CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, March 16, 2012

அடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்                                            டமிலனைத்தவிர எல்லார் கிட்டயும் 'கை' குலுக்கியாச்சி              

வணக்கம் வடக்கத்தி வாத்யாரே,

எப்பிடி இருந்தாலும் நான் மட்டும்தான் பேசப்போறேன். நீங்க வழக்கம்போல கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க. அமெரிக்காக்காரன் எப்ப ஒரு நாட்டு மேல பாசத்தை கொட்டி பாலூட்டி, தயிரூட்டி வளக்கப்போறேன்னு சொல்றானோ அப்பவே அவனுக்கு அந்த நாட்டுல ஒரு கண்ணுன்னு பச்ச மண்ணு கூட பளிச்னு சொல்லும். உங்களுக்கு தெரியாதா என்ன? பக்கத்து தீவுல புண்ணிய ஆட்சி செய்யிற செவப்பு துப்பட்டாக்காரன்(அவன் பேரை சொன்னா ஒரு கண்டைனர் சைஸ் இருக்கற பேஸ்ட்டால பல்லு வெளக்கனாலும் ஸ்மெல் போகாது. அதான்)   அரசுக்கு எதிரா ஓட்டு போட்டா  என்னமோ ஆகுமாமே.  அது இன்னாபா? ஆங்.. 'அண்டை நாடுகளுடனான சுமூக உறவு பாதிக்கும்'னு சோக்கா சொல்றீங்க. காமடி நல்லாத்தான் இருக்கு. ஆனா டைமிங் சரியில்லையே. 

எங்க ஆளுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ். நியாயம், நீதின்னு நாக்கு கூசாம கெட்ட வார்த்தையா பேசுவாங்க. ஒரு தடவ இப்படித்தான் நம்ம கர் 'நாடகக்காரரு'  எஸ்.எம். கிச்சுனா..(அதாங்க 79 வயசுலயும் லட்ச ரூவா செலவு செஞ்சி டாப்புல டோப்பாவை கவுத்தி இருப்பாரே) சிக்குனாரு. அவரு பாவம் ஒருநாளு தலைவலின்னு டீக்குடிக்க வேகமா பைவ் ஸ்டார் ஓட்டல் பக்கம் போயிட்டு இருந்தாரு. அந்த நேரம் பாத்து எவனோ டமிலனாம், வழிய மறிச்சி  ''அய்யா மவராசு. மீன் புடிக்க போனா சப்பமூக்கு டிராகன் நாட்டுக்காரன் கூட சேந்து குட்டித்தீவு ஜிங்களவன் எங்கள அடிச்சே கொல்றானுங்க. நீங்கதான்  காப்பாத்தணும்''....இப்படி சில்லி சென்டிமென்ட் பேசி இருக்கான் .  நம்ம ஆளுக்கு வந்ததே கோவம். சட்டுன்னு 'ஷட் அப் நான்சன்ஸ் அண்ட் பிரிங் மீ எ கப் ஆப் சிலோன் டீ 'ன்னு கத்திப்புட்டாறு. அத்தோட விடாம இன்னா சொன்னாரு தெரியுமா?  ''லட்சக்கணக்கான மீனை நீ புடிச்சி கொழம்பு வச்சி திங்கற. அதுங்க சாகறத தெனம் பாத்து நொந்து மேக்கி நூடுல்ஸ் ஆன ஜிங்களவன் ஏதோ மனித நேயத்தோட சாம்பிளுக்கு சில நூறு பேரை கொன்னதை எல்லாம் ஒரு பிரச்னைன்னு பேசிக்கிட்டு. நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உன் மனு என் டேபிளை விட்டு ஒரு இஞ்ச் நகராது. முதல்ல செத்துப்போன மீனுக்கு எல்லாம் மெரீனா பீச்சோரம் சமாதி கட்டிட்டு பேச வாங்கடா. அமேதில வாங்கி கட்டிக்கிட்டதுலயே எங்க ஆளுங்க எல்லாருக்கும் பின்னால அவிஞ்சி போயி கெடக்கு. படுவாக்களா.  ஓடிப்போயிடுங்க". 

                                            '2014 தேர்தல் வரை இப்படியே கண்டின்யூ பண்ணு சுனா. பானா.' 

இருக்குற கடுப்பு பத்தாதுன்னு அகில உலக ஆலமரத்தடி பஞ்சாயத்துல அமெரிக்காக்காரன் ஓட்டெடுப்பு நடத்தறானாம். அதுக்கு ஆமாம் சாமி போடச்சொல்லி எங்க ஆளுங்க கூச்சல் போட்டு உங்க மானத்த (கருமம். நமக்கு சம்மந்தம் இல்லாத வார்த்தையா வருது. கீ போர்டை டக்குனு  மாத்தணும். என்னாது 'டக்கு'னா என்னன்னே உங்களுக்கு தெரியாதா. அது வந்து..வந்து..ஹி..ஹி..) உசுர வாங்கறாங்க. "ஆதரிச்சி ஓட்டு போடுவீங்களா இல்ல எதிரா ஓட்டு போடுவீங்களா. ரெண்டும் இல்லாம ஜகா வாங்குவீங்களா?" இப்படி பொசுக்குன்னு கொஞ்சங்கூட ஈவு இரக்கமே இல்லாம 'டக்கு'னு பதில் சொல்ல சொல்றாங்களே...நெஞ்சுல தம்மாதூண்டு கூட ஈரம் இல்லாதவங்க. உங்க வாய தெறக்க வக்க "இத்தனை பேரு கத்தறோம். வாயத்தெறந்து பதில் சொன்னா தேஞ்சா போயிடும்", "செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேட இதுதான் வாய்ப்பு"...இப்படி ஏகப்பட்ட ட்ரிக்ஸ யூஸ் பண்ணி வயலன்ட்டா  கூவுனாலும் சைலண்ட்டா சமோசா சாப்புடுற தெகிரியம் எவனுக்குமே வராது வாத்யாரே. 

இவங்க சொல்றதையெல்லாம் கண்டுக்காதீங்க தலைவா (நான் சொல்லலைனாலும் அதான் நடக்கும்). நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நேத்து மத்யானம் கூட வெளிநாட்ல ஒண்ணாப்பு படிக்கற நம்ம வடநாட்டு பையன் கட்டை வெரலை மட்டும் ஜூம் செஞ்சி நார்த் இன்டியன் நியூஸ் சேனல்ல அடிக்கடி போட்டு காட்டுனாங்க. வெள்ளைக்கார பச்சா ஒருத்தன் பென்சில் சீவுரப்ப ப்ளேடால கீறிட்டானாம். நாலு பெரிய சொட்டு, மூணு மினி சொட்டு ரத்தம் கொட்டி இருக்கு. இத சும்மா விடக்கூடாது தல. அந்த நாட்டு அதிகாரிக்கு ஒடனே சம்மன் அனுப்புங்க. மறக்காம அந்த டயலாக்கையும் பேசிருங்க.."கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்". என்ன கொழுப்பு இருந்தா நார்த் இந்தியன் கை மேல கை வச்சிருப்பான் அந்த சோமாறி. நேரம் ஆயிருச்சி. சீக்கிரம் டி.வி.ல வந்து உன் ஸ்டைல்ல 'மியாவ்'னு கத்திட்டு காணாம போய்டு தலைவா. அப்பதான் ஒண்ணாப்பு படிக்கிற வெள்ளைக்கார பயலுக்கு வெல வெலத்து போகும். 

இப்ப நடக்கற மேட்டரை பத்தி ரொம்ப கொளப்பிக்க வேண்டாம் சாரே. நமக்கு அண்டை நாட்டுடனான சுமூக(!) உறவுதான் முக்கியம். தீர்மானத்தை ஆதரிக்கறதுக்கு முன்ன முன்னூறு முறை யோசிங்க. ஏன்னா சப்பைமூக்கனால நமக்கு 2091-ல ஆபத்து வரும்,  அமெரிக்கா பயலுவ  2099-ல  குட்டித்தீவோரமா டென்ட் அடிக்கற காலமும் வரலாம்.  அப்ப எங்கள யாரு காப்பாத்துவா? நீங்க சொல்றதும் நியாயம்தான். எல்லாம் போயி வேலையப்பாருங்கப்பா. அங்கிள் சிப்ஸ் சாப்புட்டமா, ஐ.பி.எல். பாத்தமான்னு இல்லாம..எப்பப்பாரு டமிலன், டமிலுணர்வு, டமிலீலம்,  டமிலக மீனவன்னு அனத்திக்கிட்டு...ரேஸ்கல்ஸ்!!
......................................................................................


.................................
My other site:
................................10 comments:

NAAI-NAKKS said...

What to say,,,,,????????

Ithu tamilanin
sabakkedu.......

வீடு K.S.சுரேஸ்குமார் said...

சிவா! மௌனகுருவ நீ இந்தியில இல்ல இல்ல பஞ்சாப்பியிலியே திட்டினாலும்....சொரனை இருக்காது....! இட்டாலி அம்மெ பபுள்கம்ம மென்னு காதுல வைச்சிருச்சு..அதுபோக டர்பன் வேற....விடுய்யா..விடுய்யா....தமிழக காங்கிரஸ் மச்சா(ள்)னுக ஓட்டு கேட்டு வருவா(ள்)னுக நூல் புடவை பூ வாங்கி வச்சிக்குவோம்......!அதுவும் ப.சி.க்கு டக்கரா இருக்கும்....

மோகன் குமார் said...

:((

I saw the clippings in computer and Puthiya thamizhagam channel also. It was devastating. They should be punished by UN for this heinous crimes

சென்னை பித்தன் said...

நம்ம ஆதங்கத்தை,வேதனையை,கோபத்தை இப்படியெல்லாம் கொட்டித்தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.அவர்கள் மாறமாட்டார்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இவனுன்ன்க எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டங்க பாஸ் .. அடுத்த தேர்தல் வரட்டும் .. டவுசர் கிழிய விடுவோம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்

அசோக் குமார் said...

என்னதான் பண்ணாலும் அந்த ஆளு மௌனம் களைய போறதில்ல. துங்கற ஆளை எழுப்பிடலாம். தூங்கிற மாதிரி நடிக்கிற ஆளை....

Yoga.S.FR said...

வணக்கம் சிவா சார்!அப்புடியே நச்சுன்னு குட்டியிருக்கீங்க.இவனுங்களுக்கு இதுவெல்லாம் ஒரு பொழைப்பு,த்தூ!!!!!!!!

கே.ஆர்.பி.செந்தில் said...

இன்னும் ரெண்டு வர்சத்ல டங்குவார் அந்து போயி டப்பா கிளிஞ்சிடும்..

Philosophy Prabhakaran said...

// இன்னும் ரெண்டு வர்சத்ல டங்குவார் அந்து போயி டப்பா கிளிஞ்சிடும்.. //

யாருக்கு...?

Related Posts Plugin for WordPress, Blogger...