CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, May 17, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்



வரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

யோகநாதன்: கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். சென்ற ஆண்டு சி.என்.என். ஐ.பி.என். செய்தி சேனல் ‘ரியல் ஹீரோஸ்’ விருதை இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

யோகநாதன் குறித்து சி.என்.என். ஐ.பி.என். வெளியிட்ட செய்திக்கான லிங்க்:

சாதனைத்தமிழர் யோகநாதன்

தி ஹிந்து நாளிதழ் செய்தி:

Deep Rooted Love

காணொளி:





யோகநாதன் அவர்களை அன்புடன் வரவேற்கிறது சென்னை யூத் பதிவர் சந்திப்பு குழு.

அடுத்த சிறப்பு விருந்தினர் செல்வி விஷாலினி அவர்கள்:

                                 
பதினோரு வயதே நிரம்பிய இவருடைய ஐ.க்யூ. லெவல் 225. இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ள தமிழ்மகள். விஷாலினி குறித்து உணவு ஆபீசர் தளத்தில் வெளிவந்த செய்திக்கான லிங்க்:

விஷாலினி – இந்தியாவின் விடிவெள்ளி



சகோதரி விஷாலினியையும் அன்புடன் வரவேற்கிறோம்.

....................................................................................


Chennai Youth bloggers Meet:
Date: 20/05/12 Sunday Time: 4 pm
Address:
டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) 
....................................................................................



14 comments:

CS. Mohan Kumar said...

அருமை மகிழ்ச்சி இருவருமே பாராட்டுக்கு தகுதி ஆனவர்கள்

Unknown said...

வாழ்த்துக்கள்!

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் ...

Unknown said...

சென்னை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சாதனைத் தமிழர்களுக்கும் சேர்த்து என்னுடைய வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

செல்வி விஷாலினி வர்றாங்களா... ரொம்ப சந்தோஷம். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேரும் சாதனையாளர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது யூத் பதிவர் சந்திப்பு.

வடகரை வேலன் said...

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown said...

அனைவரையும் யூத்(ஒரிஜினல்) பதிவர்கள் சார்பாக வரவேற்கிறோம்:))

சேலம் தேவா said...

நல்ல முயற்சி..!!

MaduraiGovindaraj said...

வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாதனையாளர்களை அழைத்திருப்பது நல்ல விஷயம். வாழ்த்துகள்....... அமைப்பாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும்......!

Unknown said...

அண்ணன் நக்கீரர் வரும்போது ரசிகர்கள் தயவுசெய்து அமைதி காக்கவும்.....கருப்புபூனைப்யுடன் வருவதால் நிறைய பால் வாங்கி வைக்கவும்......!

cheena (சீனா) said...

அன்பின் சிவகுமார் - கலந்து கொள்ளும் சாதனையாளர்களுக்கும் மற்ற பதிவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்

N.H. Narasimma Prasad said...

யூத் பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடந்து முடிய என் வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...