CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, May 15, 2012

ட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(!) நிமிடங்கள்


                                                      ப்ரேக் பிடிக்காத அக்கப்போர் ராசா..மகராசா!!

மே 13 அன்று மாலை அடையாறில் நடந்த ட்விட்டர் சந்திப்பிற்கு செல்லலாம் என தீர்மானித்து நான், பிலாசபி, அஞ்சாசிங்கம், கே.ஆர்.பி. அண்ணன் நால்வரும் வண்டியை கிளப்பினோம். ‘எலேய்..இருடா தம்பி நானும் வர்றேன்’ என்று அக்கப்போர் ராஜா திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் வந்தார். அவசர வேலை என கே.ஆர்.பி.எஸ்கேப் ஆக ‘அதனால என்ன நான் பைக் கொண்டாறேன். டோன்ட் வொர்ரி தம்பி’ என்று அக்கப்போர் ஆறுதல் சொன்னார். அன்று விதி இப்படி வீதி வீதியாக விளையாடும் என்று நான் நினைக்கவில்லை.

சுத்தமாக ப்ரேக் பிடிக்காத சாமுராய் பைக்கை மேன்சன் நண்பரிடம் அக்கப்போர் இரவல் வாங்கி வயிற்றை கலக்கிவிட்டார். காலால் பலமுறை ப்ரேக் போட்டு உசுரோடு ட்விட்டர் மீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தார் புண்ணியவான்.அக்கப்போர்னு கரெக்டா தான்யா பேரு செலக்ட் பண்ணி இருக்கீரு. அந்த பைக்க வித்து ஒரு பேப்பர் கப் வாங்க முடியுமாய்யா?

                                ஜீ டிவிக்கு பேட்டி: அஞ்சாசிங்கம், எம்.ஜி.ரவிகுமார், கிரேசி கோபால், சிபி                                 

கணிசமான அளவில் ட்விட்டர்கள் அரங்கில் திரண்டிருக்க கடைசி வரிசையில் நாங்கள் அமர்ந்தோம். வழக்கம்போல் நம்ம சிபி ‘காரியத்தில்’ கண்ணாக இருந்தார். பெண்கள் பக்கம் அவருடைய கேமரா ஓவர் டைம் பார்த்து கொண்டு இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து பல ஆங்கிளில் க்ரூப் போட்டோ எடுத்து மைசூர் மகராஜா பேத்தி கல்யாண ஆல்பத்தை விட பெரிய சைஸ் போட்டோ தொகுப்புகளை தேற்றினார். பன்னிக்குட்டி ராமசாமி போல செவ செவா கலரில் இருந்த நண்பர் ஒருவர் என்னிடம் வந்து கை குலுக்கினார். அட நம்ம எம்.ஜி.ஆர். (R for Ravikumar). கிரேசி கோபால் உடன் சேர்ந்து மிமிக்ரி செய்து அசத்தினார் நம்ம எம்.ஜி.ஆர். அந்த செட்டுடன் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்தோம்.
  
                 அஞ்சாசிங்கம்,பிலாசபி, கிரேசி கோபால், வேல்ஸ், எம்.ஜி.ஆர்.    

மீண்டும் அரங்கில் வந்து அமர்ந்ததும் ‘ஹல்லோ’ என்று ஒரு மர்ம நபர் கைகுலுக்கினார். ‘நீ..ங்...க’ என்று இழுத்தேன். ‘நாகராஜசோழன் எம்.ஏ.’ என்றார். அவரை முதன்முறை சந்தித்ததில் மகிழ்ச்சி. (கோமாளி) செல்வா முதல் பெஞ்ச் மாணவன் போல பவ்யமாக அமர்ந்திருக்க அவரிடமும் சில வார்த்தைகள் பேசினேன். தனது ட்வீட்கள் புத்தகமாக வந்துள்ளதென கூறினார். ‘மிக முக்கியமான’ வேலை இருந்ததால் சில நிமிடங்களில் டெர்மினேட்டர் அர்னால்ட் பைக்கில் ஏறி பறந்தார் நாகராஜ சோழன்.


                                                      கேபிள் ஆற்றும் சொற்பொழிவு..அருகில் சுரேகா
                      

‘கேட்டால் கிடைக்கும்’ குறித்து கேபிள் சங்கர் மற்றும் சுரேகா பேசியபோது  பலத்த கைதட்டல்கள். கவிதை, குறும்படம், பாடல்கள் என பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரபல ட்விட்டர்களில் ‘தோட்டா’ எனது பேவரிட். அவர் வராதது சற்று ஏமாற்றத்தை அளித்தது.


            காதலெனும் தேர்வெழுதி (கல்யாணத்துக்கு) காத்திருக்கும் மாணவன் நான்..

காதலில் விழுந்தவன் கண்ணெதிரே காத்ரீனா கைப் வந்தால் கூட கண்டு கொள்ளாமல் போவான் என்ற பழமொழிக்கு உதாரணம் பிலாசபி பிரபாகரன் என்றால் அது மிகையில்லை. நண்பர்கள் பலர் ஜீ டிவிக்கு உற்சாகமாக பேட்டி தந்து கொண்டிருக்க அருகில் இருந்த தடாகத்தில் அமைதியாக தாமரை இலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தது நம்ம பயபுள்ள. ‘என்னய்யா இது’ என்று கேட்டால் “இந்த இலைல தண்ணி ஒட்டாம நழுவி ஓடுது பாத்தீங்களா. இதுதான் வாழ்க்கையின் பிலாசபி. காதலும் அதுபோல” என்று உச்சி வெயிலில் எனக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சாரு அண்ணன். காதல் முத்திருச்சி தம்பி. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.


ட்விட்டர் சந்திப்பு குறித்து அக்கு அக்காக பிரித்து விளக்குவதில் அண்ணன் சிபி மிகப்பெரிய எக்ஸ்பர்ட் என்று நான் சொல்லியா தெரிய வேண்டும். அவருடைய ட்விட்டர் சந்திப்பு ‘அனுபவங்களை’ படிக்க கிளிக் செய்க:............................................................................................

                                                              

9 comments:

Unknown said...

எப்பொருள் யார்......அப்பொருள்...மெய் பொருள் காண்பதறிவு!

முத்தரசு said...

ஒ அப்பூடீயா சங்கதி

லிங்க் வேறயா????

rajamelaiyur said...

வணக்கம் சிலுவை குமார் ...சாரி சிவகுமார்

rajamelaiyur said...

நல்ல என்ஜாய் பன்னிருகிங்க ...

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!படிக்கிறப்பவே சந்தோஷமாயிருக்கு!கலந்துக் கிட்டவங்களுக்கு எம்புட்டு சந்தோஷமாயிருக்கும்?

Unknown said...

super enjoyment

சதீஷ் மாஸ் said...

என் ஓட்டு பிலாசபி க்கு தான்.. நமக்கு நம்ம வேலை தான் முக்கியம் பாஸ்....

உணவு உலகம் said...

டுவிட்டர் சந்திப்பிற்கு சென்று வந்த அனுபவம் சுவையாக இருக்கு சிவா.

M.G.ரவிக்குமார்™..., said...

உங்கக் கிட்டேயிருந்து இன்னும் நெறைய எதிர் பார்த்தேன்!....

Related Posts Plugin for WordPress, Blogger...