CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, April 24, 2012

பாட்ஷா vs கவுண்டமணி


சாந்தி க்ரூப் ஆப் கம்பனிகளில் தன்னோடு வேலை பார்த்த நண்பன் மாணிக்கத்தை 'அண்ணா ஹஜாரே' ஆட்டோ ஸ்டாண்டில் சந்திக்கிறார் கவுண்டர். நடந்தது என்ன?

                                                         
"என்னப்பா மாணிக். ஆள பாத்து ரொம்ப நாள் ஆச்சி. நல்லா இருக்கியா?"
        
"நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி"

"தெரியுமே. ஏரியா முழுக்க காய்கறி வித்துட்டு வர சொன்னா மொத தெரு முக்குல நின்னு 'கத்ரிக்கா,வெண்டக்கா'ன்னு ஒரு தரம் மட்டும் கத்திட்டு மொத்த தெருவையும் சத்தம் போடாம சுத்திட்டு வந்தியே. மறக்க முடியுமா? உனக்கு வேலை குடுத்த என்ன சொல்லணும். எப்படி இருக்கன்னு கேட்டா என்னன்னவோ சொல்றியே?"

"கடன் வாங்கறதும் தப்பு. கடன் குடுக்கறதும் தப்பு"

"ஆனா வாங்குன கடன திருப்பி குடுத்தா தப்பே இல்ல. சீக்கிரம் தந்துரு ராசா"

"சரி இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஆட்டோ ஓட்டறேன். இதுக்கு முன்ன நான் ஒரு டான்..."

"டான்...ஓ ரவுடியா? அதை இந்த காரமடை சந்தைல வாங்குன கண்ணாடிய கழட்டிட்டுதான் சொல்லணுமா? எங்கய்ய புடிச்ச இத. பாதிதான் இருக்கு. மிச்சத்தை வித்து ஆட்டோவுக்கு ட்யூ கட்டிட்டியா??"

                                                                        
"ஷட் அப். நான் டான் ஆ பாம்பேவை ஒரு காலத்துல கலக்கனேன்(கதையை சொல்கிறார்). இப்ப அமைதியா இங்க ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்"

"பயங்கர மெரட்டலா இருக்கே. அது சரி 'பிரசவத்துக்கு இலவசமா வர்றேன்'னு பாடுனியே. அது என்ன 'உம் புள்ளைக்கு ஒரு பேரு வச்சி தாரேம்மா'ன்னு எக்ஸ்ட்ரா பிட்டு? பசில இருக்குற பச்ச வயித்துக்காரிக்கு சோறு வச்சாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கு. பேரு வச்சி ஏன்யா குடும்பத்துல குட்டைய கொளப்பற?"

"நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா.."

"நாங்க மட்டும் அம்பானிக்கு அடுத்த வீடா? ஆனா ஒண்ணு. உன்ன பாத்ததும் பேஸ்மென்ட் ஆடிப்போய் எந்திரிப்பாரே ஐ.ஜி. அப்பறம் 'அண்ணே..இது உங்க காலேஜுன்னே. ஒரு சீட்டு என்னண்ணே. நூறு சீட்டு வாங்கிக்கங்கண்ணே. இந்த காலேஜே உங்களுதுண்ணே. அந்த எடத்துல விழுந்து விழுந்து சிரிச்சேய்யா. அப்படி அவங்க கிட்ட என்னதான் சொன்ன"


"ஹா. ஹா...உண்மைய சொன்னேன்"

                                                                         
திடீரென அங்கு வரும் அசல் ரவுடிகள் ஐ.ஜி.ஆபீசில் ஓவர் சீன் போட்ட மாணிக்கை பொறட்டி எடுக்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் ஓரமாய் நிற்கிறார் கவுண்டர். வாயில் தக்காளி சட்னி ஒழுக ரஜினி கேட்கிறார்..

" உங்களுக்காக சாந்தி தியேட்டர்ல டிக்கட் வாங்குன என்னை இத்தனை பேர் அடிச்சும்...ஏண்ணே வேடிக்க பாத்தீங்க?"

"யோவ்..போனாப்போகுது காப்பாத்தலாம்னுதான் பாத்தேன். ஆனா பேக் கிரவுண்டுல ஒரு பயபுள்ள பாடுனான் பார் பாட்டு..அதான் சைலன்ட் ஆயிட்டேன். அது எப்படி 'பீசு பீசா கிழிக்கும்போதும் இயேசு போல பொறுமை பாரு'..அந்த ஆனந்தராஜ் அடிச்ச டம்மி உருட்டுகட்டையால சாத்துனதுக்கே  இந்த பீலிங்கா. ஏசுன்னா உங்களுக்கு அவ்வளவு லேசா?. அடுத்து ஒண்ணு பாடுனான் பாரு 'இந்த எரிமலையில் ஈரத்துணி போட்டதாரடா?'.. நீயே மன சாட்சிய தொட்டு சொல்லு. இப்ப அடிக்கற வெயிலுக்கு மொட்ட மாடில ஈரத்துணி போடறதே பெரும்பாடா இருக்கு. எரிமலைல ஈரத்துணிய எதுக்கு போடணும்?"

                                                                 
"சரி..எல்லாரும் கேக்கற கேள்வியை கேட்டுட்டு கெளம்பறேன். அரசியலுக்கு வருவியா? மாட்டியா? கொளப்பாம சொல்லு"

"ஹா.ஹா..ஹா...."

"வேணாம் தம்பி. நான் மத்தவங்க மாதிரி இல்ல...சட்டுன்னு பதிலை சொல்லிடு. கிட்ட இருக்கறது சாமி சிலைன்னு கூட பாக்காம எடுத்து அடிச்சி புடுவேன்"

"ஆண்டவன் எப்ப சொல்றானோ அப்ப கண்டிப்பா வருவேன்"

"இந்த ரீலு அந்து போயி ஏகப்பட்ட வருஷம் ஆயி போச்சி. இருந்தும் அசராம பெவிகால் ஒட்டி படம் காட்டிட்டே இருக்கியே. ஒலகத்துல 1008 ஆண்டவன் இருக்கான். அதுல எந்த ஆண்டவன் போன் பண்ணி சொன்னா அய்யா அரசியலுக்கு வருவீங்கோ?"

"ஆண்டவன் ஒருத்தன்தான். ஆனா ஆளாளுக்கு வேற வேற ஆண்டவன். அதனால ஆண்டவன் ஒருவனுமல்ல. பல பேருமல்ல"

"தெளிவா கொளப்பறான்யா. ஆனா என்னோட கொளப்பம் தெளிஞ்சிருச்சி. 'கருடா கருடா பூப்போடு'ன்னு ஆகாசத்த பாத்துட்டு இருக்குற உன் ரசிகர்கள நெனச்சாதான் பாவமா இருக்கு. ஆமா..கோச்சடையானுக்கு சிக்ஸ் பேக்ஸ் வச்சி போஸ் தந்தியே..எங்க சட்டைய கழட்டு..பாப்போம்"

கவுண்டர் சற்று அசந்து திரும்பி பார்ப்பதற்குள் தீபிகா படுகோனேவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறக்கிறார் மாணிக்கம்..

அடுத்து தெருமுனையில் 'மகராசன்' கமல் போவதை பார்க்கிறார் கவுண்டர்: "யோவ்...கசாப்பு. அங்கேயே நில்லு..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

.........................................................................................

                                                                        

11 comments:

முத்தரசு said...

அய்யோ அய்யோ செம காமடி

Yoga.S. said...

காலங்காத்தால,கும்புடுறேன் சாமி!இன்னாத்துக்கோசரம் இவ்ளோ தெகிரியமா இப்புடி ஒரு போஸ்ட்டுங்கிறேன்?ரசனி அரசியேலுக்கு வரேங்கிறாரா,மாட்டேங்குறாரா?"கோச்சடையான்" அப்புடீன்னா இன்னா????

வெளங்காதவன்™ said...

குன்ஜாங் குன்ஜாங்....

#உள்ளேன் அய்யா...

Unknown said...

பாட்சா பாரு..!பாட்சா..பாரு....!
கட்டவுட்டல பால் வடியும் முகத்தைப்பாரு...!
அதை நீயும் குடிச்சு பாரு
பசுவ போல குணத்தை பாரு!
பேத்தி வயசு குட்டியோட...
ஆட்டம் போடும் குசும்பு பாரு...!
3படத்தை புள்ளை இயக்கிய போது
படம் பார்த்து இரத்தம் ஒழுகும் மக்களை பார்த்தது
பச்சை குயந்தை சிப்ப பாரு!
நீ பீசு பீசா கிழிச்ச போதும்
ஏசப் போல பொறுமை பாரு
அத்தனையும் காசுதானடா....!
காவிரி நீரு கிடைக்காத போது
மௌனமாக இருந்து கர்நாடகத்தில
தொழில் தொடங்கிய வள்ளல் பாருடா...!

ALHABSHIEST said...

தனியா உக்காந்து படிச்சவன பைத்தியகாரன போல சிரிக்க வச்சிட்டீரு.//அடுத்து தெருமுனையில் 'மகராசன்' கமல் போவதை பார்க்கிறார் கவுண்டர்: "யோவ்...கசாப்பு. அங்கேயே நில்லு..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்//
க்கு வெயிட்டிங்.

Unknown said...

யோவ்..எல்லாப்பக்கமும் சுத்துற பாத்துக்க !

அமாவாசை அமிர்தலிங்கம் said...

இசைன்னா என்ன?

Unknown said...

ஏதோ டிரை பண்ணி இருக்கீங்க, பட் நல்லா வரல

சென்னை பித்தன் said...

கலக்கல்

கோகுல் said...

பாரு 'இந்த எரிமலையில் ஈரத்துணி போட்டதாரடா?'.. நீயே மன சாட்சிய தொட்டு சொல்லு. இப்ப அடிக்கற வெயிலுக்கு மொட்ட மாடில ஈரத்துணி போடறதே பெரும்பாடா இருக்கு. எரிமலைல ஈரத்துணிய எதுக்கு போடணும்?"//


இது டைமிங்.

கோகுல் said...

அடுத்து கமலா?ம்ம்ம்
ஆனாலும் ரொம்பத்தான் பொதுவா இருக்கீங்க போல,

பொதுவா சொன்னேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...