CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, April 20, 2012

'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா பாசறை துவக்க விழா


                                                                வெற்றித்திருமகன்  -  வெண் சூரியன்

ஓரிருமுறை நேரில் உம்மை நாங்கள் கண்டதுண்டு. ஆனால் எங்களை நீவிர் கண்டதில்லை. உம் புகழ் குறித்து பிரபல பதிவர்கள் சில சொல்லிக்கேட்டதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல். ஒரு வழிகாட்டி. எம் போன்ற இளையோருக்கெல்லாம் ஒரே வழிகாட்டி நீரன்றி வேறொருவரில்லை. வலது கை குடுப்பது இடது கைக்கு தெரியாமல் தானத்தில் சிறந்து நின்றான் கர்ணன். இரண்டு கைகளும் குடுப்பதை மூன்றாம் மனிதனுக்கு கூட தெரியாமல் அள்ளித்தருபவர் எங்கள் நவீன கர்ணன். 

அண்ணன் அப்துல்லாவை மானசீக குருவாக ஏற்று இன்று முதல் உதயமாகிறது....

'நவீன கர்ணன்' அப்துல்லா பாசக்கார பயல்கள் பாசறை!

அண்ணன் வழி நடப்பது ஒன்று மட்டுமே இந்த பாசறையின் லட்சியம். எங்கள் ஆசானின் சுண்டு விரல் அசையாமல் ஒரு அணுவும் அசையாது இங்கே.

அர்த்தமின்றி எங்கள் கர்ணனை சீண்டுவோர் மீது சீறிப்பாயும் எங்கள் சொல்லம்புகள்.

ராஜாதி ராஜ பதிவர்கள், பஸ்ஸர்கள் குறுக்கே நின்றாலும், கூனிக்குறுகாமல் சுழற்றி அடிக்கும் இந்த பாசக்கார பயல்கள் பாசறை.

கர்ணன் கரம் பற்றி கர்ம சிரத்தையுடன் கண்ணசராமல் காரியமாற்ற காத்திருப்போர் கண நேரமும் தாமதிக்காதீர். இதயபூர்வ உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கௌரவ உறுப்பினர்கள்:

பன்னிக்குட்டி ராம்சாமி
மணி ஜி
உண்மைத்தமிழன்
ஓ.ஆர்.பி. ராஜா
கே.ஆர்.பி. செந்தில்
கேபிள் சங்கர்
சுகுமார் சுவாமிநாதன்
குசும்பன்
வடகரை வேலன்
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
இரவுவானம் சுரேஷ் 
யோகா S.FR
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்

மற்றும் 'தலைநகர போர்வாள்' சுரேகா அவர்கள்.

சர்வதேச பாசறையின் கொ.ப.செ:
பாஸ்டன் ஸ்ரீராம்

இது போக 'தீ' 'வீர' இளைஞர் படை நிழல் உலகில் நித்திரையின்றி இயங்கும் என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்கிறோம்!!


- Ivann

'NEWFORT' ABDULLAH FANATICS  
.............................................................................


           

27 comments:

சேலம் தேவா said...

எதிர்காலத்தில் அண்ணன் அமைச்சர் ஆகிடுவாருன்னு இப்பயேவா..?! ;)

! சிவகுமார் ! said...

மந்திரி...அண்ணனுக்கு ரொம்ப சின்ன பதவி. ஆல்வேஸ் திங்க் பிக்கர் தேவா!!

புதுகை.அப்துல்லா said...

ஆஹா... சனியன்லாம் இன்னைக்கு எனக்கு பனியன் போட்டுகிட்டு வந்திருக்கே :)))

புதுகை.அப்துல்லா said...

என்னது கர்ணனா?? அவ்வ்வ்... யோவ் கம்பேனியே அபராதத்துல போயிகிட்டு இருக்குய்யா!!

வடகரை வேலன் said...

:)))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் கோட்டைக்கு செல்லும் போது கார் கதவை நான்தான் திறந்துவிடுவேன் என்று இப்பவே சொல்லிவைத்துக் கொள்கிறேன்....... இதில் யாரும் தலையிட்டால் அண்ணன் தீக்குளிப்பார் என்று எச்சரிக்கிறேன்.......

அரவிந்தன் said...

பாசறையின் பெங்களுர் கிளை துவக்க வேண்டும்.தலைமை க்ழகத்தின் அனுமதி வேண்டி காத்திருக்கிறோம்.

அன்புடன்
அரவிந்தன்

அஞ்சா சிங்கம் said...

சென்னையில் ஒரு வெண்ணை .......................
பதிவுலக பங்காளி எங்கள் தக்காளி ....................
முக்கினாலும் வராத விக்கி ......................

இப்படி தான் உங்க அடுத்த பதிவு வரும் தலைப்புக்கு ஆகும் பயன்படுத்திக்கங்க..............

நிகழ்காலத்தில்... said...

பேர் பூராவும் கருப்பு பாதியும் செகப்பு பாதியுமா இருக்கறதுல எதுனா விவரம் அடங்கி இருக்குதுங்களா?

எதுக்கும் வாழ்த்தி வைக்கிறேன். :))))

sriram said...

என்னையும் உங்க பாசறையில் சேத்துக்கறீங்களா? கொடுக்காத காசுக்கும் சேத்து நல்லா கூவுவேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ரஹீம் கஸ்ஸாலி said...

யோவ்... சிவா....கௌரவ உறுப்பினர்கள் பட்டியலில் என் பெயர் விடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்குவோம்.

! சிவகுமார் ! said...

//புதுகை.அப்துல்லா said...
ஆஹா... சனியன்லாம் இன்னைக்கு எனக்கு பனியன் போட்டுகிட்டு வந்திருக்கே :)))//

சனியன். பனியன். அடுக்கு மொழி கோர்க்கும் இனியன்.

! சிவகுமார் ! said...

//புதுகை.அப்துல்லா said...
என்னது கர்ணனா?? அவ்வ்வ்... யோவ் கம்பேனியே அபராதத்துல போயிகிட்டு இருக்குய்யா!!//

அள்ளி வழங்கும் அட்சய பாத்திரமே. தங்களுக்கு தெரியாத 'நிதி' யா.

! சிவகுமார் ! said...

//வடகரை வேலன் said...
:)))))))))))))//

வாங்கோண்ணா..!!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணன் கோட்டைக்கு செல்லும் போது கார் கதவை நான்தான் திறந்துவிடுவேன் என்று இப்பவே சொல்லிவைத்துக் கொள்கிறேன்....... இதில் யாரும் தலையிட்டால் அண்ணன் தீக்குளிப்பார் என்று எச்சரிக்கிறேன்.......//

அண்ணனின் சாரதி ப.ரா. உள்ளவரை போரில் என்றும் ஜெயமே!! அட்டாக்க்....!!

! சிவகுமார் ! said...

//அரவிந்தன் said...
பாசறையின் பெங்களுர் கிளை துவக்க வேண்டும்.தலைமை க்ழகத்தின் அனுமதி வேண்டி காத்திருக்கிறோம்.

அன்புடன்
அரவிந்தன்//

யூ ஆர் அப்பாயின்டட் அரவிந்தன் சார்.

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
சென்னையில் ஒரு வெண்ணை .......................
பதிவுலக பங்காளி எங்கள் தக்காளி ....................
முக்கினாலும் வராத விக்கி ......................

இப்படி தான் உங்க அடுத்த பதிவு வரும் தலைப்புக்கு ஆகும் பயன்படுத்திக்கங்க..............//

இங்க பார்ரா!!

! சிவகுமார் ! said...

// sriram said...
என்னையும் உங்க பாசறையில் சேத்துக்கறீங்களா? கொடுக்காத காசுக்கும் சேத்து நல்லா கூவுவேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

சேத்தாச்சி ஸ்ரீராம் சாரே. பதிவை மீண்டும் பாருங்கோள்!!

! சிவகுமார் ! said...

// nigalkalathil siva said...
பேர் பூராவும் கருப்பு பாதியும் செகப்பு பாதியுமா இருக்கறதுல எதுனா விவரம் அடங்கி இருக்குதுங்களா?

எதுக்கும் வாழ்த்தி வைக்கிறேன். :))))//

கருப்பு, செகப்பு...இன்னும் புரியலையா? வாட் எ பிட்டி நண்பரே!!

! சிவகுமார் ! said...

//ரஹீம் கஸாலி said...
யோவ்... சிவா....கௌரவ உறுப்பினர்கள் பட்டியலில் என் பெயர் விடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

உங்க பேரை சேத்தாச்சி சாணக்யரே. மறுக்கா படிங்க.

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
வணக்கம் சிவா,சார்! எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்குவோம்.//

நோ பம்மல். தெகிரியமா வலம் வாங்க யோகா!

Unknown said...

திருப்பூர் பக்கம் எதாச்சும் கிளை உண்டா???

Yoga.S. said...

! சிவகுமார் ! said...

//ரஹீம் கஸாலி said...
யோவ்... சிவா....கௌரவ உறுப்பினர்கள் பட்டியலில் என் பெயர் விடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

உங்க பேரை சேத்தாச்சி சாணக்யரே. மறுக்கா படிங்க.////நானும்,நானும். (என்னையும்,என்னையும்,ஹி!ஹி!ஹி!!!!)

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
திருப்பூர் பக்கம் எதாச்சும் கிளை உண்டா???//

இன்றே கடைசி. கிளைப்பதிவிற்கு முந்துங்கள்.

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
நானும்,நானும். (என்னையும்,என்னையும்,ஹி!ஹி!ஹி!!!!)//

உங்களையும் இணைத்தாகி விட்டது. உறுப்பினர் சந்தா 10,000 ரூபாவை மறக்காமல் கட்டிவிடவும்.

Yoga.S. said...

பத்தாயிரமா.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.....!!!!!!!!!!!!!!!!(கோமா நிலையில் யோகா,சிவகுமார் சி.பி.சி.ஐ.டி விசாரணையில்!)

Related Posts Plugin for WordPress, Blogger...