CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, April 14, 2012

கேப்பிடல் திரும்பிய கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யே வருக!!
தாடிகள் எல்லாம் தாகூரா? மீசைகள் எல்லாம் பாரதியா?
கேப்பிட்டலில் இருப்போர் எல்லாம் கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யா?

சரி என்று கூட சொல்ல வேண்டாம். ரி என்று மட்டும் ரீங்காரமிடு.
எதிரி நம்மை பார்த்து சொல்வான் 'தெரியாம மோதிட்டேன். ஆளை விடு'.
ஐயகோ என் செய்ய..நீ இல்லா நாட்களில் விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக சொல்லிக்கொண்டிருந்தோம் சபிக்கப்பட்டிருந்தாலும்.

சிங்கை சிலிர்க்க, மங்கை(மலேசியா) தளிர்க்க(!) நீ பாட்டுக்கு
சென்று விட்டாய் அயல்நாடு.
நேற்றுவரை தலைநகராம் சென்னையில் நீ இல்லாத நொடிதோறும் தொண்டர்படை பட்டது பெரும்பாடு.

எங்கள் தளபதி தலைநகரில் விடுமுறை எடுத்த நாள் பார்த்து
என்னமா ஆட்டம் போட்ட சுனாமியே!!
அந்த சுனாமியை சுருட்டி வாயில் வெற்றிலையாக போடு
சுனாமியின் பினாமி கே.ஆர்.பி.யே!!

                       

வேட்டியில் கறை பட வேர்வை சிந்தி உழைப்பவன் ஊரில்
பெய்யெனப்பெய்யும் மும்மாரி.
கரைவேட்டியில் கள்ளப்பார்வை கொண்டு வயிற்றை வளர்ப்பவன்
எங்கள் அண்ணனை பொறுத்தவரை கேப்மாரி.

அண்ணா சாலை அலற..மேற்கு மாம்பலம் மிளிர(?)
தலைவன் வந்துவிட்டான் தாயகம்.
இனி சபைக்கூட்டங்களில் அண்ணன் மட்டுமே நடுநாயகம்.

'எங்கய்யா இருக்க' என்று நித்தம் கேட்காமல்
கேபிளின் அலைபேசி ஆடியது ஊசல்.
'தன்னிகரில்லா தளபதி தமிழகம் வந்துவிட்டான்'
செய்தி கேட்டு சங்கர நாராயணரின் உள்ளம் ஆடுது ஊஞ்சல்.

கடலலையென அலைகடலென திடுக்கென திரண்டு வா
கே.ஆர்.பி.க்ரூப்பின் இளைஞர் பெரும்படையே!
இனி ஞாயிறு சந்திப்பு தோறும் இரவு 12 மணிக்கு
முன்பாக மூடக்கூடாது மெரீனா டீக்கடையே!!
............................................................................


வெற்றிகரமாக வெளிநாட்டு விஜயத்தை முடித்துவிட்டு சற்றுமுன் தமிழகம் திரும்பிய...


'தென் தி.நகரின் தேவர் மகனே...'
'யூத் ப்ளாக்கர்களின் போர்வாள்' கே.ஆர்.பி.யே... வருக! வருக!!
..............................................................................


Designs: Veedu Sureshkumar.

............................
My other site:
.............................

..................................
சமீபத்தில் எழுதியது:
...................................
                       

                                                 
                                                                       

8 comments:

கோவை நேரம் said...

ஆளுயர கட அவுட்...

Unknown said...

எது மலேசியாவுக்கு மங்கையா....நல்லாத்தான்யா பேரு வைக்கிறீங்க....

CS. Mohan Kumar said...

//ஐயகோ என் செய்ய..நீ இல்லா நாட்களில் விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக சொல்லிக்கொண்டிருந்தோம்//

நம்பாதீங்க ! சிவகுமார் ஒரு டிராமா, ஒரு சினிமா விடாம பாத்துக்கிட்டு செம ஜாலியா இருந்தாரு !


//எங்கள் தளபதி தலைநகரில் விடுமுறை எடுத்த நாள் பார்த்து
என்னமா ஆட்டம் போட்ட சுனாமியே!!//

இது வேறயா? நல்லா சொல்றீங்கையா டீடைலு !

***
அந்த கட் அவுட் நைஸ். நல்லா கீதுப்பா !வெல் டன் சுரேஷ் !

நாய் நக்ஸ் said...

siva...
nee nadathu....

Unknown said...

தல வந்துட்டாரா? இனிமே சரவெடிதான் :-)))

அஞ்சா சிங்கம் said...

விடாத சிவா அப்படியே பில்டப்பு குடுத்துக்கிட்டே இரு அந்த புல்லு பாட்டல் நம்ம கையிக்கு கிடைக்கும் வரை விட கூடாது . பய புள்ள ஒரு புல்லு தான் வாங்கீட்டு வந்திருக்கு ...........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னுமா புல்லு கிடைக்கல?

shortfilmindia.com said...

haa..ahhaa.haa..

Related Posts Plugin for WordPress, Blogger...