CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, March 6, 2012

ட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா!!


வெகு சிலரால் திருவல்லிக்கேணி என்று கொச்சைத்தமிழில் அழைக்கப்படும் ஏரியா. முந்தைய காலத்தில் திரு.அல்லிக்கேணி என்று தவறுதலாகவும் அழைக்கப்பட்டு வந்தது. இறையருளால் காலப்போக்கில் 'ட்ரிப்ளிகேன்' என்று நாமகரணம் சூட்டப்பட்டு தமிழார்வலர்கள் மனதில் பாலை வார்த்த வரலாறு  நாம் அறிந்ததே. மெரீனா, பழமை வாய்ந்த பார்த்தசாரதி கோவில், மசூதிகள், ரத்னா கபே, மேன்சன்வாசிகளுக்கு அட்சய பாத்திரமாக விளங்கும் புகழ்பெற்ற மெஸ்கள் என ஏகப்பட்ட பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ட்ரிப்ளிகேனை ஒரு ரவுண்ட் அடிக்க எண்ணிய நான் முதலில் சென்றடைந்த இடம் தோழர் ராஜா முகம்மத் தங்கி இருந்த மேன்சன். 

ராஜா தங்கி இருந்தது மூன்று படுக்கைகளை கொண்ட சின்ன அறை. ஒரு படுக்கைக்கு வாடகை 1,050 ரூபாய். ஒரு மாத அட்வான்ஸ். அதிகபட்சம் மூன்று பேர் தங்க அனுமதி. உள்ளே வரவேற்று அமரவைத்தார் நண்பர். ஒவ்வொரு கட்டிலுக்கு கீழேயும் சூட்கேஸ்கள்,செருப்புகள்..இன்னபிற வஸ்துகள் நிரம்பி இருந்தன. பெரும்புள்ளிகள்(அரசாங்கம்)தந்த போர்டபிள் டி.வி. ஏகப்பட்ட சிறு புள்ளிகளுடன் தன்னாலான பொழுதுபோக்கை தந்து கொண்டிருந்தது. சுவற்றின் மூன்று பக்கங்களிலும் கம கம லுங்கிகள், சட்டைகள்,  அவற்றின் அருகிலேயே தனிக்கொடியில்(!) சில அன்டர்வேர்கள் ஊ(ஞ்)சலாடிக்கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் என்னை சற்றே நிலைகுலைய வைத்தது ராஜா தந்த போஸ். கதவை திறந்து வைத்தவாறே சடாலென அடர் சிகப்பு கலர் ஜட்டியுடன் நின்றவாறு அவர் லுங்கியை தேடிக்கொண்டிருக்க..."அநியாயத்துக்கு ஓப்பனா இருக்காங்களே?" என்று மனது படபடத்தது. 'இதெல்லாம் இங்க சகஜம்' என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு மேன்சன் மேனேஜரை அழைத்து கேனில் குடிதண்ணீரை நிரப்ப சொன்னார்.

                                                   ஊ(ஞ்)சலாடும் உள்ளாடைகள் 

ஒருவழியாக அவர் லுங்கிக்கு மாறியதும் எனக்கு மயக்கம் தெளிந்தது.  அதன்பின் சரமாரியாக மேன்சன் பற்றிய கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு ராஜாவின் பதில்கள் தொகுப்பாக: ."வேலைக்காக ஊரைவிட்டு வந்து இந்த மேன்சன்ல தங்குன முதல் ரெண்டு நாள் மனசை என்னவோ செஞ்சது.என்னடா ஊர் இது?எந்திர மனிதர்கள்,அவசர வாழ்க்கைன்னு நொந்து கண்ணீர் விட்டு அழுதேன். பெத்தவங்க கிட்ட  'என்னால இந்த பெரிய சிட்டில இருக்க முடியாது. சுத்தமா புடிக்கல. ஊருக்கே வந்துடறேன்' அப்டின்னு பொலம்பனேன். ஆனா வேற வழி இல்ல. பொழச்சி ஆகணும்ன்றது போகப்போக புரிய ஆரம்பிச்சது. அப்பறம் இந்த மேன்சன் வாழ்க்கைக்கு பழகிட்டேன். யதார்த்தமான ஊர்க்காரங்க, அமைதியான வாழ்க்கன்னு நிம்மதியா இருந்த காரைக்குடியை விட்டு இங்க அடைஞ்சி கெடக்கறேன். எங்க ஊர்ல யாராச்சும் எங்கள தாண்டி நடந்து போனா அவர் எங்க போறார்னு துல்லியமா கணிப்போம். சென்னைல யார் எங்க போறாங்கன்னே தெரியல".

"சக (மேன்சன்)வாசிங்களோட  பவுடர், பேஸ்ட் மாதிரி பொருளுங்கள யூஸ் பண்ணுவோமே தவிர சூட்கேஸ், லேப்டாப்பை எல்லாம் அவங்க அனுமதி இல்லாம தெறக்க மாட்டோம்" என்று ராஜா பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்து ரூம் நடுத்தர வயது சகா வந்து "அவரு இல்லையா? லேப்டாப் வச்சிட்டு போயிருக்காரா உங்க ரூம்ல? " என்று கேட்டதுதான் தாமதம், "பாத்தா தெரியலையா? ஒரு நாள் ஊர்ல இல்லைன்னாலே லேப்டாப்பை தூக்கிட்டு போயிடுவார்.  ஊருக்கு போயி ஒருவாரம் ஆச்சின்னு சொன்னேன். அப்பறமும் கேட்டா எப்படி? வேணும்னா தேடி எடுத்துக்கங்க" என்று ராஜா கலாய்க்க டப்பென எஸ்கேப் ஆனார் அந்த நபர். " பாவம். ஏங்க இப்படி ஓட்டறீங்க அவரை. இருக்கு, இல்லைன்னு சொல்லி அனுப்பலாமே? ஆமா இவர் எங்க வேலை பாக்கறார்?" என நான் கேட்க "அவரு லாயருங்க. நாங்க இப்படித்தான் பேசறது" என புன்முறுவல் பூத்தார். தொடர்ந்து மேன்சனாயணம்.

                                                ஒருநாள் மேன்சன்வாசியாக நான்..  

"தரை தளத்துல பத்து ரூம். இதே மாதிரிதான் மேல இருக்குற தளங்கள்ள. ஒவ்வொரு தளத்துக்கும் அஞ்சி பாத்ரூம். மூணு டாய்லெட். காதல் படத்துல வர்றா மாதிரி மேன்சன்வாசிகள் எல்லாரும் சேந்து இங்க என்ஜாய் பண்றதில்ல".தொடர்ந்தது எனது கேள்வி "ட்ரிப்ளிகேன் மேன்சன்ல தங்குறதுக்கும், மத்த எடத்துல தங்குறதுக்கும் என்ன வித்யாசம்?". அதற்கு ராஜா பதில் "நிறைய காரணங்கள் இருக்கு. சென்னைலயே தரமான மெஸ் நிறைய இருக்கறது இங்கதான். அதுதான் மெயினான காரணம்.  காசி விநாயகா, அம்பாள், மோனிஷா, வடிவேலன், ஜெ.கே. இப்படி ஏகப்பட்ட சாப்பாட்டு கடைங்க இருக்கு. ஆந்திரா மெஸ்ஸுங்களுக்கும் பஞ்சமில்லை" என்று லிஸ்ட் போட்டு பசியை கிளப்பினார். 

சொன்னதோடு மட்டுமின்றி பைக்கிலேற்றி அந்த மெஸ்கள்  அனைத்தையும்  சுற்றிக்காட்டியவாறே "பெட்ரோல் பங்க் இல்லாதது ட்ரிப்ளிகேன்ல பெரிய குறை. சாந்தோம், உட்லண்ட்ஸ் தியேட்டர், மவுன்ட் ரோட் வரைக்கும் போக வேண்டி இருக்கு.ஆனா எல்லா பேங்க் ஏ.டி.எம்மும் பஞ்சமில்லா இருக்கும்" என்று மேலும் சில தகவல்களை பரிமாறி வந்தவர்.."ட்ரிப்ளிகேன்ல அசத்தலான பிரியாணி கிடைக்கிற கடை ஒண்ணு இருக்கு. வாங்க அங்க போய் சாப்பிடுவோம்" என்று நா சுரப்பிகளை கிளப்பி விட்டார்.

'என்ன கடை அது? அப்படி என்ன ஸ்பெஷல் பிரியாணி கெடைக்கும் அங்க?' என்று யோசித்தவாறே பயணத்தை தொடர்ந்தேன். அந்தக்கடை பற்றியும், ட்ரிப்ளிக்கேன் மேன்சன் மற்றும் மெஸ்கள் பற்றி ராஜா சொன்ன மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்..!!

Photos: madrasbhavan.com
....................................................................

.............................
My other site:
agsivakumar.com
............................

..............................................
சமீபத்தில் எழுதியது:

அரவான் - விமர்சனம்
..............................................45 comments:

Unknown said...

பதிவே மொக்கை இதுலே ரெண்டாவது பார்ட் வேற!!!

Unknown said...

நல்லா இருக்குலே லைவ் கவரேஜ்...நானும் ஒரு பதிவு போடுறேன் ஹிஹி!

Unknown said...

நல்லா இருக்குலே லைவ் கவரேஜ்...நானும் ஒரு பதிவு போடுறேன் ஹிஹி!

கோவை நேரம் said...

சீக்கிரம் அந்த பிரியாணி கடை பத்தி சொல்லுங்க..அடுத்த தடவை ஒரு ரவுண்ட் கட்டறேன்

Unknown said...

அண்ணே சான்சே இல்ல கைல ஒரு குச்சி குடுத்தா ராஜபார்வை கமல்தான் ...

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

முத்தரசு said...

சீக்கிரம் சீக்கிரம்....பிரியாணி

முத்தரசு said...

மென்சன் வாழ்க்கை.....

ம்.

உணவு உலகம் said...

//வெகு சிலரால் திருவல்லிக்கேணி என்று கொச்சைத்தமிழில் அழைக்கப்படும் ஏரியா. முந்தைய காலத்தில் திரு.அல்லிக்கேணி என்று தவறுதலாகவும் அழைக்கப்பட்டு வந்தது. இறையருளால் காலப்போக்கில் 'ட்ரிப்ளிகேன்' என்று நாமகரணம் சூட்டப்பட்டு தமிழார்வலர்கள் மனதில் பாலை வார்த்த வரலாறு நாம் அறிந்ததே.//
ஸ்தல புராணம் அருமையா சொல்லிருக்கீங்க தல.

உணவு உலகம் said...

//'என்ன கடை அது? அப்படி என்ன ஸ்பெஷல் பிரியாணி கெடைக்கும் அங்க?' என்று யோசித்தவாறே பயணத்தை தொடர்ந்தேன். அந்தக்கடை பற்றியும், ட்ரிப்ளிக்கேன் மேன்சன் மற்றும் மெஸ்கள் பற்றி ராஜா சொன்ன மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்..!!//
காத்திருக்கிறோம், காக்கா பிரியாணியாய் இருக்கக்கூடாதென்ற வேண்டுதலுடன்.:)

வெளங்காதவன்™ said...

:-)

CS. Mohan Kumar said...

பதிவுக்கான நல்ல ஐடியா மேன்ஷன் பற்றிய பதிவு.இப்படியே நாம எழுதினா புத்தகங்களுக்கு நிஜமாவே மாற்றாகிடுவோம்.

நானும் திருவல்லி கேணி மேன்ஷனில் இருந்துள்ளேன்

Unknown said...

சுவாரஷ்யம்! அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங் பாஸ்!

Unknown said...

சேவல் பண்ணைக்கு போயிருக்கிங்க சிவா! எதாவது "கோழிய '' பார்திங்களா...?

Unknown said...

ஹலோ! சாப்பிட்ட பிரியாணி கோழிபிரியாணியான்னு கேட்டேன் ஹிஹி!

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
பதிவே மொக்கை இதுலே ரெண்டாவது பார்ட் வேற!!!//

அதுவும் சரிதான். எனக்கு இந்த அமானுஷ்யம், அவதானிப்பு, பகீரதப்பிரயத்தனம், ஆகச்சிறந்த மாதிரி வார்த்தை அலங்காரம் எல்லாம் பெருசா தெரியாது. நடந்ததை அப்படியே எழுதி இருக்கேன். ட்ரிப்ளிகேன் பத்தி ஒரு சில தகவல்கள் சென்னைக்கு வெளில இருக்குற நண்பர்களுக்கு சென்றடையனும் அப்டிங்கறதுதான் இந்த மாதிரி பதிவுங்களோட இலக்கு. வேற எதுவும் இல்லை.

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் said...
நல்லா இருக்குலே லைவ் கவரேஜ்...நானும் ஒரு பதிவு போடுறேன் ஹிஹி!//

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. சீக்கிரம் போடுங்க உங்க பதிவை.

! சிவகுமார் ! said...

//கோவை நேரம் said...
சீக்கிரம் அந்த பிரியாணி கடை பத்தி சொல்லுங்க..அடுத்த தடவை ஒரு ரவுண்ட் கட்டறேன்//

தயார் ஆகிட்டு இருக்கு பதிவு. போட்டுடறேன்.

! சிவகுமார் ! said...

//நா.மணிவண்ணன் said...
அண்ணே சான்சே இல்ல கைல ஒரு குச்சி குடுத்தா ராஜபார்வை கமல்தான் //

குச்சி மட்டுமா? அந்த ஹீரோயினை புகை போட்டு புடிச்சிட்டு வாங்க பிள்ளைவாள்.

! சிவகுமார் ! said...

@கூகிள்சிறி.கொம்

சரிங்க.

! சிவகுமார் ! said...

//மனசாட்சி said...
சீக்கிரம் சீக்கிரம்....பிரியாணி//

தயார் ஆகிட்டு இருக்கு.

! சிவகுமார் ! said...

//மனசாட்சி said...
மென்சன் வாழ்க்கை.....

ம்.//

அனுபவம் இருக்கா?

! சிவகுமார் ! said...

@ FOOD NELLAI
காத்திருக்கிறோம், காக்கா பிரியாணியாய் இருக்கக்கூடாதென்ற வேண்டுதலுடன்.:)//

அப்படி எல்லாம் இல்லை சார். அசத்தல் பிரியாணிதான்.

! சிவகுமார் ! said...

@ FOOD NELLAI

ஸ்தல புராணம் அருமையா சொல்லிருக்கீங்க தல//

தலயா? நாங்க எப்பவுமே வாலுங்கதான். நீங்கதான் 'அசல்' தல!!

! சிவகுமார் ! said...

@ வெளங்காதவன்

நன்றி நண்பரே!!

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
பதிவுக்கான நல்ல ஐடியா மேன்ஷன் பற்றிய பதிவு.இப்படியே நாம எழுதினா புத்தகங்களுக்கு நிஜமாவே மாற்றாகிடுவோம்.

நானும் திருவல்லி கேணி மேன்ஷனில் இருந்துள்ளேன்//

நன்றி சார். உங்க மேன்சன் அனுபவங்களையும் எழுதுங்க.

! சிவகுமார் ! said...

@ ஜீ

சுவாரஷ்யம்! அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங் பாஸ்!//

சீக்கிரம் அடுத்த பதிவை போடறேன் ஜீ. நன்றி.

! சிவகுமார் ! said...

// வீடு K.S.சுரேஸ்குமார் said...
சேவல் பண்ணைக்கு போயிருக்கிங்க சிவா! எதாவது "கோழிய '' பார்திங்களா...//

கோழிகளுக்கு அங்கே அனுமதி இல்லவே இல்லையாம். :((

! சிவகுமார் ! said...

//வீடு K.S.சுரேஸ்குமார் said...
ஹலோ! சாப்பிட்ட பிரியாணி கோழிபிரியாணியான்னு கேட்டேன் ஹிஹி!//

எல்லாருமே விளக்கம் தரும்போதுதான் மாட்டிக்கறாங்க :))

நாய் நக்ஸ் said...

:)))))))))))))))))))))))*10000000000000000000000000000000000000000000000=====?????

! சிவகுமார் ! said...

@NAAI-NAKKS

வெயில் அதிகம்தான். எலுமிச்சை வாங்கி அரக்க பரக்க தேய்ங்க. சரி ஆகுதான்னு பாக்கலாம்.

ராஜி said...

திரு அல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கையை புட்டு புட்டு வைக்குறிங்க. தொடருங்கள் சகோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவே மொக்கை இதுலே ரெண்டாவது பார்ட் வேற!!!

செந்தில் அண்ணே நீங்க சொல்லிகொடுத்த மாதிரியே கமென்ட் போட்டுட்டேன் :))

இளம் பரிதி said...

அடுத்த சில நிமிடங்களில் என்னை சற்றே நிலைகுலைய வைத்தது ராஜா தந்த போஸ்....nenga hostela irunthu padikala nu ninikiren...ithellam satharanamappa....

Yoga.S. said...

தொடர் பதிவோ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு நல்லா வந்திருக்கு சிவா, அப்பப்போ இந்த மாதிரி எழுதலாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும்னு பொதுவா சொன்னா போதாதா? இப்படி ஜட்டிய போட்டோ புடிச்சி போடனுமா? நல்ல வேள உங்க ஃப்ரெண்டு (செகப்பு) ஜட்டியோட நிக்கிறத போடல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்னைல இருந்தப்போ ஒருவாட்டி மேன்சன்ல சேர முயற்சி பண்ணேன், கெடைக்கல.....

! சிவகுமார் ! said...

@ ராஜி

நன்றி சகோ. புட்டு விக்காத வரைக்கும் நான் தப்பிச்சேன்.

! சிவகுமார் ! said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவே மொக்கை இதுலே ரெண்டாவது பார்ட் வேற!!!

செந்தில் அண்ணே நீங்க சொல்லிகொடுத்த மாதிரியே கமென்ட் போட்டுட்டேன் :))//

கே.ஆர்.பி.யை ராகுல் காந்தி பி.ஏ.வா போட்டாத்தான் சரிப்படும் :))

! சிவகுமார் ! said...

// Elamparithi said...
அடுத்த சில நிமிடங்களில் என்னை சற்றே நிலைகுலைய வைத்தது ராஜா தந்த போஸ்....nenga hostela irunthu padikala nu ninikiren...ithellam satharanamappa....//

நான் எல்லாம் வீட்டு குகைல வாழற சிங்கம். அதான் இதெல்லாம் 'புதுசா தெரியுது'.

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
தொடர் பதிவோ???//

இல்லைங்க. தொடர் பதிவுன்னாலே நமக்கு வயித்த கலக்கும். பெரும்பாலும் தப்பிச்சிடுவேன்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவு நல்லா வந்திருக்கு சிவா, அப்பப்போ இந்த மாதிரி எழுதலாம்......//

நன்றி. கண்டிப்பா எழுதறேன் ப.ரா.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும்னு பொதுவா சொன்னா போதாதா? இப்படி ஜட்டிய போட்டோ புடிச்சி போடனுமா? நல்ல வேள உங்க ஃப்ரெண்டு (செகப்பு) ஜட்டியோட நிக்கிறத போடல.....//

அங்க போட்டோ புடிக்க வேற எதுவும் இல்லைங்க. யதார்த்தத்தை வேற பிரதிபலிக்கணுமே. அதான். அவர் உள்ளாடையோட நிக்கறதை போட்டோ எடுத்தா என் மொபைல் பத்திக்கும்னு உஷாராயிட்டேன்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்னைல இருந்தப்போ ஒருவாட்டி மேன்சன்ல சேர முயற்சி பண்ணேன், கெடைக்கல...//

அனுஷ்கா மாதிரி ஆஜானுபாகுவான பொண்ணை ரூம் மேட்னு சொல்லி அழைச்சிட்டு போனா எப்படி எடம் கெடைக்கும்?

Related Posts Plugin for WordPress, Blogger...