CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 22, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (22/04/12)மே மாதம்:
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் வரும் மே மாதம் 13 ஆம் தேதி ஞாயிறு மாலை சென்னை 'யூத்' பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது சாமியோ. சென்ற ஆண்டு வெற்றிகரமாக நடந்த முதல் யூத் பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. யூத் என்றால் நாங்கள் வரக்கூடாதா என்று கடந்த முறை கொந்தளித்த (வயதில்) சீனியர் பதிவர்களுக்கு மீண்டும் ஓர் விளக்கம். மனதளவில் யூத்தான எல்லோரும் சங்கமிக்கவே இந்த நிகழ்வு. நீங்க இல்லாமலா? புதிய/இளம் பதிவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் நோக்கம் ஒன்றை பிரதானமாக கொண்டு இந்த சந்திப்பு நிகழ்ந்து வருகிறது பெருமக்களே.

இதற்கான விரிவான அறிவிப்பு goundamanifans.blogspot.in தளத்தில் சீக்கிரம் வெளியாகும்.
................................................................................

கோழி கூவுது:

                                                          
அண்ணா நகர் KFC சிக்கன் கடை(!) உள்ளே முதல் கஸ்டமர்களாக கோழி கூவும் முன்பே நான், நேற்றோடு 'முடியிழந்த கவரிமான்' பிலாசபி, தொழிலதிபர் அஞ்சாசிங்கம், 'ஆளும்கட்சியின் வைட்டான கை' வியட்நாம் விக்கி ஆகியோர் சென்ற வாரம் விஜயம் செய்தோம். எந்த வெரைட்டி கோழிய எப்படி அமுக்கலாம் என்று சுவற்றில் இருந்த மெனுவை பார்த்தால்..நீங்களே பாருங்களேன்!!
..............................................................................

COBRA:
மம்முட்டியை ஸ்க்ரீனில் பார்த்து வருடங்கள் பல ஆனதால் நண்பருடன் 'கோப்ரா'விற்கு சென்றேன். கோட்டயம் பிரதர்ஸ்..சுருக்கமாக கோப்ரா. மம்முட்டியின் பிரதராக லால். மோகன்லால் இல்லை. 'மருதமலை'யில் வரும்  தாடி வைத்த வில்லன். இவர்தான் இதன் இயக்குனரும். சலீமும் நடித்து இருக்கிறார். முதலில் இருந்து க்ளைமாக்ஸ் வரை காமடி எனும் லேக்கியத்தை ஒளித்து வைத்து உசுரை வாங்கினர். யப்பா சாமி. தாங்கலை. இருவரும் மாறி மாறி 'ப்ரதரே' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மலையாள சினிமாவை யாரு காப்பாத்த போறாங்களோ. பாவம்.

................................................................

வாழ்த்துகள்:


                                                                         
எதேச்சையாக இன்று காலை 'பொதிகை' பக்கம் ரிமோட்டை அழுத்தியபோது 'நான் ஈ' படம் குறித்து கேபிள் சங்கர் எனும் பச்சிளம் பதிவர் பேசியதை காண நேர்ந்தது. இந்த வருடம் இயக்குனர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதால் அட்வான்ஸ் வாழ்த்துகள் டு எவர் யூத் கேபிள்.
.............................................................................

எதிரும் புதிரும்:
சட்டசபையில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க. அறையை சிறியதாக சுருக்கி விட்டது அரசு. ஒரு முன்னறிவிப்பாவது செய்து இருக்கலாம். அரசியல் நாகரீகத்திற்கு பெயர் 'போனது' தமிழகம் என்று சொல்லித்தெரிய வேண்டாம். ஆனால் அதற்காக இப்படி செய்வதெல்லாம் ரசிக்கும்படி இல்லை. இதற்கு முன்பு கூட மேடமை சந்திக்க சென்ற கூட்டணி தலைவர்களுக்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை என்று செய்தி வந்தது. தெரியாமல் நடந்த செயல் என்று சொல்லலாம். ஆனால் அதுவே தொடர்கதையானால் இழப்பு மற்றவர்களுக்கு அல்ல. தங்களுக்குதான் என்பதை மேடம் உணர்ந்தால் சரி.
................................................................................

அரங்கேற்றம்:

வருடா வருடம் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நடத்தும் கோடை நாடக விழா இன்று தொடங்குகிறது. பல்வேறு புதிய நாடகங்களின் அரங்கேற்றம் நடப்பது இந்த விழாவின் சிறப்பம்சம். சென்னை நாரத கான சபாதான் லொக்கேஷன். நாடக ரசிகர்கள் மேலும் விவரம் அறிய க்ளிக் செய்க:


சென்ற ஞாயிறு அன்று எஸ்.வே.சேகரின் 'எல்லாரும் வாங்க' நாடகம் பார்த்தேன். சுமாராக இருந்தது. கல்யாணம் செய்தோருக்கு மட்டுமே வீடு தரப்படும் என ஓனர் கண்டிஷன் போடுகின்றனர். அவர்களின் பெண்ணான சீதாவை காதலிக்கிறார் சேகர். சரசம்மா எனும் தெலுங்கு பேசும் பெண்ணாக சீதாவையே நடிக்க வைத்து வாடகை வீட்டில் நுழைகிறார். சீரியஸ் வசனம் பேசும் இடங்களில் கூட சேகர் அடிக்கும் கமண்டை பார்த்து மேடையிலேயே அந்த நடிகை சில முறை சிரித்து விட்டார். ஆடியன்சும் அதை ரசித்தனர். என்னதான் தியேட்டரில் படம் பார்த்தாலும் நேரடியாக மேடை நாடகம் பார்ப்பது தனி இன்பம்தான். நேரம் கிடைத்தால் பாருங்கள் நீங்களும்.
.....................................................................................

மெரீனா:
                                                           Cinematography: madrasbhavan owner
         பிலாசபி, அஞ்சாசிங்கத்தை வெறிகொண்டு தாக்கும் சிராஜுதீன், கே.ஆர்.பி., ரஹீம் கஸாலி        

சில நாட்களுக்கு முன்பு நடந்த மினி மீட்டில் வழக்கம்போல் கீரியும், பாம்புமாக சிராஜும் அஞ்சாசிங்கமும் சட்டையை கிழித்து கொண்டனர். சிங்கத்தின் ஆட்டம் ஜாஸ்தியாக இருந்ததால் மண்டை காய்ந்து வெறியான சிராஜை பார்க்க பாவமாக இருந்தது. சிங்கத்திற்கு கே.ஆர்.பி. மகுடி ஊத, சிராஜுக்கு நானும், கஸாலியும் சாம்பராணி போட..ஏக கலவரம்தான். இத்தனை அமளி துமளிக்கு மத்தியிலும் பிசாசபி பயபுள்ள தன் நீண்ட கூந்தலை ஸ்ட்ரா ஆக பயன்படுத்தி டீயை உறிஞ்ச முயற்சித்த கண்கொள்ளா காட்சி கீழே:

                                                                     
.........................................................................................

சிரித்து வாழ வேண்டும்:
சமீபத்தில் நான் ரசித்த பின்னூட்டம் என்றால் அது சிரிப்பு போலீஸ் வலைப்பூவில் பன்னிக்குட்டியார் இட்ட மடலை சொல்லலாம். செம தமாசுங்கோ. அதற்கான லிங்க்:


...........................................................................

பெண்சிங்கம்:
தமிழ்த்திரை வரலாற்றில் சிறப்பாக வசனம் பேசிய 'கலைஞர்'கள் பட்டியலில் விஜயகுமாரியின் பெயர் இல்லாமலா? பூம்புகார் படத்தில் கண்ணகியாக வேடம் தரித்து உணர்ச்சி பொங்க பேசும் இந்த நடிப்பை அடித்து கொள்ள இதுவரை ஒரு நடிகையும் தோன்றவில்லை என்பதில் சந்தேகம் இல்லைதான்.  

..................................................................................


.............................
My other site:
agsivakumar.com
............................

......................................................
சமீபத்தில் எழுதியது:

'நவீன கர்ணன்' அப்துல்லா பாசறை துவக்க விழா
.......................................................


28 comments:

முத்தரசு said...

மீல்ஸ் நன்னா இருக்கு

Unknown said...

யூத் பதிவர் சந்திப்புக்கு புளியோதரை கட்டி நம் சேனைகளை தாயார் நிலையில் வையுங்கள் அமைச்சரே......!

யோவ் புளியோதரை சைட் டிஸ்க்கு ஊறுகாய் சொல்லிவிட்டீரா.....

நாய் நக்ஸ் said...

Vazhthukkal......
Siva....

Meendum....santhippom....

சதீஷ் மாஸ் said...

Present Sir....

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!மீல்ஸ் நல்லா(சுமாரா)இருந்திச்சு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிறைவானதாக இருந்துது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்புறம் இந்த ஆண்டு யூத் பதிவர் கூட்டமும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்...

ஹாலிவுட்ரசிகன் said...

//'முடியிழந்த கவரிமான்' பிலாசபி//

இது நல்லாயிருக்கே ... ஆனா கவரிமான் ஒரு மயிரு போனாலும் ஏதோ பண்ணுமாமே? அவசரப்பட்டு பட்டம் கொடுத்திட்டீங்களோ?

ஹாலிவுட்ரசிகன் said...

//'பொதிகை' பக்கம் ரிமோட்டை அழுத்தியபோது 'நான் ஈ' படம் குறித்து கேபிள் சங்கர் எனும் பச்சிளம் பதிவர் பேசியதை காண நேர்ந்தது.//

டீவியெல்லாம் இப்போ பதிவர்களை குறிவைக்குது போல. இன்னிக்கிரவு கலைஞர் செய்திகளில் ஜாக்கி பேசப் போறாராமே?

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி

வைகை said...

என்னை போல குழந்தை பதிவர்களுக்கும் ஏதாவது சந்திப்பு ஏற்பாடு பண்ணினால் நன்றாக இருக்கும், மறக்காமல் சந்திப்பின் பொது உட்வாஸ் கிரேப் வாட்டர் இருக்க வேண்டும் :-)

Unknown said...

பிலாசபி முடியே ஸ்ட்ரா மாதிரின்னா ஆ ஆ ஆ :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சமீபத்தில் நான் ரசித்த பின்னூட்டம் என்றால் அது சிரிப்பு போலீஸ் வலைப்பூவில் பன்னிக்குட்டியார் இட்ட மடலை சொல்லலாம். செம தமாசுங்கோ. அதற்கான லிங்க்:
முக்கிய பதிவு//

யோவ் ஏன் இந்த வில்லத்தனம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

என்னை போல குழந்தை பதிவர்களுக்கும் ஏதாவது சந்திப்பு ஏற்பாடு பண்ணினால் நன்றாக இருக்கும், மறக்காமல் சந்திப்பின் பொது உட்வாஸ் கிரேப் வாட்டர் இருக்க வேண்டும் :-)//

ராஸ்கல் தப்புத்தப்பாவாடைப் பண்றது. அது இப்படி வரணும் "என்னை போல குழந்தை கொடுக்கும் பதிவர்களுக்கும் ஏதாவது சந்திப்பு ஏற்பாடு பண்ணினால் நன்றாக இருக்கும்"

! சிவகுமார் ! said...

//மனசாட்சி™ said...
மீல்ஸ் நன்னா இருக்கு//

நன்றிங்கோ

! சிவகுமார் ! said...

//வீடு சுரேஸ்குமார் said...
யூத் பதிவர் சந்திப்புக்கு புளியோதரை கட்டி நம் சேனைகளை தாயார் நிலையில் வையுங்கள் அமைச்சரே......!

யோவ் புளியோதரை சைட் டிஸ்க்கு ஊறுகாய் சொல்லிவிட்டீரா.....//

என்னது சேனைகளை 'தாயார்' நிலையில் வைக்கணுமா? ஊர்ல வெயில் ஜாஸ்தியா?

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
Vazhthukkal......
Siva....

Meendum....santhippom....//

கண்டிப்பா அண்ணே!!

! சிவகுமார் ! said...

//சதீஷ் மாஸ் said...
Present Sir....//

வாங்க யூத்

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
வணக்கம் சிவா சார்!மீல்ஸ் நல்லா(சுமாரா)இருந்திச்சு!//

நல்ல தெளிவான பின்னூட்டம்..:))

! சிவகுமார் ! said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...
அப்புறம் இந்த ஆண்டு யூத் பதிவர் கூட்டமும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்...//

நன்றி சௌந்தர்!!

! சிவகுமார் ! said...

//ஹாலிவுட்ரசிகன் said...
//'முடியிழந்த கவரிமான்' பிலாசபி//

இது நல்லாயிருக்கே ... ஆனா கவரிமான் ஒரு மயிரு போனாலும் ஏதோ பண்ணுமாமே? அவசரப்பட்டு பட்டம் கொடுத்திட்டீங்களோ?//

ஏதோ பண்ணுமா?

! சிவகுமார் ! said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஹி ஹி ஹி//

கோல்கேட் மாடலா சேந்து இருக்கீங்களா தலைவா?

! சிவகுமார் ! said...

//வைகை said...
என்னை போல குழந்தை பதிவர்களுக்கும் ஏதாவது சந்திப்பு ஏற்பாடு பண்ணினால் நன்றாக இருக்கும், மறக்காமல் சந்திப்பின் பொது உட்வாஸ் கிரேப் வாட்டர் இருக்க வேண்டும் :-)//

ரமேஷ் சொன்ன மாதிரி எந்த வயசுல என்னா பேச்சு!!

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
பிலாசபி முடியே ஸ்ட்ரா மாதிரின்னா ஆ ஆ ஆ :-)//

என்னய்யா ஆளாளுக்கு எசகு பெசகா கமன்ட் போட்டுட்டே இருக்கீங்க!!

! சிவகுமார் ! said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சமீபத்தில் நான் ரசித்த பின்னூட்டம் என்றால் அது சிரிப்பு போலீஸ் வலைப்பூவில் பன்னிக்குட்டியார் இட்ட மடலை சொல்லலாம். செம தமாசுங்கோ. அதற்கான லிங்க்:
முக்கிய பதிவு//

யோவ் ஏன் இந்த வில்லத்தனம்?//

ஒத்த வரில பதிவு போட்டத விடவா?

! சிவகுமார் ! said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

என்னை போல குழந்தை பதிவர்களுக்கும் ஏதாவது சந்திப்பு ஏற்பாடு பண்ணினால் நன்றாக இருக்கும், மறக்காமல் சந்திப்பின் பொது உட்வாஸ் கிரேப் வாட்டர் இருக்க வேண்டும் :-)//

ராஸ்கல் தப்புத்தப்பாவாடைப் பண்றது. அது இப்படி வரணும் "என்னை போல குழந்தை கொடுக்கும் பதிவர்களுக்கும் ஏதாவது சந்திப்பு ஏற்பாடு பண்ணினால் நன்றாக இருக்கும்"//

இந்த பதிவுல கமன்ட் போட்ட எல்லாரும் முருங்கக்கா ஜூஸ் குடிக்கற க்ரூப் மாதிரியே இருக்கே...எடோ கோபி!

krishy said...

நண்பரே,

உங்களது இந்த நல்ல பதிவை
எங்களது செய்தி தாள் வடிவமைப்பில் ஆன தமிழ்.DailyLib இணைத்து உள்ளேன்

பார்க்க
தமிழ்.DailyLib

Hope we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ்.DailyLib

சிராஜ் said...

யோவ் சிவா..

இது ஓவரா தெரியல..நான் முழி பிதுங்கி நின்றேனா???
சீக்கிரம் கிளம்புங்க... ப்ளீஸ் சீக்கிரம் கிளம்புங்க...அப்படின்னு மெசேஜ் மெசேஜ் ஆ அடிச்ச உம்ம என்ன சொல்றது ஓய்?????

Related Posts Plugin for WordPress, Blogger...