CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 26, 2012

உலக சீரிஸ் ஹாக்கி போட்டி - பரவச நிமிடங்கள்


                                                               மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் 

சில வாரங்களுக்கு முன்பு இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட, அதே நேரத்தில்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. எல்லாம் நன்மைக்கே எனலாம். நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி மீது முன்பை விட அதிக வெளிச்சம் பாய்ந்துள்ளது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்து வரும் வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி போட்டிக்கு ரசிகர்களிடையே கிடைத்து வரும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. சென்னை, தில்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட எட்டு அணிகள் மோதும் இந்தத்தொடர் கிட்டத்தட்ட ஐ.பி.எல். போலத்தான். எப்படியும் சென்னையில் நடக்கும் போட்டியை பார்த்தாக வேண்டுமென தீர்மானித்தேன். சேரில் அமர்ந்து பார்க்க கட்டணம் ரூபாய் 250, 500,1000. எதிர் திசையில் இருக்கும் சிமென்ட் தரையில் ஆட்டத்தை காண ரூபாய் 100 கட்டணம். "ஹாக்கின்னா மூணு மணி நேரம் நடக்குமே..அந்த ஆட்டந்தான?" மேட்ச் பார்க்க போகலாமா என்று கேட்டதற்கு பிலாசபி பயபுள்ள கேட்ட முதல் கேள்வி. எனக்கு லேசாக கிர்ரடித்தது. பிறகு பகுமானமாக ஹாக்கி பற்றிய பேசிக் கோர்ஸை அண்ணனுக்கு  எடுத்துவிட்டு இரண்டு டிக்கட்களை ஆன்லைனில் புக் செய்தேன்.  

சில ஆண்டுகளுக்கு முன்பு மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தியா,ஜெர்மனி ஆடிய போட்டியை பார்த்ததுதான் முதலும் கடைசியுமான நேரடி ஹாக்கி அனுபவம்.அதற்குப்பின் நேற்றுதான் காண நேர்ந்தது. ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட சேர் - இ - பஞ்சாப் அணியுடன் சென்னை சீட்டாஸ் மோதும் இந்த ஆட்டம் மாலை ஏழு மணிக்கு துவங்குமென அறிவிக்கப்பட்டது. இதில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்கு எளிதாக நுழைய முடியும் என்கிற நிலையில் சென்னை அணி. இந்திய அணியின் முன்னாள் கோச் ஆன ஜோஸ் ப்ராசாதான் சென்னை அணிக்கும் கோச். 2004 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆஸி அணியில் இடம்பெற்ற ப்ரென்ட் டீமின் கேப்டன். கோவை மண்ணின் மைந்தன் ஆடம், பாகிஸ்தானின் வர்சி உள்ளிட்ட வீரர்கள் சென்னைக்காக களம் புகுந்தனர். பஞ்சாப் அணியோ தீபக் தாகுர், ககன் அஜித் சிங், பிரப்ஜோத் சிங்(கேப்டன்) என புகழ்பெற்ற இந்திய வீரர்களை கொண்டிருந்தது. 

                                                   பயிற்சியில் ஈடுபடும் சென்னை சிறுத்தைகள் 
           
போட்டி துவங்கும் வரை சில ரசிகர்கள் மட்டுமே இருந்தனர்.  நேரம் போகப்போக நாங்கள் இருந்த 100 ரூபாய் ஸ்டாண்ட் ஹவுஸ்புல் ஆகிப்போனது. எதிரே அதிக விலையுள்ள ஸ்டாண்டும் 70% நிரம்பி இருந்தது. போட்டியில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க ஆரம்பித்தன. ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் பஞ்சாபின் கை சற்று ஓங்கியது. சென்னைக்கு பலத்த ஆரவாரத்துடன் சப்போர்ட் செய்த ரசிகர்களின் கூச்சலைக்கண்டு எந்த வித பதற்றமும் இன்றி நன்றாக ஆடியது பஞ்சாப் அணி. தொகுப்பாளினி ஒருவர் 'கம் ஆன் சென்னை' என்று அவ்வப்போது ஊக்கம் தந்தும் பலன் இல்லாமல் போனது. ஆட்டம் மும்முரமாக போய்க்கொண்டிருந்த வேளையில் பஞ்சாப் கோல் போஸ்ட்டை நோக்கி சென்னையின் ஆடம் சிங்க்லர் மின்னல் வேகத்தில் சறுக்கி சென்றது எல்லோரையும் மிரள வைத்தது. அது மட்டும் கோலாக மாறி இருந்தால் ஹாக்கி வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாக கருதப்பட்டிருக்கும். ஆட்டம்னா இது ஆடம்!! கடைசியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் தவற விட்டு 4-2 கோல் கணக்கில் சென்னை தோற்றது. அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பது இன்று சண்டிகர் அணியுடன் எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். 

         
"என்ன ஆட்டமோ..ஒத்த பந்தை டொக்கு டொக்குன்னு தட்டிக்கிட்டு" பிலாசபி மீண்டும்..! தத்துவம் மேலும் பேசியவை: "மைக்குல அடிக்கடி பேசுற பொண்ணு அதோ அங்க கருப்பு ட்ரெஸ் போட்டிருக்கே அந்த புள்ளைதான்" (நாங்கள் இருந்த இடத்திற்கும் அதற்கும் தூரம் நிறைய. அப்படி இருந்தும் இந்தப்பய எப்படி இப்படி கரெக்டா..), "ஆமா பஞ்சாப் டீம் எந்தப்பக்கம் கோல் அடிக்கணும்" எனக்கேட்டதும் கோபத்துடன் ஓலமிட்டேன்.."யோவ்..எனக்கு ஹாக்கி தெரியுமான்னு தான ஆரம்பத்துல இருந்து டெஸ்ட் பண்ற? நக்கலா ஒனக்கு.." என்றேன். கிடைத்த பதில் "இல்லைங்க. நிஜமாத்தான் கேட்டேன்". நான் "ஏய்யா..எந்த கோல் போஸ்ட் பக்கம் சென்னை ஆளுங்க ஓடும்போது ரசிகர்கள் கத்துராங்களோ அதை வச்சுமா கண்டு புடிக்க முடியல?" என எகிற வேண்டியதாகிவிட்டது. 

இரண்டாம் பாதி துவங்கியதும் அடுத்து ஒரு கேள்வி கேட்டு என்னை அசர அடித்தார் அருமைத்தம்பி "என்ன தல இது...கோல் போஸ்ட் கிட்ட பந்தை வச்சிக்கிட்டு அந்த சென்னை ப்ளேயர் வேடிக்கை பாக்கறார்? கோல் அடிக்க வேண்டியதுதான?". ஆற்றாமையில் அல்லாடினேன்.."தம்பி செகண்ட் ஹால்ப்ல ரெண்டு டீமும் எடம் மாறுவாங்க. அதால இப்ப சென்னை வேற பக்கம் கோல் அடிக்கும்யா" என மீண்டும் ஒரு விளக்கம் தர நேர்ந்தது. இது போதாதென்று அவ்வப்போது ரொமாண்டிக் பாட்டை வேறு ஹம் செய்து என்னை துவம்சம் செய்துகொண்டிருந்தார். நான் முறைத்துப்பார்த்தும் பயனில்லை. ஒரு மார்க்கமாத்தான் அலையுது இந்த பயபுள்ள.  அவ்வப்போது ஸ்டேடியத்தை 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தவாறு "அட..கேர்ல்ஸ் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்களே. இந்த பொண்ணை எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே" என்று கமன்ட் வேறு.

                                            பிடரியுடன் வீற்றிருக்கும் சென்னை சிறுத்தை..பிலாசபி   

நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்னை பாஷை பெருக்கெடுத்து ஓடியது. பஞ்சாப் அணிக்கு சாதமாக நடுவர் தீர்ப்பு சொல்லும்போதெல்லாம் விடலைகள் "எங்க ஏரியாவுக்கு வாய்யா ஒனக்கு இருக்கு கச்சேரி" என உறுமினர். அருகில் இருந்த வாண்டு அடித்த கமன்ட் "டாடி இந்த அம்பயர் சுத்த வேஸ்ட் டாடி". காதில் ஒரு மெசினை சொருகியவாறு ஓடிக்கொண்டிருந்த நடுவருக்கு எதுவுமே புரிய வாய்ப்பில்லை பாவம். "அட்ச்சி தூக்கு தல அவன" என சென்னை அணிக்கு அட்வைஸ் தந்தார் இன்னொரு விடலை. காஸ்ட்லி டிக்கட் எடுக்காமல் இருந்தது நல்லதாகத்தான் போனது. இல்லாவிடில் இப்படி ஒரு ஆரவாரமான கூட்டத்தை காணும் வாய்ப்பு கை நழுவி இருக்கும். 'எலெக்ட்ரி பையிங் அட்மாஸ்பியர்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதைப்போன்ற ஒரு அனுபவத்தை தந்ததற்கு ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லியே தீர வேண்டும். 

தனது கல்லூரி காலத்தில் ஹாக்கி ப்ளேயராக இருந்த முத்துராஜ் என்பவர் என்னிடம் சொன்னது "இன்னும் நன்றாக விளம்பரம் செய்திருந்தால் ஏனைய டிக்கட்களும் விற்று தீர்ந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி அதிகமான வரவேற்பைப்பெரும். சென்னையைப்பொருத்தவரை முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி போட்டிதான் பிரபலமானதாக இருந்து வந்தது. இப்போது வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பி இருப்பது சந்தோஷமாக உள்ளது". நமது தேசிய விளையாட்டான ஹாக்கி மேலும் பல பேரின் ஆதரவுடன் சிகரங்களை எட்ட வாழ்த்துவோம். 

ஸ்டேடியத்தில் எடுத்த மேலும் சில சுவாரஸ்யமான நிழற்படங்கள் மற்றும் அதையொத்த தகவல்கள் விரைவில்.....

Photos: madrasbhavan.com
Location: Mayor Radhakrishnan stadium, Egmore, Chennai.
........................................................................................

...........................
My other site:
...........................

....................................................
சமீபத்தில் எழுதியது:

.................................................
  

                                                                       

8 comments:

Philosophy Prabhakaran said...

இன்னொரு பதிவு வேற இருக்கா... நடத்துங்க... ஆனா ஜெயதேவ் தாஸ் சார் கமென்ட் போட்டா மட்டும் பப்ளிஷ் பண்ணிடாதீங்க... அடிச்சு கூட பப்ளிஷ் பண்ண சொல்லுவாரு... பண்ணிடாதீங்க...

CS. Mohan Kumar said...

You are enjoying the week ends well.

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ பிடரி இல்லைன்னா....?

MANO நாஞ்சில் மனோ said...

ஹாக்கி பற்றி நமக்கு ஒன்னுமே தெரியாதே ங்கே ங்கே ங்கே......

MANO நாஞ்சில் மனோ said...

போட்டோக்கள் சூப்பர் [[ஆஹா தப்பிச்சாச்சு]]

Unknown said...

ஹாக்கி பற்றி அனைவரும் சட்டை செய்யாத நிலையில் அதனைப் பற்றி பார்த்து பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி, ஏன் தெரியுமா, நான் ஒரு முன்னாள் ஹாக்கி பிளேயர், பள்ளியில் சீனியர் டீம் கோல் கீப்பர் நான் தான். அது மட்டுமல்ல இந்த ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும் மாவட்ட அளவிலான ஒரு ஓப்பன் டோர்னமெண்ட்டில் கோல் கீப்பராக பங்கேற்றுள்ளேன். தோற்றுப் போனது வேற விஷயம்.

இன்றும் ஹாக்கி தான் என் முதல் பேவரைட் கேம். நன்றி சிவா மற்றும் பிரபா.

சென்னை பித்தன் said...

"ஆமா பஞ்சாப் டீம் எந்தப்பக்கம் கோல் அடிக்கணும்" -ஜீபூம்பா நினைவு வருது.ஹாக்கியெல்லாம் நேரில் பார்த்து ஆண்டுகள் பலவாச்சு.இத்தனைக்கும் நான் ஒரு கோவில்பட்டித் தயாரிப்பு!

Prem S said...

களவாணி வில்லன் கெட்டப்ல இருக்காரே பிலாசபி

Related Posts Plugin for WordPress, Blogger...