CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, March 17, 2012

வூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்!!


                                     (வங்கக்)கடலோரம் வாங்கிய காற்று. குளிராக இருந்தது  நேற்று!! 

நேத்து போட்ட பட்ஜெட்ல வெரைட்டி வெரைட்டியா பிரணாப் முகர்ஜி ஆப்பு வச்சதை பத்தி எந்தக்கவலையும் இல்ல நம்ம சச்சின் தாசர்களுக்கு. எப்படா நம்ம தலைவர் நூறாவது நூறை அடிப்பாருன்னு மாசக்கணக்கா டி.வி. முன்னாடி குத்த வச்சிக்கிட்டு உச்சா கூட போகாமா 'அச்சா' கமன்டரியை கேட்டதுக்கு பலன் ஒரு வழியா கெடச்சிருச்சி. ஒரு காலத்துல இந்தியா ஜெயிக்க அசத்தலா ஆடுன சச்சினை பாத்து இளிச்ச மேனிக்கி வாயை பொளந்துட்டு திரிஞ்ச பயதான் நானும். போகப்போக சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது. உதாரணம்: கோக், பெப்சி மாதிரி மல்டிநேஷனல் கம்பனிங்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மாதிரி ஸ்போர்ட்ஸ் சேனலுங்க (அதுவும் கிரிக்கெட்டுக்கு  தனி சேனலுங்க வேற) எல்லாம் நம்ம நாட்ல "சும்மாவே இருக்கறது சும்மா இல்லடா" கூட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு கரெக்டா குறி வச்சி அடிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க காட்ல அடை மழைதான்!!

மைக்கேல் பெவன், லாரா மாதிரி ஆளுங்க எத்தனையோ தரம் தனி ஆளா போராடி அவங்க டீமை ஜெயிக்க வச்சிருக்காங்க. ஆனா எப்ப நாட்டை விட்டுட்டு சாதனைக்காக சச்சின் ஆட ஆரம்பிச்சாரோ அப்பவே அவர் மேல இருந்த மரியாதை கொறைய ஆரம்பிச்சது. பரிசா கெடச்ச ரேஸ் காரை இந்தியாவுக்கு கொண்டு வர கோடி ரூவா விலக்கு வேணும், புதுசா வாங்குன  வீட்ல நீச்சல் குளம் கட்டிட்டு, அதுக்கு தண்ணீர் வரி போட வேண்டாம்னு அரசை கேட்டுக்கிட்டாரோ அத்தோட அந்தாளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பணால் ஆயிருச்சி. ஜெயிக்காத ஆட்டத்துல என்ன சாதனை செஞ்சாலும் என்ன பெரும?  அதுவும் பங்களாதேஷ் மாதிரி சோட்டா நாடுங்க கிட்ட. 

இவரோட பையன் இந்திய டீமுக்கு ஆட வந்த பின்னால கூட நூறாவது நூறை அடிக்க மாட்டாரு போலன்னு நெனச்சோம். நல்லவேள. சுண்டக்கா டீமான பங்களாதேஷ் கிட்ட வித்தையை முழுசா பிரயோகம் பண்ணி அதை சாதிச்சிட்டாரு சாரு. அடிச்சது 114. மொத்தம் 147 பாலுல. முப்பத்தி மூணு பாலை சுவாகா செஞ்சிட்டாரு அண்ணாத்தை. அப்படி செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இந்தியா ஜெயிச்சிருக்கும். அது யாருக்கு வேணும்? நம்ம ஆளுக்கு சாதனை மட்டும்தானே தேவை. தன்னோட சுயநலத்துக்காக இந்தியாவோட வெற்றியை எத்தனை முறை இவரு காவு தந்துருப்பாருன்னு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும். 

                                         எத்தனைப்பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! 

ஆனா பாவம். அண்ணனோட சந்தோஷம் சில மணிநேரம் கூட நீடிக்கல. ஸ்ட்ராங்கான மிடில் ஆர்டர் பேட்டிங்கால பங்களாதேஷ் பட்டைய கெளப்பிருச்சி. "இப்ப இதுங்கல்லாம் நம்மள யூஸ் பண்ண ஆரம்பிச்சிருச்சா? யூஸ்...." அப்படின்னு வடிவேலு ஒரு குழந்தைய பாத்து சொல்வாரு. அந்த மாதிரி பங்களாதேஷ் பசங்க தோனி டீமை பம்ப் அடிச்சி இருக்காங்க. அடிக்கடி ஷாக் ரிசல்ட் தர்றது ஒண்ணும் இந்த குட்டி ஆசிய அணிக்கு புதுசு இல்ல. இந்த முறையும் அதை செஞ்சி காமிச்சிட்டாங்க.  பலநாள்  பலவார பலமாச ஆசை நிறைவேறுன சந்தோஷத்துல மானஸ்தன் சச்சின் ரிட்டையர் ஆனா புண்ணியமா போகும். 

நாளைய சரித்திரம் சச்சினை பாராட்டி 'கிரிக்கெட்டின் கடவுள்',  'இந்தியாவின் இடிதாங்கி'..இப்படி ஏகப்பட்ட புகழாரம் சூட்டலாம். ஆனா கிரிக்கெட்டை உன்னிப்பா பாக்கற மனசாட்சி இருக்கறவங்களுக்கு தெரியும் இவர் ஒரு பக்கா சுயநலவாதின்னு. உனக்காக செஞ்சுரி போட்டா இந்தியா தோக்கும். நாடு ஜெயிக்க 40 பந்துக்கு 40 ரன் அடிச்சா போதும். உலகம் திரும்பி பாக்கும். இதுதான் நிதர்சனம். இந்தக்கறையை சச்சினால தொடைக்கவே முடியாது. ஆர்ப்பாட்டம் செய்யாத மனுஷன், பலவகை ஷாட்களை அனாசயமாக அடிக்கும் அர்ஜுனன், வாய்த்திமிர் இல்லாதவன்...இந்த மாதிரி பல நல்ல விஷயங்கள் அவர்கிட்ட இருந்தும்...தன்னோட சாதனைக்கு மட்டுமே பல தரம் பந்துகளை வேஸ்ட் செஞ்சி ஆடுன சச்சின்,  வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தப்பான முன்னுதாரணம். இதுல எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல!!
............................................................................................ 
  11 comments:

நாய் நக்ஸ் said...

Innuma intha
ulagam
nambuthu........???

ஹாலிவுட்ரசிகன் said...

இதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கும் இல்லை தல. மிக அழகாக மனதில் நினைத்ததை சொல்லிட்டீங்க.

Prem S said...

//114. மொத்தம் 147 பாலுல. முப்பத்தி மூணு பாலை சுவாகா செஞ்சிட்டாரு அண்ணாத்தை. அப்படி செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இந்தியா ஜெயிச்சிருக்கும்//அன்பரே உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை .கோலி 82 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து தெரிய வில்லையா

Unknown said...

சிவா! இதையே தான் நான் சொன்னேன் மேட்ச் பார்த்திட்டு என்னை எல்லா பயலும் முறைக்கிறானுக....பெர்னாட்ஷா உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி.......

பால கணேஷ் said...

நன்று சிவா. என் மனதில் ஓடிய உணர்வுகளை அழகான எழுத்து வடிவத்தில் படிச்ச உணர்வு. சச்சினைப் பத்தி இப்படிப் பேசினா... இநதிய கிரிக்கெட்டுக்கு அவர் செஞ்சது நிறைய... நீ கிரிக்கெட்டுக்கு துரோகிங்கறாங்க.. எனக்கு துணையா ஒருத்தர் இருக்கறதுல சந்தோஷம்,

கோகுல் said...

நடத்துங்கண்ணே நடத்துங்க

Unknown said...

//நம்ம நாட்ல "சும்மாவே இருக்கறது சும்மா இல்லடா" கூட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு கரெக்டா குறி வச்சி அடிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க காட்ல அடை மழைதான்!!//

கரெக்டா சொன்னீங்க!, FB யில சமீபத்தில் ஒரு போட்டோ பார்த்தேன், ஜெயிச்சுட்டு வந்த கபாடி குழு நடு ரோட்டுல பரிசுக் கோப்பையோட தேமேன்னு நின்னுக்கிட்டு இருந்தாங்க, ஏறேடுத்துப் பார்க்க ஒரு ஆள் கூட இல்லை.

இந்தத் தோல்விகூட சூதாட்டக்காரர்களின் சூழ்ச்சியாக ஏன் இருக்கக்கூடாது?, அவங்க பாக்கெட் நிரம்ப அடுத்து வரும் "இந்தியா - பாகிஸ்தான்" மேட்ச்தானே சரியா இருக்கும். கூட்டம் கூட்டமா வீரர்கள் ஜெயிலுக்குப் போனாலும், உணர்ச்சிப்பூர்வமா இந்த விளையாட்டை பார்க்க ஆள் இல்லையா என்ன?,

"ஏன்னா இந்த உலகம் இன்னும் இவனுகள நம்புது!!!!.....

kanagu said...

/*எப்படா நம்ம தலைவர் நூறாவது நூறை அடிப்பாருன்னு மாசக்கணக்கா டி.வி. முன்னாடி குத்த வச்சிக்கிட்டு உச்சா கூட போகாமா 'அச்சா' கமன்டரியை கேட்டதுக்கு பலன் ஒரு வழியா கெடச்சிருச்சி.*/

ஹா ஹா ஹா :) இந்த வரிகளை ரசித்தேன்.

90-களில் பலமுறை தன்னுடைய சதத்திற்காக பந்துகளை வீண் செய்துள்ளார். பல பேட்ஸ்மேன்களும் அப்போது அப்படி தான் இருந்தார்கள். ஆனால் நீண்ட நாள் கழித்து அப்படி சச்சின் பந்துகளை வீணடித்துள்ளார். இது எனக்கு தெரிந்து மீடியாவின் 100-வது சதம் ப்ரஷரினால் தான் செய்திருப்பார் என நம்புகிறேன். நான் பார்த்தவரை அவர் இன்னும் சிறப்பாகவே விளையாடி கொண்டிருக்கிறார்.

/*பரிசா கெடச்ச ரேஸ் காரை இந்தியாவுக்கு கொண்டு வர கோடி ரூவா விலக்கு வேணும், புதுசா வாங்குன வீட்ல நீச்சல் குளம் கட்டிட்டு, அதுக்கு தண்ணீர் வரி போட வேண்டாம்னு அரசை கேட்டுக்கிட்டாரோ அத்தோட அந்தாளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பணால் ஆயிருச்சி.*/

எனக்கும் இந்த விஷயத்தில் சச்சினை பிடிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட் வீரராக முன்பைவிட சாதனைக்காக இல்லாமல் விளையாடுவதாகவே எண்ணுகிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சிவகுமார்,

சச்சின் அடிச்ச சதம் நூறில், இந்தியா பெயரில் கள்ளத்தனமாக விளையாடும் பி.ஸி.ஸி.ஐ அணி வெற்றி பெற்றது வெறும் 53 ஆட்டங்களில் மட்டும்தான் என்ற 'ரெக்கார்ட்' நிறைய பேருக்கு தெரியாது..!

பதிவில் பல கருத்துக்கள் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க சகோ.சிவக்குமார். நன்றி.

அதேநேரம்,

'பந்தை வீணாக்கி ஆடும் பழக்கம் உள்ளவர் சச்சின்' என்று அப்படி பொத்தாம் பொதுவாக குற்றம் சொல்ல முடியாது. இவ்ளோவுக்கும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கும் அதிரடி ஆட்டத்தை ஸ்ரீக்காந்துக்கு அப்புறம் அடிக்கடி நிகழ்த்தி பலரிடம் இதை GOOD INSPIRATION ஆக ஆரம்பித்து வைத்தவர் சச்சின்.

ஆனால்.... இப்போது அவருக்கு வயசாயிருச்சு. அதனால் அவரின் முந்தைய 100+ STRIKE RATE எல்லாம் இனி எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில்....

//ரிட்டையர் ஆனா புண்ணியமா போகும்//ன்னு நீங்க சொல்றீங்க.... இது கரெக்ட்தான்.

ஆனால்..........இன்னிக்கி சச்சின் உங்களுக்கு என்ன பதில் சொல்லி இருக்கார்னா....

"ஒரு வீரர் சிறப்பாக(!?) ஆடிக்கொண்டிருக்கும் போது நாட்டிற்காக(?!) தொடர்ந்து ஆட வேண்டும். இந்நிலையில் ஓய்வு பெறுவது அவரது சுயநலமான எண்ணத்தை காட்டுகிறது(!?). 'என்னால் விளையாட முடியாது' என்ற எண்ணம் எனக்கு வரும் போது நானே ஓய்வு பெறுவேன்.(!?) மற்றவர்கள் கூறுவதற்காக நான் ஓய்வு பெறக் கூடாது..!"

ம்ம்ம்...
புர்ரிஞ்சுதா.....
எல்லாரும் சைலன்ட்...!

angusamy said...

சரியா சொன்னீங்க சிவகுமார்

இந்த சச்சின் எப்பவாதுதான் ஜெயிக்கிறதுக்காக விளையாடுவார்?

நிறைய டைம் personal milestone க்கு விளையாடுவார்?

90 வந்ததுக்கப்புறம் அவர் வேகமா விளையாண்டு 100 எடுத்த மேட்ச் எல்லாம் ரொம்ப கம்மி

100 போடறதுக்குள்ள நிறைய பால் வேஸ்ட் பண்ணி நம்ப உயிரையும் எடுத்துருவார்?

மேலும் he is never a finisher of the game.

ஒரு காலத்துல நானும் சச்சினோட die hard fan. அப்புறம் இவர் விளையாண்ட ஸ்டைல் பார்த்து வெறுத்து போனதுதான் மிச்சம்

ராகுல் டிராவிட் காக கொஞ்சம் நாள் மேட்ச் பார்த்தது . இப்ப அவரும் இல்லை


சச்சின் ரிடையார் எல்லாம் இபோதைக்கு நடக்காது. அதையும் அடுத்த நாள் சொல்லிட்டார்.

நல்ல back pain, வேற எதுவும் body problem வந்து விளையாடாம இருந்ததன் உண்டு.

பட் அவர் கிட்ட என்ன ஸ்பெஷல் naa? 100 century adichchaachu illai ini கொஞ்சம் நாள் kalakkuvaar paarunga

Vetirmagal said...

நீங்க சொல்றது சரீன்னு எனக்கும் பட்டுது. ஆனால் இங்கே வேறே மாதிரியில்ல எழுதி இருக்காங்க.

http://www.anupamtimes.com/2012/03/when-team-is-suffering.html

Related Posts Plugin for WordPress, Blogger...