசுக்கு டிமிக்கி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள், குடியால் அழியும் குடும்பத்து பெண்களைக் காக்க கேரள அரசு கொண்டு வந்த திட்டம்,  கள்ளுக்கடை கலக்கல் கானா ....மேலும் சில சரக்குகள். விரைவில்.


தொடரும்..


FYI: I am a tee-totaller boss!! :)

............................................................................


...............................
My other site:
agsivakumar.com
...............................


Monday, June 11, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (11/06/12)


சிங்கம்புலி:

                                                   
ஊர்ல இருக்குற பயபுள்ளைக எல்லாம் ப்ளாஸ்டிக் பந்து, நண்டு ஊருதுன்னு விளையாடிட்டு இருக்கையில ‘எனக்கு சிங்கம், புலி, சிறுத்தை பொம்மைதான் வேணும்னு அடம் புடிச்ச பயடா நீ. எதுக்கு பொம்ம. நெசமாவே மூணு சிங்கம், ஒரு சிறுத்தையை வாங்கிப்போட்டா பய ஆசை தீர ஆடிட்டு போகட்டுமேன்னு நாந்தான் ரோசனை சொன்னேன். அஞ்சாறு வருஷம் அதுகளோட நீ வெளையாடுனப்ப எடுத்த படம் இது. வச்சிக்க’ என்று இந்த அரிய போட்டோவை பரிசாய் தந்த ரெண்டு விட்ட சித்தப்பாவை எண்ணி என் மனசு கொக்குகிறது.
..................................................................................


விண்ணைத்தாண்டி வருவாயா:
புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு மேடம் போன இடங்களில் கெண்டை மேளம் முழங்க, மகளிர் தலையில் முளைப்பாரி ஏந்தி க்யூ கட்டி நிற்க..இன்னும் எத்தனை வெரைட்டியான வரவேற்புகள். அரசின் ஓராண்டு சாதனை(?)களை விளக்கி இன்னும் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வண்ண வண்ணமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இது போக ஆளுங்கட்சி விழாக்களில் கரண்ட் கண்டமேனிக்கு செலவாகிறது. பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஆடம்பரம் இன்றி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மேடம் இப்போது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் ஒரு துளி வியர்வை சிந்தாமல் இருக்க டெம்போ ட்ராவலர் குளு குளு பெட்டிக்குள் இருந்தவாறு அல்லது வண்டிக்கு மேலே பிரம்மாண்ட பந்தல் இருக்கும்போது மட்டும் பேசுகிறார். வேர்வை சிந்தி உழைக்கும் பாமரன் வெயிலில் காய்ந்தவாறு வேடிக்கை பார்க்கிறான். ஜனநாயகம் ஜெ(ய்) ஹோ!!
.......................................................................................


எல்லாம் அவன் செயல்:
தம்பதியர்களை அழைத்து ஆட வைத்து அழகு பார்க்கும் தமிழ் சேனல்களின் சேட்டை அடங்கிய பாடில்லை. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு உள்ளது சோடிகள் பலர் செய்யும் காரியங்கள்..ஸ்ஸ்..யம்மா. இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி?) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.
.........................................................................................ஊருக்கு உபதேசம்:
முன்னாள் சென்னை மேயர் சுப்ரமணியம் அண்ணா சாலையில் சுவரொட்டி ஒட்டுவதை அண்ணா சாலை முழுக்க தடை செய்ததோடு மட்டுமின்றி, சுவர்களில் எல்லாம் அழகிய ஓவியங்களைத்தீட்டி பாராட்டு பெற்றார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் வேலைகளுக்காக அண்ணா சாலை முழுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஒன்று விடாமல் ‘நேசத்தலைவனுக்கு நீராட்டு விழா’ ‘எங்களை பெறாமல் பெத்த தாயே’ என  கட்சி பேதமின்றி நாற அடிக்கிறார்கள். கரண்ட் மேயர் சைதை துரைசாமி அந்த சாலை பக்கமே போவது இல்லையா..??
.............................................................................................


பல்லவன்:
முன்பு இரண்டு ரூபாய் டிக்கட் வாங்க பத்து ரூபாய் நீட்டினால் ‘சில்ர இல்ல..எறங்கு’ என்று நடத்துனர் ஆர்டர் போடுவார். ஆனால் டிக்கட் விலையை மகமாயி புண்ணியத்தில் இரண்டு மடங்கு ஏற்றிய பிறகும் அதே நிலைதான். நான்கு ரூபாய் டிக்கட்டுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட சில்லறை கேட்கிறார்கள் பெரும்பாலான கண்டக்டர்கள். போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.
.................................................................................................


இன்று போய் நாளை வா:
தானைத்தலைவன் ரபேல் நடாலும், டோஜோவிக்கும் ஆடிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று மாலை தூர்தர்ஷனில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் தடை பட போட்டியை திங்கள் மாலைக்கு தள்ளி வைத்து விட்டனர். ‘2017 ஆம் ஆண்டு கூரை போடப்போகிறோம். அதன் பின் அடைமழை அடித்தாலும் ஆட்டம் நிற்காது’ என்கிறார்கள் பிரெஞ்ச் ஓப்பனை நடத்துபவர்கள். குட் நியூஸ்.
...............................................................................................ராட்டினம்:
‘என்ன மாதிரி ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்க பாப்போம்’ - அரசியலில் தொபக்கடீர் என்று குதித்த காலத்தில் கேப்டன் விட்ட சவுண்டு. தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து (கல்லா) டப்பா டான்ஸ் ஆடிய பிறகு தி.மு.க.வை பெருக்கித்தள்ளி ஓனிக்ஸ் வண்டியில் போட்டால்தான் த.நாடு சுத்தமாகும் என்பதற்காக ஜெவுடன் கூட்டு அணி வைத்தார். அது இப்போது அவியல் ஆகிப்போக, இறுதியாக அண்ணி பிரேமலதா மூலமாக பெரிய டார்ச் லைட்டுக்கு (உதயசூரியன் கட்சித்தல..கலைஞர்) ஹாப்பி பர்த் டே சொல்ல வைத்துள்ளார். ஆக...அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..!
.........................................................................................


மன்மதன் அம்பு:
ஹீரோக்கள் பெண்களை சைட் அடித்து கலாய்க்கும் பாட்டுகள் தமிழில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நம்ம தல தியாகராஜ பாகவதருக்கு இணையாக ஒரு ஸ்டாரும் இதுவரை பிறக்கவில்லை. ஜம்மென குதிரையில் குந்தியவாறு தெருவோரம் நடந்து போகும் சிட்டுக்களை சட்டென கண்ணடித்து ‘வாழ்விலோர் திருநாளை’ 1944 ஆம் ஆண்டிலேயே என்னமாய் கொண்டாடுகிறார் பாருங்கள். படம்: ஹரிதாஸ். இசை: பாபநாசம் சிவன்.ஹோய்...வாழ்விலோர் திருநாள்...!!!

....................................................................................


..............................
My other site:
agsivakumar.com
.................................


...............................................

சமீபத்தில் எழுதியது:

ஷாங்காய் – விமர்சனம்
.................................................Related Posts Plugin for WordPress, Blogger...