நாளைய முதல்வர் உதயநிதியுடன் நான்..
தியேட்டரில் ட்ரெயிலராக மட்டுமே பல மாதங்கள் ஓடிய ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு சைதை வழியே சென்ற போது ஒரு போஸ்டர் கண்ணில் பட்டது: "வரலாற்று நாயகன் நடிக்கும் ஓகே.ஓகே.வெற்றி பெற வாழ்த்தும் - உதயந்தி ட்ரெயிலர் ரசிகர்கள் சங்கம்''. செம நக்கல் பார்ட்டிதான் போஸ்டர் அடித்து இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தமிழக ரசிகர்களை பாடாய் படுத்திய படம் ரிலீஸ் ஆகிறது என்றால் சும்மாவா?
சாந்தம்(சத்யம் காம்ப்ளக்ஸ்) தியேட்டருக்கு நான் சென்ற சில நிமிடத்தில் தன் நண்பர்களுடன் கேண்டீன் அருகே என்ட்ரி தந்தார் உதயநிதி. அவரிடம் ஒரு ஹாய். ஒரு ஸ்டில். பிறகு ‘ஆல் தி பெஸ்ட் உதய்’ என கை குலுக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். எனக்காக ரிசர்வ் செய்த இருக்கையில் அமர்ந்ததும் வந்தார் நாளைய சி.எம்.மின் தோழர் ஒருவர் “பாஸ்..ஹீரோ இங்க உக்கார போறார். ரெண்டு சீட் தள்ளி.ப்ளீஸ்”...என சொல்ல..இடம் மாறியதுதான் மிச்சம். சத்யம் மெயின் தியேட்டரில் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பார்க்க இடம் மாறினார் உதய். அவர் உள்ளே வருவார் என நம்பி அளவுக்கு மீறி பிகில் அடித்த சில்வண்டு கூட்டம் பிறகு ஓய்ந்தே போனது.
சரி கதைக்கு(?) வருவோம். வேலை வெட்டி போகாமல் சுற்றும் இளைஞன், அவனை ‘லவ்’கீக வாழ்க்கைக்கு திசை திருப்பும் மைதா மாவு ஸ்கின் பெண், ஒயின் ஷாப்பில் குடியிருக்கும் ஒரு நண்பன், க்ளைமாக்சில் ஒரு ஸ்டார் என்ட்ரி..அதேதான். இயக்குனர் ராஜேஷின் டெம்ப்ளேட் படவரிசையில் அடுத்ததுதான் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. டிகிரி படித்ததாக பொய் சொல்லி கறார் ஆசிரியர் அழகம்பெருமாளின் மனைவியாக காலம் தள்ளும் எவர் யூத் மம்மி சரண்யா. இவர்களின் மகனாக சரவணன்(நம்ம மினி தளபதிதான்). ஜிகிரி தோஸ்தாக பார்த்தா. டெபுட்டி கமிஷனர் ஷாயாஜி மகள் ஹன்சிகாவை லவ்வுகிறார். பிரிகிறார். மீண்டும் லவ்வுகிறார் சரவணன். கடைசி ரீலில் என்ன ஆச்சி என்பதே கதைங்கோ!
இது போன்ற சப்ஜெக்டுக்கு ஜீவா, ஆர்யா போன்ற டக்கர் பெர்பாமர்களை ஹாண்டில் செய்த ராஜேஷுக்கு உதயநிதியை நடிக்க வைப்பதற்குள் தாவு தீர்ந்து இருக்கும் என்பது முதல் பாதியில் மிக நன்றாக தெரிகிறது. கூட ஹன்சிகா வேறு. சொல்லவா வேண்டும். நடிப்பு குழாயில் நவரசம் என்ன..ஒற்றை ரசம் கூட சொட்டு சொட்டாகத்தான் ஊற்றுகிறது இருவரிடம் இருந்தும். இரண்டு பேரும் அடிக்கடி சிரிக்கிறார்கள் பாருங்கள். அப்படி ஒரு சிரிப்பு. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பயிற்சிப்பட்டறைக்கு சென்றிருப்பார் போல ஹீரோ. அதனால் இரண்டாம் பாதியில் நடிப்பை மெருகேற்றி பாஸ் மார்க் வாங்குகிறார்.
டிகிரி வாங்காத காரணத்திற்காக பல வருடங்கள் மனைவியை பார்த்து சீறும் கணவனாக அழகம் பெருமாள்..என்ன லாஜிக்கோ. ரிசல்ட் பார்த்து விட்டு இரவு லேட்டாக வந்து சமாளிக்கும் காட்சியில் சரண்யா சக்கை போடு போடுகிறார். வழக்கம்போல மொக்கை போலீஸ் அதிகாரியாக(ஹீரோயின் அப்பா..அப்பறம் எப்படி) ஷாயாஜி. அந்தோ பரிதாபம். கெஸ்ட் ரோலில் சினேகாவும்,ஆர்யாவும்.
ஹாரிஸ் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளன. 'வேணாம் மச்சி வேணாம்', 'அகிலா அகிலா' இரண்டும் தாளம் போட வைக்கின்றன. டான்ஸில் ரொம்ப நேரம் யோசித்துதான் ஸ்டெப் வைக்கிறார் ஹீரோ. பல காட்சிகளை சத்யம் தியேட்டரிலேயே படமாக்கி உள்ளனர். கேட்டால் உதய், சந்தானம் இருவரும் அங்கு வேலை செய்கிறார்கள் என்று ஒரு செகண்ட் ஞாபகம் செய்கிறார் இயக்குனர். சிவா மனசுல சக்தியில் ஜீவாவின் லோக்கல் ஸ்லாங்கும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யா - சந்தானத்தின் அல்டிமேட் கெமிஸ்ட்ரியும் பட்டையை கிளப்பும். அத்துடன் அனுயாவும், நயனும் கொஞ்சம் நடிக்கவும் செய்தார்கள். ஆனால் இங்கே அந்த ப்ளஸ்கள் எதுவும் இல்லாததே மைனஸ்.
ஆந்திர ஹீரோக்கள் ஸ்டைலில் பளீர் கலர் கார்கோ பேண்ட்டுடன் படம் நெடுக வலம் வந்து நம்மை காப்பாற்றுகிறார் சந்தானம். இவர் இல்லாத இந்த படைப்பை(!) கற்பனை கூட செய்து பார்க்க இயலாது என்பதே Fact u. Fact u. Fact u.
சந்தானத்தின் சரவெடிகள் சில...
* "சிக்சர் அடிக்கற மாதிரி ஓங்கிட்டு டக்குனு ஏன் டொக்கு வச்ச மச்சான்"
* "காதல்ல தோத்தவன் காவி ட்ரஸ் போடாம நேவி ட்ரெஸ்ஸா போடுவான்"
* "ராணுவத்துல உசுர விட்டவனை விட ஆணவத்துல உசுர விட்டவன்தான் அதிகம்"
''ஏண்டா கோபமா இருக்க. சிரியேன்'' என்று சரண்யா கேட்க கோட்டா ஸ்ரீனிவாச ராவ் போல சந்தானம் சிரிக்கும் இடம் செம வாத்யாரே. ''ப்ளைட் கீழ விழற மாதிரி இருந்தா பாராஷூட் தருவோம்'' என ஏர் ஹோஸ்டஸ் சொல்வதற்கு சந்தானத்தின் பதில்: "பாராஷூட்டா. உசுரு போற நேரத்ல எதுக்கு எண்ணைய தர்றீங்க"
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்..ரேஞ்சுக்கு இல்லாவிடினும், முப்பத்தி இரண்டு பற்களில் பதினாறு பற்களையாவது சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள் ஓ.கே.ஓ.கே. குழுவினர்.
ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு தபா பாக்கலாம். ஓக்கே!
.......................................................................
...............................
My other site:
...............................
16 comments:
பாஸ் முதல் படத்துல இருக்குறதுல யாரு ஹீரோ? #டவுட்டு
முடியை வெட்டுய்யா. கண்ணாடி மேலே விழுந்து கண்ணை மறைக்க போகுது. இல்லை பிலாசபிக்கு போட்டியா முடி வளர்க்கும் ஐடியாவா?
//நவரசம் என்ன..ஒற்றை ரசம் கூட சொட்டு சொட்டாகத்தான் ஊற்றுகிறது // அப்படியா?
சிபி மாதிரி வசனமெல்லாம் ரிப்பீட் பன்றீங்கோ. ரைட்டு
மத்த விமர்சகர்கள் பட விமர்சனத்துக்கு போட்டோ போட நெட்டை தான் நாடுவார்கள். தியேட்டரில் போட்டோ பிடிச்சு போடும் ஒரே ப்ளாக் மெட்ராஸ் பவன் தானுங்க
//Prabu Krishna said...
பாஸ் முதல் படத்துல இருக்குறதுல யாரு ஹீரோ? #டவுட்டு//
சந்தேகம் இல்லாம நம்ம மினி தளபதி உதயநிதிதான் ஹீரோ.
//மோகன் குமார் said...
முடியை வெட்டுய்யா. கண்ணாடி மேலே விழுந்து கண்ணை மறைக்க போகுது. இல்லை பிலாசபிக்கு போட்டியா முடி வளர்க்கும் ஐடியாவா?//
இந்த வாரம் இருவரும் தத்தமது வணங்காமுடிகளை இறக்கி வைக்க வாய்ப்புண்டு.
// மோகன் குமார் said...
//நவரசம் என்ன..ஒற்றை ரசம் கூட சொட்டு சொட்டாகத்தான் ஊற்றுகிறது // அப்படியா?
சிபி மாதிரி வசனமெல்லாம் ரிப்பீட் பன்றீங்கோ. ரைட்டு//
சிபிமேனியா தாக்கிடுச்சி..
//மோகன் குமார் said...
மத்த விமர்சகர்கள் பட விமர்சனத்துக்கு போட்டோ போட நெட்டை தான் நாடுவார்கள். தியேட்டரில் போட்டோ பிடிச்சு போடும் ஒரே ப்ளாக் மெட்ராஸ் பவன் தானுங்க//
எல்லாப்புகழும் போஸ்டர்/பேனர் ஒட்டும்/கட்டும் நண்பர்களுக்கே!!
next hero sivakumar vazhka. . . .
//என் ராஜபாட்டை"- ராஜா said...
next hero sivakumar vazhka. .//
ராஜபாட்டை...ஏங்க? இப்பிடி?
எப்படியோ அடுத்த முதல்வர் கூட நின்னு போட்டோ எடுத்துட்டீங்க, நாளை பின்ன பார்த்தா நம்மளையும் கொஞ்சம் ஞாபகம் வெச்சிக்குங்க சார்...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்படியோ அடுத்த முதல்வர் கூட நின்னு போட்டோ எடுத்துட்டீங்க, நாளை பின்ன பார்த்தா நம்மளையும் கொஞ்சம் ஞாபகம் வெச்சிக்குங்க சார்...//
உதயா ஆட்சிக்கு வரட்டும்..மந்திரி பதவி வாங்கிடுவோம்!! யூ வான்ட் விச் துறை??
/! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்படியோ அடுத்த முதல்வர் கூட நின்னு போட்டோ எடுத்துட்டீங்க, நாளை பின்ன பார்த்தா நம்மளையும் கொஞ்சம் ஞாபகம் வெச்சிக்குங்க சார்...//
உதயா ஆட்சிக்கு வரட்டும்..மந்திரி பதவி வாங்கிடுவோம்!! யூ வான்ட் விச் துறை??
///
நமக்கு பொதுப்பணித்துறை...
சொல்லிட்டேன்...
யோஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
சிவா............
அந்த ஹிப்பி தலைய ஏதாவது பண்ணுயா ...........
உன்கூட போட்டோ எடுக்க எல்லாரும் பயப்புட்ரான்கள்ள...???
அது மட்டுமா,...உதயநிதி கூட உன்கூட இருக்கும் போது
அழகா தெரியிறார்....பாரு...
என்னது நாளைய முதல்வரா...?உமக்கு ஒரன்டை ஜாஸ்தியப்பு....
நல்ல விமர்சனம் பாஸ்.. :) படம் எப்படி பார்த்தாலும் பல லாஜிக் ஓட்டையோட இருக்கு... சந்தானம் தான் காப்பாத்துறார்.. படத்த மட்டுமில்ல.. நம்மளையும் :)
Post a Comment