அச்சடிச்ச சோறும், அவுன்ஸ் கிளாசில் மோரும்
ஜெயில் கேண்டீனில் உனக்காக காத்திருக்கிறது. புனுகுப்பூனையே வெளியே வா.
புலியென உன்னை நம்பி ஏமாந்தவர் முகத்தில் கரி
பூசி ‘மியாவ்’ என்று உருமிக்கொண்டே சிதறி ஓடி வா.
ஜாமீனில் வெளியே வந்தாலே நிரபராதி ரேஞ்சுக்கு
பீல் செய்து நகரெங்கும் விழாக்கோலம் பூண்டு வரவேற்பு தருவது அந்தக்கட்சி.
நீ நித்தம் ஜெயிலில் மதிய உணவருந்த கதவை திறந்து
வரும் நேரமெல்லாம் ஊருக்கே அன்னதானம் போடுவது நம் சொந்தக்கட்சி.
நீ யாரென்று எனக்கு தெரியும். நான் யாரென்று
உனக்கு தெரியும். நம்ம ரெண்டு பெரும் எப்பேர்பட்ட டக்கால்டிகள் என்று மக்களுக்கு
தெரியும்.
நாளைய முதல்வா. எங்கள் மகா ‘ராசா’. உன்னை துதி
பாடி இணையத்தில் எழுதி ஊராரிடம் உண்டைக்கட்டி வாங்காமல் இருப்பது லேசா.
மதிய சோறு தின்ன ஓடிவரும் வேகத்தில் குப்புற விழுந்து மூக்கை
பேத்து கொள்ளாமல்
சாவகாசமாக நடந்து வா.
எங்களைப்போன்ற பயலுக சவகாசம் உள்ளவரை அஞ்சி பைசா
தேறாது என்பதை உணர்ந்து பம்மிக்கொண்டே பறந்து வா. வாடி மாப்ள. சீக்கிரம் வா.
.........................................................................
5 comments:
ஹி ஹி நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேங்கற மாதிரி கேசு இது :-)
வணக்கம் சிவா,சார்!சிறக ஓடிச்சுட்டுத்தான் வெளிய விட்டிருக்காங்க,ஹ!ஹ!ஹா!!!
முறைக்கிறானே...முறைக்கிறேனே...உள்ளார கூட்டிட்டு போயி மொத்துவானோ...ஸ்ஸ் அபா!
ஆட்டோ வரப்போகுதுங்க...
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே:))
Post a Comment