CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, April 9, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (09/04/12)


மாத்தி யோசி:


பேருந்திற்காக காத்திருக்கையில் சரக்கு வாகனம் ஒன்றில் தென்பட்ட வாசகம்: 'என்னை கவனி சார்'.
...................................................................................


அவர்கள்: 
மின்கட்டண உயர்வை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் சைதை பனகல் மாளிகை. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாற்றுப்பாதையில் சென்று ஏக டென்ஷனுக்கு ஆளாகும் பொதுமக்களுக்கு தி.மு.க. செய்யும் எக்ஸ்ட்ரா தொண்டு. மின்வெட்டுக்கு மிகமுக்கிய காரணம் என்ன என்பதற்கு ஸ்டாலின் சொன்னார் பாருங்கள் ஒரு விளக்கம்..அங்க வெறப்பா நிக்குது தமிழக அரசியலோட ஜீவநாடி..''எங்கள் ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம்(!). ஆனால் அதற்கு காரணம் எங்களுக்கு முன்பு இருந்த  அ.தி.மு.க. அரசுதான். அவர்கள் மின்திட்டத்தை சரியாக போடாததே இதெற்கெல்லாம் முழு முதற்காரணம்"...
..................................................................................

டைட்டானிக்:
அவதாருக்கு பின்பு வந்த பெரும்பாலான 3D படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் இருந்து அதிகம் காசு பிடுங்கியதை தவிர பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் ஜேம்ஸ் கமேரூன் டைட்டானிக்கை 3D யில் நன்றாக உருவாக்கி இருப்பார் எனும் நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எங்குமே அந்த சிறப்பு எபெக்ட் இல்லை. 'போதும் சாமி உங்க ஏமாத்து வேலை' எனும் மனநிலைக்கு படம் பார்ப்பவர்கள் வந்துவிட்டனர் என்பதே உண்மை.
...................................................................................

அன்னமிட்ட கை:

                                                                      
தி.நகர் கிரி ரோட்டில் உள்ளது மதுரை அம்மா ரெஸ்டாரன்ட்(ஓனர் காந்தி அழகிரி?). உள்ளே எங்கெங்கு காணினும் ப்ரேம் செய்யப்பட்ட கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர். படங்கள். இடைவிடமால் ஒலிக்கின்றன அவரது பாடல்கள். விசாரித்ததில் முதலாளி புரட்சித்தலைவரின் தீவிர ரசிகராம். தூக்கலாக உப்பு சேர்க்கப்பட்ட பிரியாணி சுமார்தான். சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு  வந்து பார்த்தால் மிச்சம் வைத்த உணவை மடக்கிய இலையின் மீதே ஊழியர்கள் வைத்து இருந்தது முகம் சுளிக்க வைத்தது. லெமன் சால்ட் சோடா கேட்டதற்கு மிகப்புளிப்பான ஒரு திரவத்தை பேப்பர் கப்பில் தந்து வெறுப்பேற்றினர். மறுமுறை செல்வதற்கான வாய்ப்பு குறைவுதான்.
...............................................................................

வெளுத்துக்கட்டு:
ட்ரை க்ளீனிங் எனும் வார்த்தைக்கு சரியான தமிழ்ச்சொல் எதுவென நாம் தமிழராகிய' நமக்கு ஒரு தெளிவின்மை இல்லாமல் இருப்பது இயற்கையே. எப்படியோ அந்த கேள்விக்கான விடையை சமீபத்தில் சாலையோர கடை ஒன்றில் இருந்த பலகையில் கண்டேன்....'உலர் வெளுப்பகம்'.
............................................................................

நாட்டாமை:  
கர்நாடகா, குஜராத் மாநில சட்டசபைகளில் எம்.எல்.ஏ.க்கள் எசகுபிசகான வீடியோக்களை பார்த்து வம்பில் மாட்டிக்கொண்டதன் விளைவு இங்கேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் மொபைல் போனுடன் வரக்கூடாது என சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவு போட்டு விட்டார். வாசலில் இருக்கும் லாக்கரில் தத்தமது செல்களை ஒப்படைத்து விட்டுதான் உள்ளே நுழைய வேண்டுமாம். ஜனநாயகத்தி குரல் வளையை நெறிப்பதற்கு ஒரு அளவே இல்லையா? அதுவும் ரதிநிர்வேதம் ரிலீஸ் ஆகும் நேரம் பார்த்து...சோ சாட் மிஸ்டர் சபா.
.................................................................................

படித்தால் மட்டும் போதுமா:
மெட்ரிக் பள்ளியில் படிக்கும் தங்கள் நண்பன் மோசடி செய்து தேர்வில் வெற்றி பெறுவதை தடுத்த முகேஷ் குமார் எனும் ஆசிரியர் மீது காரேற்றி கொன்றுள்ளனர் இரண்டு இளைஞர்கள். ஹரியானாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது இந்நிகழ்வு. ஆசிரியை கொல்லுதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவே இந்தியாவில் மாறிவிடும் காலம் தூரத்தில் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன இம்மாதிரியான தொடர் நிகழ்வுகள்.
...................................................................................

வாங்க பார்ட்னர் வாங்க:
"வைகோவும், சீமானும் காகிதப்புலிகள். காங்கிரஸ் நம்மை அழித்து விடும் எனும் பயம் சிங்களவனுக்கு இருக்கிறது" என வீராவேசமாக திருச்சி காங்கிரஸ் கூட்டத்தில் உறுமி இருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். எனக்கென்னவோ சிரிப்பொலி சேனலை அண்ணனிடம் ஒரு மாதம் ஒப்படைத்தால் டி.ஆர்.பி. பிச்சிக்கும் என்று தோன்றுகிறது. எப்படிண்ணே..நீங்க இப்படித்தான் எப்பவுமேவா..இல்ல எப்பவுமே இப்படித்தானா?
.................................................................................

எங்க ஊரு பாட்டுக்காரன்:
அனல் வெயிலுக்கு இதமான பன்னீர் சோடாவாக கானா உலகநாதனின் 'டமுக்கு போட்டு' பாடலை கேட்டு மகிழுங்கள்..
...........................................................................


..........................
My other site:
agsivakumar.com
...........................

.................................................
சமீபத்தில் எழுதியது:

ஒய்.ஜி.மகேந்திரனின் 'நாடகம்'
.................................................


                                                                  

17 comments:

வெளங்காதவன்™ said...

/"வைகோவும், சீமானும் காகிதப்புலிகள். காங்கிரஸ் நம்மை அழித்து விடும் எனும் பயம் சிங்களவனுக்கு இருக்கிறது" என வீராவேசமாக திருச்சி காங்கிரஸ் கூட்டத்தில் உறுமி இருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். எனக்கென்னவோ சிரிப்பொலி சேனலை அண்ணனிடம் ஒரு மாதம் ஒப்படைத்தால் டி.ஆர்.பி. பிச்சிக்கும் என்று தோன்றுகிறது. எப்படிண்ணே..நீங்க இப்படித்தான் எப்பவுமேவா..இல்ல எப்பவுமே இப்படித்தானா?///

ஹா ஹா...
தங்கபாலுவுக்கு அடுத்த இடம் நம்ம தலைக்குத்தான்!!!

முத்தரசு said...

//'என்னை கவனி சார்'.//

N I கவனி சார் அப்படிதானே போட்ருக்கு ஹி ஹி ஹி

முத்தரசு said...

//அதற்கு காரணம் எங்களுக்கு முன்பு இருந்த அ.தி.மு.க. அரசுதான். அவர்கள் மின்திட்டத்தை சரியாக போடாததே இதெற்கெல்லாம் முழு முதற்காரணம்"..//

சூப்பர் அப்பு.....வெளங்கிடும்

முத்தரசு said...

//வாங்க பார்ட்னர் வாங்க//

ஆமா ஆமா

இராஜராஜேஸ்வரி said...

பல சுவைப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

Unknown said...

டைட்டானிக் படம் பார்தது ஏமாந்திட்டீரா? நம்ம சாதாரண கம்யூட்டர் மானிடரில் 3டி கண்ணாடிய போட்டு பார்த்தா செம எபக்ட்டா இருக்கு...

இளங்கோவன் எப்பவும் இப்படித்தான் இவர் கழுதைப்புலி.....!

rajamelaiyur said...

//''எங்கள் ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம்(!). ஆனால் அதற்கு காரணம் எங்களுக்கு முன்பு இருந்த அ.தி.மு.க. அரசுதான். அவர்கள் மின்திட்டத்தை சரியாக போடாததே இதெற்கெல்லாம் முழு முதற்காரணம்"...

//

இவனுங்க எப்படித்தான் பாஸ் எப்பபாத்தாலும் காமடி பண்ணுவாங்க

rajamelaiyur said...

E.V.K.S ஒரு காமெடி பிஸ் அண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////.''எங்கள் ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம்(!). ஆனால் அதற்கு காரணம் எங்களுக்கு முன்பு இருந்த அ.தி.மு.க. அரசுதான். அவர்கள் மின்திட்டத்தை சரியாக போடாததே இதெற்கெல்லாம் முழு முதற்காரணம்".../////////

அண்ணன் இன்னும் அடிவாங்குன அதிர்ச்சில இருந்து தெளியல போல?

நாய் நக்ஸ் said...

ம்ம்ம்ம்........
:)))))))))))))))

உலக சினிமா ரசிகன் said...

3டி கான்செப்ட் படங்களுக்கு நான் எதிரி.
வெகு விரைவில் ஒழிய வேண்டும் இந்தக்கொடுமை.

ஆமினா said...

//.''எங்கள் ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம்(!). ஆனால் அதற்கு காரணம் எங்களுக்கு முன்பு இருந்த அ.தி.மு.க. அரசுதான். அவர்கள் மின்திட்டத்தை சரியாக போடாததே இதெற்கெல்லாம் முழு முதற்காரணம்"...//

:-)
:-)

ஆமினா said...

சென்னை டூ விழுப்புரம் நெடுஞ்சாலைல இதே போல் ஒரு ஹோட்டல். பெயர் அண்ணாமலை என நினைக்கிறேன். ஹோட்டல் முழுவதும் ரஜினியின் போட்டோவும் அதற்கு கீழ் அவர் சொன்ன வாசகங்களும் இருக்கும். அருமையான சூழல்... அந்த பக்கமா போனா சாப்டுட்டு வாங்க :-)

ஆமினா said...

/ஆசிரியை கொல்லுதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவே இந்தியாவில் மாறிவிடும் காலம்//
இப்பலாம் ஆசிரியர் பயப்படுவது நல்லாவே தெரியுது. பசங்க இப்ப செமையா கலாய்க்குதுங்க...

(ப்ளாஸ் பேக்- நாங்களாம் எவ்வளவு அடி வாங்கியிப்போம்.... வெயில்ல நின்னிருப்போம், உக்கி,முட்டி போட வச்சாங்க... )

ஆமினா said...

டெரர் கும்மி விருதுக்கு வாழ்த்துகள் சிவா

Yoga.S. said...

காலை வணக்கம் சிவா,சார்!அருமையான மீல்ஸ் குடுத்திருக்கீங்க!டெரர் கும்மி விருதுக்கும் வாழ்த்துகள்!!!!

! சிவகுமார் ! said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிங்கோ!!

Related Posts Plugin for WordPress, Blogger...