CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, April 7, 2012

రచ్చ - Rachcha(Telugu)


                                 
எனது பேரபிமான நடிகைகளான காத்ரீனா கைப், தமன்னா ஆகியோர் நடித்த(?) படமென்றால் கதையாவது, கத்தரிக்காயாவது. அதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் படம் பார்ப்பதே தலையாய கடமை என்றாகிவிட்டது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி புத்ருடு ராம் சரண்தான் இங்கே ஹீரோ. டைட்டிலில் 'மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த' என பெயர் போட்டதும் ஏற்கனவே நன்கு பரிச்சயமான பெயராக உள்ளதே என்று பார்த்தால். அட நம்ம ஆர்.பி.சௌத்ரி படம்.

கதைய சொல்லவா..இல்ல சொல்லவான்னு கேட்டேன்(என்னத்த சொல்வேன் ஏழுகொண்டலவாடா..). தொப்புளை சுத்தி சுத்தி போட்டுக்க ஊசியோட தயாரா இருங்க. அதாவதுங்க...ஒரு ஊருங்க. அதுல ரெண்டு நெருங்கிய நண்பர்கள். சூரி(நம்ம பார்த்திபன்), ரகுபதி(நாசர்). சூரி பையன் ராம் சரண். நாசர் பொண்ணு தமன்னா. இவங்களுக்கு சொந்தமான 1,78,019 லட்சம் ஏக்கர் நெலத்த ஊர் மக்களுக்கு தானம் தர்றாங்க. அப்ப நடக்குற விபத்துல எல்லாரும் டுமீலு. தம்மாதூண்டு தமன்னாவும், மினி சிரஞ்சீவியும் அங்கனவே ரொமாண்டிக் லுக் விட்டுட்டு பிரிஞ்சிடறாங்க. சொத்துக்காக தம்ஸை தகதகன்னு வளக்கறாரு கோடீஸ்வர வில்லன். ஹீரோவை வளக்கறது ஒரு ஏழை தம்பதிங்க..எப்படி? அவரு பேரு பெட்டிங் ராஜ்.

ஒரு நாள் ராஜோட நைனா வைத்திய செலவுக்கு 20 லட்சம் ஆகும்னு கண்ணாடியை கழட்டாம சொல்றாரு டாக்டர் (இது ஒண்ணுதாங்க படத்துல நான் பாத்த ஒரே Non கிளிஷே சீன்). அப்போது நாயகனை சந்திக்கும் 'கோ' அஜ்மல். ''உன் நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா (ஹீரோ லெமன் சாதம் சாப்புட்டது இவருக்கு எப்படி தெரிஞ்சதோ) தமன்னாவை லவ் பண்ணி காட்டு. மொத்த பணத்தை நான் தர்றேன்'' என்று சவால் விடுகிறார். ஏகப்பட்ட கார்கள், டுபுக்கு பாடிகார்டுகள் எல்லாரையும் டம்மி பீஸ் ஆக்கி விட்டு தங்கத்தாரகை தம்ஸை லவ்வுகிறார் ராம் சரண். இறுதியில் காதல் ஜெயிக்கிறது. காதல் பரத் போல ரசிகர்கள் தியேட்டரை விட்டு போனதும்..அடுத்த ஷோ தொடங்குகிறது.


இருபது கோடி கதிரவனின் ஒளி ஓரிடத்தில் சங்கமம் ஆனது போல என்னா கலருங்க தமன்னா. 3-D மூவிக்கு கண்ணாடி தர்றது போல தமன்னா படத்துக்கு ஆளுக்கொரு கூலர்ஸ் தாங்கப்பா. ஒளிவீச்சு கண்ணை கூச வக்கிது. வாட் எ கலருலு. சிரஞ்சீவி மகன் அந்தக்கால ஆனந்த் பாபு ஸ்டைலில் ஆடுறாரு. இதுக்கு பேரு டான்சுன்னா..டான்சுக்கு பேரு என்னவோ? ''கல் உப்பு இருக்குங்கறான். தூள் உப்பு இருக்குங்கறான். நடிப்பு மட்டும் இல்லைன்னு சொல்லிட்டான் பாஸ். (தூத்துக்குடி) கடல்லயே இல்லையாம்" என்று நமக்கு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய பத்திரத்தில் கையெழுத்து போட்டே தருகிறார் ராம் சரண். வில்லனை பார்த்து தலைவர் சொல்லும் ஒரு பஞ்ச்.."ஒரேய்..நுவ்வு  அருஸ்தே அருப்புலே. நேனு அருஸ்தே நெருப்புலே. ஏமி கொடுமை சரவணலு?

இசை மணிசர்மா..இவரை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். இசை பல பரிமாணத்துல திரியறது வாஸ்தவம்தான். ஆனா பரிணாம வளர்ச்சியே இல்லாம அல்லாடுறது எத்தனை நாளைக்கு மணி அண்ணகாரு? பிரம்மானந்தம் உள்ளிட்ட முன்னணி காமடியன்கள் பலர் இருந்தும் ஒரு பல்லைக்காட்டி கூட சிரிக்க முடியவில்லை என்னால். ஆனால் ஆந்திர மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பிரம்மானந்தத்தின் ஒரே ஒரு டயலாக் மட்டும் செம ரகளை. "ரங்கீலா எனும் டான்ஸ் மாஸ்டராக இந்தியா வந்த உன்னை அவன் (ஹீரோ) ஏமாற்றும் வரை என்ன புடுங்கி கொண்டு இருந்தாய்?". அதற்கு அவரின் பதில் "உங்க பொண்னை அவனோட ஓட விட்டுட்டு நீங்க எதை என்ன புடுங்கனீங்களோ அதைத்தான் நானும் புடுங்கனேன்".

ராம்சரண் அறிமுக காட்சி இருக்கே..அமோகம் போங்க. அஜ்மல் விடுக்கும் சவாலை எதிர்கொண்டு எதிரில் வரும் ரயிலை நோக்கி காரில் வேகமாக பறக்கிறார். கடைசி நொடியில் ரயிலை இடித்து விடாமல் எஸ்கேப் ஆகிறார் நம்ம தம்முடு. (நம்மைத்தவிர) உப நடிகர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்க்க..அவருக்கு பின்னே கார் வானத்தில் பறக்க...என்னமோ போங்க. க்ளைமாக்சில் வில்லன்கள் இவரை நோக்கி சாரை சாரையாக "ஏய்.." என கோராசாக பிளிறியவாறு ஓடிவர நம்ம ஆளு "ஏய்" என்று ஓலமிட்டு சிங்கிள் சிங்கமாக அவர்களை சிதற அடிக்கிறார்.

தெலுங்கு சினிமா எப்படி இருக்கிறது என்று வருடத்திற்கு ஓரிரு முறை எட்டிப்பார்ப்பதுண்டு. ம்ஹூம்...அடுத்த லீப் இயர் வரை மாற்றத்திற்கான அறிகுறி தெரிய வாய்ப்பே இல்லை அக்கட. அப்பா சிரஞ்சீவி காலத்தில் நீக்கமற நிறைந்திருந்த ரோஸ், கிளிப்பச்சை பேன்ட், சொக்காய் போட்டு ஆடும் ஆட்டம், 'சம்பேஸ்தானு ரா' வசனம் உள்ளிட்ட சகலத்தையும் இம்மி பிசகாமல் அம்மியில் அரைத்து நமக்கு பரிமாறியுள்ளார் ராம் சரண். ரச்சாவில் தமன்னா மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஸ்க்ரீனை கிழித்து கொண்டு போய் ராம் சரணின் தொப்புளை ஆக்ஸா பிளேடால் கீறியிருப்பேன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

உங்களில் யார் அசகாய சூரரோ அவர் இந்த ட்ரெயிலரை பார்க்கக்கடவது.....ரச்சா - நத்திங் அச்சா! 

...............................................................................

..................................

My other site:
...................................


..............................................
சமீபத்தில் எழுதியது:
ஒய்.ஜி. மகேந்திரனின் 'நாடகம்'
................................................. 
                                 

20 comments:

முத்தரசு said...

அவ்வளவு நல்ல படமா? பார்த்து பகிர்ந்தமைக்கு நன்றி

செல்வா said...

இந்தப் படத்தை எப்பொழுது தமிழில் தயாரிப்பார்கள். ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் :))

ஹாலிவுட்ரசிகன் said...

முதலும் கடைசியுமா தெலுங்கில் பார்த்த படம் மஹதீரா தான். நல்லாயிருந்தது என்டர்டெயினிங்கா. அதுக்கப்பறம் பிடிக்கிற மாதிரி கதையுடன் ஒரு படத்தையும் காணோம். எனி குட் ரெகமெண்டேசன்ஸ்?

CS. Mohan Kumar said...

அலோ.. காத்ரீனா என்னவா வர்றார்?

அவரையெல்லாம் நீங்க பாக்கப்படாது சின்ன வயசு நீங்க. அது நம்ம ஆளு

ஓவர் வெள்ளையா இருந்தா பிடிப்பதில்லை தமன்ன கட்சியில் இருந்து நான் விலகியதுக்கு காரணம் அது தான்

சேலம் தேவா said...

கலக்கல் விமர்சனமலு..!! :)

Unknown said...

யம்மா! தெலுங்கு படம்...இன்னுமாய்யா நம்மளை நம்புறாய்ங்க...

Thava said...

விமர்சனம் அருமை நண்பரே..நான் தெலுகு படங்களை பார்ப்பது என்பது வரண்ட நிலத்தில் மழை பெய்வதைப்போல..அந்த மழை கடைசியா மஹதீரா படத்துல கிடைச்சது..இப்ப இந்த படம் நல்ல படமா தெரிது.டிரை பண்றேன்.மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.

Jayadev Das said...

ரச்சாவில் தமன்னா மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஸ்க்ரீனை கிழித்து கொண்டு போய் ராம் சரணின் தொப்புளை ஆக்ஸா பிளேடால் கீறியிருப்பேன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ha.....haa...haa...

Yoga.S. said...

எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

அருமையான படம். பார்த்தே 'தீரணும்'.

! சிவகுமார் ! said...

//ப.செல்வக்குமார் said...
இந்தப் படத்தை எப்பொழுது தமிழில் தயாரிப்பார்கள். ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் :))//

சிம்பு நடித்தால் அமோகமாக இருக்கும் என கணிக்கிறேன். :))

! சிவகுமார் ! said...

@ ஹாலிவுட் ரசிகன்

ஈ ரோஜுலு எனும் புதிய படம் நன்றாக உள்ளதாம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
அலோ.. காத்ரீனா என்னவா வர்றார்?

அவரையெல்லாம் நீங்க பாக்கப்படாது சின்ன வயசு நீங்க. அது நம்ம ஆளு
ஓவர் வெள்ளையா இருந்தா பிடிப்பதில்லை தமன்ன கட்சியில் இருந்து நான் விலகியதுக்கு காரணம் அது தான் //

உங்கள் தங்கை காத்ரீனா இப்படத்தில் நடிக்கவில்லை சார். தமன்னா கட்சியில் இருந்து விலகிய நீங்கள் வெரி அன்லக்கி..

! சிவகுமார் ! said...

//சேலம் தேவா said...
கலக்கல் விமர்சனமலு..!! :)//

தேங்க்ஸ் தேவாகாரு.

! சிவகுமார் ! said...

//வீடு சுரேஸ்குமார் said...
யம்மா! தெலுங்கு படம்...இன்னுமாய்யா நம்மளை நம்புறாய்ங்க...//

நம்மளையா?

! சிவகுமார் ! said...

//Kumaran said...
விமர்சனம் அருமை நண்பரே..நான் தெலுகு படங்களை பார்ப்பது என்பது வரண்ட நிலத்தில் மழை பெய்வதைப்போல..அந்த மழை கடைசியா மஹதீரா படத்துல கிடைச்சது..இப்ப இந்த படம் நல்ல படமா தெரிது.டிரை பண்றேன்.மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.//

நல்ல படம் மாதிரி தெரியுதா....ஆகக்கா!!

! சிவகுமார் ! said...

@ ஜெயதேவ் தாஸ்

அந்த அளவுக்கு வெறில இருக்கேன் தலைவா.

! சிவகுமார் ! said...

@ யோகா

ஈஸ்டர் வாழ்த்துகள் யோகா!!

CS. Mohan Kumar said...

//தமன்னா கட்சியில் இருந்து விலகிய நீங்கள் வெரி அன்லக்கி..//

ஓய் பரவாயில்லை அனுஷ்கா வந்தப்புறம் தான் கட்சி விட்டு விலகினோம் அது பரவாயில்லை

//உங்கள் தங்கை காத்ரீனா இப்படத்தில் நடிக்கவில்லை சார். //

என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு. வேண்டாம் சொல்லிபுட்டேன்

kanagu said...

அருமையான விமர்சனம் தல.. நல்ல காமெடியா இருந்துது :) ரெண்டு வாட்டி படிச்சிட்டேன்.. :)

படம் எங்க பாத்தீங்க??? கசினோ??

தமன்னா பற்றிய வரிகள் உண்மை.. கண்டிப்பாக கூலர்ஸ் தேவை :D :D

ராம் சரண் அவ்வளவு மோசமாவா நடிச்சுருக்கார்.. மகதீரா-ல அருமையா நடிச்சிருந்தாரே!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...