CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, April 28, 2012

ஈழப்புளியமரம்உடன்பிறப்புகள் தொங்கிமகிழ ஏதுவான ஒரே மரம். ஈழப்புளியமரம். தொங்குங்க சார். தொங்குங்க சார். சீசன் போனா வராது சார்.             

அநேகமாக ஆறாம் வகுப்பு படித்த சமயமாக இருக்குமது. தேர்தலில் ஓட்டு கேட்க கலைஞர் எங்கள் தெருப்பக்கம் வந்த செய்தி கேட்டு விரைந்து ஓடினேன். எதிர்க்கட்சியை லேசாக சீண்டிவிட்டு ஹாஸ்யம் கலந்த உரையை ஆற்றினார் அவர். அதில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதும் உண்மை. ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சூரியன் சுருங்கி வெந்நீர் துளி ஆன கதையாக கலைஞரின் பேச்சாற்றல் மற்றும் ராஜதந்திரம்(!) எல்லாம் மெல்ல மெல்ல கவர்ச்சியை இழக்க தொடங்கி விட்டதென சொல்லலாம். அதுவும் கடந்த சில வருடங்களாக சுத்தம். ஒன்றா இரண்டா..அரங்கேறிய நாடகங்கள். அவருடைய ட்ராமாக்களில் நான் மிகவும் ரசித்த ஒன்று ஈழம் குறித்த விறுவிறுப்பான சென்டிமென்டல் கேம்தான்.

இங்கே தமிழன் ராப்பகலாக சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய நிலங்களை இழந்து அப்போதைய ஆட்சியாளர்களிடன் சிக்கி சின்னாபின்னம் ஆனது ஒரு புறம் என்றால் அங்கே நிலத்தோடு தன் சொந்தங்களின் உயிரையும் காவு தந்துவிட்டு செய்வதறியாது திகைத்தான் ஈழத்தமிழன். எம்டன் மகன் படத்தில் வரும் வடிவேலு இறந்த தன் தந்தையை புதைத்த காலம் கடந்த பின்பு வந்து  நாசரை பார்த்து 'ஹலோ..உங்க கடை அப்பள கட்டையை காணும்னு கத்தலைங்க. எங்க அப்பாவை காணும்னு அழுதுகிட்டு இருக்கேன். எங்க அப்பாவா இருந்தா என்னை அழவிட்டு வேடிக்கை பாப்பாரு. இது என் வீடு ஜாக்ரதை' என்பார். அதுபோல நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக 'ஐயோ..ஈழத்தை காப்பாத்த என்னை விட்டால் ஆளில்லையே' ரேஞ்சுக்கு பீல் பண்ண வேண்டியதெல்லாம் எதற்கு? இங்க என்ன ஆஸ்காரா குடுக்கறாங்க?

என்னதான் கட்சியின் அதிதீவிர விசுவாசியாக இருந்தாலும் 'உண்மையான' ஒவ்வொரு தி.மு.க. தொண்டன் மனதிலும் 'ஈழம் சார்ந்த நிலைப்பாட்டில் தன் தலைவன் செய்தது சரியே' எனும் எண்ணம் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தலைமையின் கவனத்தை ஈர்க்க வேண்டும் அல்லது தன் தலைவன் செல்லும் பாதை எவ்வாறாயினும் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டும் என்கிற காரணங்களுக்காக மட்டுமே இப்படி ரீலு அந்து போன பதிவையெல்லாம் இணைய பிரதர்ஸ் போட வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறோம். உளியின் ஓசை படத்திற்காக மாநில அரசின் 'சிறந்த வசனகர்த்தா' விருதை தன் ஆட்சியின்போதே பெற்றுக்கொண்ட ஒப்பற்ற தலைவராம் கலைஞரின் வசனத்தையே மிஞ்சி விடும் போல இணைய சூரியன்கள் தீட்டும் காவியங்கள்.

கட்சிசாராத பதிவர்கள் உங்களை செம காட்டு காட்டும்போது கன்னத்தில் மருவை வைத்துக்கொண்டு அனானியாக உங்கள் பதிவிலேயே 'வெற்றிகொண்டான்' பாணி கமன்ட் போடுவது, ஒற்றுமையாக இருக்கும் நண்பர்களில் எவரேனும் ஒருவர் உங்களிடம் நியாயமாக கேள்வி கேட்டு வாதம் செய்தால் அவரை ஆப் செய்ய பிற நண்பர்களின் பதிவிற்கு திடீர் விஜயம் செய்து 'அருமையான எழுத்து நடை' என்று பின்னூட்டமிட்டு பிரித்தாளும் கொள்கையை மொக்கையாக கையாள்வது, அதிலும் பருப்பு வேகாவிடில் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது...ஏன் இப்படி சில்லி வேலைகளில் ஈடுபட வேண்டும்? இது கூட தெரியாத டூமாங்கோலியா உங்கள் சக பதிவர்கள்? ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தயவு செய்து எஸ்.எஸ். சந்திரன் காலத்தை தாண்டி வாருங்கள். இது சந்தானம் சீசன்.

உங்கள் தலைவர்தான் ஈழம் எனும் புளியமரக்கிளையை பிடித்து தொங்கிக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளாரே தவிர மானம் உள்ள எந்த ஈழத்தமிழனுக்கும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வாழும் வள்ளுவர் எனும் புளியங்கொம்பை பிடித்து தொங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதில் அர்த்தமும் இல்லை.

தன்குடும்பத்தை கண்ணெதிரே காலனுக்கு பலி தந்துவிட்டு இனி என்ன மிச்சம் இருக்கிறது என வாடிக்கிடக்கும் ஈழத்தமிழனையும், மாற்றி மாற்றி இரு கழகங்களின் கையிலும் பூமாலையாக சிக்கி நைந்து போன நாராக நாறிக்கொண்டு இருக்கும் தமிழகத்து குடிமகனையும் வைத்து இது மாதிரி டர்ட்டி கேம் ஆடுவதை நிறுத்துங்கள். இல்லாவிடில் புளியங்கொட்டை என்ன...புளிய மரத்தையே வேரோடு பிடுங்கி நச்சென்று உங்கள் நடுமண்டையில் ஒரே போடாக போட்டு விடுவான் பொறுமையின் உச்சத்தில் இருக்கும்..தமிழன்!


கீழ் உள்ள காணொளியில் வரும் 'மஞ்சள்' சட்டை நபர் வடிவேலு தானே தவிர தானைத்தலைவர் அல்ல என்பதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். வடிவேலு பேசும் ஒவ்வொரு வரியும், கச்சிதமான நடிப்பும் ஈழ மண்ணில் உயிர் இழந்த என் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பெருஞ்சூரியனுக்கு சமர்ப்பணம்.


....................................................................................

26 comments:

உலக சினிமா ரசிகன் said...

சிவக்குமார்...உங்களிடம் இவ்வளவு சீரியசான பதிவை எதிர்பார்க்கவில்லை.அருமை..அருமை.
நச்சென்று... புளியமரத்தை புடுங்கி மண்டையிலடித்த உக்ரத்தை மிகவும் ரசித்தேன்.

இனி ஈழம் என்று திமுகக்காரன் வாயைத்திறந்து பாடக்கூடாது.

விக்கியுலகம் said...

சரியான செருப்படி மாப்ள!...மவனே இவனுங்க சோத்த தின்றானுஙகளா...இல்ல....!!!!!!!!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நீண்ட நாளைக்கு அப்புறமா வந்தேன்! நல்லதோர் பதிவினைப் படிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறீங்க.
நன்றாக தோலுரித்துக் காட்டியிருக்கிறீங்க.

ஒரு காலத்தில் மக்கள் அரசியல் - பொது நல அரசியல் செய்து திமுக ஓகோன்னு இருந்திச்சு. ஆனா இன்று தன் மக்கள் அரசியலில் கலைஞர் இரண்டறக் கலந்ததால் இந் நிலமை ஏற்பட்டு விட்டது.

நிரூபன் said...

சிட்டுவேசன் காமெடி இணைப்பு சூப்பரா இருக்கு.

மௌனகுரு said...

Enna writing da! Chance illa boss kalakkal... Will comment u in detail in da evening

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Your statement is very true

வீடு சுரேஸ்குமார் said...

சிவா! இப்ப கழக கண்மணிகள் கேள்வி கேட்கிறார்கள் மத்திய அரசை எதிர்த்து மாநில அரசு எதுவும் செய்யமுடியாது என்று? நாங்க வெறும் மாநில அரசுதான்.....என்கிறார்கள் ஹிந்தியை வேண்டாம் என போராடி எப்படி மத்திய அரசில் அதுவும் சர்வாதிகார ஆட்சி நடத்திய இந்திராவிடம்...எப்படி வெற்றி பெற்றார்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாஸ், புளியால ப்ளைன் மண்டையில செம ஆப்பு

மனசாட்சி™ said...

//உங்கள் தலைவர்தான் ஈழம் எனும் புளியமரக்கிளையை பிடித்து தொங்கிக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளாரே//

நச்சுன்னு சொன்னீர்கள்

மோகன் குமார் said...

நேற்று இணையத்தில் இது சம்பந்தமாய் நடந்த முக்கிய பதிவுகள் அனைத்தும்/ காமன்டுகள் உட்பட படித்தேன். இவ்விஷயத்தில் உங்கள் உணர்வு தான் எனக்கும்.

குறிப்பிட்ட பதிவர் தன் தலைவரை எப்படி வேண்டுமானாலும் (அதற்கு அவர் சிறிதும் தகுதி இல்லாதவர் எனும்போதும்) புகழ்ந்து கொள்ளட்டும்
ஈழ தமிழர் பற்றி "இழி நிலையில் உள்ள" என்கிற ரீதியில் பேசியது பெரும் பெரும் பெரும் குற்றம் ! ஆட்சியை இழந்து, மகளை ஊழலில் ஜெயிலுக்கு அனுப்பி, மரியாதை இல்லாமல் இருக்கும் உங்களை போலவா நாங்கள் இழி நிலையில் இருக்கிறோம் ?" என்கிற ஈழ தமிழர்களின் உணர்வை, வலியை புரிந்து கொள்ள முடியா விட்டால் என்ன சொல்வது :((

தன் தவறை தானே உணர்ந்து இத்தகைய வாரத்தைகளை உபயோகித்து தவறு என்று அபி அப்பா சொன்னால் நன்றாயிருக்கும்.
ஆனால் அவர் அப்படி செய்வார் என தோன்ற வில்லை :((

இரவு வானம் said...

வரிக்கு வரி சிக்சர் சிவா...

கே.ஆர்.பி.செந்தில் said...

எத்தனை முறை நசுங்கினாலும் சொம்புகள் பன்ற அலப்பறை முகம் சுளிக்கவே வைக்கிறது.

கேவலமான அரசியலை நடத்தும் இவர்களுக்கு மூளை என்கிற வஸ்து இருக்காது போல..

தமிழ் அமுதன் said...

தமிழக அரசியலில் காரியம் சாதிக்க இந்த ஈழப்புளியமரத்தை பிடித்து தொங்குபவர்கள்..! காரியம் இங்கே முடிந்தவுடன் ச்சீ..ச்சீ இந்த பழம் புளிக்கும் என வெகு எளிதில் தப்பித்து கொள்வார்கள்..!

இம்சைஅரசன் பாபு.. said...

எப்பா எப்பா ...என்ன அடி அடி ..நேத்துல இருந்து ஒரு மனுசன தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறாங்களே . ஆனா தேவையான அடிதான்

இம்சைஅரசன் பாபு.. said...

எப்பா எப்பா ...என்ன அடி அடி ..நேத்துல இருந்து ஒரு மனுசன தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறாங்களே . ஆனா தேவையான அடிதான்

வெளங்காதவன்™ said...

உங்கள் எழுத்து நடை அருமை!
#சார்.. உனக்கு புத்தியே இல்லியா சார்? அடுத்த முதலமைச்சர இப்பிடிப்போட்டுக் கிழிக்குற?
அடுத்த முதலமைச்சர் எப்புடியா?
சார், மானங்கெட்ட மாக்கள்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல சாரே) இருக்கும் வரை, குவாட்டருக்கும் கோழி பிரியாநிக்கும்தான் ஒட்டு சாரே...

கர்ர்ர்.... த்து.....

தலைவர் வாழ்க, தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க!!!!

கக்கு - மாணிக்கம் said...

சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் , காணாமல் போய்விடும்.
அது ஒன்றும் "புளியங்கொம்பு " இல்லை.
ஈழ தமிழர்கள் என்ன? இனி இந்திய தமிழர்களும் கூட புரிந்துகொண்ட ஒன்று அது வெறும் இத்துப்போன காய்ந்த குச்சி என்று.
இவர்கள் அனைவருக்கும் காலம் பதில் சொல்லும். காத்திருங்கள்.

அம்பலத்தார் said...

வணக்கம் நண்பரே, உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவைப்படித்ததில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தி.மு.க மக்கள் நலனுக்காக செயற்பட்டதெல்லாம் அறிஞர் அண்ணா காலதுடன் போய்விட்டது. கலைஞரின் காலத்திற்குப்பின் அந்தக்கட்சி துண்டுகளாக சிதையும். அதுவரை இவர்களின் நடிப்பு தொடரும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குட் போஸ்ட்... சிவா. தமிழினத்தலைவருக்கு இன்னும் வேடிக்கைகள் நிறைய இருக்கு.

அம்பலத்தார் said...

தமிழக் அரசியல்வாதிகள்தான் எமது ஈழப்பிரச்சனையை அவ்வப்போது தமது நலன்களிற்கேற்றாற்போல உபயோகித்துக்கொண்டார்களே அன்றி மிகப்பெரும்பானமியான தமிழக மக்களும் இதயசுத்தியுடன் உண்மையாகவே எம்மை ஆதரித்தார்கள் அவர்களுக்கெல்லாம் ஈழத்தமிழர் நாங்க ஒவ்வொருவரும் நன்றிசொல்லக்கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அபி அப்பாபோன்ற அல்லக்கைகளின் பேச்சுக்களையு எழுத்துக்களையும்தான் எம்மால் சகித்துக்கொள்ளமுடியவில்லை.

அம்பலத்தார் said...

எமது வலிகளைப்புரிந்துகொண்டு பின்னூட்டமிட்ட நண்பர் மோகன் குமாரிற்கு நன்றிகள்.

Yoga.S.FR said...

வணக்கம் சிவா சார்!சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!!!

NAAI-NAKKS said...

சூப்பர் சிவா....நச்...!!!!

அக்கப்போரு said...

தேவ ----- சிங்காரிச்சு வந்துட்டாளாம் அதுனால தேரு தானா நிலைக்குப் போயிருமாம். என்ன இம்புட்டு நேரம் தேரிழுத்தவுக வரிசையாப் போயி அவ பின்னாடி நிக்கனுமாம்...... ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவதாகும் போடா என்பது சரியாய் பொருந்துகிறது ஒவ்வொரு சொம்புக்கும்

அக்கப்போரு said...

தன் தவறை தானே உணர்ந்து இத்தகைய வாரத்தைகளை உபயோகித்து தவறு என்று அபி அப்பா சொன்னால் நன்றாயிருக்கும்.///
மோகன் - பேராசை உங்களுக்கு.
தேர்தல் தோல்விக்கு காரணம் ஆட்டயப்போட்ட அல்லக்கைகளும், வாரிச் சுருட்டி தமிழகத்தில் எல்லோர் வயிற்றேரிச்சளையும் கொட்டிக் கொண்ட வாரிசுகளும் தான், என்பது தெரிந்தும் பிரம்ம ராட்சதப் பூதக் கதை சொன்ன பகுத்தறிவாளர் வழி வந்த சொம்புகளிடம் இதை எதிர்பார்ப்பது பேராசை மோகன்

angelin said...

ஆழமாக சிந்திக்க வைத்த FANTABULOUS பதிவு .வாழ்த்துக்கள் சிவகுமார் .


இவர்களின் அறிக்கைகளை படிக்கும்போது
கோயபெல்ல்ஸ் quotes நினைவுக்கு வருகிறது..
//If you tell a lie big enough and keep repeating it, people will eventually come to believe it. //


நம் நாட்டில் திரும்பிய இடமெல்லாம் கோயபெல்ஸ்கள் :(

Related Posts Plugin for WordPress, Blogger...