எம்.ஜி.ஆர்., சிவாஜி எனும் இரு இமயங்கள் நடித்த படங்கள் ஆண்டுகள் அவ்வப்போது வெளியாவதும், அவற்றைக்காண இரு தரப்பு ரசிகர்களும் வயதான காலத்திலும் அரங்குகளை ஆர்வத்துடன் முற்றுகையிடுவதும் கண்டு வந்தோம். சில ஆண்டுகள் முன்பு வரை. ஆனால் டி.வி. ஆதிக்கம் வந்தபிறகு கிட்டத்தட்ட அனைத்து பழைய படங்களையும் மக்கள் பலமுறை பார்த்தாகிவிட்டதால், சுமாரான தியேட்டர்கள் கூட இந்த இருபெரும் நடிகர்களின் படங்களை வெளியிடுவதை குறைக்க துவங்கின. ஆனால் கர்ணனுக்கு கிடைத்த புதிய விளம்பர வெளிச்சம் அந்த தொய்வை களைந்து மீண்டும் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றால் அது மிகையில்லை. இதுபோன்ற பழைய தமிழ்ப்படங்களை சென்னையின் முன்னணி தியேட்டரான சத்யம் கடந்த பல வருடங்களாக வெளியிட்டதாக நினைவில்லை. அதிலும் மாலை 6.30 காட்சியில் கர்ணனை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டது மகா ஆச்சர்யம்தான். சுமாராகத்தான் அரங்குகள் நிரம்பும் என எண்ணியிருந்த பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது கர்ணனுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு.
காட்சி துவங்குவதற்காக சத்யம் வாசலில் நின்றிருக்கையில் சிவாஜி காலத்து ரசிகர்கள் சிலருடன் அளவளாவ நேர்ந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்ன தகவல்: "கர்ணன் வெளியான சமயம் சாந்தி தியேட்டரில் புலிக்கூண்டு போன்ற செட் போட்டிருந்தார். அதற்கு போட்டியாக பிளாசாவில் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்திற்காக நிஜப்புலி ஒன்றை கூண்டில் அடைத்து அதகளம் செய்தனர். சர்க்கஸ் காட்டி மக்களை ஈர்க்கின்றனர் என சிவாஜி ரசிகர்கள் கேலி செய்ததும் அதை நிறுத்திவிட்டனர் வேட்டைக்காரன் படத்தை எடுத்தவர்கள்". இன்னொருவர் கூறியது: "கர்ணனின் அசல் வெர்ஷன் ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்டது. ஆனால் நாம் பார்த்து வந்தது கேவா கலரில் மட்டுமே. இப்போது மீண்டும் ஈஸ்ட்மென் கலரில் ரிலீஸ் செய்துள்ளனர்.கர்ணனுக்கு தற்போது கிடைத்துள்ள வரவேற்பைக்கண்டு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். விரைவில் இதே போன்று பிரம்மாண்டமாக தலைவர் படத்தை ரீ ரிலீஸ் செய்வார்கள்". தியேட்டருக்குள் சென்றதும் டாக்டர் ருத்ரனிடம் பேசியபொழுது அவர் கூறியது "எனக்கென்னவோ இன்னும் ஓரிரு நாட்களில் கர்ணன் கிரேஸ் சீக்கிரம் குறைந்து விடும் என்றே தோன்றுகிறது" என்றார்.தான் தற்போது இணையத்தில் அதிகம் எழுதுவதில்லை என்றும் சொன்னார்.
புதிய தொழில்நுட்பம் என்று கூறி மக்களை ஈர்த்தது எல்லாம் சரி. ஆனால் அதற்கான பலனை ரசிகர்கள் பெரிதாக பெறவில்லை என்பதே உண்மை. பல காட்சிகள் திட்டு திட்டாகவும், சற்று மங்கலாகவும்தான் தெரிந்தன. ஒலி அமைப்பில் அந்தக்குறை இன்றி மெருகேற்றி உள்ளனர். சாவித்திரி,தேவிகா, அசோகன்,எம்.வி.ராஜம்மா,முத்துராமன் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது. கர்ணனுக்கு தேரோட்டும் சல்லியன் வேடத்தில் சில நிமிடங்களே வந்தாலும் சண்முகசுந்தரம்(அக்கா..நான் ரத்த ரத்தமா வாந்தி எடுத்தங்க்கா புகழ் ) மனதில் நிற்கிறார். கலைநயம் மிக்க செட்களை மெச்சும்படி வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் கங்கா. ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட 'இரவும் நிலவும்' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் செவிக்கினிமை. வாழ்க மெல்லிசை மன்னர்கள்.
சிவாஜி தோன்றும் காட்சிகளில் அரங்கில் பலத்த கைத்தட்டல்கள். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிம்மக்குரலோன் ரசிகர்களை வசீகரிப்பதை பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும். முதுகிற்கு பின் கேமரா இருக்கையில் சில நொடிகள் கழித்து முகத்தை எப்படி திருப்பினால் அக்காட்சி கச்சிதமாக அமையும் என்ற வித்தையை கற்று வைத்திருக்காரே...அதுதான் சிவாஜி!!
சிவாஜி வாங்கியதற்கு சற்றும் குறையாமல் கைத்தட்டல்களை அள்ளியவர் சாட்சாத் அந்த கிருஷ்ண பகவான் என்.டி. ஆரேதான். படம் நெடுக உணர்ச்சி பிழம்பாக சிவாஜி இருந்தால், சாந்த சொரூபியாக வந்து நடிகர் திலகத்திற்கு சமமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஆந்திர ஆண்டவர். தேஜஸ் என்று சொல்வார்களே.. அதெல்லாம் எல்லாருக்கும் அமைந்து விடாது. என்.டி.ஆர். போன்றோருக்கு அது ஒரு வரம். இவர் வரும் முதல் காட்சியே அமர்க்களம். கௌரவர் சபைக்கு வரும் கிருஷ்ணருக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருக்கிறான் துரியோதனன்(அசோகன்). அதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன் காலால் தரையை அழுத்த அதன் அதிர்வு தாங்காமல் சிம்மாசனத்தில் இருந்து விழுந்து கிருஷ்ணன் காலடியில் விழுகிறான் துரியோதனன். அப்போது "ஏன் துரியோதனா அவசரம்? நானே உன்னை நோக்கி வர நினைத்தேன். அதற்குள் வேகமாக என் காலில் விழுந்த உன் அன்பும், பண்பும் போற்றத்தக்கது" என என்.டி.ஆர். பேசும் வசனம்...க்ளாஸ்!! நட்பின் வலிமை குறித்து கர்ணன் பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.
நாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்தும் கர்ணன் போன்ற பழைய படங்கள் அரங்குகள் நிறைந்து வெற்றிக்கொடி நாட்டுகிறதென்றால் அதற்கு மேம்படுத்தப்பட ஒலி, ஒளி போன்றவற்றின் பங்கு சிறிதளவு மட்டுமே. அவற்றை விட முக்கிய காரணங்கள் எவையெனில் நடிப்பிற்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் சிவாஜி, கச்சிதமாக தேர்ந்து எடுக்கப்பட்ட துணை நடிகர்கள், வசனம், கலை இயக்கம், இசை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றிய கலைஞர்களின் நேர்த்தி எனப்பட்டியலிடலாம். தூங்கி எழுந்தவுடன் பெருங்கலைஞனாக மக்களால் போற்றப்பட வேண்டும் என அவசரப்படும் புதிய நாயகர்களே...முதலில் நீங்கள் கர்ணனை மக்களுடன் பாருங்கள். அப்போது தெரியும் ஏன் சிவாஜி - தி ரியல் மாஸ் என்று.
அடுத்து இது போன்ற பழைய சினிமாக்களை முன்னணி தியேட்டர்கள் ரிலீஸ் செய்யும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நான் பார்க்க விரும்புவது: கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை, தில்லுமுல்லு. எவர்க்ரீன் படங்களாச்சே!!
..................................................................................
தியேட்டர் சிப்ஸ்:
சினிமா ரசிகர்களுக்கான அடுத்த கிளாசிக் விருந்து வரும் ஏப்ரல் முதல் வாரம் காத்திருக்கிறது. ஆம். டைட்டானிக்கின் 3-D வெர்ஷன்தான் அது.
...............................................................................
.........................................................
அடுத்து இது போன்ற பழைய சினிமாக்களை முன்னணி தியேட்டர்கள் ரிலீஸ் செய்யும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நான் பார்க்க விரும்புவது: கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை, தில்லுமுல்லு. எவர்க்ரீன் படங்களாச்சே!!
..................................................................................
தியேட்டர் சிப்ஸ்:
சினிமா ரசிகர்களுக்கான அடுத்த கிளாசிக் விருந்து வரும் ஏப்ரல் முதல் வாரம் காத்திருக்கிறது. ஆம். டைட்டானிக்கின் 3-D வெர்ஷன்தான் அது.
...............................................................................
.........................................................
Photos: madrasbhavan.com
Location: Sathyam cinemas.
........................................................
My other site:
agsivakumar.com
சமீபத்தில் எழுதியது:
கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா
23 comments:
நான் இன்னும் தியேட்டரில் பார்க்கவில்லை. சத்யமில் பார்த்த அணுபவம் நிச்சயம் அருமையாக இருந்திருக்கும்.
இந்த படமெல்லாம் ஏன் ரீ-ரிலீஸ் பண்றாங்க??? ரீ-மேக் பண்ணா டிரவுசர் கழண்டுடும். இந்த மாதிரி நடிக்கவும் யாருமில்ல... படத்தை அப்படி எடுக்கவும் இப்ப யாரும் இல்ல.
அருமையா தொகுத்து கொடுத்துருக்கீங்க தல. எவ்ளோ நாள் சத்யம்-ல ஓடும்-னு கொஞ்சம் சொல்லுங்களேன்...
ஆமாம் கனகு. சாந்தி தியேட்டரில் ரசிகர்களின் உற்சாக சத்தத்தில் படம் பார்க்க கஷ்டமாக இருக்கும் (ஆனாலும் அதுவும் ஒரு தனி அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்). என்பதால் சத்யம்தான் சரியான சாய்ஸ் என தோன்றியது. குறிப்பாக ஒலி, ஒளி தரத்திற்கு. அதையேதான் என்னுடம் பேசிய சிவாஜி ரசிகர்களும் கூறினர். சென்னையில் எல்லா மல்டிப்ளெக்ஸ்களிலும் கர்ணன் ஒரே நேரத்தில் ஓடுவதால், சத்யமில் மட்டும் அதிகபட்சம் ஒரு வாரம் திரையிடப்படும் என நினைக்கிறேன். வார இறுதியில் ஏதேனும் ஒரு தமிழ் கிளாசிக் படத்தை சத்யம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் நீண்டநாள் எண்ணம். பார்க்கலாம்.
// "கர்ணன் வெளியான சமயம் சாந்தி தியேட்டரில் புலிக்கூண்டு போன்ற செட் போட்டிருந்தார். அதற்கு போட்டியாக பிளாசாவில் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்திற்காக நிஜப்புலி ஒன்றை கூண்டில் அடைத்து அதகளம் செய்தனர். சர்க்கஸ் காட்டி மக்களை ஈர்க்கின்றனர் என சிவாஜி ரசிகர்கள் கேலி செய்ததும் அதை நிறுத்திவிட்டனர் வேட்டைக்காரன் படத்தை எடுத்தவர்கள்" //
இதே தகவலை எனது மாமா அவர்களும் சொன்னார்... அது பிளாசா அல்ல... பிராட்வே தியேட்டர் என்று நினைக்கிறேன்...
நீங்க சாந்தி தியேட்டர் ஆரவாரத்தை மிஸ் பண்ணிட்டீங்க சிவா... செமையா இருந்தது...
Titanic 3D வந்ததும் மறக்காமல் எனக்கொரு டிக்கெட் போடவும்...
கர்ணனின் வெற்றி...மற்ற படங்களையும் தூசு தட்ட வைத்து விடும்.
கர்ணன் எனக்கு மிகவும் பிடித்த படம்....பார்க்க வேண்டும்....ஒரு இளைஞரிடம் இருந்து விமர்சனம் சிம்மகுரலோன் என்றும் வாழ்கிறார்...!
சரித்திர நடிகரின் சாதனை படம். கொடுத்து வைத்த சிவா.
Yes. I too enjoyed NTR role and his acting very much
பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிம்மக்குரலோன் ரசிகர்களை வசீகரிக்கும் கர்ணன் பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
காலத்தால் அழியாத காவியம் என்று சொல்வதே மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இல்லையா...!!!
சினிமா உள்ளவரை சிவாஜி பேசப்படுவார், ஓவர் ஆக்ட் கொடுக்கிறார் என்று சொல்லும் மலையாளிகளே சிவாஜி நடிப்பை ரசிப்பது உண்டு!!!!
பழைய படங்களை தியேட்டரில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்...... எஞ்சாய் பண்ணிட்டீங்க......
/*வார இறுதியில் ஏதேனும் ஒரு தமிழ் கிளாசிக் படத்தை சத்யம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் நீண்டநாள் எண்ணம். பார்க்கலாம்.*/
எனக்கும் அதே எண்ணம் தான். இந்த ‘Blind date' போடுவது போல ‘Classic date' என்று ஒன்றல்லது இரண்டு காட்சிகள் போடலாம்.
@ பிலாசபி
பிளாசா..பிராட்வே...எது சரியென விசாரிக்கிறேன். அடுத்த முறை சாந்தி தியேட்டர்ல சிவாஜி படம் பாத்துடுவோம். டைட்டானிக் 3-D டிக்கட் எடுத்தடலாம். டோன்ட் வொர்ரி.
@ உலக சினிமா ரசிகன்
கண்டிப்பாக நண்பரே!!
//வீடு K.S.சுரேஸ்குமார் said...
கர்ணன் எனக்கு மிகவும் பிடித்த படம்....பார்க்க வேண்டும்....ஒரு இளைஞரிடம் இருந்து விமர்சனம் சிம்மகுரலோன் என்றும் வாழ்கிறார்...!//
நன்றி சுரேஷ். சிங்கம் சிவாஜி!!
@ FOOD NELLAI
ஆமாம் சார். வருகைக்கு நன்றி.
//மோகன் குமார் said...
Yes. I too enjoyed NTR role and his acting very much//
Thank you Sir.
//இராஜராஜேஸ்வரி said...
பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிம்மக்குரலோன் ரசிகர்களை வசீகரிக்கும் கர்ணன் பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி இராஜராஜேஸ்வரி.
//MANO நாஞ்சில் மனோ said...
காலத்தால் அழியாத காவியம் என்று சொல்வதே மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இல்லையா...!!!//
48 வருஷம் கழிச்சும் வசூலில் கலக்குது.
//MANO நாஞ்சில் மனோ said...
சினிமா உள்ளவரை சிவாஜி பேசப்படுவார், ஓவர் ஆக்ட் கொடுக்கிறார் என்று சொல்லும் மலையாளிகளே சிவாஜி நடிப்பை ரசிப்பது உண்டு!!!!//
ஓவர் ஆக்ட் கேள்விக்கு தனது சுயசரிதையில் பதில் கூறியுள்ளார் சிவாஜி.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பழைய படங்களை தியேட்டரில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்...... எஞ்சாய் பண்ணிட்டீங்க.....//
ஆமாங்க. ஆனால் ஒளியின் தரம் சிறப்பாக இல்லாதது வருத்தமே. அதில் கோட்டை விட்டு விட்டனர்.
//kanagu said...
எனக்கும் அதே எண்ணம் தான். இந்த ‘Blind date' போடுவது போல ‘Classic date' என்று ஒன்றல்லது இரண்டு காட்சிகள் போடலாம்.//
விரைவில் அதற்கான தருணம் வந்தால் சந்தோஷமே!
Post a Comment