CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, May 2, 2012

ஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி!!'ஏதோ பாவம். இந்த டம்ப்ளர் (சாரி..டம்ளர். அதாங்க தமிழர். நாங்க தமிழ், ஆங்கிலம் ரெண்டுலயுமே வீக்குங்கோ) பசங்களுக்கு ஒரு விடிவுகாலம் வரட்டுமேன்னு எங்க தலைவர் ஈழ மோளம் வாசிச்சு பேரு வாங்கலாம்னு பாத்தா..அதைக்கூட பொறுத்துக்க முடியாம கழுத்தா மட்டைலேயே போடறானுங்களே இந்த திடீர் இணைய போராளிங்க. “உங்கள் பொற்பாதங்களை தொட்டு”.. “உங்கள் வீட்டு பிள்ளையாகிய எனக்கு வாக்களிக்குமாறு” இப்படி தேஞ்ச ரெக்கார்டை இப்ப போட்டா கூட அதை நம்பி ஏமாற சனங்க இருக்கத்தான் செய்யறாங்க. பேஸ்புக், ப்ளாக்ல இருக்குற க்ரூப்புதான் எங்கள் தல தீக்குளிக்க போறேன்னு எப்பயோ சொன்னதை மனசுல வச்சிக்கிட்டு கந்துவட்டிக்கு பணத்த வாங்கி வைட் பெட்ரோலோட திரியறானுங்க. ரேஸ்கல்ஸ்!!'  
      
திடீர் போராளிங்க யாருன்னு ஊருக்கே தெரியும். “நீங்கதான் தமிழ்நாட்டையும், ஈழத்தையும் காப்பாத்தணும் சார்”னு நாங்க கத்துன மாதிரியும்..”கவலை வேண்டாம். தலைகீழாகத்தான் சம்மர் அடிக்க போகிறேன்” எனக்கூறி சட்டமன்ற, இடைத்தேர்தல்களில் டார்ச் லைட் சூரியன்கள் மூக்குடை பட்ட ஆக்ரோஷத்தில் கட்சி சாரா இணைய நண்பர்கள் என்ன அரசியல் சாயம் பூசி அமுக்குவது என்று தீவிர ஆலோசனை வேறு செய்கிறார்கள் புளியங்கொட்டைகள். சமீபத்தில் பதிவர்கள் ‘புளியங்கொம்பு’ மேட்டரில் இணைய கரைவேட்டி காமடிகளுக்கு பம்ப் அடித்ததை கண்டு தாளாமல் 'அவர்கள் எந்தக்கட்சியை சார்ந்தவர்கள்' என்று ஆய்வு செய்ததில் ஒரு பருப்பும் வேகவில்லை என்பதே நிஜம். அதனால் அவர்களை வேறு எப்படி அடக்குவது என்பதை எண்ணி கழிவறையில் பலமணிநேரம் அமர்ந்து சிந்தித்து ‘உங்களுக்கெல்லாம் சேகுவாரா’ டீ ஷர்ட் வேறயா? களப்பணி ஆத்தாதா கம்னாட்டிகளா’ என்று ரவுசு கட்டுகிறார்கள்.

கீழ இருக்கற வீடியோவை பாருங்கப்பா. அண்ணா நூலகத்தை மாற்றினால் தீக்குளிப்பேன் என்று மெகா சூரியன் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டு இருக்க, ‘அப்பாடா..இனி நமக்கு தீபாவளிதான்’ ரேஞ்சுக்கு பீல் செய்து  உற்சாகத்தில் அங்கிருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் விசில் அடித்து கைதட்டுகிறார்கள்.  தலைவன் தீக்குளிப்பேன்னு சொன்னதுக்கு பிகில் அடிச்ச ஒரே தொண்டர் படை நீங்கதான்யா...நண்பன் படத்துல வர்ற மாதிரி ‘தொண்டா யூ ஆர் கிரேட்’னு உங்க கால்ல ஊரே விழணும்.


‘நாம் டம்(ப்)ளர்’ இயக்கத்தை கிண்டல் செய்வது இருக்கட்டும். ஆனால் ‘நாம் மட்டுமே சொம்பு’ லெவலுக்கு இணைய (உடன்பிறப்பு) பு’ளி’கள் செய்யும் கூத்து..ஹய்யோ ஹய்யோ. சேகுவேரா வரலாறு தெரியாதவன் அவருடைய டீ ஷர்ட் போடுவதை நக்கல் அடிக்கும் ராசாக்களே...உங்களில் எத்தனை பேர் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர் படங்களை பார்த்து இருக்கிறீர்கள். அட்லீஸ்ட் ட்ரெயிலர் ஆவது பாத்து இருக்கீகளா? ஹல்லோ பதில் சொல்லாம எங்க ஓடறீங்க. பாஸ் உங்களைத்தான். ஹல்லோ..ஹல்லல்லோ...

........................................................................................


12 comments:

Unknown said...

ஹெ.,. ஹே,
சொம்ப காணுமாம்

Unknown said...

ஏம்பா..தீக்குளிப்பேன்னு சொன்னியா...

என்ன சொன்னியா...

இந்தாபா உன்னையத்தான்...

என்ன உன்னையத்தான்...!

ஏற்கனவே அவனுங்களுக்கும் நமக்கும் இணையத்துல வாய்க்கா சண்ட...


என்ன சண்டை..

போயாங்க!

Unknown said...

மேன்மிகு சிவா அவர்களுக்கு வணக்கம்! கண்ணகியின் கணவன்..கோவலனை பாண்டிய மன்னன் "கொன்டு வருக" என்று கூறியதை கொன்று வருக! என விளித்ததாக காவலர்கள் தவறாக புரிந்ததால் ஒரு உயிர் போனது....எங்கள் தலைவருக்கு சுகர் மட்டுப்பட்டதால் டீ குடிப்பேன் என்று கூடியதை தீ குளிப்பேன் என தவறாக புரிந்துவிட்டார்கள்.அது மட்டுமில்லாது தலைவர் நடைப்பயிற்சி சென்ற போது லேசான கிறுகிறுப்பு வந்தமையால் ஏர் கூலர் கட்டில் கொண்டு வரப்பட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டதை உண்ணாவிரதம் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது......அதே மாதிரி தண்ணீர் பருக தனிக் குவளை வேண்டும் என்று தலைவர் கூறியது தனி ஈழம் என்று விழுந்து விட்டது......என உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.......

இப்படிக்கு

கலைஞரின் தீவிர(முன்னாள்) தொண்டன்

உலக சினிமா ரசிகன் said...

ந்ம்ம பதிவர்கள் தொல்லை தாங்க முடியாம...
அய்யா தீக்குளிச்சிட்டாருன்னா...
நமக்கு காமெடி மேட்டர்...
யார் சப்ளை பண்ணுவா?

வெளங்காதவன்™ said...

:-)

#Thalaivar, Vaazhka...
Yov... unnai illaiyyaa...

Naan Vaalum valluvarach sonnen...

அக்கப்போரு said...

இந்தத் தேவ_____ மகய்ங்க அடிக்கிற கூத்துக்கு " இனிமே எங்கள பத்தி தி.மு.க காரன் எவன் பேசுனாலும் நாங்க தீக்குளிப்போம்" அப்டின்னு ஈழத் தமிழர்கள் அறிக்கை விடப்போறாங்க.
மாவட்டத்துக்கு ஒரு மகன், வட்டத்துக்கு ஒரு வாரிசுன்னு பெத்து விட்டுட்டு, இப்ப குத்துது கொடையுதுன்னு வெளில சொல்லவும் முடியல. என்னைய்யா உன் புள்ளைங்க இப்டி அடிச்சுக்கிறுதுங்கன்னு கேக்க கூட ஆளில்ல. திசை திருப்ப வேற வழி.? அதுக்கு தொட்டு நக்க ஈழம் தான் கிடைச்சுச்சா இந்தப் பயபுள்ளைக்கு.

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!///ஹல்லோ,ஹல்லோ பதில் சொல்லாம எங்க ஓடறீங்க சார்,ஹல்லோ,ஹல்லல்லோ!!!!!///என்னையா கூப்புட்டீங்க?ஹி!ஹி!ஹி!!!நான் படமெல்லாம்?!பாக்குறதில்லீங்க!!!!!

Unknown said...

சொம்பு ஒரமா நசுங்கியிருக்கே. அடி ஓவரா?

சென்னை பித்தன் said...

சூப்பர் சிவா!

Jayadev Das said...

http://www.madrasbhavan.com/2012/05/blog-post.html

உணவு உலகம் said...

காரம்.

ribnas said...

//உங்களில் எத்தனை பேர் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர் படங்களை பார்த்து இருக்கிறீர்கள். அட்லீஸ்ட் ட்ரெயிலர் ஆவது பாத்து இருக்கீகளா?//
ஏன் நன்க உசிரோட இருக்குது புடிகலயா கட்டாயம் பர்கணும்டு வற்புறுத்தினங்க அப்புறம் கொலை கேசுல உள்ள போக வேண்டி வரும்

Related Posts Plugin for WordPress, Blogger...