CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, March 1, 2012

திருவொற்றியூர் புலம்பல்கள் - 2

திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக பல கடைகள் மற்றும் வீடுகளை அரசு எந்திரங்கள் கபளீகரம் செய்து வருவதில் அஞ்சாசிங்கத்தின் குட்டி ஆபீசும், பிலாசபியின் வீடும் சிக்கிக்கொண்ட செய்து கேட்டு விக்கித்து போன அண்ணன் கே.ஆர்.பி. "வாங்க தம்பி ஸ்பாட்டுக்கு போவோம்" என்று அழைத்தார். ஆமோதித்த நானும் அவருடன் பைக்கேறினேன். மவுண்ட் ரோட்டை கடந்தவாறு புதிய தலைமைச்செயலகத்தின் நேர் எதிரே பைக்கை பார்க் செய்தார் அண்ணன். மெட்ரோ ரயில் வேலைகளுக்காக பு.த.செயலகம் பிரித்து மேயப்பட்டு கொண்டிருந்தது.

ரிச்சி ஸ்ட்ரீட் கடைல 'பவானி'யை பாத்துட்டு வந்துருவோம்" என்றார். "யாரு அந்த பொண்ணு?" என்று ஆர்வமாக அவரை பின் தொடர்ந்து சென்றால், கணினி விற்கும் ஹிந்தி பையனை பார்த்து "இதுதான் பவானி" என இன்ட்ரோ தந்தார். லேசாக வெறி ஏறி அடங்கியது எனக்கு. பவானிசங்கர்னு முழுப்பேரை சொல்லி கூட்டிட்டு போவக்கூடாதா? வில்லங்கம் புடிச்ச ஆளுங்களோடயே திரியறனே..

வடசென்னை மெயினில்தான் இரண்டு பேரும் இருப்பார்கள் என நம்பி பயணத்தை தொடர்ந்தேன். 'தேரடிக்கு வாங்க' பிலாசபி போனில். "அண்ணே..தேரடி?" ஆங்காங்கே கே.ஆர்.பி. அட்ரஸ் விசாரிக்க.."இன்னும் போங்க" என்ற பதில்தான் கிட்டியது. ஒரு கட்டத்தில் ஆந்திராவை நெருங்கிவிட்டோமோ என்று நிஜமாகவே திகில் கிளம்பியது. அங்கிருந்த ட்ராபிக் போலீசிடம் அண்ணன் 'தேரடி' கேட்டுவிட்டு சில அடி தூரம்தான் சென்றிருப்போம்...தி.நெடுஞ்சாலையில் கட்டிடங்கள் தகர்க்க பட்டுக்கொண்டு இருந்தன. அருகில் ஏகப்பட்ட பெண் போலீசார். "இவங்ககிட்ட அட்ரஸ் கேக்காம.." என அண்ணனை நொந்தவாறு பயணத்தை தொடர்ந்தேன்.  

                              அஞ்சாசிங்கம் ஆபீஸ்  இருந்த இடத்தில் இப்போது.....      

"கெளரி ஆஸ்ரமம்" காம்ப்ளக்சுக்கு வாங்க என்றார் நாத்திகர் அஞ்சாசிங்கம். பின்னாடியே '5 வருட சலூன் கடை பாக்கி ஹேர் ஸ்டைலுடன்' பிலாசபி. தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டில் தந்த கறுப்பு - சிகப்பு டி.ஷர்ட்டுடன். நால்வரும் பிரபாகர் வீட்டை அடைந்தோம். வீட்டின் ஒரு பகுதியை இடிக்க மார்க் செய்து வைத்திருந்தது அரசாங்கம். அறையில் ஆங்காங்கே பெரியார் படங்கள். தம்பி 'எப்பேர்பட்ட' ஆள் என்று அஞ்சாசிங்கம் விளக்கினார். நான் கூட "பிரபா பய சின்னப்பய. சும்மா ஒரு பேஷனுக்காக நாத்திகம் பேசறான்" என்றுதான் இத்தனை நாள் நினைத்து வந்தேன். ஆளு நிஜமாவே விஷயம் உள்ளவர்தான். "ண்ணா.தெரியாம உங்கள 'டா' போட்டெல்லாம் பேசிட்டனுங்க. மன்னிச்சிடுங்க" என்று குறுகி ஒரு கும்பிடு போட்டேன்.  

வீட்டில் நாய், மீன், கழுகு உள்ளிட்ட ஏகப்பட்ட உயிரினங்களை உலவ விட்டு இருந்தார் பிலாசபி. கிரேக்க வரலாறு முதல் தி. நெடுஞ்சாலை இடிப்பு வரை வரலாற்று  தகவல்களை அள்ளி வீசுவதில் அஞ்சாசிங்கத்திற்கு எவரும் நிகரில்லை. "இடிப்புகள் நடக்கையில் இரும்பு, ஒயர் உள்ளிட்டவற்றை திருடவே ஒரு கூட்டம் உள்ளது. பாசம் காட்டுவதிலும், பொங்கி எழுவதிலும் வடசென்னை ஆளுங்களை அடிச்சிக்க முடியாது" என ஏரியா பற்றி பல்வேறு தகவல்களை தந்தார் அஞ்சா. 

"இடிச்ச கடைக்கு கிட்டயே ஆபீஸ் போட்டுருக்கேன். ஏன்னா எனக்கு 'சிட்டி'யை விட்டு போக மனசில்லை" என அஞ்சா சொன்னதும்தான் தாமதம். வெகுண்டெழுந்து விட்டேன். "என்னாது சிட்டியா? யோவ். சென்னை எல்லை முடிகிறது போர்டை தாண்டி பல கிலோமீட்டர் வந்துருக்கோம். சிட்டியாம்ல". என எகிறினேன். அஞ்சா அசராமல் "அட..எங்களுக்கு இந்த ஸ்பாட்தாங்க 'சிட்டி' " என்று அடம்பிடித்தார். "அடுத்து டாஸ்மாக்தான?" என்று மூவரும் பர 'பற'க்க..வேறு வழி. நானும் தொடர்ந்தேன். ஏரியா முழுக்க மேடம் பிறந்த நாள் பேனர்கள். 64 வது பர்த்டே என்பதால் மேடம் 64 கலர் புடவைகளில் இருப்பது போல மெகா பேனரை வைத்திருந்தார் ஒரு விசுவாசி. என்னமா திங்க் பண்றாங்கய்யா? 

                         அஞ்சாசிங்கமும், கவுண்டரில் எட்டிப்பார்க்கும் மர்ம பதிவரும்               

சனி மாலைநேரம் என்பதால் ஹவுஸ்புல்லாக இருந்தது அரசு மதுக்கூடம். நாளை விடியலுக்குள் கூடங்குளம், காஷ்மீர், பாலஸ்தீன பிரச்னைகளை தீர்த்தே ஆக வேண்டும் என்கிற ரேஞ்சில் குடிமகன்கள் 'எதையோ' பற்றி சீரியசாக விவாதித்து கொண்டிருந்தார். வாடையே ஆகாத நமக்கு சகவாச தோஷத்தால் இப்புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்க வேண்டிய கட்டாயம். அப்பறம் என்ன? நாங்களும் ஆளாளுக்கு உலக பிரச்னைகள் குறித்து பேச ஆரம்பித்தோம்.

சட்டென பிலாசபியை பார்த்து அஞ்சா "யோவ். யாருய்யா அந்த ஆரூர்.முனா. செந்தில்? நீங்க ரெண்டு பேரும் லவ்வர்சா? அந்த ஆளுகிட்ட நான் இப்பவே  பேசணும்" என்று செல்லை வாங்கினார். "யோவ்..ஆரூர். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? நானும் இந்த ஊருதான்? எங்க கூட பேச மாட்டியா?" என வசனம் பேச..மறுமுனையில் கோபம் தலைக்கேறிய ஆரூர் "நீ அங்கேயே இருய்யா. இப்பவே கிளம்பி வர்றேன்" என்று சிங்கத்திடம் சவால் விட்டார். செல் எனது கைக்கு வந்தது. "சிவா..உங்க போதைக்கு நான் ஊறுகாயா?" என ஆரூர் அலற..நானோ "ஏற்கனவே நான் சிக்கி சிதறிட்டு  இருக்கேன். நீங்க வேற?" என்று புலம்பினேன். சீக்கிரம் அஞ்சாவும், ஆரூராரும் மீட் பண்ணுங்கப்பா. எங்களுக்கு நல்லா பொழுது போகும்.  

பயங்கர சீரியசாக நான் ஒரு டாப்பிக்கை பேசிக்கொண்டு இருக்கையில் காலருகே திடீரென புல் வால்யூமில் நாய் குறைக்கும் சத்தம். லேசாக படபடத்தது. என்னடா என்று பார்த்தால் காலருகே ஒரு வெண்ணிற கால பைரவன். எங்கே இன்னும் ரெண்டு வரி சேர்த்து பேசினால் குதறி விடுமோ என்ற பயம் என்னை தொற்றிக்கொண்டது.  "ஒயின் ஷாப் உள்ள நாய் கூடவா வளப்பாங்க?" என்று நான் கேட்டுக்கொண்டே இருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் மற்றும் இரு பூனைகள் எனது கால்களை க்ராஸ் செய்து பெஞ்சின் அடியில் படுத்துக்கொண்டன. 

                                                            அந்த டாஸ்மாக் நாய்   

"எப்படா இந்த பெரிய நாய் நம்ம காலை தாண்டி போகும்" என்று படபடப்புடன் காத்திருந்த எனக்கு ஆப்பு வைத்தான் பிலாசபி. ஆர்டர் செய்திருந்த சிக்கன் பீஸ் இரண்டை எடுத்து அதற்கு தானம் செய்ய..இடத்தை விட்டு நகராமல் என காலருகேயே டேரா போட்டு விட்டது அந்த நாய்.அவ்வப்போது குறைத்தவாறும் இருந்தது. (ப்ளடி ராஸ்கோல் பிரபாகரா. நீ சைக்கோ தான்யா). இது போதாதென்று கடைசி பெஞ்சில் இருவர் அடித்து கொண்டிருந்தனர். சமாதானம் செய்யப்போன டாஸ்மாக் ஊழியருக்கும் 'சப்பென' கன்னத்தில் ஒரு அறை.  மேலும், உஷ்ணம் ஆன ஒருவன் பெஞ்சை தூக்கி எதிரி மேல் வீசி எறிந்தான். பாட்டிலை தூக்கி நம்ம மண்டையை பொளந்துட்டா? வேகமா எந்திரிக்கறப்ப 'காலடி' நாய் கவ்வி விட்டால்? 

கடைசியில் எப்படியோ பகுமானமாக இடத்தை காலி செய்தோம். மீண்டும் அஞ்சாசிங்கம் ஆபீசை நோக்கி பைக்வலம். "சூப்பர் பாக்கு இருக்கா? சூப்பர் பாக்கு இருக்கா?" பெட்டிக்கடைதோறும்  அஞ்சா. கரடுமுரடான வடசென்னை சந்துகளை தாண்டி ஆபீசை அடைந்தோம். பல ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து புறக்கணிக்க பட்ட நிலையிலேயே வடசென்னை இருப்பது வருத்தத்தை அளித்தது. எப்போது (சீரான) வழி கிடைக்குமோ அம்மக்களுக்கு?

எங்கள் மூவருக்கும் ஆபீசில் இருந்த ஆட்களை அறிமுகம் செய்தவாறு "நான் எங்க கிரிக்கெட் டீமோட கேப்டன்" என்று அஞ்சா சொன்னதும் கே.ஆர்.பி. அங்கிருந்தவர்களை பார்த்து "என்னது? இவரு கேப்டனா? தம்பி இவரு கேப்டனாம்? நல்லா பாருங்க. இவரெல்லாம் கேப்டனாம்?" என்று ரவுசு கட்டி அடிக்க, டென்ஷன் ஆன அஞ்சா எம்மை பேக் அப் செய்து வைத்தார். 

குடிமகன்கள் கூட கூட்டணி அமைச்சி மதுக்கடைல குத்த வக்கிற என்ன மாதிரி ஆளுங்க படுற பாடு இருக்கே? என்னா சேட்டை!!
.....................................................................................................


..................................................
சமீபத்தில் எழுதியது:

மயிலாப்பூர்வலம்
.................................................

.................................................................
பிரபாகரனின் பதிவு:

திருவொற்றியூர் புலம்பல்கள் - பாகம் ஒன்று.
................................................................
..................................
My other site:
.............................30 comments:

நாய் நக்ஸ் said...

தம்பி நீ என்கூட இன்னும் வரலை...
ஒரு நாள் வாயேன்...
அப்புறம் ஒரு மிக பெரிய
நாவல் எழுதுவே....

Unknown said...

எந்த வருத்தத்தையும் சரிக்கட்டும் டாஸ்மாக் வாழ்க ஹிஹி!

ப்ளாக் பக்கிரி said...

சரக்கடிச்சும் போட்டோ போக்கஸ் ஜூப்பரு.

Unknown said...

அப்புறம் அந்த போன் நம்பரை கடைசிவரை குடுக்கவேயில்லை அவன் :)))

சம்பத்குமார் said...

//அஞ்சாசிங்கமும், கவுண்டரில் எட்டிப்பார்க்கும் மர்ம பதிவரும் ///

மர்ம பதிவர் யாரு சிவா..

மண்ட காயுதே...ஹிஹிஹி

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்

தெய்வமே.. நீங்க போன்ல பேசுனதை வச்சே 500 நாவல் எழுதலாமே!!

! சிவகுமார் ! said...

@ விக்கி

சரிக்கட்டுனா சரி. புத்தூர் கட்டும் சேந்துக்காம இருந்தா போதும்.

! சிவகுமார் ! said...

@ ப்ளாக் பக்கிரி

சரக்கடிக்காதவன் எடுத்த ஸ்டில் பாஸ் இது.

! சிவகுமார் ! said...

@ கே.ஆர்.பி. செந்தில்

விடுங்க. அடுத்த தபா பையனை அமுக்கி நம்பரை சுட்டுருவோம்.

! சிவகுமார் ! said...

@ சம்பத்குமார்

உங்களுக்கே மேல கமன்ட் போட்டவர்தான்.

Unknown said...

//அஞ்சாசிங்கம் ஆபீஸ் இருந்த இடத்தில் இப்போது....//

சிவா! நான் வேலைக்கு போகும் போது நாங்க தவறு செய்தா ஓனர் என் தொழில்ல விளக்கு வெச்சிறாத....அப்படின்னு விளையாட்டா சொல்லுவார்..அர்த்தம் எனக்கு அப்ப புரியலை இப்ப புரியுது.......!

Unknown said...

Your comment will be visible after approval. எடுத்து விடுங்க கெட்ட வார்த்தையெல்லாம் போடமாட்டோம்!..

Unknown said...

////என காலருகேயே டேரா போட்டு விட்டது அந்த நாய்////

கால பைரவ தோசம் இருக்கோ......? இங்க நக்ஸ் அங்க....?

அஞ்சா சிங்கம் said...

ஆரூர்.முனா. செந்தில் லை இந்த சனியன்று சந்திக்கலாம் என்று இருக்கிறேன் .
நாரதா உமக்கு எப்படி வசதி ?

CS. Mohan Kumar said...

:))

Serious matter comedy-aa yezhuthirukkeenga.

அம்பலத்தார் said...

சும்மா சொல்லப்படாது டாஸ்மார்க் பதிவிலையே ஒரு கிக் இருக்கிறாப்ல

Unknown said...

////"கெளரி ஆஸ்ரமம்" காம்ப்ளக்சுக்கு வாங்க என்றார் நாத்திகர் அஞ்சாசிங்கம்.////

அண்ணே என்னனே பேரே ஒரு டைப்பா இருக்கு .
/////(ப்ளடி ராஸ்கோல் பிரபாகரா. நீ சைக்கோ தான்யா)./////

சிவகுமார் அண்ணே சந்தேகத்தை தீர்த்துவைத்ததற்க்கு நன்றி அண்ணே

//////அஞ்சாசிங்கமும், கவுண்டரில் எட்டிப்பார்க்கும் மர்ம பதிவரும் //////

விட்டா எங்கண்ணே கவுன்ட்டர் கேப்லே மண்டைய விடுவாரு

Unknown said...

அப்பாடக்கர் ஸ்பீக்கிங், மீ அவெய்லபிள் சனிக்கிழமை. வெயிட்டிங் பார் அஞ்சாசிங்கம் கால்.

சிராஜ் said...

சிவா,

/*
@ நாய் நக்ஸ்

தெய்வமே.. நீங்க போன்ல பேசுனதை வச்சே 500 நாவல் எழுதலாமே!! */

சான்சே இல்ல. விழுந்து விழுந்து சிரித்தேன். இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். இன்னும் சிரிப்பேன்.

கால் மீ.....

சிராஜ் said...

அஞ்சும் சிங்கம் மற்றும் பிலாசபி கடை மற்றும் வீட்டை இடித்ததற்கு எதிராக தொண்டர் தீக்குளிப்புன்னு சொல்லி KRP ய கொளுத்தி விட்ருவமா????
KRP இல்லாட்டி, அஞ்சா சிங்கம் ஓகே யான்னு பாருங்க.

சிராஜ் said...

நீங்க copy function அ disable பண்ணா, எங்க நால காபி பண்ண முடியாதா?????

/* பயங்கர சீரியசாக நான் ஒரு டாப்பிக்கை பேசிக்கொண்டு இருக்கையில் காலருகே திடீரென புல் வால்யூமில் நாய் குறைக்கும் சத்தம். லேசாக படபடத்தது. என்னடா என்று பார்த்தால் காலருகே ஒரு வெண்ணிற கால பைரவன். எங்கே இன்னும் ரெண்டு வரி சேர்த்து பேசினால் குதறி விடுமோ என்ற பயம் என்னை தொற்றிக்கொண்டது. "ஒயின் ஷாப் உள்ள நாய் கூடவா வளப்பாங்க?" என்று நான் கேட்டுக்கொண்டே இருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் மற்றும் இரு பூனைகள் எனது கால்களை க்ராஸ் செய்து பெஞ்சின் அடியில் படுத்துக்கொண்டன */

சிராஜ் said...

ஜோக் aparts .... (நாங்கல்லாம் சடனா சீரியஸ் ஆகிடுவோம்). குடியின் கோரத்தை அறிந்த நீங்கள், அவர்கள் குடிப்பதற்கு கம்பெனி கொடுத்தது தப்பு சிவா. நீங்கள் அவர்களை தடுத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்து உடனே கிளம்பி இருக்க வேண்டும். குடிப்பது தவறு என்று சொல்லாமல் இருப்பதும் அவர்கள் தொடர்ந்து குடிக்க ஒரு காரணம் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும். அடுத்து ஒரு போதும் இப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிராஜ் said...

நீங்க கமெண்ட் மட்டுறுத்தல தாராளமா எடுத்திடலாம் சிவா, நான் ஏற்கனவே இது சம்பந்தமா ஒரு பதிவு போட்டேன். உண்மையிலே அது உங்களை மனதில் வைத்து போட்ட பதிவு தான்.
http://vadaibajji.blogspot.com/2011/05/bloggers-creating-big-issues.html

அனோனி option மட்டும் enable பண்ணிக்கங்க.
கவலைப்படாதீங்க. அவன் மீண்டும் வந்து கெட்ட வார்த்தையில திட்ட மாட்டான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தம்பி 'எப்பேர்பட்ட' ஆள் என்று அஞ்சாசிங்கம் விளக்கினார். நான் கூட "பிரபா பய சின்னப்பய. சும்மா ஒரு பேஷனுக்காக நாத்திகம் பேசறான்" என்றுதான் இத்தனை நாள் நினைத்து வந்தேன். ஆளு நிஜமாவே விஷயம் உள்ளவர்தான். "ண்ணா.தெரியாம உங்கள 'டா' போட்டெல்லாம் பேசிட்டனுங்க. மன்னிச்சிடுங்க" என்று குறுகி ஒரு கும்பிடு போட்டேன். ////

ண்ணா என்னையும் மன்னிச்சிடுங்ணா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"யோவ்..ஆரூர். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? நானும் இந்த ஊருதான்? எங்க கூட பேச மாட்டியா?" என வசனம் பேச..மறுமுனையில் கோபம் தலைக்கேறிய ஆரூர் "நீ அங்கேயே இருய்யா. இப்பவே கிளம்பி வர்றேன்" என்று சிங்கத்திடம் சவால் விட்டார். ///////

ஆஹா என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செல் எனது கைக்கு வந்தது. "சிவா..உங்க போதைக்கு நான் ஊறுகாயா?" என ஆரூர் அலற..நானோ "ஏற்கனவே நான் சிக்கி சிதறிட்டு இருக்கேன். நீங்க வேற?" என்று புலம்பினேன்.//////

அப்படியே நாய்நக்சுக்கும் ஒரு போனை போட்டு சிங்கம்கிட்ட கொடுத்திருக்கலாம்ல? சிதைஞ்சிருக்கும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
ஆரூர்.முனா. செந்தில் லை இந்த சனியன்று சந்திக்கலாம் என்று இருக்கிறேன் .
நாரதா உமக்கு எப்படி வசதி ?////

ஆமா ரெண்டு ஒலக நாட்டு தலைவர்கள் சந்திச்சிக்க போறாங்க இவரு அப்படியே அப்பாய்ண்ட்மெண்ட்டு பிக்ஸ் பண்றாரு......

Philosophy Prabhakaran said...

// வடசென்னை மெயினில்தான் இரண்டு பேரும் இருப்பார்கள் என நம்பி பயணத்தை தொடர்ந்தேன். //

வடசென்னை மெயின் என்பது என்னவோ...???

// அஞ்சாசிங்கம் ஆபீஸ் இருந்த இடத்தில் இப்போது..... //

இப்போ அந்த இடத்துல நிரந்திர இளைஞர் ஸ்டாலின் பேனர் மாறியாச்சு...

// பாக்கி ஹேர் ஸ்டைலுடன் //

Spelling Mistake...???

// பிரபா பய சின்னப்பய. சும்மா ஒரு பேஷனுக்காக நாத்திகம் பேசறான் //

Bloody Buggars...!

// வீட்டில் நாய், மீன், கழுகு உள்ளிட்ட ஏகப்பட்ட உயிரினங்களை உலவ விட்டு இருந்தார் பிலாசபி //

அவர்களை பார்க்குறதுக்காகவே அடுத்தமுறை வீட்டுக்கு வாங்க... இந்தமுறை கிளம்பும்போது அதுபற்றி கேட்டதால் விரிவாக பேச முடியவில்லை...

// நாளை விடியலுக்குள் கூடங்குளம், காஷ்மீர், பாலஸ்தீன பிரச்னைகளை தீர்த்தே ஆக வேண்டும் என்கிற ரேஞ்சில் குடிமகன்கள் 'எதையோ' பற்றி சீரியசாக விவாதித்து கொண்டிருந்தார். //

ROFL...!

// ப்ளடி ராஸ்கோல் பிரபாகரா. நீ சைக்கோ தான்யா //

இதுக்கேவா... நாய் தானே குறைச்சது... நான் குறைச்சு நீங்க பார்த்ததில்லையே...

// குடிமகன்கள் //

குடிமக்கள்...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// அப்புறம் அந்த போன் நம்பரை கடைசிவரை குடுக்கவேயில்லை அவன் :))) //

நீங்க அடிச்சு கேட்டா கூட தரமாட்டேன்...

@ அஞ்சா சிங்கம், ஆரூர் மூனா செந்தில்
ஆஹா இப்ப நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் ஆகிட்டீங்களா... ரெண்டு பேரும் மொடாக்குடிகாரங்க ஆச்சே... வெளங்கிடும்...

// நீங்க copy function அ disable பண்ணா, எங்க நால காபி பண்ண முடியாதா????? //

அதானே... படுமொக்கையா இருக்கு...

// குடியின் கோரத்தை அறிந்த நீங்கள், அவர்கள் குடிப்பதற்கு கம்பெனி கொடுத்தது தப்பு சிவா. நீங்கள் அவர்களை தடுத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்து உடனே கிளம்பி இருக்க வேண்டும். குடிப்பது தவறு என்று சொல்லாமல் இருப்பதும் அவர்கள் தொடர்ந்து குடிக்க ஒரு காரணம் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும். அடுத்து ஒரு போதும் இப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். //

பார்த்துக்கோங்க பொதுஜனங்களே... இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்...

// நீங்க கமெண்ட் மட்டுறுத்தல தாராளமா எடுத்திடலாம் சிவா //

அது நடக்க வாய்ப்பே இல்லைன்னு எனக்கு தெரியும்... குறைந்தபட்சம் கமென்ட் பாக்ஸ் தனி விண்டோவில் திறக்கும்படி அமையுங்கள்... ஒவ்வொரு முறையும் ஸ்க்ரோல் செய்து கமென்ட் போட கடுப்பாக இருக்கிறது...

Jayadev Das said...

\\வீட்டில் நாய், மீன், கழுகு உள்ளிட்ட ஏகப்பட்ட உயிரினங்களை உலவ விட்டு இருந்தார் பிலாசபி. \\

\\"எப்படா இந்த பெரிய நாய் நம்ம காலை தாண்டி போகும்" என்று படபடப்புடன் காத்திருந்த எனக்கு ஆப்பு வைத்தான் பிலாசபி. ஆர்டர் செய்திருந்த சிக்கன் பீஸ் இரண்டை எடுத்து அதற்கு தானம் செய்ய..இடத்தை விட்டு நகராமல் என காலருகேயே டேரா போட்டு விட்டது அந்த நாய்.\\

பிலாசபிய பார்த்தீபன் கிட்ட மாட்டின வடிவேலு கணக்கா தாறு மாறா போட்டுத் தாக்குறீங்க பாஸ்.... சூப்பர்!! அவரும் வலிக்காத மாதிரியே ரொம்ப நாளா நடிசிகிட்டே இருக்குறாரு... ஹா....ஹா...ஹா.... [அந்த நாய் படம் டோட்டல் டார்க்கா இருக்கே பாஸ்!!]

Related Posts Plugin for WordPress, Blogger...