CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 25, 2012

'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்சென்ற சனியன்று எஸ்.வி.சேகர் நாடகம் பார்க்க சென்றபோது  வாணிமகால் வாசலில் தென்பட்டது மேலிருக்கும் பேனர். 'சோ'  நடித்திருக்கிறாரா என்று ஆர்வத்தில் பேனரை வாசிக்கையில் கதை, வசனம் சோ என்றும், பிரதான வேடத்தில் வரதராஜன் நடிப்பதாகவும் தெரிய வந்தது. சோ நடிக்காவிடினும் வசனத்தில் கண்டிப்பாக நையாண்டி தெறிக்கும் எனும் நம்பிக்கையில் நேற்று  நாரத கான சபாவிற்கு (டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை) முதன் முறை விஜயம் செய்தேன். கிரேஸி மோகன்,எஸ்.வி.சேகர் தவிர வேறெவருடைய நாடகத்தையும் இதுகாறும் கண்டிராத எனக்கு இது ஒரு புது அனுபவம்தான். தம்மாதூண்டு இருக்கையில் வரதராஜன் அவர்களை பொதிகை சேனலின் செய்திகளில் பார்த்ததோடு சரி. சோவின் பேனா செய்யும் ரவுசுக்கு வரதராஜன் எப்படி ஈடு கொடுப்பார் என்பது என்னுள் முதலில் எழுந்த கேள்வி. ஆனால் எதிர்பார்த்ததை விட சிரிப்பாகவும், சிறப்பாகவும் இந்நாடகம் அமைந்ததில் சந்தோஷம் என்றே சொல்லலாம். 

இப்போதெல்லாம் நாடகத்திற்கான குறைந்தபட்ச டிக்கட் விலையே 200 ரூபாய்தான். ஆனால் இங்கோ 50,100 ரூபாய்க்கு டிக்கட் விற்பனை செய்தது ஆச்சர்யமாக இருந்தது. "வரதராஜன் நாடகங்களுக்கு மட்டும்தான் எங்கள்  சபாவில் இந்த விலைகுறைப்பு" என்றார் கவுண்டரில் இருந்தவர். நாரத கான சபாவில் மெயின் ஹால், மினி ஹால் என இரண்டு அரங்குகள் உள்ளன. நான் இந்நாடகம் பார்த்த மெயின் ஹால் மற்ற அரங்குகளை ஒப்பிடுகையில்   விசாலமாகத்தான் இருந்தது. நாடகம் துவங்கும் முன் சோ பேசிய வீடியோ பதிவை போட்டுக்காட்டினர். "1971 ஆம் ஆண்டு முதன் முறை 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களின் அடியாட்கள் எங்கள் மீது முட்டைகளை வீசி இலவச விளம்பரம் தந்தனர். இதன் மூலம் நிறைய பேர் இந்த படைப்பை காண வந்தனர். டிக்கட்டை ப்ளாக்கில் விற்கும் அளவிற்கு கிராக்கி ஏற்பட்டது. இன்றளவும் நீங்கள் இதை ரசிப்பதற்கு காரணம் அன்று முதல் இன்று வரை மாறாத அரசியல்வாதிகள்தான் " எனப்பேசி முடித்தார் சோ. இவரது சகோதரர் அம்பியின் நாடக நடிப்பிற்கு சிவாஜி கணேசன் ரசிகராக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். அதன் பின் சொன்னதுபோல் டாண் என 7 மணிக்கு தொடங்கியது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்'.  7 மணிக்கு துவங்குவோம்  என்று அறிவித்துவிட்டு சில சமயம் 20 நிமிடம் தாமதமாக நாடகத்தை ஆரம்பிக்கும் கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் போன்றோர் அந்தக்குறையை எப்போது தவிர்ப்பார்களோ...

                                                            நாரத கலகம் நடந்தேறிய நாரத கான சபா

இந்தியாவில்...குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் ஜனநாயக (?) அரசியல் முறையை தேவலோகத்தில் அரங்கேற்றினால் என்னவாகும் என்பதே இதன்  கதைச்சுருக்கம். கலகக்காரர் நாரதரும், கழகக்காரர் நல்லதம்பியும் சேர்ந்து இந்திரன், எமன், குபேரன், விஷ்ணு உள்ளிட்டோரை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து தேவலோகத்தை அதிரி புதிரி ஆக்குகின்றனர். இந்திரா காந்தியை பகடி செய்ய இந்திரனை 'இந்திரா' என்றும், கருணாதியை எகத்தாளம் செய்யும் பொருட்டு நல்லதம்பி(!) கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் சோ. ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்த இந்நாடகம் போகப்போக ஹாஸ்யமான வசனங்களால் இறுதிவரை ரசிக்க வைத்து விட்டது. 

தேவலோகத்தில் ஜனநாயக முறை அமல்படுத்த முடிவு செய்து ஜனாதிபதியாக இந்திரன், பிரதமராக வசிஷ்டர், எதிர்க்கட்சி தலைவராக துர்வாசர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். பூலோகத்தில் செய்த பாவத்தால் எமலோக எண்ணை கொப்பரையில் நரகத்தை அனுபவிக்கும் நல்லதம்பி எனும் அரசியல்வாதி 'ஜனநாயக முறைகளை கற்றுத்தருகிறேன் ' எனச்சொல்லி எமனை உசுப்பிவிட்டு ரகளை செய்கிறார். குபேரன், விஷ்ணு போன்றோரும் இவரின் அரசியல் சிக்கித்தவிக்கின்றனர். இறுதியில் அவர்களின் கதி என்ன என்பதை திரையில் திரைவிலகிய பின் நாடக மேடையில் காண்க :)

                                                                         சபாவினுள் சங்கீத சங்கமம்

"என்னை ஏன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தாய் நாரதா?" என கேட்கும் இந்திரனுக்கு நாரதரின் பதில் "நீயோ சுகவாசி. குடும்பத்துடன் தேசம் தேசமாக சுற்ற உனக்கு இப்பதிவிதான் சரி". "தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் நல்ல தம்பி?" இது எமனின் கேள்வி. அதற்கு நல்லதம்பி தரும் ஆலோசனை "ஒரு ரூபாய்க்கு மூன்று படி அமிர்தம் தருவோம், ஏழை - பணக்காரன் வித்யாசம் இல்லாமல் செய்வோம், உலக தேவலோக பாஷை மாநாடு நடத்துவோம் என்று அள்ளிவிடு எமா". "தேவலோக தேர்தலுக்காக என் கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு எங்கு போவேன்" என எமன் கேட்க, கிங்கரர்களை சிபாரிசு செய்கிறார் நல்லதம்பி. "ஐயோ..அவர்களுக்கு உலக அறிவே கிடையாதே. நான் சொல்வதைக்கேட்டு தலையை மட்டும்தானே ஆட்டுவார்கள்" என எமன் பதற "அடப்பாவி..லட்டு லட்டா ஆளுங்களை வச்சிருக்கியே. அவங்கதாய்யா நமக்கு தேவை" என நல்லதம்பி பேசும் வசனத்திற்கு பலத்த கைத்தட்டல். 

ஏழை பணக்காரன் வித்யாசத்தை ஒழிக்க குபேரனை ஏழையாக்கி குசேலனுக்கு நிகராக்குதல், விஷ்ணு மற்றும் சிவனுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்து  சங்கு சக்கரம், கங்கை - சந்திரன் போன்றவற்றை பறித்தல், கருணாநிதி குரலில் ஆளாளுக்கு மிமிக்ரி செய்தல் என பல இடங்களில் சிரிப்பொலிகளையும், கைத்தட்டல்களையும் பரிசாக பெற்றனர் யுனைடட் விஷுவல்ஸ்  குழுவினர். அதில் முக்கால்வாசி க்ரெடிட்டை அள்ளிச்சென்றவர் நல்லதம்பியாக நடித்த ரவிகுமார். மெட்ராஸ் பாஷை பேசும் அரசியல்வாதியாக அதகளம் செய்திருக்கிறார் மனிதர். அருமையான பெர்பாமன்ஸ். 

                                                          மெட்ராஸ் பாஷையில் கலக்கிய ரவிகுமார்

நாடகம் முடிந்ததும் மேடையில் பேசிய வரதராஜன் "1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வசனத்தில் ஒரு வார்த்தையை கூட மாற்றாமல் அப்படியே இன்றுவரை அரங்கேற்றி வருகிறோம்" எனும் தகவலைக்கூறினார்.    அதன்பின் ரவிகுமார், வரதராஜன் இருவரையும்  ஒப்பனை அறையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சி. 

தீவிர நாடக ரசிகர்களை தவிர்த்து, என் போன்ற சாதாரண ரசிகர்களுக்கு வரதராஜன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், மாது பாலாஜி, நீலு போன்றோரின் பெயர்கள் மட்டுமே நன்கு பரிச்சயம் ஆனவையாக இருக்கும். ரவிகுமார் போன்று துணை நடிகர்களாக வருபவர்கள் சிறப்பாக நடிக்கையில் அவர்களின் பெயர்கள் தெரியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நல்லதம்பியாக நடித்தவரை சந்தித்து பேசுகையில் அவர் சொல்லித்தான் நிஜப்பெயர் ரவிக்குமார் எனத்தெரிந்தது எனக்கு. எனவே இனி வரும் காலத்திலாவது நாடகங்கள் நடக்கும் இடத்தில் துணை நடிகர்கள் பெயர்கள் கொண்ட சிறிய போஸ்டரையாவது அரங்கில் வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நடக்குமா???

                                                                              வரதராஜனுடன் நான்...

இரண்டு மணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் தரும் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - டெமாக்ரஸி இன் தேவலோகம்' படைப்பை சென்னையில் பார்க்க விரும்புவோர், நாடகம் நடக்கும் தேதிகளை  இப்பதிவில் இருக்கும் முதல் படத்தை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.


என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - 'சோ' ஸ்வீட் ஹாட்!
.............................................................................

சாப்பாட்டு மேடை:

                                                           மெனுவைப்படிக்க ..படத்தை கிளிக் செய்க.

நாடகம் துவங்க ஒரு மணிநேரம் இருப்பதற்கு முன்பாகவே சென்றுவிட்டதால் சபா வாசலில் இருந்த உட்லண்ட்ஸ் உணவகம் முன்பு சிறிது நேரம் உலா வந்தேன். திறந்த வெளியில் போடப்பட்டிருந்த சேர்கள் அனைத்தும் நிரம்பி வழிய, ஆளாளுக்கு ஐட்டங்களை லபக்கிக்கொண்டு இருந்தனர். அதில் பெரும்பாலானோர் வயதான தம்பதிகள். உணவுகளின் விலை சற்று அதிகம்தான். ஆனால் தரத்தில் குறைவில்லை. 40 ரூபாய்க்கு பூரி செட் ஆர்டர் செய்தால் 15 நிமிடங்கள் கழித்து நான் கேட்டபடி பூரி மட்டுமே வந்தது. மசாலா வாங்க அருகிலிருக்கும் இடத்திற்கு நாம் பாதயாத்திரை செல்ல வேண்டும். காபி ஒன்றின் விலை 20 ரூபாய். குடுத்த காசுக்கு நோட்டுக்கு திருப்தியாக இருந்தது. இடைவேளையின்போது உள்ளே இருந்த கேண்டீனில் சில ரக சிப்ஸ் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருந்தன. 

டிசம்பர் மாத இசைக்கச்சேரி சீசனில் அரங்கிற்கு உள்ளே கலைஞர்களின் பெர்பாமன்சை பார்க்க வருவோரை விட சபா கேண்டீன்களில் அலைமோதுவோர் எண்ணிக்கைதான் அதிகம் என கேள்விப்பட்டதுண்டு. சீசன் வரட்டும். ஒரு கை பார்க்கலாம். மீண்டும் ஒரு மேடை நாடக அனுபவத்துடன் சந்திக்கிறேன். வணக்கம்.

Photos : madrasbhavan.com
Location: Naradha Gana Sabha, Alwarpet, Chennai.
...................................................................................

..........................
My other site:
...........................

.............................................................................
தொடர்புடைய பதிவுகள்:


.............................................................................


             

16 comments:

பால கணேஷ் said...

1971ல் எழுதிய நாடகத்தின் வசனங்கள் இன்று வரை மாற்றப்பட வேண்டிய தேவை இல்லாமல் அரங்கேறுகிறது என்றால்... சோவின் எழுத்து வன்மை என்று எடுத்துக்கறதா, இல்லை அரசியல்வாதிகளை நினைச்சு அழறதான்னு தெரியலை சிவா! நாடக நடிகர்களுக்கு அரங்கில் பெயர் வைத்து நல்ல அறிமுகம் தர வேண்டும் என்ற நல்ல கருத்து சொன்னதுக்கு ஒரு சல்யூட்!

உலக சினிமா ரசிகன் said...

சோ முதுமை காரணமாக நடிக்க முடியாமல்
வரதராஜன் குழுவினருக்கு இந்நாடகத்தை நடிக்க கொடுத்திருப்பார்.
உங்கள் பதிவின் மூலம் வரதராஜன் சிறப்பாக செய்துள்ளதை அறிய முடிகிறது.

நான் சோவின் நாடகங்களை எனது பாலயத்திலேயே பார்த்திருக்கிறேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பு அவரே திரும்ப மேடையேற்றியபோது வயோதிகம் காரணமாக வசனம் பேசமுடியாமல் திணறியதை கண்டு மிகவும் வருந்தினேன்.

உணவு உலகம் said...

வாரம் ஒரு வித்யாசமான அனுபவம். நைஸ்.

இராஜராஜேஸ்வரி said...

சோ அவர்களின் இதமான சட்டையர் மிகவும் ரசிக்கவைக்கும் காலங்களைக் கடந்தும்......

உலக எல்லைகளை கடந்து தேவலோகத்திலும் ரசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

Unknown said...

என்று தணியும் இந்த நாடக தாகம்!

Saravanakumar Karunanithi said...

Nice post, Thanks for sharing your experience.
Politicians seems to be remain same :)

நாய் நக்ஸ் said...

ஓகே...தலை....

CS. Mohan Kumar said...

Missed again :(( In Tanjore now.

TIcket prizes are very cheap. Seem that this is a very good theme & drama.

On a lighter vein, when are you going to do haircut?

Unknown said...

என்னுடைய எண்ணம் என்னவென்றால் சோவின் நாடகங்கள் அவரால் முடியாவிட்டாலும் அவரின் அனைத்து நாடகங்களையும் மற்ற நாடக கலைஞர்களிடம் கொடுத்து மீண்டும் மேடையேற்றினால் தான் இந்த தலைமுறைக்கு தவறவிட்ட அருமையான நாடகங்களின் அருமை தெரியும். இவர் மட்டுமல்ல மெளலியின் நாடகங்களும் பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கும். அவரின் நாடகங்களும் மீண்டும் மேடையேற்றப்பட வேண்டும்.

Unknown said...

நீங்கள் கூப்பிட்டும் என் அக்கா வீட்டுக்கு காஞ்சிபுரம் செல்ல வேண்டியிருந்ததால் என்னால் வரமுடியாமல் போய் விட்டது, அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன் சிவா.

Jayadev Das said...

சினிமாக்களுக்கு யார் முதலில் விமர்சனம் எழுதுவது என்று போட்டிபோட்டுக் கொண்டு விமர்சனம் எழுதும் பதிவர்கள் மத்தியில் மக்கள் மறந்து போன நாடகங்களுக்கு விமர்சனம் எழுதுவது பாராட்டத் தக்கது. கலக்குங்க பாஸ்!!

Jayadev Das said...

\\இங்கோ 50,100 ரூபாய்க்கு டிக்கட் விற்பனை செய்தது ஆச்சர்யமாக இருந்தது.\\என்னது...?? ஐம்பதாயிரத்து நூறு ரூபாயான்னு தலை சுத்திடுச்சு பாஸ்!!

Jayadev Das said...

\\இன்றளவும் நீங்கள் இதை ரசிப்பதற்கு காரணம் அன்று முதல் இன்று வரை மாறாத அரசியல்வாதிகள்தான் " எனப்பேசி முடித்தார் சோ.\\ அவரும் வந்திருந்தாரா....!! "முஹம்மது பின் துக்ளக்" நாடகம்/சினிமாவும் சேம் பிளட். இன்றைக்குப் பார்த்தாலும் நடப்பு நிகழ்சிகள் போலவே இருக்கும்.

Jayadev Das said...

\\CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI\\ This happens for each and every movie Boss!!

கவி அழகன் said...

Supper

Katz said...

I went to see it after reading ur review. thnks. that was good. I saw it in krishna ghana shabha. the entry tkt price was just 10 rs.

Related Posts Plugin for WordPress, Blogger...