கடமை, கண்ணியம், கட்டுப்பாடு:
மாம்ஸ் விக்கியின் வலைத்தளத்தில் கீழ்கண்ட
பேஸ்புக் இமேஜ் இருப்பதை வீடு சுரேஷ் அவர்கள் கூற என்னவென்று எட்டிப்பார்த்தால் வெரி
குட் கிருஷ்ணன் எனும் நபரின் நியாயமான கேள்விக்கு அருவருக்கத்தக்க வார்த்தை பிரயோகங்களால்
அர்ச்சனை செய்திருந்தார் புளியங்கொட்டை ஒருவர்(தலைவனை புளியங்கொம்பு என்று சொன்ன
கட்சி அபிமானியை இப்படி அழைப்பதுதானே முறை). அவர் யாரென நீங்களே படத்தை கிளிக்
செய்து பார்க்க. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றும் இன்னும் சில
வருடங்களுக்கு சிப்ளிங்க்ஸ்(ஒடன் பிறப்புகள்) அலைய போவதை கண்டால்...ஐயோ பாவம்.
ஏதோ கெட்ட வார்த்தைகள்
இவர்களது கீ போர்டில் மட்டுமே டைப் ஆகும் என்கிற ரீதியில் குறிப்பிட்ட கழக
கண்மணிகள் எல்லை மீறுவதை அனுமதிக்காமல் நாகரீகத்துடன் வழக்கம்போல சாட்டையை சுழற்றி
அந்த காமடி பீஸ்களை பொளந்து கட்டுமாறு கட்சிசாரா நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
..........................................................................................
வழக்கு எண் 18/9:
ரோட்டோர கடையில் வேலை
செய்யும் நாயகன், அவனுடன் வேலை செய்யும்
சிறுவன், வேலைக்கார பெண்ணின் தாயார், பணக்கார வீட்டு பையன் மற்றும்
போலீஸ்காரர் என பலரது நடிப்பும் கச்சிதம். லேசாக கேமராவை ஆட்டுதல் மற்றும்
புதுப்புது இடங்களில் கேமராவை சொருகுதல் இவற்றை கண்டால் ‘என்ன ஒரு ஒளிப்பதிவுடா’ என்று சொல்லியே நாம்
பழக்கப்பட்டு விட்டதால் வழக்கம்போல ஹாட்ஸ் ஆப் விஜய் மில்டன்.
இது தவிர்த்து
பார்த்தால்....ரெகுலர் கமர்சியல் படங்களில் வருவது போல சிறு சண்டையில் நாயகனுக்கு
காதல் பூத்தல், 12 வது பரீட்சை ஆரம்பிக்க சில நாட்களே
இருக்கையில் படுமொக்கையான டவுட்டை இன்னொரு ஹீரோ கீழ் வீட்டு பெண்ணிடம் கேட்டல், வெளிப்படையாக மொபைலில் அவளை
படம் எடுப்பது கூட தெரியாத பேக்காக அந்த பெண் பாடம் நடத்துதல்...அனைத்திலும் மேலாக
பாகவதர் காலம் முதல் பாலாஜி சக்திவேல் வரை காதல் இல்லாமல் படமே எடுக்க முடியாது
என்கிற மிகப்பெரிய பலவீனத்திற்கு ஆட்படுதல்...அட போங்க பாஸ். இதை உலக சினிமா என்று
வர்ணிப்பதெல்லாம் ஓவர். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சி என்று வேண்டுமானால்
சொல்லலாம்.
........................................................................................
கொள்ளைக்காரன்:
ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக புகார்
வந்ததை அடுத்து அமித் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பென்ட் செய்துள்ளது
பி.சி.சி.ஐ. இந்தியா என்ற பெயரை உடையில் தாங்கி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த
சூதாட்ட கும்பல் இப்போது சென்னை, மும்பை என கொடிபிடிக்கும் ரசிகர்களுக்கு மீண்டும்
ஒரு முறை மொட்டை அடித்து உள்ளது. அந்த அணி ஜெயிக்குமா? இந்த அணி ஜெயிக்குமா? என்று
பரபரப்பாக ஆட்டத்தை பார்த்த மகாஜனங்களே க்ளைமாக்ஸ் முன்பே முடிவு செய்யப்பட ஒன்று
என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. இன்னுமா இந்த ஆட்டத்தை நம்பிக்கிட்டே
இருக்கீங்க?
..........................................................................................
கலகலப்பு:
உதயநிதி, ஹன்சிகா என்று இரு மாபெரும் நடிப்பு புயல்களிடன் சிக்கி இயக்குனர் ராஜேஷ் மண்டை காய்ந்தாலும் சந்தானம் எனும் ஒத்தை ஆளை வைத்து ஓகே ஓகேவில் ஹிட் அடித்தார். விமல், சிவா, இளவரசு, சந்தானம் என்று பலர் இருந்தும் பெயர்பெற்ற நகைச்சுவை இயக்குனர் சுந்தர் சி ஒரு காட்சியில் கூட நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்க முடியாமல் செய்து விட்டார். அஞ்சலி டயலாக் பேசும் இடங்களில் தெலுங்கு வாசம் தூக்கல். விமல்...களவாணி நடிப்பு எங்கய்யா போச்சி? ஓரளவுக்கு சிரிக்க வைத்தாலும் சிவா இன்னும் சுறுசுறுப்பாக நடித்து இருக்கலாம். மிகவும் காசுவலான நடிப்பு எத்தனை நாளைக்கு பிரதர். சந்தானம் லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
பாடல்கள் எல்லாம் சுமாருக்கும் கீழ். தன் பழைய பாணி க்ளைமாக்ஸ் காட்சிகளை வைத்து ஒப்பேற்ற பார்த்து இருக்கிறார் இயக்குனர். காலம்
மாறிப்போச்சி சுந்தர் சார். காமடி சென்ஸ் நம்ம ஊர் ரசிகர்களுக்கு இப்பல்லாம் ரொம்ப
அதிகம். புதுசா ட்ரை பண்ணுங்க.
....................................................................................
உல்லாசப்பறவைகள்:
மேடம் ஆட்சி பவருக்கு
வந்து ஓராண்டு ஆனதை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் ப்ளட்டின் ப்ளட்டுகள். பேருந்து,
கரண்ட், பால் உள்ளிட்டவற்றின் விலைகளை ஏற்றி மேலும் அதிகம் சம்பளம் தரும் வேலைக்கு
சாமான்யர்களை ஓட வைத்த ஜெவுக்கு போடுங்கப்பா ஒரு ஜே. ஓராண்டு நிறைவை முன்னிட்டு
மேலும் விலைகளை ஏற்றினால் இன்னும் அதிகம் சம்பளம் தரும் கம்பனிக்கு உசைன் போல்ட்டை
விட வேகமாக ஓட தயாராக இருக்கிறோம். அடுத்த நாலாண்டில் தமிழ்நாடு பேரரசு, வல்லரசு
என படிப்படியாக லிப்டில் பறக்கும் என்பதை நினைக்கையில் உள்ளம் பேருவகை
கொள்கிறது.
...............................................................................
டயமண்ட் நெக்லஸ்(மலையாளம்):
புகழ்பெற்ற இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ள படம்.
துபாயில் டாக்டர் கம் ப்ளேபாய் ஆக இருப்பவன் அருண். அவ்வப்போது க்ரெடிட் கார்ட்
கம்பனிக்கு பணம் கட்டாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். நோயாளியாக வரும்
பெண்ணிடம் உள்ள வைர நெக்லஸ் மூலம் அவன் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதே
கதை.
மலையாள சினிமாவிற்கு நம்பிக்கை தரும் வரவாக பஹத் மெருகேறி வருகிறார். அறுபதை
கடந்தாலும் விக் வைத்தே தீருவோம் என்று அடம் பிடிக்கும் இந்திய நாயகர்களுக்கு
மத்தியில் தன் தந்தை வற்புறுத்தியும் ‘இயற்கையாகவே நடிக்கிறேன். என் நடிப்பால் மட்டுமே மக்களை
கவர நினைக்கிறேன்’ என்று சொல்லிய இளம் நாயகன். அவருடைய
மனைவியாக வரும் பெண்ணின் நடிப்பும் சிறப்பு. சமீபத்தில் வந்த மலையாள மூவிக்களை
ஒப்பிடுகையில் இது ஒரு படி மேல்தான். கொஞ்சம் பொறுமை இருப்பின் ஒரு முறை
பார்க்கலாம்.
.....................................................................................
சவாலே சமாளி:
மவுண்ட் ரோடு புஹாரி ஹோட்டல் அருகே உள்ள கடையில் உணவு உலகம் ஆபீசர் வாங்கிய மர்மப்பொருள் என்ன?
சரவண பவனில் ‘அத்திப்பழம்’ ஜூஸ் மட்டுமே
வேண்டும் என்று சிபி அடம்பிடித்து வாங்கியதன் ரகசியம் என்ன?
தி.நகர் நடேசன் பூங்காவில் சிபி மொபைலுக்கு
கே.ஆர்.பி அனுப்பிய ‘இமேஜின்’ ஸ்பெஷாலிட்டி என்ன?
..........................................................................................
அன்பே சிவம்:
மே 20 சென்னை யூத் பதிவர் சந்திப்பிற்கு வெளியூரில்
இருந்து வரும் தொண்டர்கள் சென்னை நகரை போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காட
செய்யாமல் சீராக அணிவகுத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
...........................................................................................
தாய் சொல்லை தட்டாதே:
மேடம் தூள் கிளப்பிய “அம்மனோ சாமியோ” பாடல்
உங்களுக்காக. "எங்களை பிடித்த பேய்களை விரட்டி ஆட்சிக்கு வந்த எங்க முத்து மாரியே. கரண்ட்
கட் பண்ணி பில் பணத்தை மிச்சப்படுத்திய தங்க கருமாரியே". பாடலைக்கண்டு ஆவேசத்தில் ஆபீஸ் சேரில் சாமியாடி
வேலைக்கு ஆப்பு வைத்து கொள்ள வேண்டாமென நண்பர்களை எச்சரிக்கிறோம்.
............................................................................................