CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, May 9, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(09/05/12)உனக்காக எல்லாம் உனக்காக:


                                                                        
ரத்தம் சிந்தி உழைக்கும் பாட்டாளிக்கு உன் வியர்வை சிந்திய உழைப்பால் தண்ணீர் பந்தல் அமைத்து தந்த இனமான அய்யனார் வாளே. உன் முகம் காணும் நாளெல்லாம் எம் போன்ற தீவிர ரசிகர்களுக்கு தீபாவளி திருநாளே!!
.................................................................................

கூடல் நகர்:
மே 20  ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சென்னை யூத் பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இளைய மற்றும் புதிய பதிவர்களுடன் சங்கமித்து கலந்துரையாட வருமாறு அனைவரையும் அழைக்கிறோம்.      

டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
................................................................................

போர்க்களம்:
ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் சற்று வலிமை குறைந்த அணிகளை வென்று வாகை சூடிய இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நான்கு நாடுகள் ஹாக்கி போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து உள்ளது. ஆஸி, பிரிட்டன், ஜெர்மனி போன்ற உலகின் முன்னணி அணிகளிடம் இந்தியா உதை வாங்கியதை பார்த்தால் ஒலிம்பிக் பதக்கம் எட்டாக்கனி ஆகி விடுமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. பார்க்கலாம். 
................................................................................

கிராண்ட் மாஸ்டர்:  
மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம். பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை எப்படி தலைவர் துப்பு துலக்குகிறார் என்பதே கதை. சுமாரினும் கீழான படைப்பு. விறுவிறுப்பு என்கிற பெயரில் ஆரம்பம் முதல் இறுதி வரை இம்சையை தருகிறார் தீபக். டைட்டிலில் லால் பெயரை போடுகையில் ஆரவாரம் செய்த ரசிகர்கள் சில நிமிடங்களில் ஆப் ஆகி விட்டனர். மாதா மாதம் மோகன்லால், மம்முட்டி, ப்ரிதிவிராஜ் நடித்த படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லாதது பெரிய குறைதான். 
....................................................................................


நேருக்கு நேர்:

                                                          நேரடி நிகழ்ச்சியில் சாமித்துரை அவர்கள்


சத்தியம் செய்தி சேனலில் நித்தம் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடக்கும் நேரடி விவாத நிகழ்ச்சியில் நமது பதிவர்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், மோகன்குமார், ஓ.ஆர்.பி.ராஜா, பலாபட்டறை சங்கர், அஞ்சாசிங்கம் செல்வின், அக்கப்போர் ராஜா என நீள்கிறது பட்டியல்.

கடந்த ஞாயிறு அன்று ‘இன்றைய இளைஞர்களுக்கு தமிழார்வம் அவசியமாஇல்லையா?’ எனும் தலைப்பில் சீனியர் பதிவர் பபாஷா(பலாபட்டறை) அவர்களும் நானும் இணைந்து பேசினோம். நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியவர் சகோதரர் சாமித்துரை அவர்கள். இவரது வலைப்பூவின் பெயர் என் திசை’. கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பில் அவசியமா? இல்லையா? எனும் தலைப்பில் பேசினார். பதிவர்களுக்கான களம் பத்திரிக்கைகள் தாண்டி தற்போது தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருவது சந்தோஷமே.

இணையத்தில் நேரடியாக சத்யம் சேனலை பார்க்க:
.............................................................................................

விக்கி டோனர்:
அண்மைக்காலத்தில் நான் பார்த்த சிறந்த சினிமா இது. ரிலீஸ் ஆன நாள் முதலே கேபிள் சங்கர் சிலாகித்து பேசிவந்த படம். சில நாட்களுக்கு முன்பு ஐநாக்ஸ் தியேட்டரில் கேபிள் மற்றும் கே.ஆர்.பியுடன் பார்த்தேன். வித்யாசமான சப்ஜெக்டை சரவெடி காமடி மற்றும் நல்ல திரைக்கதையுடன் சொல்லி உள்ளனர். தமிழில் இதுமாதிரி கதைகள் வர வாய்ப்பே இல்லை என்று படம் முடிந்த பின் பேசிக்கொண்டோம் மூவரும். ஆனால் நேற்று பேப்பரில் கண்ட செய்தி. நடிகர் சித்தார்த் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாராம். லெட்ஸ் ஸீ.
..........................................................................................


யூத்:
சென்னையை சேர்ந்த இளம் பதிவரான சதீஷ் புதிதாக காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். கல்லூரி மாணவரான இவருக்கு தங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் தந்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.

இவருடைய புதிய பதிவு: சதீஷ் காபி ஷாப்
.......................................................................................

சிறுத்தை:

தமிழில் சிறுத்தையாக கார்த்தி சீறியதை அடுத்து ஹிந்தியில் அக்சய் குமாரும் வேட்டைக்கு தயாராகி விட்டார். பிரபுதேவா இயக்கத்தில் ‘ரவுடி ராத்தோர்’ வரும் ஜூன் ஒன்றாம் தேதி ரிலீஸ். ட்ரெயிலர் கர்ஜனை பயங்கரம்.


...........................................................................................


16 comments:

CS. Mohan Kumar said...

மே 20-நான் சென்னையில் இல்லை. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்

விக்கி டோனார் தமிழில் வருவது மகிழ்ச்சி.

நாம் பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ லிங்க் சீக்கிரம் வாங்குங்கள். நாளானால் வாங்க முடியாது

செங்கோவி said...

//இனமான அய்யனார் வாளே.//

hi..hi.

உணவு உலகம் said...

//சென்னையை சேர்ந்த இளம் பதிவரான சதீஷ் புதிதாக காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். கல்லூரி மாணவரான இவருக்கு தங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் தந்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.//
இடத்தையும் குறிப்பிட்டிருந்தா, இன்னும் கொஞ்சம் வசதியா இருந்திருக்கும்.
1.முதலில், உணவு பாதுகாப்புத்துறையில் உரிய உரிமம் வாங்கிக்கோங்க.
2. விலை சற்றே அதிகமென்றாலும், தரம் மிக முக்கியமா கொள்ளுங்கள்.
மேன்மேலும் வளரனும், வாழ்த்துக்கள்.
அறிமுகத்திற்கு நன்றி சிவா.

நிரஞ்சனா said...

நல்லது மே.20 அனறு நான் அவசியம் வருகிறேன் சிவா. சத்யம் தொலைக்காட்சியை இணையத்தில் பார்க்க வாய்ப்புண்டு என்பதில் மகிழ்ச்சி எனக்கு. பார்க்கிறேன்.

கோவை நேரம் said...

என்னது..பதிவர் சந்திப்பு அடுத்த வாரமா..ரொம்ப எதிர்பார்த்தேனே.

முத்தரசு said...

தகவல்கள் அறிந்து கொண்டேன், - பகிர்வுக்கு நன்றி

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
Unknown said...

நடத்துய்யா..நடத்து...மின்னலு...!

சதீஷ் மாஸ் said...

சென்னையை சேர்ந்த இளம் பதிவரான சதீஷ் புதிதாக காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். கல்லூரி மாணவரான இவருக்கு தங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் தந்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.இந்த மாதிரி எனக்கு திடிர் திடீர்னு அதிர்ச்சி கொடுக்காதிங்க பாஸ்....

சதீஷ் மாஸ் said...

கண்டிப்பா பதிவர் சந்திப்புக்கு வந்தறேன், நா இந்த முறை கேபிள்ஜி கிட்ட நிறைய கேள்வி கேக்க வேண்டி இருக்கு...

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!மீல்ஸ் நல்லாருந்திச்சு!பயங்கரமான போட்டோங்களப் போட்டு,சின்னப் புள்ளங்கள பயமுறுத்தாதீங்க,பிளீஸ்!!!

Philosophy Prabhakaran said...

// சென்னையை சேர்ந்த இளம் பதிவரான சதீஷ் புதிதாக காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். //

யோவ் சிவா... ஏதாவது சொல்றதா இருந்தா தெளிவா சொல்லுய்யா... நான் ஏதோ நிஜமாகவே காப்பிக்கடை ஆரம்பிச்சிருக்கார்... இனி பதிவர் சந்திப்பை அங்கேயே வச்சிக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்...

நானாவது பரவாயில்லை... உணவு ஆபிசரின் பின்னூட்டத்தை பாரும்...

MANO நாஞ்சில் மனோ said...

தண்ணீர் பந்தலுக்கே இம்புட்டு ரவுசா...???

MANO நாஞ்சில் மனோ said...

காபி ஷாப்புல உங்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் காபி உருவாக்குங்கள் அதற்கு ச'தீஸ்' காபின்னு பேர் வையுங்கள் பிரமாதமாக இருக்கும்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகளும், சத்யம் டீவிக்கு நன்றிகளும்...!

Unknown said...

ஆபிசரின் அறிவுறை ரொம்பவே சூப்பரூ, பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள், முடிந்தால் சத்யமூர்த்தி பவனில் அடுத்த சந்திப்பை வைக்கவும், கலந்து கொள்ள ஆவல் :-)

Related Posts Plugin for WordPress, Blogger...