CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, April 14, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(15/04/12)


அன்னையின் ஆணை:
                                                 

சில நாட்களுக்கு முன்பு மெரீனா சென்றிருக்கையில் காந்தி சிலை அருகே இசை மழை பெய்வதைக்கண்டேன். வெள்ளுடை தரித்த நபர்கள் சிலர் வாத்தியங்களை வாசித்துக்கொண்டிருக்க அருகில் 'கிரேட்டர் சென்னை போலீஸ் பேண்ட்' எனும் வாசகம் இருந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த போலீஸ் ஒருவரிடம் விசாரித்தபோது "இந்த காவலர் அணி பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் மாலை நேரம் மக்களை இசையால் மகிழ்விக்குமாறு முதல்வர் சொன்னதன்பேரில் இதை நடத்தி வருகிறோம்" என்றார்.

ஒருவேளை பிரிட்டிஷ் காலத்து இசையாக இருக்குமோ எனும் ஆர்வத்தில் கூர்ந்து கேட்டபோது முதலில் ஒலித்த பாடல்: 'அடிடா அவன. ஒதடா அவன'. பலே. அடுத்த பாடல்: 'பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த'..வாத்தியார் ஹிட்ஸ். அம்மா ஆட்சில மக்களுக்கு இந்த மாதிரி எத்தனையோ நல்லது நடக்குது..நீங்க என்னடான்னா குத்தம் சொல்லிக்கிட்டு. கெளம்புங்க மெரீனாவுக்கு.
.................................................................................... 

அட்டகாசம்:
முன்பிருந்ததைப்போல் இப்போதெல்லாம் பெரிதாக நகைச்சுவை நிகழ்ச்சிகள் தமிழ் சேனல்களில் வருவதில்லை என்பது ஒரு குறைதான். ஆதித்யா சேனலில் அதை ஈடுகட்டும் வண்ணம் வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் இமான் அவர்கள் நடத்தும் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க'. விதவிதமான கேள்விகளை அவர் மக்களிடம் எழுப்பும் விதமும், அதற்கு கிடைக்கும் அதிரடி பதில்களும் ஜாலி பட்டாசுகள். சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்ச்சி. சாம்பிள் காணொளி பார்க்க:.....................................................................................

மதராசப்பட்டினம்:

இழுத்துக்கொண்டு வா - 'இன்னாபா இது? இப்டி  ஒம்போது  வார்த்த போட்டு இழுத்து பேசுனா எக்கச்சக்க நேரம் நாஸ்தி ஆவுமே' என்பதை உணர்ந்த எங்க ஊரு வாத்யார் ஒருவன் அதை கஷ்டப்பட்டு சுருக்கி செதுக்கினான் எட்டு வார்த்தைகளாக:


இழுத்துக்குனு வா - 'இல்ல மாமு. இன்னும் ஸ்டைலா யோசி' என திக்கெட்டும்  கூக்குரல் கேட்டதால் அடுத்த வார்த்தை உதயமானது.

இஸ்த்துக்குனு வா, வல்ச்சிக்கினு வா - 'ஸ்டைலா இருந்தாலும் நீளம் தாஸ்தியா கீதே?' மீண்டும் ஒரு சலசலப்பு. ஆங்..இது எப்படி இருக்கு.

ஈத்துக்குனு வா, இட்டுக்குனு வா - 'இதெல்லாம் வேலைக்கே ஆவாது. இன்னும் நசுக்கு மாமே' என்றான் ஒருவன்.

இட்னு வா - 'இட்னு வாவா...இதுக்கு மேல கொறைக்க முடியாதா நைனா?' என்று அடுத்த அலறல்.

பயங்கர ப்ரஷரில் இருந்த அண்ணாத்த பல வருட சிந்தனைக்கு பின் கண்டே பிடித்து விட்டான் அந்த வார்த்தைகளை. அவை பின்வருமாறு:

இட்டா, வல்ச்சா - சும்மாவா சொன்னாங்க. விடாமுயற்சி. விஷால் ரூப வெற்றி!!!
...............................................................................

சுமைதாங்கி:
மின்வெட்டு பிரச்னையால் அதிகம் மெர்சலாகி கிடப்பது சென்னைதான். தமிழகத்தின் பிற இடங்களில் பல மணிநேர பவர் கட்டால் ஏகப்பட்ட அமவுன்டை சேமித்து குறைந்த மின் கட்டணமே செலுத்துகிறார்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆனால் ஜஸ்ட் 2 ஹவர்ஸ் மட்டுமே கரண்ட் போவதால் பலமடங்கு பில் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சென்னைவாசிகள். அரசுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என்ன பாவம் செய்தோம் நாங்கள்?
................................................................................

தொட்டுப்பார்:
தொடர்ந்து ஊரெங்கும் போலீஸ் தேடத்தேட, அவர்கள் கையில் சிக்காமல் நம்ம சிங்கக்குட்டி ஜே.கே.ரித்தீஷ் ஓட ஓட..என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு என்றெண்ணி ரத்தம் கொதித்த கோடானு கோடி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது நீதிமன்றம். 'வீரத்தளபதி' ரித்தீசுக்கு ஜாமீன் கிடச்சிருச்சிங்கோ!! பத்திரிகை பேட்டி அளித்த அண்ணன் சொன்னது: "என் மீது பொய்யாக கடத்தல் வழக்கு போட்டுள்ளனர். அதனால் மிகவும் மனம் நொந்தே போனேன்".

எங்க தலைவன தம்மாதூண்டு டம்ளருக்குள்ள வச்சே கிட்னாப் செஞ்சிடலாம். அவர் இன்னொரு ஆளை கடத்தறாரா? யாரை ஏமாத்த பாக்கறீங்க? பீ கேர்புல். (எங்களச்சொன்னோம்).
.....................................................................................

ஆடுபுலி ஆட்டம்:
இவ்வாண்டு நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றது சந்தோசமான செய்தி எனினும் அதில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாதது பெருங்கொடுமை. வடக்கத்தி ஆட்களால் பல துறைகளில் ஓரம் கட்டப்படும் தமிழனுக்கு பத்தோட பதினொண்ணு. அத்தோட இது ஒண்ணு. இறுதியாக ஒரு தரம் லியாண்டர் பெயசுடன் ஜோடி சேர்ந்து ஒலிம்பிக் தங்கம் வெல்வார் மகேஷ் பூபதி என எதிர்பார்த்தால் அதற்கும் வாய்ப்பில்லை போல. 'பெயசை விட ரோகன் போபண்ணாவுடன் சேர்ந்து ஆடுவதே எனக்கு சரிப்பட்டு வரும்' என்று சொல்லிவிட்டார் 'ஆல் கோர்ட்' பூபதி.
.................................................................................

எதிரும், புதிரும்:

சித்திரை ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்று மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறிவிட்டார் மேடம். அந்த நாளை நீங்களும், கலைஞரும் எத்தனை முறை வேணும்னாலும் மாத்திக்கங்க. நாங்க வழக்கம்போல 'விஷ் யு எ ஹாப்பி டமில் நியூ இயர்' அப்படின்னுதான் எஸ்.எம்.எஸ்.அனுப்புவோம். ஏன்னா எல்லாத்தையும் தமிழ்லயே பேசிட முடியாது. தட் இஸ் பராக்டிகல்லி நாட் பாசிபிள்.


For Example cycle is invented by the foreign people only. Wheel, bell, pedal, handlebar...
..................................................................................

புதுப்புது அர்த்தங்கள்:
படிக்கும் பதிவுகளில் சில என்றும் மனதில் நிற்கும் வண்ணம் இருக்கும். அதைப்படித்து விட்டு ஓரிரு வரி கருத்துகளை சொல்லிவிட்டு கடந்து விடுவோம். பதிவுகளை விட இப்போதெல்லாம் பின்னூட்டங்களில் காரசாரமான, மிகவும் 'அத்யாவசியமான' கருத்து மோதல்களுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் மதப்பிரச்சனை என்றால் பிரளயம்தான் போங்க. வெகு அரிதாகத்தான் பின்னூட்டங்கள் பதிவைத்தாண்டி நம்மை ரசிக்க வைக்கும். அப்படி ஒரு பின்னூட்டத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியதெனக்கு. சமீபத்தில் த்ரீ படத்தை மையமாக வைத்து உண்மைத்தமிழன் அவர்கள் எழுதிய பதிவும், அதற்கு சில்ட் பியர்ஸ் இட்ட கருத்தும் பதிவுலக வரலாற்றில் ஒரு மைல் கல் என்பது என் கருத்து. அதற்கான லிங்க் கீழே. படிக்காத நண்பர்கள் படித்துப்பாருங்கள்.

3 படக்கதை - என் வாழ்விலும் ஒரு சோகம்..!
............................................................................................

அவள் அப்படித்தான்:                                                                      

மலையாள நடிகர் திலீப் பெண் வேடத்தில் நடித்த 'மாயமோகினி' படம்தான் இப்போதைக்கு அங்கே டால்க் ஆப் தி டவுன். நீங்களும் அவரை ஒரு ரொமாண்டிக் லுக் விடுங்க:


..............................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................

.............................................
சமீபத்தில் எழுதியது:


............................................10 comments:

Yoga.S. said...

நீங்களும் அவரை ஒரு ரொமாண்டிக் லுக் விடுங்க!///ஏய்யா இந்தக் கொலவெறி?????

இராஜராஜேஸ்வரி said...

த்ரீ படத்தை மையமாக வைத்து உண்மைத்தமிழன் அவர்கள் எழுதிய பதிவும், அதற்கு சில்ட் பியர்ஸ் இட்ட கருத்தும் பதிவுலக வரலாற்றில் ஒரு மைல் கல் ..

nice..

Unknown said...

யப்பா! உண்மைதமிழன் போஸ்ட் ஏற்கனவே பெரிசா இருக்கும் இப்ப கமெண்டும் ரொம்ம பெரிசா இருக்கு.....விசயம் இருக்கு சிந்திக்க வேண்டிய வாசகங்கள்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேவேவ்வே....... ஒண்ணுமில்ல ரொமாண்ட்டிக் லுக்கு விட்டுப்பார்த்தேன்.........

முத்தரசு said...

மீல்ஸ்......ம் ரவுண்டு கட்டி அடிச்சிரீகிக்க..


யோவ் நீர் கொடுத்து லிங்க் பார்த்தேன் படிச்சேன் ம்...ம்.. உண்மைதான்

kanagu said...

/*'வீரத்தளபதி' ரித்தீசுக்கு ஜாமீன் கிடச்சிருச்சிங்கோ!! பத்திரிகை பேட்டி அளித்த அண்ணன் சொன்னது: "என் மீது பொய்யாக கடத்தல் வழக்கு போட்டுள்ளனர். அதனால் மிகவும் மனம் நொந்தே போனேன்".

எங்க தலைவன தம்மாதூண்டு டம்ளருக்குள்ள வச்சே கிட்னாப் செஞ்சிடலாம். அவர் இன்னொரு ஆளை கடத்தறாரா? யாரை ஏமாத்த பாக்கறீங்க? பீ கேர்புல்.*/

நேத்து தான் பாண்டி பஜார்-ல அவர பாத்தேன். போலீஸ் தேடிகிட்டு இருக்கும் போது தலைவர் எப்படி இப்படி நடமாடுறார்-னு யோசிச்சேன். நம்ம நாட்டுல நீதி செத்து போச்சோ-னு நினைச்சேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு ;)

சிராஜ் said...

சிவா,

மீல்ஸ் நல்லாவே இருக்கு. இருந்தாலும் நம்ம வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்ப பற்றியும் போட்டு இருக்கலாம்.

சிராஜ் said...

ஹாக்கி லாம் இனி தேறாது...பேசாமா கிரிக்கெட்ட நேஷனல் கேமா அறிவிச்சு ஹாக்கி ய அவமானபடுத்திறது நிறுத்திடலாம்...

பால கணேஷ் said...

ஸ்பெஷல் மீல்ஸ ரொம்பவே டேஸ்டா இருக்குய்யா. அதும் ரெண்டு மணி நேரம் கரண்ட் கட்டாகறதால சென்னை வாசிகளோட பாதிப்பைச் சொன்னதும், தமிழ்ப் புத்தாண்டைப் பத்திச் சொன்னதும்... எக்ஸ்ட்ரார்டினரி! சூப்பர்!

kanagu said...

தல.. எங்க போய்ட்டீங்க??? அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...