CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 29, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (29/04/12)                                                           ஏக் காவ் மே தோ சிங்கம்ஸ் ரஹ தாதா!!

சங்கமம்:
'எடுப்பான எம்.ஜி.ஆர்' அக்கப்போர் ராஜா அழைப்பின் பேரில் தேவி தியேட்டர் அருகே உள்ள மதுரா ரெஸ்டாரண்டில் மதிய உணவு அருந்த வந்திருந்தனர் கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், கும்மி, யுவக்ரிஷ்ணா, அதிஷா, கார்க்கி, அஞ்சாசிங்கம், பிரபாகரன், புரட்சிமணி ஆகியோர். அனைவரையும் சந்தித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் ஆந்திர ஹீரோ போல போட்டோவுக்கு சேட்டைத்தனமான போஸ்களை வாரி வழங்கினார் கேபிள்காருலு. அவருடன் சேர்ந்து எடுத்த மிரள வைக்கும் ஸ்டில்லு மேலே இருக்கண்டி.
....................................................................................

பார்த்தாலே பரவசம்:
பவர்கட், விலைவாசி ஏற்றம், எல்.கே.ஜி.அட்மிஷன் கொடுமைகள் உள்ளிட்ட எல்லா கொடுமைகளுக்கும் நிரந்தர தீர்வு தமிழக மக்களுக்கு இவ்வளவு விரைவாக கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. நித்தியை 'ஆதி - 2' வாக அறிவித்து நம்மை திக்கு (திக்காக) முக்காட வைத்துள்ளார் ஆதீனம் ஆப் மதுரை. இதைக்கேட்டவுடன் செங்குத்தாக சிலிர்த்து நின்றுவிட்ட தலைமுடிகளை ரெண்டு பாட்டில் பாராசூட் எண்ணெய் போட்டு படியவைத்தும் பயனில்லை. தங்கபாலு, டி.ஆர், சிவசங்கர் பாபா, பவர் ஸ்டார் என எப்போதும் காமடிக்கு பஞ்சமே இல்லாத ஆட்களை சீசன் தவறாமல் விண்ணில் இருந்து தமிழ்நாட்டிற்கு சரக் சரக் என்று இறக்கும் இறைவனின் விந்தையே விந்தை. இந்த உன்னத நாளை ஆண்டுதோறும் 'என்னை தாலாட்ட வருவாளா' தினமாக அறிவிக்க வேண்டுமென உக்கிரமாக உத்தரவிடுகிறேன்.
.....................................................................................

நேருக்கு நேர்:
சத்தியம் சேனலில் இன்று காலை நடந்த நேரடி ஒளிபரப்பில் வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. 'இந்தியாவில் கிரிக்கெட் மோகம் எல்லை மீறுகிறதா' எனும் தலைப்பில் பேசினோம். கிரிக்கெட்டிற்கு ஆதரவாக அவரும், எதிர்ப்பாக நானும் பேச இடையே போனில் நேயர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிறைவு செய்ய சில நிமிடங்கள் இருக்கும் முன்பு சட்டென 'நம்ம' நித்தி பதவியேற்பு விழா லைவ் போட ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு சூடேற்றும் டாபிக் அதுதான் என்பதால் 'யூ கண்டின்யூ' என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் இனி வரும் நாட்களில் முறையாக நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு அடுத்ததை தொடருங்கள் என்றோம். மோகன்குமார் அவர்களுடன் மகிழுந்தில் உரையாடியவாறே வீடு திரும்பலானேன்.
.........................................................................................

22  FEMALE KOTTAYAM(Malayalam):
பெங்களூரில் நர்ஸ் வேலை பார்க்கும் கேரளப்பெண் டெஸ்ஸா சிரில் என்பவனை காதலிக்கிறாள். அயல்நாட்டில் வேலைபார்க்க அவளுக்கு உதவுவதாக கூறும் சிரிலின் மறுபக்கத்தை உணர்ந்து அவனையும், பிரதாப் போத்தனையும் எப்படி பழி வாங்குகிறாள் என்பதே கதை. சமீபத்தில் பார்த்த மலையாளப்படங்களை கம்பேர் செய்தால் இது எவ்வளவோ மேல். ரீமா கல்லிங்கல் நடிப்பு பிரமாதம். நாயகி இருவரையும் பழி வாங்கும் காட்சியில் குரூரம் மேலோங்கி நிற்கிறது. ஜஸ்ட் ஓ.கே.படம்தான்
........................................................................................

ஜனா:
அடுத்த ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது. அண்ணா ஹஜாரே, அப்துல் கலாம் - 2 உள்ளிட்ட ஏகப்பட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். இவர்களில் யார் பெயரை தேர்வு செய்தாலும் 'சித்தப்பு. சீட்ட கலச்சி போடுன்னா கலச்சி போடு. உன் ஆசைல தீய வக்க' என்று ஒரு க்ரூப் கிளம்பத்தான் போகிறது. அதனால் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 'கிரிக்கெட் கடவுள்' சச்சினை ஜனாதிபதி ஆக்கினால் மட்டுமே இந்தியா வல்லரசு ஆகும் என்பது எனது தொலை 'நேக்கான' பார்வை. எம்.பி., பாரத ரத்னா வரை அவரை கொண்டு வந்துவிட்ட அரசியல்வாதிகளே...நூற்றுக்கு நூறு அண்ணன் சச்சினுக்கு  இந்தப்பதவியையும் வாங்கித்தருமாறு உங்கள் கால் சுண்டுவிரலை இழுத்து பிடித்து கேட்டுக்கொள்ளும் இந்த நேரத்திலே....சோடா ப்ளீஸ்!! ஆகவே #$%%&^&*$##
.....................................................................................

பிடிச்சிருக்கு:
இந்த வாரம் நான் படித்ததில் பிடித்த பதிவு என்றால் ஆரூர்.முனா. செந்தில் எழுதியதை சொல்லலாம். கிரிக்கெட் குறித்து வந்த பதிவுகளில் வித்யாசமான மற்றும் சுவாரஸ்யமான தொகுப்பாக இருந்த அக்கட்டுரையின் தலைப்பு:

தெருவில் நின்று ஓசியில் டி.வி.பார்க்கும் குழு

என்னதான் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விளையாட்டுகளை சொகுசாக அமர்ந்து பார்த்தாலும், டி.வி. ஷோ ரூம்களுக்கு வெளியே ரசிகர்களுடன் கால் வலியையும் பொருட்படுத்தாமல் டி.வி.பார்ப்பது ஒரு சுகானுபவம்தான். அப்பதிவை நீங்களும் படித்து பாருங்கள்.
......................................................................................

எங்கேயோ கேட்ட குரல்:
சில வருடங்களுக்கு முன்பு பங்கு ஆட்டோக்கள் சிலமுறை விபத்தில் சிக்கி பலர் உயிர் இழந்தவுடன் 'இனிமே ஒரு வண்டில அஞ்சி பேருதான் உக்காரணும். டிரைவர் சீட் கிட்ட இருக்குற சீட்டை தூக்கணும்' என்று சென்னையில் சட்டம் போட்டனர். வழக்கம்போல கொஞ்ச நாளைக்கு சட்டத்தை சாஷ்டாங்கமாக கடைபிடித்துவிட்டு பிறகு மீண்டும் வழக்கம்போல அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிக்கொண்டுதான் உள்ளனர் நம்ம ஊர் மாணிக் பாட்ஷாக்கள். டாட்டா மேஜிக் ஷேர் ஆட்டோவில் ஒரு வரிசையில் மூன்று பேருக்கு மேல் அமர முடியாது. இருந்தாலும் 'அட்ஜஸ்ட் பண்ணி உக்காருங்க' சார் என்று மிரட்டல் கலந்த கொஞ்சலுடன் சவுண்ட் விடுகிறார் பாட்ஷா. பேருந்தில் அமர்ந்து செல்வதே மேல் என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு இருக்கிறது இவர்கள் செய்யும் ரவுசு.
......................................................................................

எதிர்பாராதது:
நாள் தவறாமல் மாலை 4-6 மின்வெட்டை அமல்படுத்தி வந்தனர் எங்கள் ஏரியாவில். நேற்றும் இன்றும் ஒரு நிமிடம் கூட பவர் கட் இல்லாதது கண்டு திகில் அடித்து போயிருக்கிறேன். ஒருவேளை ஒட்டுமொத்தமாக 'மெகா பவர் கட்' செய்வதற்காக ஓரிரு நாட்களுக்கு கரன்ட்டில் கை வைக்காமல் இருக்கிறார்களோ என்று உள்ளத்தில் உருமி சத்தம் கேட்கிறது. தயவு செய்து  இப்படி எல்லாம் இஷ்டத்திற்கு இன்ப அதிர்ச்சி தந்து எங்களை ஆற்றொண்ணா துயரத்தில் ஆழ்த்த வேண்டாம். சீக்கிரம் கட் பண்ணுங்கப்பா!!
........................................................................................

ரத்தத்திலகம்:
'உங்களுக்கெல்லாம் திடீர்னு எங்க இருந்துடா பொத்துக்கிட்டு வருது தமிழ் உணர்வு' என்று எக்கட்சிக்கும் வாழ் பிடிக்காத இணைய நண்பர்களை கண்டு கொப்பளிக்கும் புளியங்கொட்டைகளே (உடன்பிறப்பு ஓல்ட் பேஷன். தலைவர் புளியங்கொம்பு என்றால் 'ஜிங் சாக்' அடிப்போரை எல்லாம்  புளியங்கொட்டைகள் என்று விளிப்பதுதானே லாஜிக்). 'ஈழம் மலராவிடில் தீக்குளிப்பேன்' என்ற சொல்லை உதிர்த்த உங்கள் உன்னத சூரியனை நினைத்தால் வடிவேலின் இந்த நகைச்சுவைதான் அவ்வப்போது மனதில் வந்து போகிறது. நண்பர்கள் ஒரு முறை பாருங்களேன். தமாசின் உச்சம்!!................................................................................

...........................
My other site:
agsivakumar.com
...........................


Saturday, April 28, 2012

ஈழப்புளியமரம்உடன்பிறப்புகள் தொங்கிமகிழ ஏதுவான ஒரே மரம். ஈழப்புளியமரம். தொங்குங்க சார். தொங்குங்க சார். சீசன் போனா வராது சார்.             

அநேகமாக ஆறாம் வகுப்பு படித்த சமயமாக இருக்குமது. தேர்தலில் ஓட்டு கேட்க கலைஞர் எங்கள் தெருப்பக்கம் வந்த செய்தி கேட்டு விரைந்து ஓடினேன். எதிர்க்கட்சியை லேசாக சீண்டிவிட்டு ஹாஸ்யம் கலந்த உரையை ஆற்றினார் அவர். அதில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதும் உண்மை. ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சூரியன் சுருங்கி வெந்நீர் துளி ஆன கதையாக கலைஞரின் பேச்சாற்றல் மற்றும் ராஜதந்திரம்(!) எல்லாம் மெல்ல மெல்ல கவர்ச்சியை இழக்க தொடங்கி விட்டதென சொல்லலாம். அதுவும் கடந்த சில வருடங்களாக சுத்தம். ஒன்றா இரண்டா..அரங்கேறிய நாடகங்கள். அவருடைய ட்ராமாக்களில் நான் மிகவும் ரசித்த ஒன்று ஈழம் குறித்த விறுவிறுப்பான சென்டிமென்டல் கேம்தான்.

இங்கே தமிழன் ராப்பகலாக சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய நிலங்களை இழந்து அப்போதைய ஆட்சியாளர்களிடன் சிக்கி சின்னாபின்னம் ஆனது ஒரு புறம் என்றால் அங்கே நிலத்தோடு தன் சொந்தங்களின் உயிரையும் காவு தந்துவிட்டு செய்வதறியாது திகைத்தான் ஈழத்தமிழன். எம்டன் மகன் படத்தில் வரும் வடிவேலு இறந்த தன் தந்தையை புதைத்த காலம் கடந்த பின்பு வந்து  நாசரை பார்த்து 'ஹலோ..உங்க கடை அப்பள கட்டையை காணும்னு கத்தலைங்க. எங்க அப்பாவை காணும்னு அழுதுகிட்டு இருக்கேன். எங்க அப்பாவா இருந்தா என்னை அழவிட்டு வேடிக்கை பாப்பாரு. இது என் வீடு ஜாக்ரதை' என்பார். அதுபோல நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக 'ஐயோ..ஈழத்தை காப்பாத்த என்னை விட்டால் ஆளில்லையே' ரேஞ்சுக்கு பீல் பண்ண வேண்டியதெல்லாம் எதற்கு? இங்க என்ன ஆஸ்காரா குடுக்கறாங்க?

என்னதான் கட்சியின் அதிதீவிர விசுவாசியாக இருந்தாலும் 'உண்மையான' ஒவ்வொரு தி.மு.க. தொண்டன் மனதிலும் 'ஈழம் சார்ந்த நிலைப்பாட்டில் தன் தலைவன் செய்தது சரியே' எனும் எண்ணம் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தலைமையின் கவனத்தை ஈர்க்க வேண்டும் அல்லது தன் தலைவன் செல்லும் பாதை எவ்வாறாயினும் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டும் என்கிற காரணங்களுக்காக மட்டுமே இப்படி ரீலு அந்து போன பதிவையெல்லாம் இணைய பிரதர்ஸ் போட வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறோம். உளியின் ஓசை படத்திற்காக மாநில அரசின் 'சிறந்த வசனகர்த்தா' விருதை தன் ஆட்சியின்போதே பெற்றுக்கொண்ட ஒப்பற்ற தலைவராம் கலைஞரின் வசனத்தையே மிஞ்சி விடும் போல இணைய சூரியன்கள் தீட்டும் காவியங்கள்.

கட்சிசாராத பதிவர்கள் உங்களை செம காட்டு காட்டும்போது கன்னத்தில் மருவை வைத்துக்கொண்டு அனானியாக உங்கள் பதிவிலேயே 'வெற்றிகொண்டான்' பாணி கமன்ட் போடுவது, ஒற்றுமையாக இருக்கும் நண்பர்களில் எவரேனும் ஒருவர் உங்களிடம் நியாயமாக கேள்வி கேட்டு வாதம் செய்தால் அவரை ஆப் செய்ய பிற நண்பர்களின் பதிவிற்கு திடீர் விஜயம் செய்து 'அருமையான எழுத்து நடை' என்று பின்னூட்டமிட்டு பிரித்தாளும் கொள்கையை மொக்கையாக கையாள்வது, அதிலும் பருப்பு வேகாவிடில் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது...ஏன் இப்படி சில்லி வேலைகளில் ஈடுபட வேண்டும்? இது கூட தெரியாத டூமாங்கோலியா உங்கள் சக பதிவர்கள்? ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தயவு செய்து எஸ்.எஸ். சந்திரன் காலத்தை தாண்டி வாருங்கள். இது சந்தானம் சீசன்.

உங்கள் தலைவர்தான் ஈழம் எனும் புளியமரக்கிளையை பிடித்து தொங்கிக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளாரே தவிர மானம் உள்ள எந்த ஈழத்தமிழனுக்கும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வாழும் வள்ளுவர் எனும் புளியங்கொம்பை பிடித்து தொங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதில் அர்த்தமும் இல்லை.

தன்குடும்பத்தை கண்ணெதிரே காலனுக்கு பலி தந்துவிட்டு இனி என்ன மிச்சம் இருக்கிறது என வாடிக்கிடக்கும் ஈழத்தமிழனையும், மாற்றி மாற்றி இரு கழகங்களின் கையிலும் பூமாலையாக சிக்கி நைந்து போன நாராக நாறிக்கொண்டு இருக்கும் தமிழகத்து குடிமகனையும் வைத்து இது மாதிரி டர்ட்டி கேம் ஆடுவதை நிறுத்துங்கள். இல்லாவிடில் புளியங்கொட்டை என்ன...புளிய மரத்தையே வேரோடு பிடுங்கி நச்சென்று உங்கள் நடுமண்டையில் ஒரே போடாக போட்டு விடுவான் பொறுமையின் உச்சத்தில் இருக்கும்..தமிழன்!


கீழ் உள்ள காணொளியில் வரும் 'மஞ்சள்' சட்டை நபர் வடிவேலு தானே தவிர தானைத்தலைவர் அல்ல என்பதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். வடிவேலு பேசும் ஒவ்வொரு வரியும், கச்சிதமான நடிப்பும் ஈழ மண்ணில் உயிர் இழந்த என் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பெருஞ்சூரியனுக்கு சமர்ப்பணம்.


....................................................................................

Friday, April 27, 2012

சத்தியம் சேனலில் பதிவர்கள் நிகழ்ச்சி


 
தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் புதுவரவாக வந்திருப்பது சத்தியம் செய்தி சேனல். தினமும் காலை 9 - 10 நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுவதாக அஞ்சாசிங்கம் மற்றும் பிரபாகரன் வாயிலாக செய்தி வந்தது. வியாழன் அன்று காலை கே.ஆர்.பி. VS அஞ்சாசிங்கம் மோதும் நிகழ்ச்சி என்பதால் இருவரின் தளபதிகளான பிரபாகரனும், நானும் ராயபுரத்தில் உள்ள ஸ்டுடியோவிற்கு உடன் சென்றோம். எங்களை விட ஆர்வமாக இருந்தவர் கே.ஆர்.பி.யின் சுட்டி புதல்வர். நிகழ்ச்சியின் தலைப்பு: காதல் திருமணமா? நிச்சயிக்கபட்ட திருமணமா? எது இக்காலத்திற்கு உகந்தது.

காலை 8 மணிக்கு சேனல் அலுவலகத்தினுள் நுழைந்தோம். எப்படிப்பட்ட ஏவுகணைகளை எதிரி மேல் ஏவுவது என டிஸ்கசன் ரூமில் தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தார் கே.ஆர்.பி. அடுத்த சில நிமிடங்களில் சிங்கமும், பிலாசபியும் வந்தனர். பிலாசபியை பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. சென்ற வாரம் பார்த்த ஆள் இம்முறை ரணகளமான கெட்டப்பில் முற்றிலும் மாறி இருந்தார். 'தயவு செஞ்சி இந்த கெட்டப்ல என்னை போட்டோ எடுத்ததை ரிலீஸ் பண்ண வேண்டாம்' என தம்பி கதறியதால் அதை வெளியிட முடியவில்லை.
.
                                              அதிதீவிர ஆலோசனையில் கே.ஆர்.பி. காரு, அஞ்சாசிங்கமுலு 

ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை நடத்தியவர் பெயர் க்றிஸ்டோபர். காதல் திருமணங்களை ஆதரித்து கே.ஆர்.பி.பேசினார். தற்கொலைக்கான காரணங்களில் முதல் இடம் காதல் சார்பானவையாகவே உள்ளன என புள்ளிவிவர ஆதாரத்துடன் பேசினார் க்றிஸ்டோபர். இதுவரை மொத்தம் 39 காதல் ஜோடிகளுக்கு கல்யாணம் செய்து வைத்த அஞ்சாசிங்கம்(வடசென்னை 'நாடோடிகள் சசி' ரசிகர் மன்ற பொருளாளர்)  காதலுக்கு எதிராக பேசியது புருவத்தை உயர்த்த வைத்தது. காதல் ஜாதி, மத பேதங்களை உடைக்கும். தனக்கான சரியான துணையை தேர்வு செய்யும் சுதந்திரம் காதல் செய்வோருக்குதான் அதிகம் கிடைக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அதற்கான வாய்ப்பு குறைவு என்பது கே.ஆர்.பி.யின் வாதம். ஜாதிகளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. துணையை தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவருக்கும் தரப்பட்டு உள்ளது. அது காதல் செய்வோருக்கு மட்டுமே உள்ளது என்பதை ஏற்க இயலாது என்றார் சிங்கம்.

                                                                           நேரடி ஒளிபரப்பில்.......

இடையிடையே நேயர்கள் தொலைபேசியில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தவாறு சில கேள்விகளையும் நம் பதிவர்களுக்கு முன் வைத்தனர். ஸ்டுடியோவின் உள்ளே ஒரு மணிநேரம் இது போன்ற நேரடி நிகழ்ச்சியை முதன் முறை பார்ப்பது வித்யாசமான அனுபவமாக இருந்தது எனக்கு. வரும் ஞாயிறு (மே 29) அன்று காலை நேரடி ஒளிபரப்பில் கிரிக்கெட் சம்மந்தமான தலைப்பில் வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களுடன் விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன். பெரும்பாலும் பதிவர்களுக்கு முன்னுரிமை தந்து நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால் இதில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்க:

செல்வின் (எ) அஞ்சாசிங்கம்: 94441 25010
பிலாசபி பிரபாகரன் - 80158 99828
   
வெளிநாட்டில் உள்ள பதிவர்களும் வெப் கேம் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய உள்ளதாக செல்வின் கூறி உள்ளார். விவாதத்தில் பங்கு பெறவுள்ள அனைத்து பதிவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் காணொளி தொகுப்பு விரைவில் goundamanifans.blogspot.in தளத்தில் வெளியிடப்படும் நண்பர்களே. நன்றி.
.................................................................................

                                                

Thursday, April 26, 2012

ஆனந்த விகடனில் அடியேன்!


பள்ளிக்காலம் முதல் இன்று வரை வாரம் தவறாமல் படித்து வரும் வார இதழான ஆனந்த விகடனின் (என் விகடன்) வலையோசை பகுதியில் இந்த வாரம் மெட்ராஸ் பவன் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. என் வலைப்பூவிற்கு ஊக்கம் தந்த அனைத்து இதயங்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறுகிறேன். விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றி.                                                                        
                                                                       
                                                             
.................................................................................

.............................
My other site:
............................

Tuesday, April 24, 2012

பாட்ஷா vs கவுண்டமணி


சாந்தி க்ரூப் ஆப் கம்பனிகளில் தன்னோடு வேலை பார்த்த நண்பன் மாணிக்கத்தை 'அண்ணா ஹஜாரே' ஆட்டோ ஸ்டாண்டில் சந்திக்கிறார் கவுண்டர். நடந்தது என்ன?

                                                         
"என்னப்பா மாணிக். ஆள பாத்து ரொம்ப நாள் ஆச்சி. நல்லா இருக்கியா?"
        
"நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி"

"தெரியுமே. ஏரியா முழுக்க காய்கறி வித்துட்டு வர சொன்னா மொத தெரு முக்குல நின்னு 'கத்ரிக்கா,வெண்டக்கா'ன்னு ஒரு தரம் மட்டும் கத்திட்டு மொத்த தெருவையும் சத்தம் போடாம சுத்திட்டு வந்தியே. மறக்க முடியுமா? உனக்கு வேலை குடுத்த என்ன சொல்லணும். எப்படி இருக்கன்னு கேட்டா என்னன்னவோ சொல்றியே?"

"கடன் வாங்கறதும் தப்பு. கடன் குடுக்கறதும் தப்பு"

"ஆனா வாங்குன கடன திருப்பி குடுத்தா தப்பே இல்ல. சீக்கிரம் தந்துரு ராசா"

"சரி இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஆட்டோ ஓட்டறேன். இதுக்கு முன்ன நான் ஒரு டான்..."

"டான்...ஓ ரவுடியா? அதை இந்த காரமடை சந்தைல வாங்குன கண்ணாடிய கழட்டிட்டுதான் சொல்லணுமா? எங்கய்ய புடிச்ச இத. பாதிதான் இருக்கு. மிச்சத்தை வித்து ஆட்டோவுக்கு ட்யூ கட்டிட்டியா??"

                                                                        
"ஷட் அப். நான் டான் ஆ பாம்பேவை ஒரு காலத்துல கலக்கனேன்(கதையை சொல்கிறார்). இப்ப அமைதியா இங்க ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்"

"பயங்கர மெரட்டலா இருக்கே. அது சரி 'பிரசவத்துக்கு இலவசமா வர்றேன்'னு பாடுனியே. அது என்ன 'உம் புள்ளைக்கு ஒரு பேரு வச்சி தாரேம்மா'ன்னு எக்ஸ்ட்ரா பிட்டு? பசில இருக்குற பச்ச வயித்துக்காரிக்கு சோறு வச்சாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கு. பேரு வச்சி ஏன்யா குடும்பத்துல குட்டைய கொளப்பற?"

"நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா.."

"நாங்க மட்டும் அம்பானிக்கு அடுத்த வீடா? ஆனா ஒண்ணு. உன்ன பாத்ததும் பேஸ்மென்ட் ஆடிப்போய் எந்திரிப்பாரே ஐ.ஜி. அப்பறம் 'அண்ணே..இது உங்க காலேஜுன்னே. ஒரு சீட்டு என்னண்ணே. நூறு சீட்டு வாங்கிக்கங்கண்ணே. இந்த காலேஜே உங்களுதுண்ணே. அந்த எடத்துல விழுந்து விழுந்து சிரிச்சேய்யா. அப்படி அவங்க கிட்ட என்னதான் சொன்ன"


"ஹா. ஹா...உண்மைய சொன்னேன்"

                                                                         
திடீரென அங்கு வரும் அசல் ரவுடிகள் ஐ.ஜி.ஆபீசில் ஓவர் சீன் போட்ட மாணிக்கை பொறட்டி எடுக்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் ஓரமாய் நிற்கிறார் கவுண்டர். வாயில் தக்காளி சட்னி ஒழுக ரஜினி கேட்கிறார்..

" உங்களுக்காக சாந்தி தியேட்டர்ல டிக்கட் வாங்குன என்னை இத்தனை பேர் அடிச்சும்...ஏண்ணே வேடிக்க பாத்தீங்க?"

"யோவ்..போனாப்போகுது காப்பாத்தலாம்னுதான் பாத்தேன். ஆனா பேக் கிரவுண்டுல ஒரு பயபுள்ள பாடுனான் பார் பாட்டு..அதான் சைலன்ட் ஆயிட்டேன். அது எப்படி 'பீசு பீசா கிழிக்கும்போதும் இயேசு போல பொறுமை பாரு'..அந்த ஆனந்தராஜ் அடிச்ச டம்மி உருட்டுகட்டையால சாத்துனதுக்கே  இந்த பீலிங்கா. ஏசுன்னா உங்களுக்கு அவ்வளவு லேசா?. அடுத்து ஒண்ணு பாடுனான் பாரு 'இந்த எரிமலையில் ஈரத்துணி போட்டதாரடா?'.. நீயே மன சாட்சிய தொட்டு சொல்லு. இப்ப அடிக்கற வெயிலுக்கு மொட்ட மாடில ஈரத்துணி போடறதே பெரும்பாடா இருக்கு. எரிமலைல ஈரத்துணிய எதுக்கு போடணும்?"

                                                                 
"சரி..எல்லாரும் கேக்கற கேள்வியை கேட்டுட்டு கெளம்பறேன். அரசியலுக்கு வருவியா? மாட்டியா? கொளப்பாம சொல்லு"

"ஹா.ஹா..ஹா...."

"வேணாம் தம்பி. நான் மத்தவங்க மாதிரி இல்ல...சட்டுன்னு பதிலை சொல்லிடு. கிட்ட இருக்கறது சாமி சிலைன்னு கூட பாக்காம எடுத்து அடிச்சி புடுவேன்"

"ஆண்டவன் எப்ப சொல்றானோ அப்ப கண்டிப்பா வருவேன்"

"இந்த ரீலு அந்து போயி ஏகப்பட்ட வருஷம் ஆயி போச்சி. இருந்தும் அசராம பெவிகால் ஒட்டி படம் காட்டிட்டே இருக்கியே. ஒலகத்துல 1008 ஆண்டவன் இருக்கான். அதுல எந்த ஆண்டவன் போன் பண்ணி சொன்னா அய்யா அரசியலுக்கு வருவீங்கோ?"

"ஆண்டவன் ஒருத்தன்தான். ஆனா ஆளாளுக்கு வேற வேற ஆண்டவன். அதனால ஆண்டவன் ஒருவனுமல்ல. பல பேருமல்ல"

"தெளிவா கொளப்பறான்யா. ஆனா என்னோட கொளப்பம் தெளிஞ்சிருச்சி. 'கருடா கருடா பூப்போடு'ன்னு ஆகாசத்த பாத்துட்டு இருக்குற உன் ரசிகர்கள நெனச்சாதான் பாவமா இருக்கு. ஆமா..கோச்சடையானுக்கு சிக்ஸ் பேக்ஸ் வச்சி போஸ் தந்தியே..எங்க சட்டைய கழட்டு..பாப்போம்"

கவுண்டர் சற்று அசந்து திரும்பி பார்ப்பதற்குள் தீபிகா படுகோனேவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறக்கிறார் மாணிக்கம்..

அடுத்து தெருமுனையில் 'மகராசன்' கமல் போவதை பார்க்கிறார் கவுண்டர்: "யோவ்...கசாப்பு. அங்கேயே நில்லு..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

.........................................................................................

                                                                        

Sunday, April 22, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (22/04/12)மே மாதம்:
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் வரும் மே மாதம் 13 ஆம் தேதி ஞாயிறு மாலை சென்னை 'யூத்' பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது சாமியோ. சென்ற ஆண்டு வெற்றிகரமாக நடந்த முதல் யூத் பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. யூத் என்றால் நாங்கள் வரக்கூடாதா என்று கடந்த முறை கொந்தளித்த (வயதில்) சீனியர் பதிவர்களுக்கு மீண்டும் ஓர் விளக்கம். மனதளவில் யூத்தான எல்லோரும் சங்கமிக்கவே இந்த நிகழ்வு. நீங்க இல்லாமலா? புதிய/இளம் பதிவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் நோக்கம் ஒன்றை பிரதானமாக கொண்டு இந்த சந்திப்பு நிகழ்ந்து வருகிறது பெருமக்களே.

இதற்கான விரிவான அறிவிப்பு goundamanifans.blogspot.in தளத்தில் சீக்கிரம் வெளியாகும்.
................................................................................

கோழி கூவுது:

                                                          
அண்ணா நகர் KFC சிக்கன் கடை(!) உள்ளே முதல் கஸ்டமர்களாக கோழி கூவும் முன்பே நான், நேற்றோடு 'முடியிழந்த கவரிமான்' பிலாசபி, தொழிலதிபர் அஞ்சாசிங்கம், 'ஆளும்கட்சியின் வைட்டான கை' வியட்நாம் விக்கி ஆகியோர் சென்ற வாரம் விஜயம் செய்தோம். எந்த வெரைட்டி கோழிய எப்படி அமுக்கலாம் என்று சுவற்றில் இருந்த மெனுவை பார்த்தால்..நீங்களே பாருங்களேன்!!
..............................................................................

COBRA:
மம்முட்டியை ஸ்க்ரீனில் பார்த்து வருடங்கள் பல ஆனதால் நண்பருடன் 'கோப்ரா'விற்கு சென்றேன். கோட்டயம் பிரதர்ஸ்..சுருக்கமாக கோப்ரா. மம்முட்டியின் பிரதராக லால். மோகன்லால் இல்லை. 'மருதமலை'யில் வரும்  தாடி வைத்த வில்லன். இவர்தான் இதன் இயக்குனரும். சலீமும் நடித்து இருக்கிறார். முதலில் இருந்து க்ளைமாக்ஸ் வரை காமடி எனும் லேக்கியத்தை ஒளித்து வைத்து உசுரை வாங்கினர். யப்பா சாமி. தாங்கலை. இருவரும் மாறி மாறி 'ப்ரதரே' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மலையாள சினிமாவை யாரு காப்பாத்த போறாங்களோ. பாவம்.

................................................................

வாழ்த்துகள்:


                                                                         
எதேச்சையாக இன்று காலை 'பொதிகை' பக்கம் ரிமோட்டை அழுத்தியபோது 'நான் ஈ' படம் குறித்து கேபிள் சங்கர் எனும் பச்சிளம் பதிவர் பேசியதை காண நேர்ந்தது. இந்த வருடம் இயக்குனர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதால் அட்வான்ஸ் வாழ்த்துகள் டு எவர் யூத் கேபிள்.
.............................................................................

எதிரும் புதிரும்:
சட்டசபையில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க. அறையை சிறியதாக சுருக்கி விட்டது அரசு. ஒரு முன்னறிவிப்பாவது செய்து இருக்கலாம். அரசியல் நாகரீகத்திற்கு பெயர் 'போனது' தமிழகம் என்று சொல்லித்தெரிய வேண்டாம். ஆனால் அதற்காக இப்படி செய்வதெல்லாம் ரசிக்கும்படி இல்லை. இதற்கு முன்பு கூட மேடமை சந்திக்க சென்ற கூட்டணி தலைவர்களுக்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை என்று செய்தி வந்தது. தெரியாமல் நடந்த செயல் என்று சொல்லலாம். ஆனால் அதுவே தொடர்கதையானால் இழப்பு மற்றவர்களுக்கு அல்ல. தங்களுக்குதான் என்பதை மேடம் உணர்ந்தால் சரி.
................................................................................

அரங்கேற்றம்:

வருடா வருடம் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நடத்தும் கோடை நாடக விழா இன்று தொடங்குகிறது. பல்வேறு புதிய நாடகங்களின் அரங்கேற்றம் நடப்பது இந்த விழாவின் சிறப்பம்சம். சென்னை நாரத கான சபாதான் லொக்கேஷன். நாடக ரசிகர்கள் மேலும் விவரம் அறிய க்ளிக் செய்க:


சென்ற ஞாயிறு அன்று எஸ்.வே.சேகரின் 'எல்லாரும் வாங்க' நாடகம் பார்த்தேன். சுமாராக இருந்தது. கல்யாணம் செய்தோருக்கு மட்டுமே வீடு தரப்படும் என ஓனர் கண்டிஷன் போடுகின்றனர். அவர்களின் பெண்ணான சீதாவை காதலிக்கிறார் சேகர். சரசம்மா எனும் தெலுங்கு பேசும் பெண்ணாக சீதாவையே நடிக்க வைத்து வாடகை வீட்டில் நுழைகிறார். சீரியஸ் வசனம் பேசும் இடங்களில் கூட சேகர் அடிக்கும் கமண்டை பார்த்து மேடையிலேயே அந்த நடிகை சில முறை சிரித்து விட்டார். ஆடியன்சும் அதை ரசித்தனர். என்னதான் தியேட்டரில் படம் பார்த்தாலும் நேரடியாக மேடை நாடகம் பார்ப்பது தனி இன்பம்தான். நேரம் கிடைத்தால் பாருங்கள் நீங்களும்.
.....................................................................................

மெரீனா:
                                                           Cinematography: madrasbhavan owner
         பிலாசபி, அஞ்சாசிங்கத்தை வெறிகொண்டு தாக்கும் சிராஜுதீன், கே.ஆர்.பி., ரஹீம் கஸாலி        

சில நாட்களுக்கு முன்பு நடந்த மினி மீட்டில் வழக்கம்போல் கீரியும், பாம்புமாக சிராஜும் அஞ்சாசிங்கமும் சட்டையை கிழித்து கொண்டனர். சிங்கத்தின் ஆட்டம் ஜாஸ்தியாக இருந்ததால் மண்டை காய்ந்து வெறியான சிராஜை பார்க்க பாவமாக இருந்தது. சிங்கத்திற்கு கே.ஆர்.பி. மகுடி ஊத, சிராஜுக்கு நானும், கஸாலியும் சாம்பராணி போட..ஏக கலவரம்தான். இத்தனை அமளி துமளிக்கு மத்தியிலும் பிசாசபி பயபுள்ள தன் நீண்ட கூந்தலை ஸ்ட்ரா ஆக பயன்படுத்தி டீயை உறிஞ்ச முயற்சித்த கண்கொள்ளா காட்சி கீழே:

                                                                     
.........................................................................................

சிரித்து வாழ வேண்டும்:
சமீபத்தில் நான் ரசித்த பின்னூட்டம் என்றால் அது சிரிப்பு போலீஸ் வலைப்பூவில் பன்னிக்குட்டியார் இட்ட மடலை சொல்லலாம். செம தமாசுங்கோ. அதற்கான லிங்க்:


...........................................................................

பெண்சிங்கம்:
தமிழ்த்திரை வரலாற்றில் சிறப்பாக வசனம் பேசிய 'கலைஞர்'கள் பட்டியலில் விஜயகுமாரியின் பெயர் இல்லாமலா? பூம்புகார் படத்தில் கண்ணகியாக வேடம் தரித்து உணர்ச்சி பொங்க பேசும் இந்த நடிப்பை அடித்து கொள்ள இதுவரை ஒரு நடிகையும் தோன்றவில்லை என்பதில் சந்தேகம் இல்லைதான்.  

..................................................................................


.............................
My other site:
agsivakumar.com
............................

......................................................
சமீபத்தில் எழுதியது:

'நவீன கர்ணன்' அப்துல்லா பாசறை துவக்க விழா
.......................................................


Friday, April 20, 2012

'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா பாசறை துவக்க விழா


                                                                வெற்றித்திருமகன்  -  வெண் சூரியன்

ஓரிருமுறை நேரில் உம்மை நாங்கள் கண்டதுண்டு. ஆனால் எங்களை நீவிர் கண்டதில்லை. உம் புகழ் குறித்து பிரபல பதிவர்கள் சில சொல்லிக்கேட்டதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல். ஒரு வழிகாட்டி. எம் போன்ற இளையோருக்கெல்லாம் ஒரே வழிகாட்டி நீரன்றி வேறொருவரில்லை. வலது கை குடுப்பது இடது கைக்கு தெரியாமல் தானத்தில் சிறந்து நின்றான் கர்ணன். இரண்டு கைகளும் குடுப்பதை மூன்றாம் மனிதனுக்கு கூட தெரியாமல் அள்ளித்தருபவர் எங்கள் நவீன கர்ணன். 

அண்ணன் அப்துல்லாவை மானசீக குருவாக ஏற்று இன்று முதல் உதயமாகிறது....

'நவீன கர்ணன்' அப்துல்லா பாசக்கார பயல்கள் பாசறை!

அண்ணன் வழி நடப்பது ஒன்று மட்டுமே இந்த பாசறையின் லட்சியம். எங்கள் ஆசானின் சுண்டு விரல் அசையாமல் ஒரு அணுவும் அசையாது இங்கே.

அர்த்தமின்றி எங்கள் கர்ணனை சீண்டுவோர் மீது சீறிப்பாயும் எங்கள் சொல்லம்புகள்.

ராஜாதி ராஜ பதிவர்கள், பஸ்ஸர்கள் குறுக்கே நின்றாலும், கூனிக்குறுகாமல் சுழற்றி அடிக்கும் இந்த பாசக்கார பயல்கள் பாசறை.

கர்ணன் கரம் பற்றி கர்ம சிரத்தையுடன் கண்ணசராமல் காரியமாற்ற காத்திருப்போர் கண நேரமும் தாமதிக்காதீர். இதயபூர்வ உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கௌரவ உறுப்பினர்கள்:

பன்னிக்குட்டி ராம்சாமி
மணி ஜி
உண்மைத்தமிழன்
ஓ.ஆர்.பி. ராஜா
கே.ஆர்.பி. செந்தில்
கேபிள் சங்கர்
சுகுமார் சுவாமிநாதன்
குசும்பன்
வடகரை வேலன்
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
இரவுவானம் சுரேஷ் 
யோகா S.FR
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்

மற்றும் 'தலைநகர போர்வாள்' சுரேகா அவர்கள்.

சர்வதேச பாசறையின் கொ.ப.செ:
பாஸ்டன் ஸ்ரீராம்

இது போக 'தீ' 'வீர' இளைஞர் படை நிழல் உலகில் நித்திரையின்றி இயங்கும் என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்கிறோம்!!


- Ivann

'NEWFORT' ABDULLAH FANATICS  
.............................................................................


           

Thursday, April 19, 2012

அஜீத் கொடி எங்க பறந்தா உனக்கென்ன?அஜீத்திடம் சிக்கிய கவுண்டர்:

                                                                       

"ம்ம்.எழுந்துட்டேன்..இதோ வர்றேன்"

"பல்லு வெளக்காம் கிட்ட வராதன்னு சொன்னா கேக்கறியா? கொஞ்சம் இரு. பத்து ஸ்டெப் பேக்ல போயிடறேன்"

"இமய மலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?"

"எனக்கு ஒண்ணும் இல்ல. ஆர்வக்கோளாறுல பாகிஸ்தான் பார்டருக்கு அந்தப்பக்கம் கொடிய ஏத்தி வச்சி இருக்கடி மாப்ள. எங்க அவன்கிட்ட போயி 'உனக்கென்ன'ன்னு கேளு பாப்போம்?"

"ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?"

"ஆமாம் இவரு பெரிய கொலம்பசு. ஏழு கடலும் என்ன சொல்லிச்சின்னு ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காரு"

"எரிந்து போன சாம்பலில் இருந்து விரிந்து பறக்கும் பீனிக்ஸ் போல மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?"

"இந்த தொப்பைய வச்சிக்கிட்டு ஒழுங்கா ஸ்டெப்ஸ் போட்டு ஆடவே தள்ளாடும்போது, வானத்துல பறக்க வேற போறியா? எகத்தாளம் ஜாஸ்திதான். 

"உனக்கென்ன? உனக்கென்ன? உனக்கென்ன? உனக்கென்ன?"

"அது நாங்க கேக்க வேண்டிய கேள்வி...ஆஞ்சநேயா, ஆழ்வார், அசல், அட்டகாசம்..ரேஞ்சுல வந்த படத்த எல்லாம் நாங்க பாக்காம செதறி ஓடுனா உனக்கென்ன? உனக்கென்ன?"

"ஏற்றி விடவோ தந்தையும் இல்லை, ஏந்திக்கொள்ள தாய் மடி இல்லை. என்னை நானே சிகரத்தில் வைத்தேன். அதனால் உனக்கென்ன?"

"தம்பி...போதும். எம்.ஜி.ஆர். கலைஞர், சிவாஜி, ரஜினி...இவங்க பாக்காதா வறுமையா? உன்னை விட ரொம்ப வசதி கொறஞ்ச குடும்பத்ல பொறந்து பல நாள் பட்டினியா திரிஞ்சிதான் இந்த ஒசரத்துக்கு வந்துருக்காங்க. மைன்ட் இட்."

"இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை"

"டான்ஸ் ஆடும்போது தம் அடிக்க கூடாதுன்னு சொன்னா கேக்கறியா. மாஸ்டர் அவரு பாக்கெட்ல இருக்குற லைட்டரை தூக்கி கடாசுங்க"

"நெருப்பென்றும் தலைகீழாய் எரிவதில்லை. அலைகளின் தலையோ குனிவதில்லை"

"நெருப்பு எதுக்கு சம்மர் சால்ட் அடிச்சி எறியணும்? அலைக்கு ஏது தல? படுவா வாய்ல வந்ததை எல்லாம் பாடாத. கடவாப்பல்லுல கத்திய வுட்டு ஆட்டிடுவேன்"

"நீ என்ன உருகும் பனிமலை. நான்தானே எரிமலை..எரிமலை.."

"இப்படியே பாடிட்டு திரிஞ்சா 'பரங்கிமலை' தியேட்டருக்கு போற கூட்டம் இன்னும் ஜாஸ்திதான் ஆகும்"

"ஓப்பனிங் டே கூட்டத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல. மறுநாள் ஒரு ஈ காக்கா கூட கண்ணுல பட மாட்டேங்குதே!!"                                                          


"ஹிட்லராக வாழ்வது கொடிது. புத்தனாக வாழ்வது கடிது. ஹிட்லர், புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன?"

"என்னமா திங்க் பண்றான்யா. உனக்கு ஹிட்லர் மீசை வச்சி பாத்தா எப்படி இருக்கும்? வேணாம் விட்ரு. ஐயா இந்த அமெரிக்க மாப்பிள்ளை ரோல் எல்லாம் பண்ண மாட்டீங்களா? ஸ்ட்ரைட்டா இண்டர்நேஷனல் ஹீரோதானா ?"

"வெற்றி என்பது பட்டாம்பூச்சி. மாற்றி மாற்றி மலர்களில் அமரும். உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல"

"அவனைக்கேட்டா 'வாழ்க்க ஒரு வட்டம். கெலிக்கறவன் தோப்பான். தொக்கறவன் கெலிப்பான்' ன்னு சொல்றான். அதையே கொஞ்சம் டிங்கரிங் பண்ணி நீ இப்படி சொல்லிட்டு திரியற. ஆக ரெண்டும் பேரும் ஏகப்பட்ட ப்ளாப் குடுக்கறது ஜகஜம்னு சொல்ல வர்றீங்க..ரேஸ்கல்ஸ்"

"எனக்கொரு நண்பனாய் அமைவதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை. எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு தகுதியில்லை"

"நீங்க வேணும்னா இளய தளபதி மாதிரி டாக்டர் பட்டம் வாங்கி ஒரு மெடிக்கல் காலேஜ் கட்டுங்க சார். அதுல ஆறேழு அரியர்ஸ்ல பாஸ் பண்ணியாவது தகுதிய வளத்துக்கறோம்"

"நீ என்ன உருகும் பனிமலை. நான்தானே எரிமலை. எரிமலை. உனக்கென்ன? உனக்கென்ன? உனக்கென்ன தம்பி உனக்கென்ன?"

"ஏம்பா..இந்த இளைய தளபதி ரசிகர்கள் யாருனா இருந்தா தம்பிக்கு கொஞ்சம் கம்பனி குடுங்கப்பா..வயித்த கலக்குது. போயிட்டு வந்துடறேன்"

..........................................................................

................................................
தொடர்புடைய பதிவு:

நீ எந்த ஊரு? நான் எந்த ஊரு?
.................................................Saturday, April 14, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(15/04/12)


அன்னையின் ஆணை:
                                                 

சில நாட்களுக்கு முன்பு மெரீனா சென்றிருக்கையில் காந்தி சிலை அருகே இசை மழை பெய்வதைக்கண்டேன். வெள்ளுடை தரித்த நபர்கள் சிலர் வாத்தியங்களை வாசித்துக்கொண்டிருக்க அருகில் 'கிரேட்டர் சென்னை போலீஸ் பேண்ட்' எனும் வாசகம் இருந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த போலீஸ் ஒருவரிடம் விசாரித்தபோது "இந்த காவலர் அணி பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் மாலை நேரம் மக்களை இசையால் மகிழ்விக்குமாறு முதல்வர் சொன்னதன்பேரில் இதை நடத்தி வருகிறோம்" என்றார்.

ஒருவேளை பிரிட்டிஷ் காலத்து இசையாக இருக்குமோ எனும் ஆர்வத்தில் கூர்ந்து கேட்டபோது முதலில் ஒலித்த பாடல்: 'அடிடா அவன. ஒதடா அவன'. பலே. அடுத்த பாடல்: 'பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த'..வாத்தியார் ஹிட்ஸ். அம்மா ஆட்சில மக்களுக்கு இந்த மாதிரி எத்தனையோ நல்லது நடக்குது..நீங்க என்னடான்னா குத்தம் சொல்லிக்கிட்டு. கெளம்புங்க மெரீனாவுக்கு.
.................................................................................... 

அட்டகாசம்:
முன்பிருந்ததைப்போல் இப்போதெல்லாம் பெரிதாக நகைச்சுவை நிகழ்ச்சிகள் தமிழ் சேனல்களில் வருவதில்லை என்பது ஒரு குறைதான். ஆதித்யா சேனலில் அதை ஈடுகட்டும் வண்ணம் வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் இமான் அவர்கள் நடத்தும் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க'. விதவிதமான கேள்விகளை அவர் மக்களிடம் எழுப்பும் விதமும், அதற்கு கிடைக்கும் அதிரடி பதில்களும் ஜாலி பட்டாசுகள். சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்ச்சி. சாம்பிள் காணொளி பார்க்க:.....................................................................................

மதராசப்பட்டினம்:

இழுத்துக்கொண்டு வா - 'இன்னாபா இது? இப்டி  ஒம்போது  வார்த்த போட்டு இழுத்து பேசுனா எக்கச்சக்க நேரம் நாஸ்தி ஆவுமே' என்பதை உணர்ந்த எங்க ஊரு வாத்யார் ஒருவன் அதை கஷ்டப்பட்டு சுருக்கி செதுக்கினான் எட்டு வார்த்தைகளாக:


இழுத்துக்குனு வா - 'இல்ல மாமு. இன்னும் ஸ்டைலா யோசி' என திக்கெட்டும்  கூக்குரல் கேட்டதால் அடுத்த வார்த்தை உதயமானது.

இஸ்த்துக்குனு வா, வல்ச்சிக்கினு வா - 'ஸ்டைலா இருந்தாலும் நீளம் தாஸ்தியா கீதே?' மீண்டும் ஒரு சலசலப்பு. ஆங்..இது எப்படி இருக்கு.

ஈத்துக்குனு வா, இட்டுக்குனு வா - 'இதெல்லாம் வேலைக்கே ஆவாது. இன்னும் நசுக்கு மாமே' என்றான் ஒருவன்.

இட்னு வா - 'இட்னு வாவா...இதுக்கு மேல கொறைக்க முடியாதா நைனா?' என்று அடுத்த அலறல்.

பயங்கர ப்ரஷரில் இருந்த அண்ணாத்த பல வருட சிந்தனைக்கு பின் கண்டே பிடித்து விட்டான் அந்த வார்த்தைகளை. அவை பின்வருமாறு:

இட்டா, வல்ச்சா - சும்மாவா சொன்னாங்க. விடாமுயற்சி. விஷால் ரூப வெற்றி!!!
...............................................................................

சுமைதாங்கி:
மின்வெட்டு பிரச்னையால் அதிகம் மெர்சலாகி கிடப்பது சென்னைதான். தமிழகத்தின் பிற இடங்களில் பல மணிநேர பவர் கட்டால் ஏகப்பட்ட அமவுன்டை சேமித்து குறைந்த மின் கட்டணமே செலுத்துகிறார்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆனால் ஜஸ்ட் 2 ஹவர்ஸ் மட்டுமே கரண்ட் போவதால் பலமடங்கு பில் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சென்னைவாசிகள். அரசுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என்ன பாவம் செய்தோம் நாங்கள்?
................................................................................

தொட்டுப்பார்:
தொடர்ந்து ஊரெங்கும் போலீஸ் தேடத்தேட, அவர்கள் கையில் சிக்காமல் நம்ம சிங்கக்குட்டி ஜே.கே.ரித்தீஷ் ஓட ஓட..என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு என்றெண்ணி ரத்தம் கொதித்த கோடானு கோடி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது நீதிமன்றம். 'வீரத்தளபதி' ரித்தீசுக்கு ஜாமீன் கிடச்சிருச்சிங்கோ!! பத்திரிகை பேட்டி அளித்த அண்ணன் சொன்னது: "என் மீது பொய்யாக கடத்தல் வழக்கு போட்டுள்ளனர். அதனால் மிகவும் மனம் நொந்தே போனேன்".

எங்க தலைவன தம்மாதூண்டு டம்ளருக்குள்ள வச்சே கிட்னாப் செஞ்சிடலாம். அவர் இன்னொரு ஆளை கடத்தறாரா? யாரை ஏமாத்த பாக்கறீங்க? பீ கேர்புல். (எங்களச்சொன்னோம்).
.....................................................................................

ஆடுபுலி ஆட்டம்:
இவ்வாண்டு நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றது சந்தோசமான செய்தி எனினும் அதில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாதது பெருங்கொடுமை. வடக்கத்தி ஆட்களால் பல துறைகளில் ஓரம் கட்டப்படும் தமிழனுக்கு பத்தோட பதினொண்ணு. அத்தோட இது ஒண்ணு. இறுதியாக ஒரு தரம் லியாண்டர் பெயசுடன் ஜோடி சேர்ந்து ஒலிம்பிக் தங்கம் வெல்வார் மகேஷ் பூபதி என எதிர்பார்த்தால் அதற்கும் வாய்ப்பில்லை போல. 'பெயசை விட ரோகன் போபண்ணாவுடன் சேர்ந்து ஆடுவதே எனக்கு சரிப்பட்டு வரும்' என்று சொல்லிவிட்டார் 'ஆல் கோர்ட்' பூபதி.
.................................................................................

எதிரும், புதிரும்:

சித்திரை ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்று மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறிவிட்டார் மேடம். அந்த நாளை நீங்களும், கலைஞரும் எத்தனை முறை வேணும்னாலும் மாத்திக்கங்க. நாங்க வழக்கம்போல 'விஷ் யு எ ஹாப்பி டமில் நியூ இயர்' அப்படின்னுதான் எஸ்.எம்.எஸ்.அனுப்புவோம். ஏன்னா எல்லாத்தையும் தமிழ்லயே பேசிட முடியாது. தட் இஸ் பராக்டிகல்லி நாட் பாசிபிள்.


For Example cycle is invented by the foreign people only. Wheel, bell, pedal, handlebar...
..................................................................................

புதுப்புது அர்த்தங்கள்:
படிக்கும் பதிவுகளில் சில என்றும் மனதில் நிற்கும் வண்ணம் இருக்கும். அதைப்படித்து விட்டு ஓரிரு வரி கருத்துகளை சொல்லிவிட்டு கடந்து விடுவோம். பதிவுகளை விட இப்போதெல்லாம் பின்னூட்டங்களில் காரசாரமான, மிகவும் 'அத்யாவசியமான' கருத்து மோதல்களுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் மதப்பிரச்சனை என்றால் பிரளயம்தான் போங்க. வெகு அரிதாகத்தான் பின்னூட்டங்கள் பதிவைத்தாண்டி நம்மை ரசிக்க வைக்கும். அப்படி ஒரு பின்னூட்டத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியதெனக்கு. சமீபத்தில் த்ரீ படத்தை மையமாக வைத்து உண்மைத்தமிழன் அவர்கள் எழுதிய பதிவும், அதற்கு சில்ட் பியர்ஸ் இட்ட கருத்தும் பதிவுலக வரலாற்றில் ஒரு மைல் கல் என்பது என் கருத்து. அதற்கான லிங்க் கீழே. படிக்காத நண்பர்கள் படித்துப்பாருங்கள்.

3 படக்கதை - என் வாழ்விலும் ஒரு சோகம்..!
............................................................................................

அவள் அப்படித்தான்:                                                                      

மலையாள நடிகர் திலீப் பெண் வேடத்தில் நடித்த 'மாயமோகினி' படம்தான் இப்போதைக்கு அங்கே டால்க் ஆப் தி டவுன். நீங்களும் அவரை ஒரு ரொமாண்டிக் லுக் விடுங்க:


..............................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................

.............................................
சமீபத்தில் எழுதியது:


............................................கேப்பிடல் திரும்பிய கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யே வருக!!
தாடிகள் எல்லாம் தாகூரா? மீசைகள் எல்லாம் பாரதியா?
கேப்பிட்டலில் இருப்போர் எல்லாம் கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யா?

சரி என்று கூட சொல்ல வேண்டாம். ரி என்று மட்டும் ரீங்காரமிடு.
எதிரி நம்மை பார்த்து சொல்வான் 'தெரியாம மோதிட்டேன். ஆளை விடு'.
ஐயகோ என் செய்ய..நீ இல்லா நாட்களில் விதிக்கப்பட்ட வாழ்வை
வாழ்வதாக சொல்லிக்கொண்டிருந்தோம் சபிக்கப்பட்டிருந்தாலும்.

சிங்கை சிலிர்க்க, மங்கை(மலேசியா) தளிர்க்க(!) நீ பாட்டுக்கு
சென்று விட்டாய் அயல்நாடு.
நேற்றுவரை தலைநகராம் சென்னையில் நீ இல்லாத நொடிதோறும் தொண்டர்படை பட்டது பெரும்பாடு.

எங்கள் தளபதி தலைநகரில் விடுமுறை எடுத்த நாள் பார்த்து
என்னமா ஆட்டம் போட்ட சுனாமியே!!
அந்த சுனாமியை சுருட்டி வாயில் வெற்றிலையாக போடு
சுனாமியின் பினாமி கே.ஆர்.பி.யே!!

                       

வேட்டியில் கறை பட வேர்வை சிந்தி உழைப்பவன் ஊரில்
பெய்யெனப்பெய்யும் மும்மாரி.
கரைவேட்டியில் கள்ளப்பார்வை கொண்டு வயிற்றை வளர்ப்பவன்
எங்கள் அண்ணனை பொறுத்தவரை கேப்மாரி.

அண்ணா சாலை அலற..மேற்கு மாம்பலம் மிளிர(?)
தலைவன் வந்துவிட்டான் தாயகம்.
இனி சபைக்கூட்டங்களில் அண்ணன் மட்டுமே நடுநாயகம்.

'எங்கய்யா இருக்க' என்று நித்தம் கேட்காமல்
கேபிளின் அலைபேசி ஆடியது ஊசல்.
'தன்னிகரில்லா தளபதி தமிழகம் வந்துவிட்டான்'
செய்தி கேட்டு சங்கர நாராயணரின் உள்ளம் ஆடுது ஊஞ்சல்.

கடலலையென அலைகடலென திடுக்கென திரண்டு வா
கே.ஆர்.பி.க்ரூப்பின் இளைஞர் பெரும்படையே!
இனி ஞாயிறு சந்திப்பு தோறும் இரவு 12 மணிக்கு
முன்பாக மூடக்கூடாது மெரீனா டீக்கடையே!!
............................................................................


வெற்றிகரமாக வெளிநாட்டு விஜயத்தை முடித்துவிட்டு சற்றுமுன் தமிழகம் திரும்பிய...


'தென் தி.நகரின் தேவர் மகனே...'
'யூத் ப்ளாக்கர்களின் போர்வாள்' கே.ஆர்.பி.யே... வருக! வருக!!
..............................................................................


Designs: Veedu Sureshkumar.

............................
My other site:
.............................

..................................
சமீபத்தில் எழுதியது:
...................................
                       

                                                 
                                                                       

Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி                                                               நாளைய முதல்வர் உதயநிதியுடன் நான்..
                                                        
தியேட்டரில் ட்ரெயிலராக மட்டுமே பல மாதங்கள் ஓடிய ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு சைதை வழியே சென்ற போது ஒரு போஸ்டர் கண்ணில் பட்டது: "வரலாற்று நாயகன் நடிக்கும் ஓகே.ஓகே.வெற்றி பெற வாழ்த்தும் - உதயந்தி ட்ரெயிலர் ரசிகர்கள் சங்கம்''. செம நக்கல் பார்ட்டிதான் போஸ்டர் அடித்து இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தமிழக ரசிகர்களை பாடாய் படுத்திய படம் ரிலீஸ் ஆகிறது என்றால் சும்மாவா?
                                                    
சாந்தம்(சத்யம் காம்ப்ளக்ஸ்) தியேட்டருக்கு நான் சென்ற சில நிமிடத்தில் தன் நண்பர்களுடன் கேண்டீன் அருகே என்ட்ரி தந்தார் உதயநிதி. அவரிடம் ஒரு ஹாய். ஒரு ஸ்டில். பிறகு ஆல் தி பெஸ்ட் உதய்என கை குலுக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். எனக்காக ரிசர்வ் செய்த இருக்கையில் அமர்ந்ததும் வந்தார் நாளைய சி.எம்.மின் தோழர் ஒருவர் பாஸ்..ஹீரோ இங்க உக்கார போறார். ரெண்டு சீட் தள்ளி.ப்ளீஸ்”...என சொல்ல..இடம் மாறியதுதான் மிச்சம். சத்யம் மெயின் தியேட்டரில் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பார்க்க இடம் மாறினார் உதய். அவர் உள்ளே வருவார் என நம்பி அளவுக்கு மீறி பிகில் அடித்த சில்வண்டு கூட்டம் பிறகு ஓய்ந்தே போனது.       

                                                                    
சரி கதைக்கு(?) வருவோம். வேலை வெட்டி போகாமல் சுற்றும் இளைஞன், அவனை லவ்கீக வாழ்க்கைக்கு திசை திருப்பும் மைதா மாவு ஸ்கின் பெண், ஒயின் ஷாப்பில் குடியிருக்கும் ஒரு நண்பன், க்ளைமாக்சில் ஒரு ஸ்டார் என்ட்ரி..அதேதான். இயக்குனர் ராஜேஷின் டெம்ப்ளேட் படவரிசையில் அடுத்ததுதான் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. டிகிரி படித்ததாக பொய் சொல்லி கறார் ஆசிரியர் அழகம்பெருமாளின் மனைவியாக காலம் தள்ளும் எவர் யூத் மம்மி சரண்யா. இவர்களின் மகனாக சரவணன்(நம்ம மினி தளபதிதான்). ஜிகிரி தோஸ்தாக பார்த்தா. டெபுட்டி கமிஷனர் ஷாயாஜி மகள் ஹன்சிகாவை லவ்வுகிறார். பிரிகிறார். மீண்டும் லவ்வுகிறார் சரவணன். கடைசி ரீலில் என்ன ஆச்சி என்பதே கதைங்கோ!

இது போன்ற சப்ஜெக்டுக்கு ஜீவா, ஆர்யா போன்ற டக்கர் பெர்பாமர்களை ஹாண்டில் செய்த ராஜேஷுக்கு உதயநிதியை நடிக்க வைப்பதற்குள் தாவு தீர்ந்து இருக்கும் என்பது முதல் பாதியில் மிக நன்றாக தெரிகிறது. கூட ஹன்சிகா வேறு. சொல்லவா வேண்டும். நடிப்பு குழாயில் நவரசம் என்ன..ஒற்றை ரசம் கூட சொட்டு சொட்டாகத்தான் ஊற்றுகிறது இருவரிடம் இருந்தும். இரண்டு பேரும் அடிக்கடி சிரிக்கிறார்கள் பாருங்கள். அப்படி ஒரு சிரிப்பு. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பயிற்சிப்பட்டறைக்கு சென்றிருப்பார் போல ஹீரோ. அதனால் இரண்டாம் பாதியில் நடிப்பை மெருகேற்றி பாஸ் மார்க் வாங்குகிறார்.


டிகிரி வாங்காத காரணத்திற்காக பல வருடங்கள் மனைவியை பார்த்து சீறும் கணவனாக அழகம் பெருமாள்..என்ன லாஜிக்கோ. ரிசல்ட் பார்த்து விட்டு இரவு லேட்டாக வந்து சமாளிக்கும் காட்சியில் சரண்யா சக்கை போடு போடுகிறார். வழக்கம்போல மொக்கை போலீஸ் அதிகாரியாக(ஹீரோயின் அப்பா..அப்பறம் எப்படி) ஷாயாஜி. அந்தோ பரிதாபம். கெஸ்ட் ரோலில் சினேகாவும்,ஆர்யாவும். 

ஹாரிஸ் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளன. 'வேணாம் மச்சி வேணாம்', 'அகிலா அகிலா' இரண்டும் தாளம் போட வைக்கின்றன. டான்ஸில் ரொம்ப நேரம் யோசித்துதான் ஸ்டெப் வைக்கிறார் ஹீரோ. பல காட்சிகளை சத்யம் தியேட்டரிலேயே படமாக்கி உள்ளனர். கேட்டால் உதய், சந்தானம் இருவரும் அங்கு வேலை செய்கிறார்கள் என்று ஒரு செகண்ட் ஞாபகம் செய்கிறார் இயக்குனர். சிவா மனசுல சக்தியில் ஜீவாவின் லோக்கல் ஸ்லாங்கும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யா - சந்தானத்தின் அல்டிமேட் கெமிஸ்ட்ரியும் பட்டையை கிளப்பும். அத்துடன் அனுயாவும், நயனும் கொஞ்சம் நடிக்கவும் செய்தார்கள். ஆனால் இங்கே அந்த ப்ளஸ்கள் எதுவும் இல்லாததே மைனஸ்.
  

ஆந்திர ஹீரோக்கள் ஸ்டைலில் பளீர் கலர் கார்கோ பேண்ட்டுடன் படம் நெடுக வலம் வந்து நம்மை காப்பாற்றுகிறார் சந்தானம். இவர் இல்லாத இந்த படைப்பை(!) கற்பனை கூட செய்து பார்க்க இயலாது என்பதே Fact u. Fact u. Fact u.

சந்தானத்தின் சரவெடிகள் சில...

* "சிக்சர் அடிக்கற மாதிரி ஓங்கிட்டு டக்குனு ஏன் டொக்கு வச்ச மச்சான்"

* "காதல்ல தோத்தவன் காவி ட்ரஸ் போடாம நேவி ட்ரெஸ்ஸா போடுவான்"

* "ராணுவத்துல உசுர விட்டவனை விட ஆணவத்துல உசுர விட்டவன்தான் அதிகம்"

''ஏண்டா கோபமா இருக்க. சிரியேன்'' என்று சரண்யா கேட்க கோட்டா ஸ்ரீனிவாச ராவ் போல சந்தானம் சிரிக்கும் இடம் செம வாத்யாரே. ''ப்ளைட் கீழ விழற மாதிரி இருந்தா பாராஷூட் தருவோம்'' என ஏர் ஹோஸ்டஸ் சொல்வதற்கு சந்தானத்தின் பதில்: "பாராஷூட்டா. உசுரு போற நேரத்ல எதுக்கு எண்ணைய தர்றீங்க"

                                        
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்..ரேஞ்சுக்கு இல்லாவிடினும், முப்பத்தி இரண்டு பற்களில் பதினாறு பற்களையாவது சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள் ஓ.கே.ஓ.கே. குழுவினர்.


ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு தபா பாக்கலாம். ஓக்கே!
               
.......................................................................                                                


...............................
My other site:
...............................
Thursday, April 12, 2012

நாளை தாயகம் திரும்பும் எங்கள் பருந்தே!!


                                                                 
சென்ற மாதம் நீ ஏறிய விமானம் விருட்டென பாய்ந்தது அயல்நாடு.
அதனால் விக்கித்து நின்றதோ தாய்த்தமிழ்நாடு.

உனது பிரிவால் இனி கே.ஆர்.பி. க்ரூப் தன்னால் எதுவும் முடியாதென
பெருங்குரலெடுத்து கோரஸாக கர்ணகொடூரமாக அழுத நேரத்தில்
கோடானு கோடி சந்ததிகளில் ஒன்று
தன்னை செந்திலானந்தா என்று அறிவித்தது.

'அண்ணனுக்கே டூப்பா..போடா டூமாங்கோலி' என உனது
உடன்பிறப்புகளின் உள்ளங்கால்கள் அவனை ஓங்கி உதைத்தது.
பெரியார், அண்ணா, பகுத்தறிவு, வெங்காயம் போன்ற எழுத்துகள் எல்லாம்
உன்னால் ஒட்டடை அடிக்கப்படாமல் ஏங்கி பதைத்தது.

விளிம்பு நிலை மனிதர் மனமும், தெருவோர நாய்களின் குணமும்
உன்னால் கவி பாடப்படாமல் அல்லோகலப்பட்டது.
நீ இல்லாத நாள்தோறும் ஆத்திகம் அளவில்லா ஆட்டம் போட்டது.


வரப்போகிறாய் நீ என்று ஒரு எச்சரிக்கை விடுத்ததும்
சைத்தான்களும், சைத்தான் கா பச்சாக்களும்
பதுங்கு குழியில் பம்மி மறைந்தன.
                                                                   

'கே.ஆர்.பி. கடல் கடந்து போய் விட்டார். ம்ம்..அடிக்கிற அடியில்
தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்கட்டும்'
என முரசொலியில் கலைஞர் கலந்து கட்டி அடித்தது நேற்று.
நாளை நீ வரப்போகிறாய் எனும் தகவல் கேட்டு
முரசின் ஒலியை முற்றிலும் ம்யூட் செய்து விட்டது அனல் காற்று.

இவ்வார இறுதியில் அடுத்த ஆட்டம்..
மெரீனாவில் ஒரு வட்ட மேசையை சுற்றி
நீர் ராசாவாகவும், நாங்கள் சிப்பாய்களாகவும்..
ஒற்றை டீயை மட்டும் ஆர்டர் செய்துவிட்டு...
மணிக்கணக்காக அந்தக்கடையில் நாம் டீயை ஆத்தோ ஆத்தென ஆத்த
விவாதத்தில் நாங்கள் ஜெயிக்க நீர் தோற்க
நீர் ஜெயிக்க நாங்கள் தோற்க..
கடைக்காரன் கடுகடுவென முறைக்க..ஹய்யோ ஹய்யோ!!


குருவி எனப்பறந்து பருந்தாய் திரும்பி பலகோடி வெள்ளிகளை
வானில் சுமந்து வரும் எங்கள் விடிவெள்ளியே!!
வரும் வெள்ளி மாலை அன்னை பூமியாம் சென்னைக்கு
நீ திரும்பும் நாளை எண்ணி எண்ணி எங்களுக்கு தூக்கம் வர்லியே!!
..........................................................................................

அயல்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு நாளை அன்னை தேசம் திரும்பும் 'யூத் க்ரூப்பின் நிரந்தர பொதுச்செயலாளர்' கே.ஆர்.பி.யே வருக! வருக!!
.......................................................................................

Thanks to Graphics: Veedu Sureshkumar.
  

Wednesday, April 11, 2012

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு?


நவீன கட்டண கழிப்பறையில் காசு வசூலிக்கும் தலைவர் கவுண்டமணியிடம் கல்தா குடுத்து தப்பித்த இள்ய தள்பதி...குற்றம் நடந்தது என்ன?

                                                                    
"நீ எந்த ஊரு நா எந்த ஊரு..முகவரி தேவை இல்ல"

"எனக்கு கண்டிப்பா உன் முகவரி தேவ. நவீன கட்டண கழிப்பறைல ரெண்டு மாசம் கடன் சொல்லிட்டு ஊரை விட்டு ஓடி இருக்க..படுவா..ஒன்ன விடவே மாட்டேண்டி மாப்ள"

"நீ என்ன உறவு நா என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்ல"

"அதை எதுக்கு எங்கள பாத்து பாடற. சிட்டிசன் வீட்டு வாசல்ல போயி பாடு"

"உன்னை யாரோ பெத்திருக்க..என்னை யாரோ பெத்திருக்க..ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா"

"டாவா? கடவாப்பல்ல புடுங்கி எறிஞ்சிடுவேன் ஜாக்ரத. எங்கப்பன் குதிர மூக்கன் எனக்கு வச்சிட்டு போன ஒன்ற ஏக்கர் ன்லத்துக்காக என்ன அண்ணன்னா கூப்புடுற..ராஸ்கோலு"

"மண்ண நம்பி வேரு. விண்ண நம்பி ஆறு. என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு"

"வேரு, ஆறு, பாரு..ஆஹா. ஆமா இப்படி எழுதுற அந்த புலவருக்கு எவ்ளோ மாப்ள சம்பளம் போட்டு தர்றீங்க?"

"உனக்கொரு பேரு, எனக்கொரு பேரு..ஒன்னு சேந்து பாரு. இந்தியன்னு பேரு"

"ருவுக்கு ரு போட்டே நல்லா ரூவா சம்பாதிக்கரான்யா அந்த கவிஞன்."

"பொறப்பும் இறப்பும் அவன் கையில. நம்ம வாழும் வாழ்க்க நம்ம கையில"

"யம்ம..யம்மா.."

                                                                    
  
"கண்ண பொத்தி வாழு. காதை பொத்தி வாழு. வாய பொத்தி வாழு. நம்ம காந்தி மொழி கேளு"

"எல்லாத்தையும் பொத்தி ஒரு நாள் வாழ்ந்து பாத்தேன்..அப்ப கூட கனவுல நீ கில்லில ஒவ்வொரு கட்டடமா தவ்வி மொளகாப்பொடி தூவுற சீன் வந்து என்ன சிரிக்க வச்சிடுது மாப்ள. காந்தி வடநாட்டு ஆளு..அவர் மொழியை நாங்க எப்படி கேக்கறது..? கைல பேனா இருந்தா என்ன வேண்ணா எழுதறதா.."

"அம்மை அப்பன் தானடா..நம்மை ஆளும் சாமிடா"

"அம்மை ஓக்கே..அது அப்பன் இல்லை..தாத்தன்டா தம்பி"

"கருவறை தோழிடா..நம்ம உயிர்நாடிடா"

"ஸ்டாப் தேர்...தோழிங்கள பத்தி மட்டும் பேசாத. அவங்க நடத்துன நாடகத்த பாத்து கலவரமாகி நானே வயிறு கலங்கி நாலு நாளா கக்கூஸ்ல கெடந்துருக்கேன்..நெக்ஸ்ட் லைன் ப்ளீஸ்"
   
"நீ எந்த ஊரு நா எந்த ஊரு..முகவரி தேவை இல்ல"

"மறுபடியும் பார்ரா..அதையே கேக்கறான்..நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். ரெண்டு பேரும் மைலாப்பூருன்னு. மகனே...பைபோலார் டிஸார்டர் தனுஷ், மலுடிபுள் பெர்சனாலிட்டி டிஸார்டர் விக்ரம் மாதிரி 'நீ எந்த ஊரு நா எந்த ஊரு'ன்னு ஆக்ட் குடுத்துகிட்டே தெருத்தெருவா அலைஞ்சாலும் சரி. உட மாட்டேன்..என்னோட நவீன கழிப்பறைய நாற அடிச்சிட்டு 47 ரூவா கடன் வச்சிட்டு போன உன்ன வண்டலூர் ஜூவுக்கு தந்தி குடுத்து புடிச்சிட்டு போக 
வக்காம தூங்க மாட்டண்டி"
...................................................................................

...............................
விரைவில் அஜீத் - கவுண்டர் கலாட்டாவுடன் மீட் பண்ணுவோம்.
................................
Related Posts Plugin for WordPress, Blogger...