CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, April 11, 2012

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு?


நவீன கட்டண கழிப்பறையில் காசு வசூலிக்கும் தலைவர் கவுண்டமணியிடம் கல்தா குடுத்து தப்பித்த இள்ய தள்பதி...குற்றம் நடந்தது என்ன?

                                                                    
"நீ எந்த ஊரு நா எந்த ஊரு..முகவரி தேவை இல்ல"

"எனக்கு கண்டிப்பா உன் முகவரி தேவ. நவீன கட்டண கழிப்பறைல ரெண்டு மாசம் கடன் சொல்லிட்டு ஊரை விட்டு ஓடி இருக்க..படுவா..ஒன்ன விடவே மாட்டேண்டி மாப்ள"

"நீ என்ன உறவு நா என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்ல"

"அதை எதுக்கு எங்கள பாத்து பாடற. சிட்டிசன் வீட்டு வாசல்ல போயி பாடு"

"உன்னை யாரோ பெத்திருக்க..என்னை யாரோ பெத்திருக்க..ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா"

"டாவா? கடவாப்பல்ல புடுங்கி எறிஞ்சிடுவேன் ஜாக்ரத. எங்கப்பன் குதிர மூக்கன் எனக்கு வச்சிட்டு போன ஒன்ற ஏக்கர் ன்லத்துக்காக என்ன அண்ணன்னா கூப்புடுற..ராஸ்கோலு"

"மண்ண நம்பி வேரு. விண்ண நம்பி ஆறு. என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு"

"வேரு, ஆறு, பாரு..ஆஹா. ஆமா இப்படி எழுதுற அந்த புலவருக்கு எவ்ளோ மாப்ள சம்பளம் போட்டு தர்றீங்க?"

"உனக்கொரு பேரு, எனக்கொரு பேரு..ஒன்னு சேந்து பாரு. இந்தியன்னு பேரு"

"ருவுக்கு ரு போட்டே நல்லா ரூவா சம்பாதிக்கரான்யா அந்த கவிஞன்."

"பொறப்பும் இறப்பும் அவன் கையில. நம்ம வாழும் வாழ்க்க நம்ம கையில"

"யம்ம..யம்மா.."

                                                                    
  
"கண்ண பொத்தி வாழு. காதை பொத்தி வாழு. வாய பொத்தி வாழு. நம்ம காந்தி மொழி கேளு"

"எல்லாத்தையும் பொத்தி ஒரு நாள் வாழ்ந்து பாத்தேன்..அப்ப கூட கனவுல நீ கில்லில ஒவ்வொரு கட்டடமா தவ்வி மொளகாப்பொடி தூவுற சீன் வந்து என்ன சிரிக்க வச்சிடுது மாப்ள. காந்தி வடநாட்டு ஆளு..அவர் மொழியை நாங்க எப்படி கேக்கறது..? கைல பேனா இருந்தா என்ன வேண்ணா எழுதறதா.."

"அம்மை அப்பன் தானடா..நம்மை ஆளும் சாமிடா"

"அம்மை ஓக்கே..அது அப்பன் இல்லை..தாத்தன்டா தம்பி"

"கருவறை தோழிடா..நம்ம உயிர்நாடிடா"

"ஸ்டாப் தேர்...தோழிங்கள பத்தி மட்டும் பேசாத. அவங்க நடத்துன நாடகத்த பாத்து கலவரமாகி நானே வயிறு கலங்கி நாலு நாளா கக்கூஸ்ல கெடந்துருக்கேன்..நெக்ஸ்ட் லைன் ப்ளீஸ்"
   
"நீ எந்த ஊரு நா எந்த ஊரு..முகவரி தேவை இல்ல"

"மறுபடியும் பார்ரா..அதையே கேக்கறான்..நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். ரெண்டு பேரும் மைலாப்பூருன்னு. மகனே...பைபோலார் டிஸார்டர் தனுஷ், மலுடிபுள் பெர்சனாலிட்டி டிஸார்டர் விக்ரம் மாதிரி 'நீ எந்த ஊரு நா எந்த ஊரு'ன்னு ஆக்ட் குடுத்துகிட்டே தெருத்தெருவா அலைஞ்சாலும் சரி. உட மாட்டேன்..என்னோட நவீன கழிப்பறைய நாற அடிச்சிட்டு 47 ரூவா கடன் வச்சிட்டு போன உன்ன வண்டலூர் ஜூவுக்கு தந்தி குடுத்து புடிச்சிட்டு போக 
வக்காம தூங்க மாட்டண்டி"
...................................................................................

...............................
விரைவில் அஜீத் - கவுண்டர் கலாட்டாவுடன் மீட் பண்ணுவோம்.
................................
7 comments:

முத்தரசு said...

இன்னைக்கு என்ன ஒரே (ஆங்காங்கே) அப்படாக்கர் கரைச்சலாவே இருக்கே.

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணாடி பவர் எத்துலேய் தம்பி......

MANO நாஞ்சில் மனோ said...

அந்த 47 ரூவா கடன் வச்சிட்டு போன நாதாரி விரைவில் சென்னை வருகிறான் கடத்தி கொண்டு போகவும் அவன் ரப்சர் தாங்கலை, அவன் யாருன்னு ஒரு குளு ச்சே ச்சீ கிளு தாரேன் விக்கிளிக்காஸ் அப்பிடின்னு ஒரு ரம்பம் பிளாக் வச்சிருக்கான் அந்த மூ மூ மூ மூதேவி...

Unknown said...

என்னவோ போங்ன்னா...நா ல்லாம் இதெல்லாம் சீரியஸா எடுத்துகினா எப்பவோ எலி பாஷானம் குடிச்சி இருக்கனும்ல!

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஹிந்தி படிக்க முடியலைன்னு சொன்னா நாங்க தப்பா நினைக்க மாட்டோம் சாமியோ, ஆனாலும் மும்பை ஜூஹு பீச்ல ஒரு பையா'காரன் பேசிய [[புரியாவிட்டாலும்]] பேச்சை அப்பிடியே தமிழ்ல மொழி பெயர்த்து போட்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி....யோவ் அவன் கார்பரேஷன்ல வேலை பாக்குறவன்ய்யா ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணன் கவுண்டமணி டயலாக் எல்லாம் சூப்பர் அண்ணே....!!!

Unknown said...

இங்க என்ன ஒரே சத்தம்! அடடடடடா டெல்லிக்கு வேற போகனும் இவிங்க வேற நச்சுநச்சுன்னு......

Related Posts Plugin for WordPress, Blogger...