CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 1, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (01/04/12)


தண்ணீர் தண்ணீர்:
                                                                               Spot: Nandanam
                                                   கடைசி பானைல இருந்த டம்ளரை சுட்டவன் எவன்லே

'நிலை மாறும் உலகில், (கரண்ட் ஒரு மணிநேரமாவது) நிலைக்கும் என்ற கனவில்...வாழும்(?) தமிழன் ஜாதி. இங்கே வாழ்வதில்லை நீதி...' என்று சால்ட் அண்ட் பெப்பர் தாடி வைத்துக்கொண்டு பிளிரும் டமிலா..எலே டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி. மேடம் கட்சி சார்பா தண்ணீர், நீர் மோர்('ரெண்டுமே ஒண்ணுதான வே'ன்னு எவன்லே சவுண்டு உடுறது. தாம்பரத்துல செயின் பறிச்ச கேசை அவன் மேல போடுலே) பந்தல் போட ஆரம்பிச்சாச்சு. டெய்லி ரெண்டு மொடக்கு வாங்கி குடிச்சிட்டு ரெண்டு மடங்கு ஏறுன பஸ், கரண்ட் வெலைய கண்டிச்சி தெம்பா பொங்குலே.
.......................................................................................

WRATH OF THE TITANS:
மனிதர்களின் பக்தி குறைய ஆரம்பித்ததன் விளைவாக டார்டரஸ் எனும் பாதாள உலகம் பிளந்து வகை வகையான தீய சக்திகள் அனைவரையும் தாக்க ஆரம்பிக்கின்றன. ஜீயஸ் எப்படி சோதனைகளை எதிர்கொண்டு அவற்றை அளிக்கிறான் என்பதுதான் கதை. ஓரளவுக்கு போர் அடிக்காமல் ஆங்காங்கே பறக்கும் குதிரை, ஒற்றைக்கண் ராட்சச மனிதன், மனித உருவில் இருக்கும் எரிமலை என கிராபிக்ஸ் ஜாலம் நன்றாகத்தான் செய்துள்ளனர். ஆவரேஜ்  டைம் பாஸ் மூவி.
...............................................................................

ஒன்ஸ்மோர்:
ஆஸி டூர், ஆசிய கோப்பை, தெ.ஆப்ரிக்கா 20/20 என அனைத்திலும் இந்திய கிரிக்கெட் அணி செம மாத்து வாங்கினாலும் நம்ம ஆளுங்க அசராமத்தான் ஆட்டத்த பாக்கறாங்க. சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கட் வாங்க வந்த இளைஞர்கள் கோரசாக "நாங்க நடுராத்திரியே ரோட்ல வந்து தங்கிட்டோம். சென்னை...." என்று உரக்க கூவுகின்றனர். பி.சி.சி.ஐ. காட்ல எப்பவுமே அடை மழை வெளுத்துத்தான் வாங்குது.
..................................................................................

THE HUNGER GAMES:
பனேம் என்றொரு நகரத்தின் குடையின் கீழ் முன்பொரு காலத்தில் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்த 12 ஏழை மாவட்டங்கள். எனவே அதற்கு தண்டனை தரும் வண்ணம் ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு சிறுவன், சிறுமி என 24 பேரை தேர்ந்து எடுத்து அவர்களை மர்மங்கள் நிறைந்த இடத்தில் மோத விடுவது பனேம் நகர ஆட்சியாளர்களின் வழக்கம். போட்டியில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க அனுமதி. மற்ற அனைவரும் இறந்து/கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆஹா ஓஹோ என்று போற்ற முடியாவிடினும் விறுவிறுப்பான காட்சிகள் மூலம் நம்மை ஆர்வத்துடன் பார்க்க வைக்கின்றனர். என்னைப்பொறுத்தவரை அபவ் ஆவரேஜ் படம்.
......................................................................................

எங்கேயும் எப்போதும்:

                                                               Anand Theatre signal, Mount Road

சென்ற தி.மு.க. ஆட்சியில் பிரதான சாலைகளில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று சட்டம் போட்டார் முன்னாள் மேயர். அதன் பின் அண்ணா சாலை போன்ற பெரிய சாலைகள் எல்லாம் 'நீட்'டாகத்தான் இருந்தன. மெட்ரோ ரயில் பணிகள் துவங்கியபின் வானரங்கள் வழக்கம்போல் வேலையை காட்ட துவங்கிவிட்டன. மெட்ரோ பணிக்காக நகரமெங்கும் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு பலகை முழுக்க 'எனது எட்டாவது மகனுக்கு ஒண்ணாவது பர்த்டே' பேனர் முதல் அம்மா, அம்மன் பக்தர்கள் வைக்கும் பக்திமயமான போஸ்டர்கள் வரை...அடங்கப்பா. மேலே உள்ள படத்தில் அண்ணா சாலையை அடைத்துக்கொண்டு நிற்கும் அம்மா பேனர். கேட்டா 'நான் என் கடமையைத்தான செஞ்சேன்' அப்படின்னு பாண்டி பஜார்ல கூறு பத்து ரூவாய்க்கு வாங்குன கூலிங் க்ளாசை கழட்டிட்டு அந்த 11 பேர் கொண்ட குழுவுல இருக்குற 'பம்மல்' திலகம் சொல்லுவார்...நமக்கு எதுக்கு..!!
...........................................................................................

மெல்லத்திறந்தது (லாக்கப்) கதவு:
பீர் பாட்டிலை உடைத்து கையில் வைத்தவாறு 'டேய் சோமாறி. சனநாயகம் செத்து போயி ரொம்ப நாள் ஆவுது. ஒனக்கு என்ன கொயுப்பு இருந்தா மாநாட்டுக்கு கறி சோறு துன்ன வான்னு கூப்டுவ. இன்னைக்கி ஒன்னோட மண்டையை ஒடச்சி மாவிளக்கு விக்காம உட மாட்டண்டா டாய்" என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு நட்ட நடு ரோட்டில் டான்ஸ் ஆடிக்கொண்டே ட்ராபிக்கை எங்களில் ஒருவன் நாஸ்தி செஞ்சா அவனை கைது செய்றதுல அர்த்தம் இருக்கு. ஒரு ஓரமா உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே, உதயகுமார் இப்படி எல்லாரையும் பாத்து 'நீங்க அசப்புல ஒசாமா பின் லாடனோட ஒண்ணுவிட்ட தாய்மாமன் மாதிரியே இருக்கீங்க. ஹாண்ட்ஸ் அப். யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்' என்று அலறவைத்து சிலப்பல கேஸ்களை வேறு ஸ்ட்ராங்கா போட்டுவிடுகிறார்கள். 'போராடாமல் போராடுவது எப்படி?'ன்னு யாராச்சும் பொஸ்தகம் எழுதுங்கப்பா சீக்கிரம்!
.......................................................................................


உன்னைத்தேடி: 
டாஸ்மாக் சரக்குகளை ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தை ஆரம்பித்து உள்ளனராம். இணையத்தில் செய்தி கண்டேன். இந்த யோசனையை சொன்ன  மதியுக அதிகாரி வாயில ஒரு கண்டெய்னர் சக்ககரைய அள்ளி போட . ஐயா அப்படியே ஒரு சின்ன விண்ணப்பமுங்க. ஒஸ்தி சரக்கு வாங்குற பிரகஸ்பதிங்களுக்கு கௌரவம் செய்யற மாதிரி மூணு சியர்(ஸ்) கேர்ள்ஸை அனுப்பி சைடுல ஆட உட்டீங்கன்னா ஜகஜோதியா இருக்குமுங்க.
...........................................................................................

குசேலன்:
'ஏத்தி ஏத்தி ஏத்தி நெஞ்சில் தீயை ஏத்தி'...கரன்ட்டே இல்லாத கற்காலத்துல கண்ட மேனிக்கி கரண்ட் பில்லை ஏத்திட்டாங்க மேடம். மொத வேலையா வீட்ல இருக்குற ஒண்ணு ரெண்டு பேன், ட்யூப் லைட், கக்கூஸ் லைட் மொதக்கொண்டு எல்லாத்தையும் புடுங்கி போட்டுட்டு அது என்னங்க அது. ..ஆ..வெண்சாமரம். அதாங்க அந்தக்கால ராசாங்களுக்கு ரெண்டு பக்கமும் நின்னுகிட்டு காந்தக்கண்ணழகிங்க ஸ்லோ மோஷன்ல வீசுவான்களே அதேதான். அதை விக்கிறியா யாவாரிங்க யாராச்சும் மிச்சம் மீதி இருந்தா ஒடனே ஒரு டஜன் வாங்கிப்போடணும். நம்மால அந்த காந்தக்கண்ணழகிங்களுக்கு மினிஸ்ட்ரி எடமெல்லாம் பாக்க முடியாது. ஒன்லி வெண்சாமரம் ஆர்டர்.
....................................................................................

புதுமைப்பெண்:
அடிமைப்பெண்ணாக எத்தனை நாள் வாழ. வாழ்வின் அற்புத தருணங்களை அன்றே அனுபவித்தால் என்ன? எல்.ஆர். ஈஸ்வரியின் கணீர் குரலில் ஒலிக்கும் படாபட் பாடல். படம்:அவள் ஒரு தொடர்கதை.

.................................................................


........................   
My other site:
agsivakumar.com
.......................
                                                            
                                       

14 comments:

நாய் நக்ஸ் said...

:))))))))))))))

Yoga.S. said...

காலை(இங்க)வணக்கமுங்க!அருமையான சாப்பாடுங்க.சாப்பிட்டப்புறம் என்னமோ குடிப்பாங்களே,என்னது அது????.............ஆங்........தண்ணி.அதாவது வாட்டர்!அதுதான் இல்லைன்னு தம்ளர சுட்டுக்கிட்டுப் போயிட்டாங்களோ?????

CS. Mohan Kumar said...

என்ன ஓய் ஒரு பெரியவரை ஏமாத்தி புட்டீறு. ரொம்ப வருத்தப்பட்டு பதிவு போட்டுருக்கார். பாருங்க

Unknown said...

மெல்லத்திறந்தது லாக்கப் கதவு அருமை. சுளீர் வரிகள்.

Unknown said...

அசால்டாக செய்திகளை அலசியிருக்கிறீர்கள்.. புல் மீல்ஸ் அறுசுவை பிரியர்களுக்கு நல்ல வேட்டை.

ஹாலிவுட்ரசிகன் said...

நான் இரண்டு பதிவுல சொல்றத நீங்க இரண்டு பந்தில சொல்லிட்டீங்களே. ஹேப்பி ஏப்ரல் ஃபுல் டே.

ஹாலிவுட்ரசிகன் said...

//டாஸ்மாக் சரக்குகளை ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தை ஆரம்பித்து உள்ளனராம். இணையத்தில் செய்தி கண்டேன்.//

ஹை. அப்போ சைட் டிஷ் ஃப்ரீயா? இல்ல அதுவும் டெலிவரி பண்ணுவாங்களா?

முத்தரசு said...

ம்....

//உன்னைத்தேடி//

சர்தான்

இராஜராஜேஸ்வரி said...

'போராடாமல் போராடுவது எப்படி?'ன்னு யாராச்சும் பொஸ்தகம் எழுதுங்கப்பா சீக்கிரம்!

இளம் பரிதி said...

ரெண்டு மணி நேரத்துக்கு இவ்ளோ சவுண்ட்ஆ....இங்க பதினாலு மணி நேரம் கரண்ட் கட் பாஸ்...எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல....

RVS said...

ம்... சரி! :-)

Unknown said...

அண்ணே! வெயிலுக்கு நீர்மோர்க்கு பதிலா..பீர்பந்தல் திறக்க சொல்லுங்க....போராட்டத்திக்கே அவசியம் இருக்காது...

Philosophy Prabhakaran said...

யோவ்... அந்த மனுஷன் கூட பழகி ஒரே தின்னவேலி பாசையா வருது பாரு...

// மனிதர்களின் பக்தி குறைய ஆரம்பித்ததன் விளைவாக டார்டரஸ் எனும் பாதாள உலகம் பிளந்து வகை வகையான தீய சக்திகள் அனைவரையும் தாக்க ஆரம்பிக்கின்றன. //

யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா... யப்பா யப்பா யப்பா யப்பா யப்பா...

// பி.சி.சி.ஐ. காட்ல எப்பவுமே அடை மழை வெளுத்துத்தான் வாங்குது. //

இந்தவாட்டி மிஸ்சே ஆகாது... கண்டிப்பா இந்தியா தான் ஜெயிக்கும்...

தடம் மாறிய யாத்ரீகன் said...

ஒவ்வொரு செய்தஈகும் கொடுத்திருக்கிற சினிமா பட தலைப்பு அபாரம் வாத்யாரே !!

Related Posts Plugin for WordPress, Blogger...