CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, March 12, 2012

ட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 3


                                                          அரசியல் ஆசான் கஸாலி, சென்னை பித்தன் 

அதிரடி அரசியல் பதிவர் ரஹீம் கஸாலி கூட்டணி பற்றி முக்கியமான முடிவெடுக்க சென்னைக்கு வந்திருப்பதாக சொன்னார். நமக்கேன் அரசியல் பொல்லாப்பு.  'உங்களை பார்த்து விட்டு மட்டும் செல்கிறேன். நோ பாலிடிக்ஸ்' என்று கூறிவிட்டு அவரிருந்த இடத்தை அடைந்தேன். துணைக்கு வந்தவர் நெடு நெடு கூந்தல்காரர் பிலாசபி பிரபாகரன். அரசியல் ஆசான் அறையில் இருந்த இந்தியா டுடே(தமிழ்) புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கையில் கேபிள் சங்கரின் 'தெர்மக்கோல் தேவதைகள்' பற்றிய பெட்டிச்செய்தி ஒன்று கண்ணில் பட்டது. உடனே செல்லில் அழைத்து "இந்தியா ரேஞ்சுக்கு போயிட்டீங்க. அடுத்து B.B.C யா?" எனக்கேட்டுவிட்டு வாழ்த்து கூறினோம். அதன்பின்   மாலையில் மெரினாவில் சந்திக்க சம்மதம் கூறினர் கே.ஆர்.பி, சிராஜ், சதீஷ் மற்றும் சென்னைப்பித்தன் ஆகியோர். 

பிறகு நான், பிலாசபி,கஸாலி மூவரும் நண்பர் ராஜா தங்கியிருந்த ட்ரிப்ளிகேன் மேன்சனை நோக்கி பயணித்தோம். 'மதிய சாப்பாட்டிற்கு பாரதி மெஸ் போங்கள்' என்று கேபிள் மற்றும் கே.ஆர்.பி. சிபாரிசு செய்தனர். சேப்பாக்கம் ஸ்டேடியம் பின்புறமுள்ள அக்பர் தெருவில் இருந்த பாரதி மெஸ் உள்ளே நுழைய முற்படுகையில் 'என்னது சைவமா? நோ. நோ.' என்று அடம்பிடித்தனர் பிலாசபி அண்ட் கஸாலி. அதற்கெல்லாம் மசியாமல் அவர்களை இழுத்து சென்றேன். உள்ளே திரும்பிய இடமெல்லாம் அழகாக ப்ரேம் செய்யப்பட பாரதியார் படங்கள். உட்கார்ந்து சாப்பிட சேர்கள் கிடையாது. செல்ப் சர்வீஸ்தான். ஆனால் சுத்தமான பராமரிப்பு. அளவு சாப்பாட்டின் விலை வெறும் 40 ரூபாய்தான். சாப்பாட்டு தட்டு மற்றும் எவர்சில்வர் டிபன் பாக்சை கையில் தந்துவிடுகிறார்கள். அதையேந்தி டேபிளில் வைத்து ருசிபார்க்க துவங்கினோம். 

மெனுவில் ஸ்பெஷல் அயிட்டங்கள் ஏதுமில்லை.  சாம்பார், ரசம், வத்த குழம்பு, உருளைக்கிழங்கு சைட் டிஷ்(!), மோர் மட்டும்தான். அப்பளம் சுமாராக இருந்தது. கடும் சிரமத்தினூடே ஒவ்வொரு பருக்கையாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர் அசைவ பதிவர்கள். பாவம். "40 ரூபாய்க்கு இப்படி ஒரு திருப்தியான சாப்பாடா. பலே பேஷ்" என்று அவர்களை சீண்டிக்கொண்டே உண்டு முடித்தேன். இவ்வுணவகம் துவங்கி ஆறு மாதம்தான் ஆகிறது.  ஏகப்பட்ட மெஸ்கள் நிறைந்திருக்கும் ட்ரிப்ளிக்கேனில்  பாரதி மெஸ் குறுகிய காலத்தில் பிரபலமானதற்கு தரமும், குறைந்த விலையும்தான்  காரணமென்பதில் ஐயமில்லை. 

                                                                          பாரதி மெஸ் - அளவுச்சாப்பாடு 
                                                      
மதியம் இரண்டு மணிவாக்கில் ஆட்டோவில் நண்பர் ராஜா தங்கியிருந்த மேன்சனுக்கு விரைந்தோம். "அமருங்கள். பல் விளக்கிவிட்டு வருகிறேன்".   என்றார் ராஜா. கேட்டால் 'மேன்சனில் இதெல்லாம் ஜகஜம்' எனும் பதில் வழக்கம் போல் வரும்.  இவருக்கு கஸாலி எவ்வளவோ மேல். 12 மணிக்கே அக்கடமையை பூர்த்தி செய்திருந்தார். ராஜாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு காந்தி சிலையை அடைந்தோம். "நான் பக்கத்துல தூங்கிட்டு இருக்கேன்" சிராஜின் குரல் அலைபேசியில். மெரினாவில் எங்கே மல்லாக்க படுத்துள்ளார் என்று நாங்கள் தேடிப்பார்த்தால் போதிமர ஷேப்பில் இருந்த ஒரு மினிமரத்தின் அடியில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார் தலைவர். அவரை துயிலெழுப்பி அருகிலிருந்த சாகர் ரெஸ்டாரண்டில் உலக விசயங்களை அலச ஆரம்பித்தோம். முதலில் சதீஷ் வர அடுத்து வந்தார் சென்னைப்பித்தன் அவர்கள். 

பல நாட்கள் கழித்து சாரை சந்தித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அனைவருக்கும் கை குலுக்கிவிட்டு அமர்ந்த அடுத்த நிமிடம் பையில் இருந்து சில பாக்கெட்டுகளை கட்டவிழ்த்து விட்டார் சென்னைப்பித்தன். என்னவென்று பார்த்தால் 'குட்டி' சமோசாக்கள். எங்களுக்காக அவற்றை வாங்கி வந்த சாரின் அன்பிற்கு ஹாட்ஸ் ஆப். தமது பதிவுலக அனுபவங்கள் குறித்து ஷார்ட்டாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  'மெரீனா வந்து நிறைய நாட்கள் ஆகிறது' என்றவாறு லேசாக பெருமூச்சு விட்டார்.  அந்த மன நிம்மதிக்காகவாவது அவரை வரவழைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  எம்முடன் சிறிது நேரமே இருந்தாலும் கலகலப்பாக உரையாடி விட்டு இல்லம் திரும்பினார். 

                                                   தி.மு.க. டி சர்ட் அணிந்திருக்கும்  பொலிடிக்ஸ் பதிவர்

அடுத்து வழக்கம்போல் ஆரம்பித்தது சிராஜ், கே.ஆர்.பி இருவரின் கருத்து மோதல்கள். ஆப்கானிஸ்தான், மலேசியா, ஜாதி, மதம், காதல், ஹோட்டல் என ஒரு தலைப்பை மிச்சம் வைக்காமல் கத்தியை சுழற்றிக்கொண்டு இருந்தனர். கஸாலி, நானும் ஓரிரு வார்த்தைகளாவது பேச, பன்மோகன் சிங்கின் குருகுல சிஷ்யர்கள் போல வாயே திறக்காமல் இருந்தனர் பிலாசபியும், சதீஷும். கடற்கரை, மணல், காத்தாடி ஆகியவற்றை கண்டதும் கவிதை ஆறு பெருக்கெடுத்து ஓடியது எனக்கும் சிராஜுக்கும். "அடிக்கடி கடலை ரசித்தாலும் அலுப்பதில்லை. அழகாகத்தான் உள்ளது" என படு மொக்கையான கவிதை(?) ஒன்றை வாசித்தார். அதற்கு நான் எவ்வளவோ மேல். காற்றாடியை பார்த்து சொன்னேன் ஒரு கவிதை "காற்றில் ஆடும் காற்றாடியை காண்கிறோம். காற்று ஆடி கண்டிருக்கிறோமா என்றாவது?".  எப்படி? 

                                                           அறை எண் 420 இல் பிசாசுத்தலை பதிவர் 

மெரீனா காந்தி சிலையருகே இருக்கும் திறந்தவெளி உணவகத்தில் ஆளுக்கொரு டீயை ஆர்டர் செய்துவிட்டு ஆறுமணிநேரம் உலக வரலாற்றை பேசிக்கொண்டு இருந்ததைக்கண்ட ஓனர் டென்ஷனாகி பையனை அனுப்பி வைத்தார். பலனேதுமில்லை. "வேற என்ன(தான்) சார் வேணும்?" என்று கேட்டவனிடம் சிராஜ் சொன்ன பதில் "இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு சொல்றோம். அப்ப இன்னொரு ரவுண்டு(!) ஆளுக்கொரு டீ கொண்டு வா" என சொற்பொழிவை தொடர்ந்தார். நள்ளிரவை நெருங்கினாலும் தர்க்கத்தை விடுவதாக இல்லை' ரேஞ்சுக்கு சண்டை போட்டனர்  கே.ஆர்.பியும், சிராஜும். ஆண்டவன் அருளால் ஒருவழியாக சபையை கலைத்தோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே!!

............................................................

மகாகவி பாரதி புகழ்பாடும் பாரதி மெஸ்ஸில் எடுத்த புகைப்படங்கள். 


                                                                       
                                                                        
                                                                            

திருவல்லிக்கேணி ஜே.கே. அசைவ உணவகம், அக்காக்கடை மற்றும் ரஷ்ய கலாச்சார மையத்தில் இருக்கும் வைரமாளிகை பற்றிய பதிவு விரைவில்...
...................................................................

...............................
My other site:
.................................


......................................................
சமீபத்தில் எழுதியது:


ஸ்பெஷல் மீல்ஸ் (11/03/12)


வித்யா பாலனின் கஹானி - விமர்சனம்            
.......................................................

       

30 comments:

நாய் நக்ஸ் said...

Siva....
Adutha mano-va...?????

Innum irukkaaaaaaaaaaaa.....?????

En per...ennaaa...???
Kadichi vaikka poren.....
Parthukka.....

வெளங்காதவன்™ said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மெரீனா காந்தி சிலையருகே இருக்கும் திறந்தவெளி உணவகத்தில் ஆளுக்கொரு டீயை ஆர்டர் செய்துவிட்டு ஆறுமணிநேரம் உலக வரலாற்றை பேசிக்கொண்டு இருந்ததைக்கண்ட ஓனர் டென்ஷனாகி பையனை அனுப்பி வைத்தார். பலனேதுமில்லை. ///////

ஓனரு தப்பு பண்ணிட்டாரு, டேபிள் சேர் வாடகையாவது வாங்கி இருக்கனும்...

சென்னை பித்தன் said...

கலக்கல் கவிதைகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ஓர் இனிய மெரினா மாலைக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

raittuyaa

NKS.ஹாஜா மைதீன் said...

அண்ணன் கஸாலி ஆரம்பிக்க போகும் கட்சிக்கான உறுப்பினர் படிவம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் பாஸ்...அப்புறம் சிராஜ் மச்சானுக்கு தர்க்கம் பண்ணுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி...

CS. Mohan Kumar said...

Why you people are not informing me for such meetings?

Prabaa photo bayangaramaa irukku.

Unknown said...

யூத் பதிவர்கள் சந்திப்பு?!

Unknown said...

//ஓனரு தப்பு பண்ணிட்டாரு, டேபிள் சேர் வாடகையாவது வாங்கி இருக்கனும்...//

ஆறு மணி நேரம் ஒக்காந்து பேசிட்டு டீ குடிச்சுட்டு மட்டும் வந்தோம். இனிமே அங்க எங்கள பாத்தா பிளாக்கருக்கு எல்லாம் டீ கெடையாதுன்னு அனுப்பிடுவார்...

மென்பொருள் பிரபு said...

நீங்க சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் உணவு விடுதிகளைப் பற்றி விமர்சனம் எழுதுபவர்கள் முக்கியமான ஒன்றை மறந்துபோகிறார்கள்.

சமையலறை!

அங்கு போய் சுத்தமான தண்ணீரா?, அழுக்கடைந்த சுவர்களா? பல்லி, எலி ஆபத்து இருக்கிறதா? இதையெல்லாம் கவனித்து முடிந்தால் அந்த சமையலறையை புகைப்படம் எடுத்து போடவும்.

யோக்கியமான உணவகமாக இருந்தால் சமையலறையை பார்க்க விடுவார்கள். இல்லையென்றால் எதை மறைக்க? என்பதை புரிந்துகொண்டு அப்பேர்பட்ட உணவகங்களுக்கு இம்மாதிரி இலவச விளம்பரம் கொடுப்பதை நிறுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள்.

அதே ஏரியா ..த்நா ..பேயில் பார்சல் வாங்க போனபோது வெள்ளை சாதத்தில் ..ப்பி பார்சல் செய்வதை பார்த்து மனம் நொந்து திரும்பி வந்தவன்தான் நான்.

நன்றி.

ரஹீம் கஸ்ஸாலி said...

yov...unnidamirunthu camera cell-ai parikkanumya...appadiye net connectionaiyum.

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்

மனோ அண்ணன்..தி கிரேட் ஒரிஜினல். அவரை மிஞ்ச முடியாது..

! சிவகுமார் ! said...

// வெளங்காதவன் said...
:-)

//

:)))

! சிவகுமார் ! said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மெரீனா காந்தி சிலையருகே இருக்கும் திறந்தவெளி உணவகத்தில் ஆளுக்கொரு டீயை ஆர்டர் செய்துவிட்டு ஆறுமணிநேரம் உலக வரலாற்றை பேசிக்கொண்டு இருந்ததைக்கண்ட ஓனர் டென்ஷனாகி பையனை அனுப்பி வைத்தார். பலனேதுமில்லை. ///////

ஓனரு தப்பு பண்ணிட்டாரு, டேபிள் சேர் வாடகையாவது வாங்கி இருக்கனும்...//

அதைக்கூட விவாதம் முடிஞ்சதும் வந்து வாங்கிக்க சொல்வாங்க நம்ம ஆளுங்க :)

! சிவகுமார் ! said...

//சென்னை பித்தன் said...
கலக்கல் கவிதைகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ஓர் இனிய மெரினா மாலைக்கு நன்றி.//

எங்களுடன் பொழுதை கழித்தமைக்கு நன்றி சார்.

! சிவகுமார் ! said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
ரைட்டுயா//

சரிங்கண்ணா

! சிவகுமார் ! said...

// NKS.ஹாஜா மைதீன் said...
அண்ணன் கஸாலி ஆரம்பிக்க போகும் கட்சிக்கான உறுப்பினர் படிவம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் பாஸ்...அப்புறம் சிராஜ் மச்சானுக்கு தர்க்கம் பண்ணுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி...//

என்னது கஸாலி கட்சி உறுப்பினரா? கட்சிகளை உருவாக்கும் நெருப்புங்க அவரு..!! சிராஜ் ஆனாலும் அண்டா கணக்குல அல்வா சாப்புடறாருங்க

! சிவகுமார் ! said...

// மோகன் குமார் said...
Why you people are not informing me for such meetings?

Prabaa photo bayangaramaa irukku.//

இந்த வார இறுதியில் நீங்கள் சென்னையில் இருக்க மாட்டீர்கள் என்று படித்ததாக ஞாபகம். இனி வரும் சந்திப்புகளில் கண்டிப்பாக அழைக்கிறோம் சார்.

! சிவகுமார் ! said...

// வீடு K.S.சுரேஸ்குமார் said...
யூத் பதிவர்கள் சந்திப்பு? //

இல்லீங்கண்ணா....மழலைகள் சந்திப்புங்கோ.

! சிவகுமார் ! said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
//ஓனரு தப்பு பண்ணிட்டாரு, டேபிள் சேர் வாடகையாவது வாங்கி இருக்கனும்...//

ஆறு மணி நேரம் ஒக்காந்து பேசிட்டு டீ குடிச்சுட்டு மட்டும் வந்தோம். இனிமே அங்க எங்கள பாத்தா பிளாக்கருக்கு எல்லாம் டீ கெடையாதுன்னு அனுப்பிடுவார்...//

போற போக்கை பாத்தா ஓனர் சாவியை கைல தந்துட்டு நம்மளையே கடைய பூட்டிட்டு போக சொல்லிடுவாரு போல.

kanagu said...

பல மெஸ்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி தல... :) சீக்கிரம் போய் இங்கெல்லாம் சாப்பிடணும் :)

/*பன்மோகன் சிங்கின் குருகுல சிஷ்யர்கள் போல வாயே திறக்காமல் இருந்தனர் பிலாசபியும், சதீஷும். /

ஹா ஹா ஹா :) :) நல்ல நக்கல் பாஸ் :)

! சிவகுமார் ! said...

@ மென்பொருள் பிரபு

இதற்கு முந்தைய பதிவில் எழுதிய அமீருன்நிஸா மற்றும் பாரதி மெஸ் ஆகிய இடங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லவில்லை பிரபு. அங்கே ஆண்டுக்கணக்கில் தங்கி இருப்போர் மற்றும் உணவகம் குறித்து நிறைய அறிந்த பதிவர்கள் சொல்லியே சென்றேன். எந்த உணவு சம்மந்தப்பட்ட துறையிலும் குறைகளும், சில கசப்பான அனுபவங்களும் வாடிக்கையாளர்களுக்கு இருப்பது சகஜமே. 'சென்னையிலே மிகச்சிறந்த உணவுகள் இங்குதான் கிடைக்கின்றன' என்று எழுதவில்லையே. எனக்கு பிடித்து இருந்தது. விலை நியாயமாகவும் இருந்தது. அவ்வளவே. உணவு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தவிர்த்து எவரையும் அவ்வளவு எளிதில் ஓட்டல் ஓனர்கள் சமையல் அறைக்குள் விடுவார்களா என்பதும் கேள்விக்குறியே. ஐந்து நட்சத்திர ஓட்டலில் கூட தலைமுடிகள் கிரேவியில் இருந்ததை கண்ட அனுபவம் எனக்குண்டு.

நீங்கள் சொன்ன குறைகள் அதிகளவில் இருந்தால் எப்போதே அந்த கடைகளுக்கு குட்பை சொல்லி இருப்பர் மக்கள். அதுவும் ஆண்டாண்டு காலமாக மெஸ்களை பற்றி தெரிந்து வைத்துள்ள திருவல்லிக்கேணி மக்கள் என்றால் சும்மாவா? மீண்டும் நான் சொல்வது இதைத்தான். ஏரியாவாசிகள் மற்றும் அங்கு உணவருந்திய நண்பர்களிடம் விசாரித்த பிறகே நானும் செல்கிறேன். இலவச விளம்பரம் தர அந்த கடை ஓனர்கள் எனக்கு சொந்தங்கள் அல்ல.

தாங்கள் சொன்ன கருத்தையும் நினைவில் கொள்கிறேன். ஆரோக்யமான உரையாடலுக்கு நன்றி பிரபு.

! சிவகுமார் ! said...

// ரஹீம் கஸாலி said...
yov...unnidamirunthu camera cell-ai parikkanumya...appadiye net connectionaiyum.//

தலைவருக்கு கோபம் வருது. விஜயகாந்தின் குருநாதர்னா சும்மாவா?

! சிவகுமார் ! said...

//kanagu said...
பல மெஸ்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி தல... :) சீக்கிரம் போய் இங்கெல்லாம் சாப்பிடணும் :)

/*பன்மோகன் சிங்கின் குருகுல சிஷ்யர்கள் போல வாயே திறக்காமல் இருந்தனர் பிலாசபியும், சதீஷும். /

ஹா ஹா ஹா :) :) நல்ல நக்கல் பாஸ் :)//

Thanks Kanagu.

சிராஜ் said...

என்னோட போட்டோ போடாமால் இருட்டடிப்பு செய்த சிவாவிற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்...

சிராஜ் said...

/* கடற்கரை, மணல், காத்தாடி ஆகியவற்றை கண்டதும் கவிதை ஆறு பெருக்கெடுத்து ஓடியது எனக்கும் சிராஜுக்கும். "அடிக்கடி கடலை ரசித்தாலும் அலுப்பதில்லை. அழகாகத்தான் உள்ளது" என படு மொக்கையான கவிதை(?) ஒன்றை வாசித்தார். அதற்கு நான் எவ்வளவோ மேல். காற்றாடியை பார்த்து சொன்னேன் ஒரு கவிதை "காற்றில் ஆடும் காற்றாடியை காண்கிறோம். காற்று ஆடி கண்டிருக்கிறோமா என்றாவது?". எப்படி? */

நான் அத கவிதைன்னு சொன்னனா????? KRP செந்தில் மாதிரி பேசுறத எல்லாம் கவிதைன்னு சொல்லக்கூடாது.

ஆமினா said...

அடடா.... இப்படிவேற கூட்டு சேர்ந்துக்குறீங்களா? !!!


நல்லதொரு சந்திப்பு

வாழ்த்துகள் சிவா!

மென்பொருள் பிரபு said...

//உணவு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தவிர்த்து எவரையும் அவ்வளவு எளிதில் ஓட்டல் ஓனர்கள் சமையல் அறைக்குள் விடுவார்களா என்பதும் கேள்விக்குறியே//

அமீருன்னிசா கடை மட்டுமே. சமையல் வேறு இடத்தில் செய்கிறார்கள்.

சமையலறையை பார்த்தபிறகும் உங்களுக்கு அந்த உணவு சுவைக்கிறதா என்பதை மட்டும் சொன்னால் போதும்.

பதிலுக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

Why you people are not informing me before taking photos?

p.s: நான் செம கோபமா இருக்கேன்...

Philosophy Prabhakaran said...

// ஆரோக்யமான உரையாடலுக்கு நன்றி பிரபு. //

என்ன அவருக்கிட்ட உரையாடினதுக்கு அப்புறம் அஞ்சு கிலோ கூடிட்டீங்களா...

Related Posts Plugin for WordPress, Blogger...