CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 29, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (29/04/12)                                                           ஏக் காவ் மே தோ சிங்கம்ஸ் ரஹ தாதா!!

சங்கமம்:
'எடுப்பான எம்.ஜி.ஆர்' அக்கப்போர் ராஜா அழைப்பின் பேரில் தேவி தியேட்டர் அருகே உள்ள மதுரா ரெஸ்டாரண்டில் மதிய உணவு அருந்த வந்திருந்தனர் கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், கும்மி, யுவக்ரிஷ்ணா, அதிஷா, கார்க்கி, அஞ்சாசிங்கம், பிரபாகரன், புரட்சிமணி ஆகியோர். அனைவரையும் சந்தித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் ஆந்திர ஹீரோ போல போட்டோவுக்கு சேட்டைத்தனமான போஸ்களை வாரி வழங்கினார் கேபிள்காருலு. அவருடன் சேர்ந்து எடுத்த மிரள வைக்கும் ஸ்டில்லு மேலே இருக்கண்டி.
....................................................................................

பார்த்தாலே பரவசம்:
பவர்கட், விலைவாசி ஏற்றம், எல்.கே.ஜி.அட்மிஷன் கொடுமைகள் உள்ளிட்ட எல்லா கொடுமைகளுக்கும் நிரந்தர தீர்வு தமிழக மக்களுக்கு இவ்வளவு விரைவாக கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. நித்தியை 'ஆதி - 2' வாக அறிவித்து நம்மை திக்கு (திக்காக) முக்காட வைத்துள்ளார் ஆதீனம் ஆப் மதுரை. இதைக்கேட்டவுடன் செங்குத்தாக சிலிர்த்து நின்றுவிட்ட தலைமுடிகளை ரெண்டு பாட்டில் பாராசூட் எண்ணெய் போட்டு படியவைத்தும் பயனில்லை. தங்கபாலு, டி.ஆர், சிவசங்கர் பாபா, பவர் ஸ்டார் என எப்போதும் காமடிக்கு பஞ்சமே இல்லாத ஆட்களை சீசன் தவறாமல் விண்ணில் இருந்து தமிழ்நாட்டிற்கு சரக் சரக் என்று இறக்கும் இறைவனின் விந்தையே விந்தை. இந்த உன்னத நாளை ஆண்டுதோறும் 'என்னை தாலாட்ட வருவாளா' தினமாக அறிவிக்க வேண்டுமென உக்கிரமாக உத்தரவிடுகிறேன்.
.....................................................................................

நேருக்கு நேர்:
சத்தியம் சேனலில் இன்று காலை நடந்த நேரடி ஒளிபரப்பில் வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. 'இந்தியாவில் கிரிக்கெட் மோகம் எல்லை மீறுகிறதா' எனும் தலைப்பில் பேசினோம். கிரிக்கெட்டிற்கு ஆதரவாக அவரும், எதிர்ப்பாக நானும் பேச இடையே போனில் நேயர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிறைவு செய்ய சில நிமிடங்கள் இருக்கும் முன்பு சட்டென 'நம்ம' நித்தி பதவியேற்பு விழா லைவ் போட ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு சூடேற்றும் டாபிக் அதுதான் என்பதால் 'யூ கண்டின்யூ' என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் இனி வரும் நாட்களில் முறையாக நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு அடுத்ததை தொடருங்கள் என்றோம். மோகன்குமார் அவர்களுடன் மகிழுந்தில் உரையாடியவாறே வீடு திரும்பலானேன்.
.........................................................................................

22  FEMALE KOTTAYAM(Malayalam):
பெங்களூரில் நர்ஸ் வேலை பார்க்கும் கேரளப்பெண் டெஸ்ஸா சிரில் என்பவனை காதலிக்கிறாள். அயல்நாட்டில் வேலைபார்க்க அவளுக்கு உதவுவதாக கூறும் சிரிலின் மறுபக்கத்தை உணர்ந்து அவனையும், பிரதாப் போத்தனையும் எப்படி பழி வாங்குகிறாள் என்பதே கதை. சமீபத்தில் பார்த்த மலையாளப்படங்களை கம்பேர் செய்தால் இது எவ்வளவோ மேல். ரீமா கல்லிங்கல் நடிப்பு பிரமாதம். நாயகி இருவரையும் பழி வாங்கும் காட்சியில் குரூரம் மேலோங்கி நிற்கிறது. ஜஸ்ட் ஓ.கே.படம்தான்
........................................................................................

ஜனா:
அடுத்த ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது. அண்ணா ஹஜாரே, அப்துல் கலாம் - 2 உள்ளிட்ட ஏகப்பட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். இவர்களில் யார் பெயரை தேர்வு செய்தாலும் 'சித்தப்பு. சீட்ட கலச்சி போடுன்னா கலச்சி போடு. உன் ஆசைல தீய வக்க' என்று ஒரு க்ரூப் கிளம்பத்தான் போகிறது. அதனால் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 'கிரிக்கெட் கடவுள்' சச்சினை ஜனாதிபதி ஆக்கினால் மட்டுமே இந்தியா வல்லரசு ஆகும் என்பது எனது தொலை 'நேக்கான' பார்வை. எம்.பி., பாரத ரத்னா வரை அவரை கொண்டு வந்துவிட்ட அரசியல்வாதிகளே...நூற்றுக்கு நூறு அண்ணன் சச்சினுக்கு  இந்தப்பதவியையும் வாங்கித்தருமாறு உங்கள் கால் சுண்டுவிரலை இழுத்து பிடித்து கேட்டுக்கொள்ளும் இந்த நேரத்திலே....சோடா ப்ளீஸ்!! ஆகவே #$%%&^&*$##
.....................................................................................

பிடிச்சிருக்கு:
இந்த வாரம் நான் படித்ததில் பிடித்த பதிவு என்றால் ஆரூர்.முனா. செந்தில் எழுதியதை சொல்லலாம். கிரிக்கெட் குறித்து வந்த பதிவுகளில் வித்யாசமான மற்றும் சுவாரஸ்யமான தொகுப்பாக இருந்த அக்கட்டுரையின் தலைப்பு:

தெருவில் நின்று ஓசியில் டி.வி.பார்க்கும் குழு

என்னதான் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விளையாட்டுகளை சொகுசாக அமர்ந்து பார்த்தாலும், டி.வி. ஷோ ரூம்களுக்கு வெளியே ரசிகர்களுடன் கால் வலியையும் பொருட்படுத்தாமல் டி.வி.பார்ப்பது ஒரு சுகானுபவம்தான். அப்பதிவை நீங்களும் படித்து பாருங்கள்.
......................................................................................

எங்கேயோ கேட்ட குரல்:
சில வருடங்களுக்கு முன்பு பங்கு ஆட்டோக்கள் சிலமுறை விபத்தில் சிக்கி பலர் உயிர் இழந்தவுடன் 'இனிமே ஒரு வண்டில அஞ்சி பேருதான் உக்காரணும். டிரைவர் சீட் கிட்ட இருக்குற சீட்டை தூக்கணும்' என்று சென்னையில் சட்டம் போட்டனர். வழக்கம்போல கொஞ்ச நாளைக்கு சட்டத்தை சாஷ்டாங்கமாக கடைபிடித்துவிட்டு பிறகு மீண்டும் வழக்கம்போல அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிக்கொண்டுதான் உள்ளனர் நம்ம ஊர் மாணிக் பாட்ஷாக்கள். டாட்டா மேஜிக் ஷேர் ஆட்டோவில் ஒரு வரிசையில் மூன்று பேருக்கு மேல் அமர முடியாது. இருந்தாலும் 'அட்ஜஸ்ட் பண்ணி உக்காருங்க' சார் என்று மிரட்டல் கலந்த கொஞ்சலுடன் சவுண்ட் விடுகிறார் பாட்ஷா. பேருந்தில் அமர்ந்து செல்வதே மேல் என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு இருக்கிறது இவர்கள் செய்யும் ரவுசு.
......................................................................................

எதிர்பாராதது:
நாள் தவறாமல் மாலை 4-6 மின்வெட்டை அமல்படுத்தி வந்தனர் எங்கள் ஏரியாவில். நேற்றும் இன்றும் ஒரு நிமிடம் கூட பவர் கட் இல்லாதது கண்டு திகில் அடித்து போயிருக்கிறேன். ஒருவேளை ஒட்டுமொத்தமாக 'மெகா பவர் கட்' செய்வதற்காக ஓரிரு நாட்களுக்கு கரன்ட்டில் கை வைக்காமல் இருக்கிறார்களோ என்று உள்ளத்தில் உருமி சத்தம் கேட்கிறது. தயவு செய்து  இப்படி எல்லாம் இஷ்டத்திற்கு இன்ப அதிர்ச்சி தந்து எங்களை ஆற்றொண்ணா துயரத்தில் ஆழ்த்த வேண்டாம். சீக்கிரம் கட் பண்ணுங்கப்பா!!
........................................................................................

ரத்தத்திலகம்:
'உங்களுக்கெல்லாம் திடீர்னு எங்க இருந்துடா பொத்துக்கிட்டு வருது தமிழ் உணர்வு' என்று எக்கட்சிக்கும் வாழ் பிடிக்காத இணைய நண்பர்களை கண்டு கொப்பளிக்கும் புளியங்கொட்டைகளே (உடன்பிறப்பு ஓல்ட் பேஷன். தலைவர் புளியங்கொம்பு என்றால் 'ஜிங் சாக்' அடிப்போரை எல்லாம்  புளியங்கொட்டைகள் என்று விளிப்பதுதானே லாஜிக்). 'ஈழம் மலராவிடில் தீக்குளிப்பேன்' என்ற சொல்லை உதிர்த்த உங்கள் உன்னத சூரியனை நினைத்தால் வடிவேலின் இந்த நகைச்சுவைதான் அவ்வப்போது மனதில் வந்து போகிறது. நண்பர்கள் ஒரு முறை பாருங்களேன். தமாசின் உச்சம்!!................................................................................

...........................
My other site:
agsivakumar.com
...........................


14 comments:

Unknown said...

அந்த போட்டே பாத்து கிலி அடிச்சி கெடக்குரேன்...

அந்த புளியங்கொம்பு மாகான்களுக்கு என்னத்த சொல்ரது கொய்யால!

CS. Mohan Kumar said...

முதல் படம் பார்த்தோன மிரண்டு போயிட்டேன். கொஞ்ச நேரம் பதிவுக்குள் நகரவே முடியலை :))

பிடித்த பதிவை பகிர்வது நல்ல விஷயம். செய்யுங்கள். நானும் கூட இப்போது தான் இதை செய்ய ஆரம்பித்துள்ளேன்

எனது உங்க ஏரியாவில் சுத்தமா பவர் கட் இல்லையா? கிர்ர்

மைக் பிடிச்சு பேச கூப்பிடுறீங்க. ரெஸ்டாரன்ட் போக கூப்பிட மாட்டேங்குறீங்க? ம்ம் ? (பல முறை துணி துவைக்கணும், செடிக்கு தண்ணி ஊத்தணும் என்று காரணம் சொல்லி வர மாட்டேன் தான். இருந்தாலும் கூபிடாம இருந்தா கஷ்டமா இருக்குள்ள??)

Unknown said...

என்ன சிவா மதிய விருந்துக்கு எனக்கு அழைப்பில்லையே, அழைத்திருந்தால் நண்பர்களையும் சந்தித்து சாப்பாட்டையும் ஒரு கட்டு கட்டியிருப்பேனே.

வவ்வால் said...

போட்டாவ பார்ர்கிறவங்க கண்ணை எதுக்கு குத்துறிங்க? பார்க்கிறவங்க கண்ணையே குத்துதே போட்டா எடுத்தவர் கண்ணு இன்னும் முழுசா அவர் கிட்டே இருக்குமா ?

ரெண்டு பேரும் சேர்ந்து ரெண்டு விரல் காட்டுறிங்க அப்போ இலைக்கட்சிக்காரங்கனு இன்னும் எந்த புளியங்கொட்டையும் சொல்லக்காணோமே :-))
------

தமிழகத்தில் மின் வெட்டுக்குறைய காரணம் நான் எழுதிய பதிவே ,பதிவர்களை அரசும், நிர்வாகமும் கவனிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி (காமெடி அல்ல அக்மார்க் அசல் உண்மை) எனவே அனைவரும் சமூக பொறுப்போடு பதிவு போட்டால் இந்தியா வல்லரசாகிவிடும் என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்

சரித்திர பிரசித்திப்பெற்ற அப்பதிவை நீங்கள் படிப்பதோடு அல்லாமல் அகில உலகமும் படிக்க பரிந்துரைத்தால் பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து சீட்டில் பிகர் உட்காரும் ,தவறினால் பல்லுப்போன பாட்டி உட்காரும் :-))

மின்வெட்டுக்குறையும்

கோவை நேரம் said...

பார்த்துங்க..குழந்தைகளாம் பயப்படுதுல்ல..எடுத்த உடனே இப்படி பூச்சாண்டி காட்டினா எப்படி...

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!நல்ல வேள "பதவியேற்பு"விழா போட்டோ போடாம,இந்த மிரட்டல் போட்டோ போட்டீங்களே?அப்புறம்,மீல்ஸ் எல்லாம் நல்லாருந்திச்சு!!!

Prem S said...

முதல் படம் ஏதோ ஆந்திர பட ஸ்டில்னு நினைச்சேன் முடிய இறக்கிட்டீங்க போல

Unknown said...

புளியங்கொட்டைகள்......ரத்தத்தின்ரத்தங்களுக்கும் இப்படி ஒரு நல்ல பேரு கிடைக்க வேண்டுகிறேன்!

முத்தரசு said...

ஜனா: நடந்தாலும் நடக்கும்.. நேரம்

Unknown said...

//என்ன சிவா மதிய விருந்துக்கு எனக்கு அழைப்பில்லையே, அழைத்திருந்தால் நண்பர்களையும் சந்தித்து சாப்பாட்டையும் ஒரு கட்டு கட்டியிருப்பேனே.//

தம்பி நாங்க போனது உண்மை ஆனா சாப்டலை, எனவே இவ்வார இறுதியில் நான் சாப்பாட்டோடு சந்திப்போம்..

K.S.Muthubalakrishnan said...

Sir , just 3 days before wind starts
so wind power generation on the grid
there will be less power cut in coming days.

K.S.Muthubalakrishnan said...

sir, due to wind power there is less power cut in future it may reduce more.

Ramkumar said...

idhu vallavo unmayana 'ragalai' matrum 'kalakapu' - great pic!

Unknown said...

/// கே.ஆர்.பி.செந்தில் said...

//என்ன சிவா மதிய விருந்துக்கு எனக்கு அழைப்பில்லையே, அழைத்திருந்தால் நண்பர்களையும் சந்தித்து சாப்பாட்டையும் ஒரு கட்டு கட்டியிருப்பேனே.//

தம்பி நாங்க போனது உண்மை ஆனா சாப்டலை, எனவே இவ்வார இறுதியில் நான் சாப்பாட்டோடு சந்திப்போம்.. ///

பரவாயில்லை அண்ணே, வரும் ஞாயிற்றுக்கிழமை என் திருமண நாள், அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...