CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, March 30, 2012

இன்னா வாத்யாரே..இதுக்கு பதில் சொல்லு பாப்போம்'பலே குஸ்கா' சேனல்ல பவர் ஸ்டார் நடத்தப்போற 'பத்தே நொடியில் பத்து கோடி' நிகழ்ச்சில கலந்துக்க துடியா துடிக்கறீங்களா? அதுக்கு முன்ன கீழ இருக்குற அஞ்சி கேள்விங்களுக்கு பதில் சொல்லுங்க. பவர் ஸ்டார் நடத்துற போட்டிக்கான என்ட்ரன்ஸ் டிக்கட்டை வெல்லுங்க...

                                                                         
1. நித்தம் ஒரு அயல்நாட்டு அதிபருடன் கைகுலுக்குவது போல் உங்களுடனும் 'மண்' மோகன் கை குலுக்க  வேண்டுமா? அப்படி என்றால்  நீங்கள் முதலில் செய்ய வேண்டியது...

A)  எத்தனை தமிழன் உசுரை விட்டாலும் வாயில் நிப்பிளை சப்பிக்கொண்டு பின் டிராப் சைலண்டை மெயின்டெயின் செய்ய வேண்டும். 'என்னடா இது அநியாயம்? இதை கேட்பார் யாரும் இல்லையா' என்று ஆவேசமாக ஷங்கர் பட கிளைமாக்சில்  வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் டேக் ஆப் ஆடக்கூடாது. 

B) தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள் படும் அவதி குறித்து எவனாவது நம்மிடம் எமோஷனாக பேசினால் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு ஒரு  லிட்டர் ரத்தத்தை ஊற்ற வைக்க வேண்டும். அதை வீடியோ பதிவு கண்டிப்பாக செய்ய வேண்டும். 

C) (சோறு) கண்ட இடத்தில் எல்லாம் குந்திக்கொண்டு அகிம்சை வழியில் போராடுதல், பார்லிமென்ட் தூண்களில் வவ்வால் போல தொங்கிக்கொண்டு 'திருக்குறளை தேசிய மொழியாக அறிவியுங்கள்' என சேட்டை செய்தல், பிரதமர் கார் செல்லும்போது குறுக்கே பாய்ந்து 'ஏக் காவ் மேக் ஏக் கிசான் ரகு தாத்தா' என இந்தியில் இஷ்டத்துக்கு உளறுதல் என ஏதும் செய்யாமல் '(டெல்லி) எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி' பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். 

2. இரண்டே நாளில் 'மெகா ஸ்டார்' பதிவர் ஆக வேண்டுமென்றால்.....

A) ஆப் சாரியில் அம்சமாக இருந்த அவள் என்னை குறுகுறுவென பார்த்தாள். நான் அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை.  கடந்துவிட்டேன் நூறடி.  பிடரியில் விழுந்தது ஓரடி.

அவள்:  'செருப்பு டோக்கனுக்கு காசு தராம கமுக்கமா போறியே' 

நான்: 'இப்ப நீ பேசுறது உன்கிட்ட. என் உன் காலுல போட்டுருக்கிற செருப்பே நாந்தாங்கிறதை மறந்துட்ட'.

                                   
இப்படி எலுமிச்சம் பழத்தை மரத்தை எடுத்து தலையில் தேய்த்தாலும் ஒன்றும் விளங்காத கவிதையை கே.ஆர்.பி. செந்தில் ஸ்டைலில் எழுத வேண்டும். கண்டிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் படமொன்றை போட்டே தீர வேண்டும். பதிவிற்கான தலைப்புகள் இப்படி இருத்தல் அவசியம்: 'முக்கோண பித்தங்கள்', 'நான் இன்னும் ஒரு நொடியில் சட்டையை கிழித்து கொள்ள நேரிடும்'.........

                                            
B) வில் ஸ்மித் நடித்த படத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு வந்தால்  'நாயகன் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரன் என்பதால் அவன் கருப்பு நிறத்தை கிண்டல் செய்யும் வண்ணம் 'மேன்(!) இன் ப்ளாக்' என டைட்டில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனினும் ஸ்மித்தை கருப்பு கோட்டுடன் உலவ விட்டு அவரை பகுத் (அச்சா) தறிவு பகலவனாக காட்டியதை ஆரத்தி எடுத்து வரவேற்கலாம் :) - இப்படி யுவகிருஷ்ணா ஸ்டைலில் பஞ்ச் அடிக்க வேண்டும். குறிப்பாக 'திராவிட் அடித்த டன் (100) அனைத்திற்கும் கவுரவம் செய்யும் விதமாக அவருக்கு திராவிடன் பட்டத்தை அளித்தாலென்ன?' என்று தினுசு தினுசாக யோசித்துக்கொண்டே வேண்டும்.  

C) மொட்டை மாடியில் யாராவது காக்கைக்கு இட்லி வைத்திருந்தால்  சட்னியுடன் லவட்டி விட வேண்டும். அதை டைட் க்ளோஸ் அப்பில் போட்டோ எடுத்து விட்டு, 'ஆயிரம் வெள்ளை இட்லிகளை உண்டிருப்பினும், இப்படி ஒரு வெள்ளை வெளேர் இட்லியை..சான்சே இல்லை. என்ன சொல்ல..டிவைன். தேங்காய் யூஸ் பண்ணி செய்த தேங்காய் சட்னி, எட்டுத்திக்கிலும் பரவிக்கிடக்கும் கருவேப்பிலை, ஸ்பூனுக்கு ஸ்டெப்னியாக எனக்காக மெனக்கெட்ட விரல்கள்..என டீடெய்லிங்கை பதிவு செய்து கேபிள் சங்கர் போல பக்குவமாக எழுத வேண்டும். 

3. உங்கள் எதிரிகளை ரத்த வாந்தி எடுக்க வைத்து 'கூட்டத்துல ஒரு பச்ச சட்டக்காரனும்' எஸ்கேப் ஆக விடாமல் சுழற்றி சுழற்றி அடிக்க வேண்டுமெனில்..

A) உங்கள் வீட்டு முதல் மாடிக்கு நடந்து சென்றதை பற்றி மட்டும் குறைந்தது 365 பதிவும், அதில் 1,00,76,000 படங்களும் போட வேண்டும். படியின் நிறம், சுவற்றில் இருக்கும் கீறல்களின் எண்ணிக்கை, படிகளில் கால் வைக்கும்போது ஏற்படும் ஒலியின் ஆடியோ தொகுப்பு என அனைத்தையும் ஒன்று விடாமல் நாஞ்சில் மனோ போல 'போட்டுத்தள்ள'  வேண்டும்.  

B) வெள்ளிக்கிழமை தமிழ், ஆங்கில டப்பிங், போஜ்பூரி, ஹீப்ரு, சமஸ்கிருத மொழி படங்கள் ரிலீஸ் ஆகாமல் போனால் கூட கவலைப்படாமல் கே.டி.வியில் காலை ஏழு மணிக்கு போடும் ஒரு ஷோ கூட ஹிட்டே ஆகாத படத்தை பற்றி விமர்சனம் போட்டு சிபி போல ஜெட் வேகத்தில் ஹிட்டடிக்க வேண்டும். 

C) 'சுச்சா போறேன். தயவு செஞ்சி ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி கால் பண்ணுங்க' என்று பதறி, உதறி, கதறினாலும் கூட சக பதிவரை பாவம் பார்க்காமல் 'ப்ளாக்ல ரெண்டு பேரு மண்டைய ஒடச்சிட்டு இருக்காங்க. உனக்கு உச்சா ஒரு கேடா' என்று காண்டு ஏற்றி போனை கட் செய்ய விடாமல் 'நாய் நக்ஸ்' நக்கீரனை போல நம்மிடம் சிக்கிய அடிமையை தொடர்ந்து பேச வைக்க வேண்டும். 

4. 'என்ன ஒரு புத்திசாலித்தனம்' விருதை விருட்டென வாங்க...

A) மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம் ஆற்காட்டார், கலைஞர், ஜெ ஆகியோரை மக்கள் சபிக்கையில் 'மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நாந்தானுங்கோ' என்று சத்தம் போடாமல் பகுமானமாக பம்மிக்கொண்டு இருக்கும் வித்தையை கற்க வேண்டும். 

B) ஓய்வுபெறும் நிலை  வந்தால் உடனே 'ரசிகர்கள் விரும்பினால் 2015 உலகக்கோப்பை வரை ஆடுவேன்'என்று வெக்கத்தை கக்கத்தில் மறைத்துக்கொண்டு கனகெம்பீரமாக கூவ வேண்டும். 

C) நேஷனல் ஆந்தெம் தெரியுதோ இல்லையோ சச்சின் ஆந்தெம், லவ் ஆந்தெம் என்று தனுஷ், சிம்பு சொறிவது போல 'பெட்ரோல் ரேட்டு பீறிக்கிச்சி' ஆந்தெம் மாதிரி மனதில் பட்டதை ஆல்பம் போட்டு அலறவிடலாம்.

5. வெயிலில் உக்கிரத்தில் இருந்து அடுத்த சில மாதங்களுக்கு எஸ்கேப் ஆக..

A) 'மன்னார் அண்ட் கம்பனி' தங்கவேலுவை பின்பற்றி காலை முதல் மாலை வரை குளு குளு ஷாப்பிங் காம்ப்ளக்சில் குழுக்குழுவாக சுற்றலாம். 

B) சங்கரன் கோவிலில் அஸ்தமனம் ஆனது போலவே இன்னும் ஒரு சில வருடங்களுக்கு ஊருக்குள் உதயசூரியன் தலைகாட்டாமல் இருக்கும்படி கலைஞருக்கு கண்ணீர் கடுதாசி எழுதி கொஞ்சிக்கெஞ்சலாம். 

C) பதிவுலகில் இயங்குவதற்கென்றே வாங்கிய நெட் கனெக்சனை பிடுங்கி தூர கடாசி விட்டு அந்தக்காசில் நித்தம் தர்பூசணி, இளநீர், நீர்மோர் போன்ற உருப்படியான ஆகாரங்களை சாப்பிட்டு 'ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது' சூட்டை தணிக்கலாம். 

.....................................................................................17 comments:

Unknown said...

//பதிவுலகில் இயங்குவதற்கென்றே வாங்கிய நெட் கனெக்சனை பிடுங்கி தூர கடாசி விட்டு அந்தக்காசில் நித்தம் தர்பூசணி, இளநீர், நீர்மோர் போன்ற உருப்படியான ஆகாரங்களை சாப்பிட்டு 'ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது' சூட்டை தணிக்கலாம்.//

அதேதான்...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா எலேய் நான் என்னலேய் பாவம் செஞ்சேன் உனக்கு ராஸ்கல் அவ்வ்வ்வ்வ்வ்......

நாய் நக்ஸ் said...

Siva....
Innum....innum....
Ethir parkkiren.....

Kalakkal......

Aana...kumma....
Mudiyalaiye.....
What to do...????????

MANO நாஞ்சில் மனோ said...

மண்;மோகனை பற்றி பேசினால் கண்டிப்பாக நாய்பக்ஷே த்து த்து ராஜபக்ஷே'யை பற்றியும் சொல்லவேண்டும் இல்லைன்னா கிழவன் வருத்தப்படுவான்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சிபி'யின் அண்டர்வேர் பலமாக உருவப்பட்டது அய் ஜாலி ஜாலி.......

அஞ்சா சிங்கம் said...

அப்படி போடு உலக குசும்புடா சாமி ........

அஞ்சா சிங்கம் said...

அப்படி போடு உலக குசும்புடா சாமி ........

Unknown said...

மெட்ராஸ்பவன் சிவக்குமார் போல..ஒரே படத்தை திருப்பிதிருப்பி 49 முறை போட்டு வித்தியாசம் கண்டுபிடிக்க சொல்ல வேண்டும்

Unknown said...

விக்கியுலகம் விக்கி மாதிரி புரியாத மாதிரி பதிவு போட்டு மண்டையை பிச்சுக்க வைக்க வேண்டும்

Unknown said...

பிலாசபி போல நைட் கூகுல்ல தேடிய போது கிடைத்த பிகர் படங்களை பதிவின் கடைசியில் போட்டு நரம்பு தளர்ச்சியுள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்.....

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!////பதிவுலகில் இயங்குவதற்கென்றே வாங்கிய நெட் கனெக்சனை பிடுங்கி தூர கடாசி விட்டு அந்தக்காசில் நித்தம் தர்பூசணி,இளநீர்,நீர்மோர் போன்ற உருப்படியான ஆகாரங்களை சாப்பிட்டு 'ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது' சூட்டை தணிக்கலாம்.////இதுக்குக் கூட "இந்தப்" பாட்டுதானா கெடைச்சுது!ஏங்க இந்தக் கொலவெறி?! ஒங்களுக்கு????ஹி!ஹி!ஹி!!!!!

Unknown said...

பத்தே நொடியில பத்து கோடியா? நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பவர்ஸ்டார விட்டுதான் பதில் சொல்லனும், அனைத்தும் சிரிப்பு :-) அருமை

உணவு உலகம் said...

நாஞ்சில் மனோ எனும் நல்ல பதிவரை வம்புக்கு இழுத்ததை கண்டிக்கிறேன்.:))

உணவு உலகம் said...

//அனைத்தையும் ஒன்று விடாமல் நாஞ்சில் மனோ போல 'போட்டுத்தள்ள' வேண்டும். //
ஆமா, அடுத்த முறை சென்னை வரும்போது ஒரு பிரபல பதிவரை போட்டு தள்ளத்தான போறாரு. ஹா ஹா ஹா.

உணவு உலகம் said...

சிவா,இவ்வளவு கஷ்டமான கேள்விகளையும், அதற்கு தேர்ந்தெடுக்க முடியாத பதில்களையும் கொடுத்திருக்கீங்களே, பவர்ஸ்டார் மாதிரியே பிரபலம் ஆகனும்னு பிளானோ!

Unknown said...

கேஆர்பி அண்ணனை வழிமொழிகிறேன். வழிமொழிஞ்சா யாராவது அடிப்பீங்களா.

யோவ் நக்கீரா இன்னைக்காவது புரியிர மாதிரி பின்னூட்டம் போடுவன்னு எதிர் பார்த்தேன்.

முத்தரசு said...

உலகமெகா லொள்ளு - நடத்துங்கள் வாழ்த்துக்கள் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...