CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, March 10, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (11/03/12)ரோஜாக்கூட்டம்: 


சென்ற வாரம் பாட்னாவில் நடந்த முதல் மகளிர் உலகக்கோப்பை கபடி இறுதி ஆட்டத்தில் ஈரானை 25-19 எனும் புள்ளிக்கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி உள்ளனர் நமது இந்திய மகளிர். 2010 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டி கபடி அரையிறுதி ஆட்டத்தை டி.வி.யில் பார்க்க சந்தர்ப்பம் அமைந்தது. அதில் ஈரானிய பெண்கள் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய மகளிரை சீண்டிப்பார்த்தனர். எனினும் அதையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டியில் தங்க மெடலை வென்றனர் நம் நாட்டினர். இப்போது உலகக்கோப்பையும் நம் வசம். கலக்குங்கோ மேடம்ஸ்!!
.........................................................................        

புலிவேஷம்: 
"அமேதி, ரேபரேலியில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரசை ஜெயிக்க வக்கிறது என் பொறுப்பு. டோன்ட் வொர்ரி மம்மி" என்று சபதம் பூண்ட பிரியங்கா 8 இடங்களில் மண்ணை கவ்வோ கவ்வென்று கவ்வினார். "இந்த தேர்தலில் என் தொம்பிதான் ஹீரோ" என்று கிச்சு கிச்சு வேறு மூட்டினார். அய்யகோ..எங்கிருந்து வந்தாயடா அகிலேஷா!! தொம்பியின் பிரதமர் கனவுக்கு பம்ப் அடித்து விட்டு 38 வயதில் உ.பி.யின் பச்சிளம் முதல்வராகவும் ஆகி விட்டாய் நீ. தாடி வைத்து அனுதாபம் தேடியும் ராகுல் பாச்சா பலிக்கவில்லை. ஆப்படித்த வாக்காளர்களுக்கு வந்தனங்கள்.  
...............................................................................

பயணங்கள் முடிவதில்லை: 


"இளைய வீரர்களுக்கு வழிவிட்டு விலகுகிறேன்" - ராகுல் ட்ராவிட்

இதை அப்படியே அந்த தவில்காரங்க காதுல விழற மாதிரி சொல்லிட்டு போய்டுங்க #  சச்சின், ஸ்டாலின்.
.............................................................................


எங்கள் அண்ணா (சாலை):

                                                                    Image: madrasbhavan.com
                               அடைக்கப்பட்ட  அண்ணா சாலை - பழைய ஆனந்த் தியேட்டர் அருகே.                             

மெட்ரோ ரயில் பணிகளுக்காக அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்ததன் பாதிப்பை மக்களை விட போக்குவரத்து போலீசார்தான் நன்கு உணர்ந்துள்ளனர். டஜன் கணக்கில் ஒவ்வொரு முக்கிய சந்திப்பிலும் நின்று கொண்டு "ஆங்..நீ அப்படிப்போ. தப்பா போறான் பார். அவனை வளச்சிப்பிடி" என்று டென்ஷனில் டெசிபலை ஏற்றிக்கொண்டு உள்ளனர். புகாரி ஹோட்டல்  அருகிலுள்ள சிக்னலில் இருந்து ஆயிரம் விளக்கு வழியே செல்லும்  வாகனங்களுக்கு அண்ணா சாலையில் அனுமதி இல்லை. சுற்றி வளைத்து வரும் பேருந்துகள் எங்கு நிற்கின்றன என்பதில் பலருக்கு குழப்பம். வெயில் வேறு ஏகத்துக்கும் தகதகக்கிறது. நிழற்குடை ஏதுமின்றி பேருந்திற்கு காத்திருக்கின்றனர் அனைவரும். சீக்கிரம் சிக்கு புக்கு ரயில விடுங்கப்பா.
...............................................................................

ராவணன்:  
கூஜபக்சேவின் (அந்தாளோட நிஜப்பேரை சொன்னா 100 லிட்டர் பினாயிலை  ஊத்தி வாய கழுவுனாலும் ஸ்மெல் போகாது. அதான்). ரத்த வெறி பிடித்த ராவண ஆட்சிக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவரப்போகும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் 17 ஆம் தேதி நடக்குமென தகவல்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அதிசயமாக எல்லா தமிழக கட்சிகளும் மத்திய அரசை பார்த்து தீர்மானத்தை ஆதரிக்குமாறு கேட்க, மறுபுறமோ  'நானும் ரவுடிதான்' என்று பஞ்சர் ஆன ஜீப்பில் ஏறிக்கொண்டு 'தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்' என சவுண்டு விடுகிறார் சுப்பிரமணிய சாமி. வழக்கம் போல் அரபிக்கடலின் நடு சென்டருக்கு கீழே  420 கி.மீ. தூரத்தில்  ஆழ்நிலை தியானம் செய்வதால் இப்போதைக்கு (எப்போதும் போலவே) கருத்து சொல்லாமல் உள்ளார் பன்மோகன். ஏற்கனவே "இதுதானா உங்க டக்கு" என்று ஏகப்பட்ட குரல்கள் ஒலிக்கின்றன. ஆளு மசிய மாட்டார் போல இருக்கே. எவனோ ஆயுட்கால கொழுக்கட்டையை தாத்தா வாய்ல திணிச்சி இருக்கான். சட்டு புட்டுன்னு தின்னுட்டு மண்டைய ஒண்ணு இப்படி ஆட்டுங்க. இல்ல அப்படி ஆட்டுங்க. நல்லா இருப்பீங்க மவராசு!!
..................................................................................

கர்ணன்: 
நடிகர் திலகம் நடித்த கர்ணனை ஒலி,ஒளி மெருகேற்றி புதுவடிவில் ரிலீஸ் செய்யப்போகிறார்களாம். நியூ கர்ணன் ட்ரெயிலரை சத்யம் தியேட்டரில் காணப்பெற்றேன். ராஜ் டி.வி.யில் பார்த்தது போன்றே திரையில் ஆங்காங்கே கோடுகளும், சற்று சாயம் போயும் இருந்தது. 'பெரிய' வித்யாசம் என்று சொன்னால் சினிமாஸ்கோப்பில் சிவாஜியை பார்த்ததை சொல்லலாம். அந்த ட்ரெயிலர் பின்னணியில்  ஒலியை தெளிவாக கேட்க விடாமல் "கர்ணன். கர்ணன்" என்று ஒருவர் ஓங்கி ஓசை எழுப்பிக்கொண்டிருந்தார். ரிலீஸ் ஆகட்டும். குறைந்த பட்சம் எத்தனை வித்யாசங்கள் உள்ளதென பார்ப்போம். இதே மாதிரி எங்க தலையோட 'வீராசாமி'யை மெருகு ஏத்தி ரீ ரிலீஸ் பண்ணா புண்ணியமா போகும்!!


சத்யம் தியேட்டரினுள் எடுத்த ஸ்டில்:
                                                             
                                                                       Image: madrasbhavan.com           

.....................................................................................

புதிய பாதை: 
பேருந்து கட்டணத்தை ஏற்றி தமிழக மக்கள் பதுக்கி(!) வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வைத்தது அரசாங்கம். சில்லறை தொல்லைகள் ஒழிந்த பூரிப்பில் நடத்துனர்கள் பெருமூச்சு விடத்தொடங்கி விட்டனர். மத்திய அரசு சும்மா இருக்குமா? இதோ அந்த செவிக்கினிய செய்தி: ரயில் டிக்கட்டுக்கான முன்பதிவை 90 நாட்களுக்கு முன்பாக செய்ய வேண்டுமென்பதை 120 நாட்களாக அதிகரித்துள்ளனர். இதன் மூலம் டிக்கட்களை உயர்த்தி விற்கும் ஏஜண்டுகள் தொல்லை குறையுமாம். வானூர்தி விவகாரம் வேறு விஸ்வரூபம் எடுத்துள்ளது. "சேவை வரி பாக்கி 69 கோடியை கட்டாவிட்டால் கிங்பிஷருக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்" என்று கடுமையாக  ஜெட் ஏர் வேசை எச்சரித்துள்ளது வரித்துறை. வீட்டுக்கொரு ட்ரை சைக்கிள் தர கவர்மென்ட் ட்ரை பண்ணா தேவலை. பயணிகளுக்கு இந்த தொல்லையே இருக்காது.
.............................................................................

மோதி விளையாடு: 
வரும் மே 31 ஆம் தேதி மலேசியாவில் நடக்கவுள்ள அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் பரமவைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இரு நாட்டு வீரர்களும் ஹாக்கி மட்டைகளை கூர் தீட்டி பார்க்க ஒரு சந்தர்ப்பம். தீப்பொறி பறக்கவுள்ள இப்போட்டியை காண ஆவலுடன் ஹாக்கி ரசிகர்கள் காத்திருப்பர் என்பதில் ஐயமில்லை.
................................................................................

தனிப்பிறவி:
நகைச்சுவை மன்னர் கலைவாணர் அவர்கள் நடித்த நல்லதம்பி படத்தில் வரும் கிந்தனார் சரித்திரம் என்றென்றும் நெஞ்சில் நிற்கும். மெட்ராஸ் பட்டினத்தில்  கிந்தன் படும் பாட்டை தனக்கேயுரிய கலகல பாணியில் கலைவாணர் நடத்தும்  கதாகாலேட்சேபம்.                                              


.................................................................................

............................                       
My other site:
agsivakumar.com
...........................

......................................................................
சமீபத்தில் எழுதியவை:

வித்யா பாலனின் கஹானி - விமர்சனம்

விகடனில் ஆரூர். மூனா செந்தில்
 .....................................................................
                                                

                    

8 comments:

Unknown said...

ராகுலுக்கு இது ஐந்தாவது ஆப்பு :((

ஈழம் சோனியாவின் பக்தர்களுக்கு கசக்கும்தான்...

கிந்தனார் :)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்பெசல் மீல்ஸ் களைகட்டிருச்சு.....

Yoga.S. said...

வணக்கம் சிவா!தகவல்கள் அருமை,புதுமை!கூஜபக்க்ஷே .....ஹி!ஹி!ஹி!!!

உலக சினிமா ரசிகன் said...

பிரியங்காவை பிரிச்சி மேஞ்சிட்டீங்க...
வெல்டன்...
ஆனா மண்ணு மோகன் மண்டையில அடிச்சி எழுப்ப முயற்ச்சிருக்கீங்க...அது மட்டும் மட்டும் நடக்காதடி... மாப்பிள்ளே...

ஹாலிவுட்ரசிகன் said...

இன்றும் மீல்ஸ் சூப்பர் ... நன்றி.

//கூஜபக்சேவின் (அந்தாளோட நிஜப்பேரை சொன்னா 100 லிட்டர் பினாயிலை ஊத்தி வாய கழுவுனாலும் ஸ்மெல் போகாது. அதான்)//
ஹா ஹா ... செம.

Unknown said...

கர்ணன் படத்தை நம்ம கொழுக்கட்டை தின்கிற வாயருக்கு போட்டு காட்டுங்கப்பு...
செஞ்சோற்று கடன்.....தீர்க்க சேறாத இடம் சேர்ந்து...பாட்டை கேட்டு மௌனகுரு குலுங்கி குலுங்கி அழட்டும்!

நாய் நக்ஸ் said...

ச்சே..என்னாப்பா பதிவு இது...???
சண்டையும் இல்லை...ஒரு மண்ணும்..இல்லை...

சிவா...நாங்க இன்னும்...இன்னும் ...
உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்...
ஹி..ஹி..ஹி...

சென்னை பித்தன் said...

வழக்கம்போல் அறுசுவை உண்டி

Related Posts Plugin for WordPress, Blogger...