தில்:
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பரபரப்பாக நடந்து வரும் உலக சீரிஸ் ஹாக்கி போட்டியில் எட்டு அணிகள் மோதி வருகிறன்றன. அதில் சென்னை சிறுத்தைகள் அணி கர்நாடக அணியை நேற்று வென்றதன் மூலம் 2 - வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இம்மாதம் 25 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியுடன் முஷ்டியை முறுக்கவுள்ளது நம்ம சென்னை. 'தில் இருந்தா மோதிப்பாரு. கோப்பையை வெல்ல காத்திருக்கு எங்க ஊரு'.
.....................................................................................
பட்ஜெட் பத்மநாபன்:
இதுவரை போட்ட பட்ஜெட்களை விட நடுத்தர மக்களுக்கு பெரிதும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது இம்முறை பிரணாப் போட்ட பட்ஜெட். வெகு சிலரே புழங்கும் பிரிட்ஜ், ஏசி, செல்போன், தங்கம் ஆகியவற்றின் விலைகளை மட்டும் உயர்த்திவிட்டு, உயிர்வாழ அத்யாவசியமான காரணிகளான லவங்கம், ஆமணக்கு, குருவிரொட்டி, வெத்தலை பெட்டி போன்றவற்றின் விலைகளை ஏற்றாமல் இருந்தது வெகுவாக பாராட்டத்தக்கது. பணவீக்கத்தை குறைக்க வேறு வழியில்லை என்று நிதி மந்திரியார் இம்முடிவை எடுத்திருக்கிறார். எனவே மக்களின் மனவீக்கம் பல்கிப்பெருகினால் கம்பேனி குச் நஹி கர் சக்தா ஹை(ஒன்னியும் பண்ண முடியாது. இப்ப இன்னாங்கற நீ?)
................................................................................
சந்தித்த வேளையில்..
ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் இயக்குனர் மிஷ்கின் சந்தியா புத்தக ஸ்டாலில் தென்பட்டார். அவருடன் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிட்டியது. சில நிமிடம் நடந்த சின்னஞ்சிறு பேட்டி கீழே:
கேள்வி: கொரிய திரைப்படங்களை காப்பி அடிப்பதாக எழும் புகார் குறித்து..
மிஷ்கின்: அப்படியெல்லாம் இல்லை. இதுவரை நான் அதிகபட்சம் நான்கைந்து கொரியப்படங்களை மட்டுமே பார்த்துள்ளேன்.
கேள்வி: முட்டிக்கு கீழே ஷாட் வைப்பது வெளிநாட்டு படங்களின் தாக்கத்தினாலா?
மிஷ்கின்: கண்டிப்பாக இல்லை. எனக்கு பிடிப்பதால் அப்படி வைக்கிறேன். இணையத்தில் பலர் சுமாராகத்தான் எழுதிகின்றனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.
கேள்வி: கிராமத்து படங்கள் உங்களிடமிருந்து எப்போது வரும்?
மிஷ்கின்: அதற்கெல்லாம் பாரதிராஜா போன்றோர்தான் சரி. எனக்கு ஒத்து வராது. என் ஸ்டைலையே பின்பற்ற விரும்புகிறேன்.
கேள்வி: இரவு நேரங்களில் கூட எதற்கு கூலிங் கிளாஸ்?
மிஷ்கின்: கிளேர் அடிப்பதால்..சும்மா...
இப்படி எடக்காக கேள்வி கேட்டதற்கு டென்ஷன் ஆவாரோ என்று எண்ணினேன். நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. குறிப்பு: பிரபலங்களை சந்தித்து உரையாடினேன் என்றால் 'சும்மா தமாசு பண்ணாத தம்பி. போட்டோ ஆதாரம் இருக்கா?'என்று நண்பர்கள் சிலர் கொக்கி போடுவதால் வி.ஐ.பி.க்களை சந்தித்தபோது எடுத்த ஸ்டில்களை போட வேண்டியதாகி உள்ளது. :))
.......................................................................................
தீராத விளையாட்டு பிள்ளை:
'அண்ணன் எப்ப ரிடயர்ட் ஆவான். திண்ணை எப்ப காலியாகும்' என்று எதிர்பார்த்தே ஓய்வு பெற்ற இளம் வீரர்கள் பலருண்டு. அப்படி காத்திருக்கும் மிச்ச சொச்ச பேருக்கும் நாமம் போட்டுள்ளார் சச்சின். தற்போது அளித்த பேட்டியில் "ஒருவன் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெற்றால் அது நாட்டுக்கு செய்யும் துரோகம். எனவே இன்னும் (அவ்வ்) ஆடுவேன்" என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அது என்னங்கய்யா புகழின் உச்சி? ஆஸி. கிட்ட செமத்தியா வாங்கிட்டு, இப்ப பங்களாதேஷ் கிட்டயும் பப்படம் ஆயாச்சி. இதுல எங்க இருந்து வந்துச்சி புகழு? தனிமனித சாதனைய விட அணி ஜெயிச்சாதான் அது அசல் புகழு. பழுத்த அரசிய்லவாதிங்க கூட பதவி வெலகலாம். இந்த ஆளு இப்போதைக்கு...இது ஆவறதில்ல டோய்.
................................................................................
நாட்டாமை:
'வணக்கம்'.. இது நம்ம சொல்றது. 'வணக்கம்' இது ஒருத்தர் மட்டும் ஸ்பெஷலா சொல்றது. அட இன்னுமா தெரியல? அவங்கதாங்க நம்ம நிர்மலா பெரியசாமி. ஒரு காலத்துல சன் டி.வி.ல இவங்க போடுற வணக்கத்தை கேட்டு பயந்த பின்னதான் எப்பயும் ஊர்ப்புரணி பேசுற ஆன்ட்டிங்க கூட அலறி அடிச்சிட்டு ந்யூஸ் பாத்தாங்க.இப்ப மேடம் ஜீ தமிழ் சேனல்ல 'சொல்வதெல்லாம் உண்மை' ன்னு ஒரு ப்ரோக்ராமை திங்கள் - வெள்ளி வரை உச்சிவெயில் உங்க மண்டைல சுர்ருன்னு ஏறுற மதிய நேரம் ஒன் TO டூ ஓ க்ளாக் வரை நடத்தறாங்க. மெகா சீரியல், லட்சுமியின் கதையல்ல நிஜம் பாத்து நீங்க அழுததெல்லாம் ஒரு அழுகையா? இதுதாங்க டாப்பு. குடும்பங்களை இணைத்தல், அணைத்தல் இப்படி பற்பல வேலைகள பகுமானமா செய்றாங்க நிர்மலா மேடம். ஒரு தபா பாத்துட்டு சொல்லுங்க. சும்மா உதறி, பதறி, கதறி அழுவீங்க. தமிழ்நாட்ல பொறந்த பாவத்துக்கு இன்னும் என்னெல்லாம் காத்து கெடக்கோ...
.........................................................................................
நல்ல நேரம்:
ராயப்பேட்டை மணிக்கூண்டு. மின்னொளியில் எடுத்த ஸ்டில்:
Image: madrasbhavan.com
...............................................................................................
மகிழ்ச்சி:
"எனக்கு மாவு மாவா வருதும்மா" (அவன் - இவன்) புகழ் விஷால் நடித்த(?) வெடி படத்தின் விமர்சனத்திற்கு நகைச்சுவை பிரிவில் 2011 ஆம் ஆண்டின் ரன்னர் அப் விருது வழங்கிய டெர்ரர் கும்மி குழு மற்றும் நடுவர்களுக்கு என் நன்றிகள். ஏனைய பிரிவுகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக ஹால் ஆப் பேம் விருது வென்ற தோழர் ஜீ அவர்களுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. இதற்கு முன்பு அன்பின்பால் அவார்ட் தந்த ஆமினா, நாஞ்சில் மனோ, சென்னைப்பித்தன், ரஹீம் கஸாலி ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை தேங்க்ஸுங்கோ. பின்னூட்டம் வாயிலாகவும், நேரில், போனில் அவ்வப்போது ஊக்கம் தந்து வரும் அனைவருக்கும் ஜெய் ஹோ.
.................................................................................................
எவனோ ஒருவன்:
ஆவேசமாக மீடியாவிற்கு பேட்டி அளிக்கும்போதேல்லாம் அண்ணன் ஜே.கே. ரித்தீஷ் எம்.பி. அவர்களை பார்த்து "ஒரு டம்ளர் தண்ணி ஊத்துனா முங்கிடுவ. நீயெல்லாம் பொங்கறியா?" என்று ஒரு அசரீரி கேட்பதாக குற்றச்சாட்டு வருகிறது.தேவையில்லாம சிறுத்தைய சொரண்டி பாக்காதீங்க. சொல்லிட்டோம்.
....................................................................................
சிரித்து வாழ வேண்டும்:
"அண்ணா நூலகத்தை இடித்தால் நான் தீக்குளிப்பேன்" என்று கலைஞர் பேசியதை கலைஞர் டி.வி.யில் இன்று பார்க்க நேரிட்டது. அவர் அந்த வார்த்தையை சொல்லி முடித்ததும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் எல்லோரும் கைதட்டி, 'உய் உய்' என உற்சாகமாக விசில் அடித்தார்கள். இப்பேர்பட்ட உசித சிகாமணிகளை பெற என்ன தவம் செய்தீரோ தலைவா!!
......................................................................................
தர்மத்தின் தலைவன்:
போன வார தினத்தந்தில வந்த வெளம்பரம். என்ன கொடும சரவணன்...
..................................................................................
பொல்லாதவன்:
இன்று தினமலர்.காமை க்ளிக் செய்து பார்க்கையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தல் குறித்த செய்தியை முகப்பில் போட்டிருந்தனர். "விடியலை நோக்கி ஒட்டளிக்கிறாராம் வைகோ" என்று நக்கல் வேறு. வைகோ மீது காண்டு இருக்கலாம். அந்த அவரசத்தில் ஓட்டை 'ஒட்டு' என்று டைப் செய்ய வேண்டுமா? அந்த லிங்க்கை க்ளிக் செய்து பார்த்தால் வைகோ பற்றி எந்த செய்தியும் இல்லை. அப்பறம் என்ன வெளக்கெண்ணைக்கு இந்த தலைப்பு?
........................................................................................

வல்லவனுக்கு வல்லவன்:
நம்மூரை கலக்குவது பவர் ஸ்டார் என்றால், கேரளாவை டரியல் செய்து கொண்டிருப்பது 'சூப்பர் ஸ்டார்' ஸ்டார் சந்தோஷ் பண்டிட். தலைவர் டி.ஆர். போல நடிப்பு, எடிட்டிங், இசை, இயக்கம் என அனைத்திலும் (நம்மையும் சேர்த்து) கலக்கி வருகிறார். சென்ற ஆண்டு இவரின் 'கிருஷ்ணனும், ராதையும்' எனும் காவியம் எதிர்பாராத ஹிட். அதன்பின் வெளியே தலைகாட்டும் போதெல்லாம் ரசிகர்கள்(!) 'கேரளா சினிமாவை கெடுக்க வந்த பயலே' எனத்திட்டி அழுகிய தக்காளி, முட்டை அபிஷேகம் செய்தாலும் அசரவில்லை நம்ம ஆள். அண்ணாத்தையிடமிருந்து அடுத்து வரவுள்ள அதி அற்புதப்படம் 'சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்'. அதில் சார் 'ரொமாண்டிக் லுக்' விட்ட 'கொஞ்சி கொஞ்சி' பாடல் உங்களுக்காக. குஷியா என்சாய். கேரளத்து நடிகர் திலகம் நீதாய்யா சந்தோசு!!

26 comments:
சச்சின்.. சரியாக சொன்னிர்கள் - திருந்தாத ஜென்மங்கள்
உங்களுக்கு பின்னாடி மிஷ்கின் பயந்து போய் நிக்கிறாரே ? கேள்விகள் கேட்ட பிறகு எடுத்த போட்டோ போலும்...
அவர் இன்னும் உங்க சினிமா விமர்சனனங்கள் படிக்கலை போலிருக்கு (எல்லாமே சுமார்னு சொல்றாரே)
மணிக்கூண்டு போட்டோ அழகு. புது காமிராவோ? ரைட்டு !
விருதுக்கு வாழ்த்துகள் !
@ மனசாட்சி
பழுத்த அரசியல்வாதி போலாகிவிட்டார் சச்சின்.
@ மோகன் குமார்
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். சுமார் படங்கள். சுமார் விமர்சனம்.
@ மோகன் குமார்
மணிக்கூண்டை எடுத்தது என் மொபைலில். வாழ்த்துக்கு நன்றி சார்.
நம்மூரை கலக்குவது பவர் ஸ்டார் என்றால், கேரளாவை டரியல் செய்து கொண்டிருப்பது 'சூப்பர் ஸ்டார்' ஸ்டார் சந்தோஷ் பண்டிட். /////
என் வன்மையான கண்டனங்கள்....
எங்கள் சாம் அண்டேர்சனை செர்க்காததர்க்கு ...
மாப்பு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருக்கு ..
ஒரு லாப்டாப் வாங்கினால் ஒரு வீட்டுமனை இலவசம் என்று
லாப்டாப் விலை எழுபதாயிரம் மட்டுமே ...
மிஷ்கின் போட்டோல சிரிக்கிறாரே? அப்போ கேள்வி கேட்க முன் எடுத்த போட்டோவா?
டெரர் கும்மி விருதுக்கும் வாழ்த்துக்கள்.
// வெடி படத்தின் விமர்சனத்திற்கு நகைச்சுவை பிரிவில் 2011 ஆம் ஆண்டின் ரன்னர் அப் விருது//
வாழ்த்துக்கள் சிவா. யு டிசர்வ் இட்.
////// பிரபலங்களை சந்தித்து உரையாடினேன் என்றால் 'சும்மா தமாசு பண்ணாத தம்பி. போட்டோ ஆதாரம் இருக்கா?'என்று நண்பர்கள் சிலர் கொக்கி போடுவதால் வி.ஐ.பி.க்களை சந்தித்தபோது எடுத்த ஸ்டில்களை போட வேண்டியதாகி உள்ளது. :))////////
ஸ்டில்லு ஓகே, ஆனா இந்த கேள்விகள்தான் கேட்டீங்கன்னு எப்படி நம்பறது?
மணிக்கூண்டு போட்டோ நல்லா வந்திருக்கு. குறிப்பா அந்த twilight effect ஐ கரெக்டா யூஸ் பண்ணி இருக்கீங்க.......குட்!
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!
சுவையான பதிவுகள். படிக்க தூண்டும் நடை.
நன்றி.
@ நாய் நக்ஸ்
சாம் ஆண்டர்சனின் ரசிகர் மன்ற தலைவா..மன்னிச்சிடுங்க..
@ அஞ்சாசிங்கம்
யாருய்யா அந்த கர்ண மகாராசு?
@ ஹாலிவுட் ரசிகன்
கேள்வி கேட்ட பிறகுதான். நன்றி நண்பா.
@ FOOD NELLAI
நன்றி சார்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// பிரபலங்களை சந்தித்து உரையாடினேன் என்றால் 'சும்மா தமாசு பண்ணாத தம்பி. போட்டோ ஆதாரம் இருக்கா?'என்று நண்பர்கள் சிலர் கொக்கி போடுவதால் வி.ஐ.பி.க்களை சந்தித்தபோது எடுத்த ஸ்டில்களை போட வேண்டியதாகி உள்ளது. :))////////
ஸ்டில்லு ஓகே, ஆனா இந்த கேள்விகள்தான் கேட்டீங்கன்னு எப்படி நம்பறது?//
ஆகக்கா. வீடியோ ஆதாரமே தந்தாலும் கிராபிக்ஸ்னு சொன்னாலும் சொல்லுவீங்க. மிஷ்கின் நம்பர் இருந்தா போன் போடுங்க சீக்கிரம் :))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மணிக்கூண்டு போட்டோ நல்லா வந்திருக்கு. குறிப்பா அந்த twilight effect ஐ கரெக்டா யூஸ் பண்ணி இருக்கீங்க.......குட்! //
தேங்க்ஸ் ப.ரா.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!//
நன்றி!!
@ வெற்றி மகள்
தங்கள் வருகைக்கு நன்றி.
/*'சும்மா தமாசு பண்ணாத தம்பி. போட்டோ ஆதாரம் இருக்கா?'என்று நண்பர்கள் சிலர் கொக்கி போடுவதால் வி.ஐ.பி.க்களை சந்தித்தபோது எடுத்த ஸ்டில்களை போட வேண்டியதாகி உள்ளது. :))*/
/*இப்பேர்பட்ட உசித சிகாமணிகளை பெற என்ன தவம் செய்தீரோ தலைவா!!*/
ஹா ஹா ஹா.. அருமை :)
பாஸ்... ஆனாலும் நீங்க சச்சினை ரொம்ப காச்சுறிங்க. அவர் மோசமா விளையாடலியே அப்புறம் ஏன்??????
போட்டோவெல்லாம் அசத்துது பாஸ் :)
டெரர் கும்மி விருதுக்கு வாழ்த்துக்கள். நானும் அந்த பதிவை ரசிச்சேன். விமர்சனங்களை காமெடியா எழுதுவதில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை. :)
இந்த வார ஸ்பெஷல் மீல்ஸ் அருமை :)
தங்கள் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி கனகு. சச்சின்..மனசுல பட்டதை சொன்னேன் நண்பா!
விருது பெற்றதுக்கு வாழத்துகள்.....!
மணிக்கூண்டு படம்....அடுத்த மனோவாக வாழ்த்துகள்..ஹிஹி!
Post a Comment