CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, April 12, 2012

நாளை தாயகம் திரும்பும் எங்கள் பருந்தே!!


                                                                 
சென்ற மாதம் நீ ஏறிய விமானம் விருட்டென பாய்ந்தது அயல்நாடு.
அதனால் விக்கித்து நின்றதோ தாய்த்தமிழ்நாடு.

உனது பிரிவால் இனி கே.ஆர்.பி. க்ரூப் தன்னால் எதுவும் முடியாதென
பெருங்குரலெடுத்து கோரஸாக கர்ணகொடூரமாக அழுத நேரத்தில்
கோடானு கோடி சந்ததிகளில் ஒன்று
தன்னை செந்திலானந்தா என்று அறிவித்தது.

'அண்ணனுக்கே டூப்பா..போடா டூமாங்கோலி' என உனது
உடன்பிறப்புகளின் உள்ளங்கால்கள் அவனை ஓங்கி உதைத்தது.
பெரியார், அண்ணா, பகுத்தறிவு, வெங்காயம் போன்ற எழுத்துகள் எல்லாம்
உன்னால் ஒட்டடை அடிக்கப்படாமல் ஏங்கி பதைத்தது.

விளிம்பு நிலை மனிதர் மனமும், தெருவோர நாய்களின் குணமும்
உன்னால் கவி பாடப்படாமல் அல்லோகலப்பட்டது.
நீ இல்லாத நாள்தோறும் ஆத்திகம் அளவில்லா ஆட்டம் போட்டது.


வரப்போகிறாய் நீ என்று ஒரு எச்சரிக்கை விடுத்ததும்
சைத்தான்களும், சைத்தான் கா பச்சாக்களும்
பதுங்கு குழியில் பம்மி மறைந்தன.
                                                                   

'கே.ஆர்.பி. கடல் கடந்து போய் விட்டார். ம்ம்..அடிக்கிற அடியில்
தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்கட்டும்'
என முரசொலியில் கலைஞர் கலந்து கட்டி அடித்தது நேற்று.
நாளை நீ வரப்போகிறாய் எனும் தகவல் கேட்டு
முரசின் ஒலியை முற்றிலும் ம்யூட் செய்து விட்டது அனல் காற்று.

இவ்வார இறுதியில் அடுத்த ஆட்டம்..
மெரீனாவில் ஒரு வட்ட மேசையை சுற்றி
நீர் ராசாவாகவும், நாங்கள் சிப்பாய்களாகவும்..
ஒற்றை டீயை மட்டும் ஆர்டர் செய்துவிட்டு...
மணிக்கணக்காக அந்தக்கடையில் நாம் டீயை ஆத்தோ ஆத்தென ஆத்த
விவாதத்தில் நாங்கள் ஜெயிக்க நீர் தோற்க
நீர் ஜெயிக்க நாங்கள் தோற்க..
கடைக்காரன் கடுகடுவென முறைக்க..ஹய்யோ ஹய்யோ!!


குருவி எனப்பறந்து பருந்தாய் திரும்பி பலகோடி வெள்ளிகளை
வானில் சுமந்து வரும் எங்கள் விடிவெள்ளியே!!
வரும் வெள்ளி மாலை அன்னை பூமியாம் சென்னைக்கு
நீ திரும்பும் நாளை எண்ணி எண்ணி எங்களுக்கு தூக்கம் வர்லியே!!
..........................................................................................

அயல்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு நாளை அன்னை தேசம் திரும்பும் 'யூத் க்ரூப்பின் நிரந்தர பொதுச்செயலாளர்' கே.ஆர்.பி.யே வருக! வருக!!
.......................................................................................

Thanks to Graphics: Veedu Sureshkumar.
  

19 comments:

Unknown said...

இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை அடிவாங்க வைக்கிறது நியாயமா ????

சக்தி கல்வி மையம் said...

எங்கள் தானைத் தலைவர், அண்ணன் கேஆர்பி அவர்களே வருக வருக,,....

அஞ்சா சிங்கம் said...

அப்படி போடு அருவாளை அப்போ இந்த வாரம் ஒரு டீயும் பிங்கர் சிப்சும் கண்டிப்பா இருக்கு
நமக்கு ஒரு சீட்டு போட்டு வையுங்க ........

அஞ்சா சிங்கம் said...

சரி சிவா . கே.ஆர்.பி. கையால் விருது வாங்குறாரே வெள்ளை ஜிப்பா போட்ட ஒருத்தரு அவரு யாருன்னு சொல்லவே இல்லையே ...?

பால கணேஷ் said...

நல்ல வரவேற்பு சிவா...

Yoga.S. said...

வாங்க,கே.ஆர்.பி.Hi!Hi!!!Hi!!!!!

Unknown said...

போஸ்டர் எல்லாம் ஒட்டியாச்சா....?அலங்கார வளைவு வெச்சாச்சா...?
விளி்ம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே அப்படின்னு நியான் லைட் வச்சாச்சா......?

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை அடிவாங்க வைக்கிறது நியாயமா ????//

போர்னா மொத வரிசைல வந்து நின்னது நம்ம பசங்கதேன். திடீர்னு வேல்கம்பு, அருவாளை கீழ போட்டுட்டு வாடான்னா எப்படி வருவான்..!! போற்றிப்பாடடி பொண்ணே..கே.ஆர்.பி.காலடி மண்ணே!!

! சிவகுமார் ! said...

//* வேடந்தாங்கல் - கருன் *! said...
எங்கள் தானைத் தலைவர், அண்ணன் கேஆர்பி அவர்களே வருக வருக,,.//

சீக்கிரம் நீங்களும் பதிவுலகத்துக்கு வாங்க தலைவா..!!

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
அப்படி போடு அருவாளை அப்போ இந்த வாரம் ஒரு டீயும் பிங்கர் சிப்சும் கண்டிப்பா இருக்கு
நமக்கு ஒரு சீட்டு போட்டு வையுங்க .......//

நைட்டு பதினோரு மணி வரைக்கும் ஆறு சீட்டு ஆல்வேஸ் ரிசர்வ்ட்!!

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
சரி சிவா . கே.ஆர்.பி. கையால் விருது வாங்குறாரே வெள்ளை ஜிப்பா போட்ட ஒருத்தரு அவரு யாருன்னு சொல்லவே இல்லையே ...?//

உ.பி.ல. ஊமைக்குத்தா வாங்குன 'கை'ப்புள்ளதான் அது!!

! சிவகுமார் ! said...

//கணேஷ் said...
நல்ல வரவேற்பு சிவா...//

தொண்டர் படையின் பங்கை ஆத்தறோம் சார்.

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
வாங்க,கே.ஆர்.பி.Hi!Hi!!!Hi!!!!!//

அண்ணனின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம்..

! சிவகுமார் ! said...

//வீடு சுரேஸ்குமார் said...
போஸ்டர் எல்லாம் ஒட்டியாச்சா....?அலங்கார வளைவு வெச்சாச்சா...?
விளி்ம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே அப்படின்னு நியான் லைட் வச்சாச்சா......?//

எல்லாம் உங்க கிராபிக்ஸ் மகிமையை நம்பித்தான் இருக்கோம்.

நாய் நக்ஸ் said...

வருக...வருக.....வருக....வருக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவுலகின் பவர்ஸ்டார் அண்ணன் கேஆர்பி அவர்களை வருக வருக என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இவண்,
ஒரிஜினல் பவர்ஸ்டார் பாசறை
கூகிள் ப்ளஸ் மாவட்டம்.

Philosophy Prabhakaran said...

யாருய்யா அந்த செந்திலானந்தா...???

Philosophy Prabhakaran said...

தோழரே... மறுபடி பிம்பிளிக்கி பிளாப்பி பசங்களோட கூட்டு சேர்ந்துட்டீங்களா...???

Yoga.S. said...

காலை வணக்கம் சிவா!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...