CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, March 30, 2012

இன்னா வாத்யாரே..இதுக்கு பதில் சொல்லு பாப்போம்'பலே குஸ்கா' சேனல்ல பவர் ஸ்டார் நடத்தப்போற 'பத்தே நொடியில் பத்து கோடி' நிகழ்ச்சில கலந்துக்க துடியா துடிக்கறீங்களா? அதுக்கு முன்ன கீழ இருக்குற அஞ்சி கேள்விங்களுக்கு பதில் சொல்லுங்க. பவர் ஸ்டார் நடத்துற போட்டிக்கான என்ட்ரன்ஸ் டிக்கட்டை வெல்லுங்க...

                                                                         
1. நித்தம் ஒரு அயல்நாட்டு அதிபருடன் கைகுலுக்குவது போல் உங்களுடனும் 'மண்' மோகன் கை குலுக்க  வேண்டுமா? அப்படி என்றால்  நீங்கள் முதலில் செய்ய வேண்டியது...

A)  எத்தனை தமிழன் உசுரை விட்டாலும் வாயில் நிப்பிளை சப்பிக்கொண்டு பின் டிராப் சைலண்டை மெயின்டெயின் செய்ய வேண்டும். 'என்னடா இது அநியாயம்? இதை கேட்பார் யாரும் இல்லையா' என்று ஆவேசமாக ஷங்கர் பட கிளைமாக்சில்  வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் டேக் ஆப் ஆடக்கூடாது. 

B) தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள் படும் அவதி குறித்து எவனாவது நம்மிடம் எமோஷனாக பேசினால் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு ஒரு  லிட்டர் ரத்தத்தை ஊற்ற வைக்க வேண்டும். அதை வீடியோ பதிவு கண்டிப்பாக செய்ய வேண்டும். 

C) (சோறு) கண்ட இடத்தில் எல்லாம் குந்திக்கொண்டு அகிம்சை வழியில் போராடுதல், பார்லிமென்ட் தூண்களில் வவ்வால் போல தொங்கிக்கொண்டு 'திருக்குறளை தேசிய மொழியாக அறிவியுங்கள்' என சேட்டை செய்தல், பிரதமர் கார் செல்லும்போது குறுக்கே பாய்ந்து 'ஏக் காவ் மேக் ஏக் கிசான் ரகு தாத்தா' என இந்தியில் இஷ்டத்துக்கு உளறுதல் என ஏதும் செய்யாமல் '(டெல்லி) எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி' பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். 

2. இரண்டே நாளில் 'மெகா ஸ்டார்' பதிவர் ஆக வேண்டுமென்றால்.....

A) ஆப் சாரியில் அம்சமாக இருந்த அவள் என்னை குறுகுறுவென பார்த்தாள். நான் அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை.  கடந்துவிட்டேன் நூறடி.  பிடரியில் விழுந்தது ஓரடி.

அவள்:  'செருப்பு டோக்கனுக்கு காசு தராம கமுக்கமா போறியே' 

நான்: 'இப்ப நீ பேசுறது உன்கிட்ட. என் உன் காலுல போட்டுருக்கிற செருப்பே நாந்தாங்கிறதை மறந்துட்ட'.

                                   
இப்படி எலுமிச்சம் பழத்தை மரத்தை எடுத்து தலையில் தேய்த்தாலும் ஒன்றும் விளங்காத கவிதையை கே.ஆர்.பி. செந்தில் ஸ்டைலில் எழுத வேண்டும். கண்டிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் படமொன்றை போட்டே தீர வேண்டும். பதிவிற்கான தலைப்புகள் இப்படி இருத்தல் அவசியம்: 'முக்கோண பித்தங்கள்', 'நான் இன்னும் ஒரு நொடியில் சட்டையை கிழித்து கொள்ள நேரிடும்'.........

                                            
B) வில் ஸ்மித் நடித்த படத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு வந்தால்  'நாயகன் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரன் என்பதால் அவன் கருப்பு நிறத்தை கிண்டல் செய்யும் வண்ணம் 'மேன்(!) இன் ப்ளாக்' என டைட்டில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனினும் ஸ்மித்தை கருப்பு கோட்டுடன் உலவ விட்டு அவரை பகுத் (அச்சா) தறிவு பகலவனாக காட்டியதை ஆரத்தி எடுத்து வரவேற்கலாம் :) - இப்படி யுவகிருஷ்ணா ஸ்டைலில் பஞ்ச் அடிக்க வேண்டும். குறிப்பாக 'திராவிட் அடித்த டன் (100) அனைத்திற்கும் கவுரவம் செய்யும் விதமாக அவருக்கு திராவிடன் பட்டத்தை அளித்தாலென்ன?' என்று தினுசு தினுசாக யோசித்துக்கொண்டே வேண்டும்.  

C) மொட்டை மாடியில் யாராவது காக்கைக்கு இட்லி வைத்திருந்தால்  சட்னியுடன் லவட்டி விட வேண்டும். அதை டைட் க்ளோஸ் அப்பில் போட்டோ எடுத்து விட்டு, 'ஆயிரம் வெள்ளை இட்லிகளை உண்டிருப்பினும், இப்படி ஒரு வெள்ளை வெளேர் இட்லியை..சான்சே இல்லை. என்ன சொல்ல..டிவைன். தேங்காய் யூஸ் பண்ணி செய்த தேங்காய் சட்னி, எட்டுத்திக்கிலும் பரவிக்கிடக்கும் கருவேப்பிலை, ஸ்பூனுக்கு ஸ்டெப்னியாக எனக்காக மெனக்கெட்ட விரல்கள்..என டீடெய்லிங்கை பதிவு செய்து கேபிள் சங்கர் போல பக்குவமாக எழுத வேண்டும். 

3. உங்கள் எதிரிகளை ரத்த வாந்தி எடுக்க வைத்து 'கூட்டத்துல ஒரு பச்ச சட்டக்காரனும்' எஸ்கேப் ஆக விடாமல் சுழற்றி சுழற்றி அடிக்க வேண்டுமெனில்..

A) உங்கள் வீட்டு முதல் மாடிக்கு நடந்து சென்றதை பற்றி மட்டும் குறைந்தது 365 பதிவும், அதில் 1,00,76,000 படங்களும் போட வேண்டும். படியின் நிறம், சுவற்றில் இருக்கும் கீறல்களின் எண்ணிக்கை, படிகளில் கால் வைக்கும்போது ஏற்படும் ஒலியின் ஆடியோ தொகுப்பு என அனைத்தையும் ஒன்று விடாமல் நாஞ்சில் மனோ போல 'போட்டுத்தள்ள'  வேண்டும்.  

B) வெள்ளிக்கிழமை தமிழ், ஆங்கில டப்பிங், போஜ்பூரி, ஹீப்ரு, சமஸ்கிருத மொழி படங்கள் ரிலீஸ் ஆகாமல் போனால் கூட கவலைப்படாமல் கே.டி.வியில் காலை ஏழு மணிக்கு போடும் ஒரு ஷோ கூட ஹிட்டே ஆகாத படத்தை பற்றி விமர்சனம் போட்டு சிபி போல ஜெட் வேகத்தில் ஹிட்டடிக்க வேண்டும். 

C) 'சுச்சா போறேன். தயவு செஞ்சி ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி கால் பண்ணுங்க' என்று பதறி, உதறி, கதறினாலும் கூட சக பதிவரை பாவம் பார்க்காமல் 'ப்ளாக்ல ரெண்டு பேரு மண்டைய ஒடச்சிட்டு இருக்காங்க. உனக்கு உச்சா ஒரு கேடா' என்று காண்டு ஏற்றி போனை கட் செய்ய விடாமல் 'நாய் நக்ஸ்' நக்கீரனை போல நம்மிடம் சிக்கிய அடிமையை தொடர்ந்து பேச வைக்க வேண்டும். 

4. 'என்ன ஒரு புத்திசாலித்தனம்' விருதை விருட்டென வாங்க...

A) மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம் ஆற்காட்டார், கலைஞர், ஜெ ஆகியோரை மக்கள் சபிக்கையில் 'மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நாந்தானுங்கோ' என்று சத்தம் போடாமல் பகுமானமாக பம்மிக்கொண்டு இருக்கும் வித்தையை கற்க வேண்டும். 

B) ஓய்வுபெறும் நிலை  வந்தால் உடனே 'ரசிகர்கள் விரும்பினால் 2015 உலகக்கோப்பை வரை ஆடுவேன்'என்று வெக்கத்தை கக்கத்தில் மறைத்துக்கொண்டு கனகெம்பீரமாக கூவ வேண்டும். 

C) நேஷனல் ஆந்தெம் தெரியுதோ இல்லையோ சச்சின் ஆந்தெம், லவ் ஆந்தெம் என்று தனுஷ், சிம்பு சொறிவது போல 'பெட்ரோல் ரேட்டு பீறிக்கிச்சி' ஆந்தெம் மாதிரி மனதில் பட்டதை ஆல்பம் போட்டு அலறவிடலாம்.

5. வெயிலில் உக்கிரத்தில் இருந்து அடுத்த சில மாதங்களுக்கு எஸ்கேப் ஆக..

A) 'மன்னார் அண்ட் கம்பனி' தங்கவேலுவை பின்பற்றி காலை முதல் மாலை வரை குளு குளு ஷாப்பிங் காம்ப்ளக்சில் குழுக்குழுவாக சுற்றலாம். 

B) சங்கரன் கோவிலில் அஸ்தமனம் ஆனது போலவே இன்னும் ஒரு சில வருடங்களுக்கு ஊருக்குள் உதயசூரியன் தலைகாட்டாமல் இருக்கும்படி கலைஞருக்கு கண்ணீர் கடுதாசி எழுதி கொஞ்சிக்கெஞ்சலாம். 

C) பதிவுலகில் இயங்குவதற்கென்றே வாங்கிய நெட் கனெக்சனை பிடுங்கி தூர கடாசி விட்டு அந்தக்காசில் நித்தம் தர்பூசணி, இளநீர், நீர்மோர் போன்ற உருப்படியான ஆகாரங்களை சாப்பிட்டு 'ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது' சூட்டை தணிக்கலாம். 

.....................................................................................Tuesday, March 27, 2012

உலக சீரிஸ் ஹாக்கி போட்டி - நிழற்படங்கள்


மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது எடுத்த படங்கள்:

* போட்டி துவங்கிய சற்று நேரத்தில்  'ஹாக்கி' எனும் வார்த்தை அடங்கிய நீல நிற டி ஷர்ட் சகிதம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் திரளாக வர ஆரம்பித்தனர்.  ஒருவர் கையில் பேண்ட் வாத்தியம் வேறு. ஆஹா..இன்று ஆட்டத்தை பார்க்க விடாமல் சத்தம் எழுப்பியே வெறுப்பேற்றுவார்களோ  என எண்ணினால்..நடந்த கதையே வேறு. அவர்களிடம் இருந்த பேண்டை வாங்கிக்கொண்டு போட்டி முழுக்க வாசித்துக்கொண்டே இருந்தார் ஒரு தாதா. யார் அவர்? பிறகு பார்க்கலாம்.  

                                                           
* ஹாக்கி விளையாட்டிற்கு கணிசமாக ஆதரவு பெருகி வருவதை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் திரண்டிருந்த ரசிகர் கூட்டம்.
                             
                                             
   
* ஆஷா, நிஷா, உஷா, த்ரிஷா..யாரு வேணும்னாலும் என்னை காதலிச்சிட்டு போகட்டும். என்னோட லவ்வு ஹாக்கி மேலதான்...        

                                                           
* தமிழக அரசால் சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஹாக்கி நட்சத்திரம் ராஜாவுக்கு ஸ்டேடிய வாசலில் ஒரு பேனர். அருகில் இருப்பவர் தமிழக முதல்வர்...

                                                                                                 
* பேண்ட் வாத்தியத்தை அடம் பிடித்து வாங்கி தனி ஒரு ஆளாக வாசித்த வித்வான் இவர்தான்...

                                                                     
* பஞ்சாப்போ, சென்னையோ.. யார் கோல் அடித்தாலும் நம்ம குட்டி வித்வானுக்கு எல்லாம் ஒண்ணுதான்.  ஒருமணிநேரம்  ஓயாமல் கச்சேரி வாசித்த சுட்டி தாதா..........
                               
                                                                 
* சென்னைக்காக ஆடிய இம்ரான் வர்சி பாகிஸ்தான் நாட்டு ஆளாக இருப்பினும் நம்மூர் ரசிகர்களிடையே செம பாப்புலர் ஆகிவிட்டார். ஆட்டம் முடிந்து ரசிகர்களுக்கு சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வந்து கொண்டிருக்கையில் "வர்சி வர்சி" என ஆர்ப்பரித்தனர் இளைஞர்கள். அவர்கள் அனைவருக்கும் அருகில் வந்து கையை அசைத்து அன்பை ஏற்றுக்கொண்டார் வர்சி. எந்த நாட்டவர் ஆனாலும் அவர்களை மதித்து உற்சாகம் செய்வதில் இந்தியாவிலேயே சென்னை ரசிகர்கள்தான் முதல் இடத்தில் இருப்பார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்தது இந்நிகழ்வு.
 
                                                                                    இம்ரான் வர்சி
                                                                          pic: worldserieshockey.com

 * கோவை மண்ணை சேர்ந்த வீரர் ஆடம் சிங்க்லர் மின்னலென களத்தில் ஆடுவதை பார்க்கையில் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக வருவதற்கான  தகுதி இருப்பது நன்றாகவே தெரிகிறது.    

                                                                              Pic: worldserieshockey.com

மொத்தத்தில் ஹாக்கி மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ள  உலக ஹாக்கி சீரிஸ் போட்டியை மின்னொளியில் கண்ட இனிமையான தருணத்தை மறக்க இயலாது. 

Photos: madrasbhavan.com

...............................................................


                                                                     

Monday, March 26, 2012

உலக சீரிஸ் ஹாக்கி போட்டி - பரவச நிமிடங்கள்


                                                               மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் 

சில வாரங்களுக்கு முன்பு இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட, அதே நேரத்தில்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. எல்லாம் நன்மைக்கே எனலாம். நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி மீது முன்பை விட அதிக வெளிச்சம் பாய்ந்துள்ளது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்து வரும் வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி போட்டிக்கு ரசிகர்களிடையே கிடைத்து வரும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. சென்னை, தில்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட எட்டு அணிகள் மோதும் இந்தத்தொடர் கிட்டத்தட்ட ஐ.பி.எல். போலத்தான். எப்படியும் சென்னையில் நடக்கும் போட்டியை பார்த்தாக வேண்டுமென தீர்மானித்தேன். சேரில் அமர்ந்து பார்க்க கட்டணம் ரூபாய் 250, 500,1000. எதிர் திசையில் இருக்கும் சிமென்ட் தரையில் ஆட்டத்தை காண ரூபாய் 100 கட்டணம். "ஹாக்கின்னா மூணு மணி நேரம் நடக்குமே..அந்த ஆட்டந்தான?" மேட்ச் பார்க்க போகலாமா என்று கேட்டதற்கு பிலாசபி பயபுள்ள கேட்ட முதல் கேள்வி. எனக்கு லேசாக கிர்ரடித்தது. பிறகு பகுமானமாக ஹாக்கி பற்றிய பேசிக் கோர்ஸை அண்ணனுக்கு  எடுத்துவிட்டு இரண்டு டிக்கட்களை ஆன்லைனில் புக் செய்தேன்.  

சில ஆண்டுகளுக்கு முன்பு மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தியா,ஜெர்மனி ஆடிய போட்டியை பார்த்ததுதான் முதலும் கடைசியுமான நேரடி ஹாக்கி அனுபவம்.அதற்குப்பின் நேற்றுதான் காண நேர்ந்தது. ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட சேர் - இ - பஞ்சாப் அணியுடன் சென்னை சீட்டாஸ் மோதும் இந்த ஆட்டம் மாலை ஏழு மணிக்கு துவங்குமென அறிவிக்கப்பட்டது. இதில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்கு எளிதாக நுழைய முடியும் என்கிற நிலையில் சென்னை அணி. இந்திய அணியின் முன்னாள் கோச் ஆன ஜோஸ் ப்ராசாதான் சென்னை அணிக்கும் கோச். 2004 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆஸி அணியில் இடம்பெற்ற ப்ரென்ட் டீமின் கேப்டன். கோவை மண்ணின் மைந்தன் ஆடம், பாகிஸ்தானின் வர்சி உள்ளிட்ட வீரர்கள் சென்னைக்காக களம் புகுந்தனர். பஞ்சாப் அணியோ தீபக் தாகுர், ககன் அஜித் சிங், பிரப்ஜோத் சிங்(கேப்டன்) என புகழ்பெற்ற இந்திய வீரர்களை கொண்டிருந்தது. 

                                                   பயிற்சியில் ஈடுபடும் சென்னை சிறுத்தைகள் 
           
போட்டி துவங்கும் வரை சில ரசிகர்கள் மட்டுமே இருந்தனர்.  நேரம் போகப்போக நாங்கள் இருந்த 100 ரூபாய் ஸ்டாண்ட் ஹவுஸ்புல் ஆகிப்போனது. எதிரே அதிக விலையுள்ள ஸ்டாண்டும் 70% நிரம்பி இருந்தது. போட்டியில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க ஆரம்பித்தன. ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் பஞ்சாபின் கை சற்று ஓங்கியது. சென்னைக்கு பலத்த ஆரவாரத்துடன் சப்போர்ட் செய்த ரசிகர்களின் கூச்சலைக்கண்டு எந்த வித பதற்றமும் இன்றி நன்றாக ஆடியது பஞ்சாப் அணி. தொகுப்பாளினி ஒருவர் 'கம் ஆன் சென்னை' என்று அவ்வப்போது ஊக்கம் தந்தும் பலன் இல்லாமல் போனது. ஆட்டம் மும்முரமாக போய்க்கொண்டிருந்த வேளையில் பஞ்சாப் கோல் போஸ்ட்டை நோக்கி சென்னையின் ஆடம் சிங்க்லர் மின்னல் வேகத்தில் சறுக்கி சென்றது எல்லோரையும் மிரள வைத்தது. அது மட்டும் கோலாக மாறி இருந்தால் ஹாக்கி வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாக கருதப்பட்டிருக்கும். ஆட்டம்னா இது ஆடம்!! கடைசியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் தவற விட்டு 4-2 கோல் கணக்கில் சென்னை தோற்றது. அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பது இன்று சண்டிகர் அணியுடன் எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். 

         
"என்ன ஆட்டமோ..ஒத்த பந்தை டொக்கு டொக்குன்னு தட்டிக்கிட்டு" பிலாசபி மீண்டும்..! தத்துவம் மேலும் பேசியவை: "மைக்குல அடிக்கடி பேசுற பொண்ணு அதோ அங்க கருப்பு ட்ரெஸ் போட்டிருக்கே அந்த புள்ளைதான்" (நாங்கள் இருந்த இடத்திற்கும் அதற்கும் தூரம் நிறைய. அப்படி இருந்தும் இந்தப்பய எப்படி இப்படி கரெக்டா..), "ஆமா பஞ்சாப் டீம் எந்தப்பக்கம் கோல் அடிக்கணும்" எனக்கேட்டதும் கோபத்துடன் ஓலமிட்டேன்.."யோவ்..எனக்கு ஹாக்கி தெரியுமான்னு தான ஆரம்பத்துல இருந்து டெஸ்ட் பண்ற? நக்கலா ஒனக்கு.." என்றேன். கிடைத்த பதில் "இல்லைங்க. நிஜமாத்தான் கேட்டேன்". நான் "ஏய்யா..எந்த கோல் போஸ்ட் பக்கம் சென்னை ஆளுங்க ஓடும்போது ரசிகர்கள் கத்துராங்களோ அதை வச்சுமா கண்டு புடிக்க முடியல?" என எகிற வேண்டியதாகிவிட்டது. 

இரண்டாம் பாதி துவங்கியதும் அடுத்து ஒரு கேள்வி கேட்டு என்னை அசர அடித்தார் அருமைத்தம்பி "என்ன தல இது...கோல் போஸ்ட் கிட்ட பந்தை வச்சிக்கிட்டு அந்த சென்னை ப்ளேயர் வேடிக்கை பாக்கறார்? கோல் அடிக்க வேண்டியதுதான?". ஆற்றாமையில் அல்லாடினேன்.."தம்பி செகண்ட் ஹால்ப்ல ரெண்டு டீமும் எடம் மாறுவாங்க. அதால இப்ப சென்னை வேற பக்கம் கோல் அடிக்கும்யா" என மீண்டும் ஒரு விளக்கம் தர நேர்ந்தது. இது போதாதென்று அவ்வப்போது ரொமாண்டிக் பாட்டை வேறு ஹம் செய்து என்னை துவம்சம் செய்துகொண்டிருந்தார். நான் முறைத்துப்பார்த்தும் பயனில்லை. ஒரு மார்க்கமாத்தான் அலையுது இந்த பயபுள்ள.  அவ்வப்போது ஸ்டேடியத்தை 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தவாறு "அட..கேர்ல்ஸ் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்களே. இந்த பொண்ணை எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே" என்று கமன்ட் வேறு.

                                            பிடரியுடன் வீற்றிருக்கும் சென்னை சிறுத்தை..பிலாசபி   

நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்னை பாஷை பெருக்கெடுத்து ஓடியது. பஞ்சாப் அணிக்கு சாதமாக நடுவர் தீர்ப்பு சொல்லும்போதெல்லாம் விடலைகள் "எங்க ஏரியாவுக்கு வாய்யா ஒனக்கு இருக்கு கச்சேரி" என உறுமினர். அருகில் இருந்த வாண்டு அடித்த கமன்ட் "டாடி இந்த அம்பயர் சுத்த வேஸ்ட் டாடி". காதில் ஒரு மெசினை சொருகியவாறு ஓடிக்கொண்டிருந்த நடுவருக்கு எதுவுமே புரிய வாய்ப்பில்லை பாவம். "அட்ச்சி தூக்கு தல அவன" என சென்னை அணிக்கு அட்வைஸ் தந்தார் இன்னொரு விடலை. காஸ்ட்லி டிக்கட் எடுக்காமல் இருந்தது நல்லதாகத்தான் போனது. இல்லாவிடில் இப்படி ஒரு ஆரவாரமான கூட்டத்தை காணும் வாய்ப்பு கை நழுவி இருக்கும். 'எலெக்ட்ரி பையிங் அட்மாஸ்பியர்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதைப்போன்ற ஒரு அனுபவத்தை தந்ததற்கு ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லியே தீர வேண்டும். 

தனது கல்லூரி காலத்தில் ஹாக்கி ப்ளேயராக இருந்த முத்துராஜ் என்பவர் என்னிடம் சொன்னது "இன்னும் நன்றாக விளம்பரம் செய்திருந்தால் ஏனைய டிக்கட்களும் விற்று தீர்ந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி அதிகமான வரவேற்பைப்பெரும். சென்னையைப்பொருத்தவரை முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி போட்டிதான் பிரபலமானதாக இருந்து வந்தது. இப்போது வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பி இருப்பது சந்தோஷமாக உள்ளது". நமது தேசிய விளையாட்டான ஹாக்கி மேலும் பல பேரின் ஆதரவுடன் சிகரங்களை எட்ட வாழ்த்துவோம். 

ஸ்டேடியத்தில் எடுத்த மேலும் சில சுவாரஸ்யமான நிழற்படங்கள் மற்றும் அதையொத்த தகவல்கள் விரைவில்.....

Photos: madrasbhavan.com
Location: Mayor Radhakrishnan stadium, Egmore, Chennai.
........................................................................................

...........................
My other site:
...........................

....................................................
சமீபத்தில் எழுதியது:

.................................................
  

                                                                       

Sunday, March 25, 2012

'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்சென்ற சனியன்று எஸ்.வி.சேகர் நாடகம் பார்க்க சென்றபோது  வாணிமகால் வாசலில் தென்பட்டது மேலிருக்கும் பேனர். 'சோ'  நடித்திருக்கிறாரா என்று ஆர்வத்தில் பேனரை வாசிக்கையில் கதை, வசனம் சோ என்றும், பிரதான வேடத்தில் வரதராஜன் நடிப்பதாகவும் தெரிய வந்தது. சோ நடிக்காவிடினும் வசனத்தில் கண்டிப்பாக நையாண்டி தெறிக்கும் எனும் நம்பிக்கையில் நேற்று  நாரத கான சபாவிற்கு (டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை) முதன் முறை விஜயம் செய்தேன். கிரேஸி மோகன்,எஸ்.வி.சேகர் தவிர வேறெவருடைய நாடகத்தையும் இதுகாறும் கண்டிராத எனக்கு இது ஒரு புது அனுபவம்தான். தம்மாதூண்டு இருக்கையில் வரதராஜன் அவர்களை பொதிகை சேனலின் செய்திகளில் பார்த்ததோடு சரி. சோவின் பேனா செய்யும் ரவுசுக்கு வரதராஜன் எப்படி ஈடு கொடுப்பார் என்பது என்னுள் முதலில் எழுந்த கேள்வி. ஆனால் எதிர்பார்த்ததை விட சிரிப்பாகவும், சிறப்பாகவும் இந்நாடகம் அமைந்ததில் சந்தோஷம் என்றே சொல்லலாம். 

இப்போதெல்லாம் நாடகத்திற்கான குறைந்தபட்ச டிக்கட் விலையே 200 ரூபாய்தான். ஆனால் இங்கோ 50,100 ரூபாய்க்கு டிக்கட் விற்பனை செய்தது ஆச்சர்யமாக இருந்தது. "வரதராஜன் நாடகங்களுக்கு மட்டும்தான் எங்கள்  சபாவில் இந்த விலைகுறைப்பு" என்றார் கவுண்டரில் இருந்தவர். நாரத கான சபாவில் மெயின் ஹால், மினி ஹால் என இரண்டு அரங்குகள் உள்ளன. நான் இந்நாடகம் பார்த்த மெயின் ஹால் மற்ற அரங்குகளை ஒப்பிடுகையில்   விசாலமாகத்தான் இருந்தது. நாடகம் துவங்கும் முன் சோ பேசிய வீடியோ பதிவை போட்டுக்காட்டினர். "1971 ஆம் ஆண்டு முதன் முறை 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களின் அடியாட்கள் எங்கள் மீது முட்டைகளை வீசி இலவச விளம்பரம் தந்தனர். இதன் மூலம் நிறைய பேர் இந்த படைப்பை காண வந்தனர். டிக்கட்டை ப்ளாக்கில் விற்கும் அளவிற்கு கிராக்கி ஏற்பட்டது. இன்றளவும் நீங்கள் இதை ரசிப்பதற்கு காரணம் அன்று முதல் இன்று வரை மாறாத அரசியல்வாதிகள்தான் " எனப்பேசி முடித்தார் சோ. இவரது சகோதரர் அம்பியின் நாடக நடிப்பிற்கு சிவாஜி கணேசன் ரசிகராக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். அதன் பின் சொன்னதுபோல் டாண் என 7 மணிக்கு தொடங்கியது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்'.  7 மணிக்கு துவங்குவோம்  என்று அறிவித்துவிட்டு சில சமயம் 20 நிமிடம் தாமதமாக நாடகத்தை ஆரம்பிக்கும் கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் போன்றோர் அந்தக்குறையை எப்போது தவிர்ப்பார்களோ...

                                                            நாரத கலகம் நடந்தேறிய நாரத கான சபா

இந்தியாவில்...குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் ஜனநாயக (?) அரசியல் முறையை தேவலோகத்தில் அரங்கேற்றினால் என்னவாகும் என்பதே இதன்  கதைச்சுருக்கம். கலகக்காரர் நாரதரும், கழகக்காரர் நல்லதம்பியும் சேர்ந்து இந்திரன், எமன், குபேரன், விஷ்ணு உள்ளிட்டோரை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து தேவலோகத்தை அதிரி புதிரி ஆக்குகின்றனர். இந்திரா காந்தியை பகடி செய்ய இந்திரனை 'இந்திரா' என்றும், கருணாதியை எகத்தாளம் செய்யும் பொருட்டு நல்லதம்பி(!) கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் சோ. ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்த இந்நாடகம் போகப்போக ஹாஸ்யமான வசனங்களால் இறுதிவரை ரசிக்க வைத்து விட்டது. 

தேவலோகத்தில் ஜனநாயக முறை அமல்படுத்த முடிவு செய்து ஜனாதிபதியாக இந்திரன், பிரதமராக வசிஷ்டர், எதிர்க்கட்சி தலைவராக துர்வாசர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். பூலோகத்தில் செய்த பாவத்தால் எமலோக எண்ணை கொப்பரையில் நரகத்தை அனுபவிக்கும் நல்லதம்பி எனும் அரசியல்வாதி 'ஜனநாயக முறைகளை கற்றுத்தருகிறேன் ' எனச்சொல்லி எமனை உசுப்பிவிட்டு ரகளை செய்கிறார். குபேரன், விஷ்ணு போன்றோரும் இவரின் அரசியல் சிக்கித்தவிக்கின்றனர். இறுதியில் அவர்களின் கதி என்ன என்பதை திரையில் திரைவிலகிய பின் நாடக மேடையில் காண்க :)

                                                                         சபாவினுள் சங்கீத சங்கமம்

"என்னை ஏன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தாய் நாரதா?" என கேட்கும் இந்திரனுக்கு நாரதரின் பதில் "நீயோ சுகவாசி. குடும்பத்துடன் தேசம் தேசமாக சுற்ற உனக்கு இப்பதிவிதான் சரி". "தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் நல்ல தம்பி?" இது எமனின் கேள்வி. அதற்கு நல்லதம்பி தரும் ஆலோசனை "ஒரு ரூபாய்க்கு மூன்று படி அமிர்தம் தருவோம், ஏழை - பணக்காரன் வித்யாசம் இல்லாமல் செய்வோம், உலக தேவலோக பாஷை மாநாடு நடத்துவோம் என்று அள்ளிவிடு எமா". "தேவலோக தேர்தலுக்காக என் கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு எங்கு போவேன்" என எமன் கேட்க, கிங்கரர்களை சிபாரிசு செய்கிறார் நல்லதம்பி. "ஐயோ..அவர்களுக்கு உலக அறிவே கிடையாதே. நான் சொல்வதைக்கேட்டு தலையை மட்டும்தானே ஆட்டுவார்கள்" என எமன் பதற "அடப்பாவி..லட்டு லட்டா ஆளுங்களை வச்சிருக்கியே. அவங்கதாய்யா நமக்கு தேவை" என நல்லதம்பி பேசும் வசனத்திற்கு பலத்த கைத்தட்டல். 

ஏழை பணக்காரன் வித்யாசத்தை ஒழிக்க குபேரனை ஏழையாக்கி குசேலனுக்கு நிகராக்குதல், விஷ்ணு மற்றும் சிவனுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்து  சங்கு சக்கரம், கங்கை - சந்திரன் போன்றவற்றை பறித்தல், கருணாநிதி குரலில் ஆளாளுக்கு மிமிக்ரி செய்தல் என பல இடங்களில் சிரிப்பொலிகளையும், கைத்தட்டல்களையும் பரிசாக பெற்றனர் யுனைடட் விஷுவல்ஸ்  குழுவினர். அதில் முக்கால்வாசி க்ரெடிட்டை அள்ளிச்சென்றவர் நல்லதம்பியாக நடித்த ரவிகுமார். மெட்ராஸ் பாஷை பேசும் அரசியல்வாதியாக அதகளம் செய்திருக்கிறார் மனிதர். அருமையான பெர்பாமன்ஸ். 

                                                          மெட்ராஸ் பாஷையில் கலக்கிய ரவிகுமார்

நாடகம் முடிந்ததும் மேடையில் பேசிய வரதராஜன் "1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வசனத்தில் ஒரு வார்த்தையை கூட மாற்றாமல் அப்படியே இன்றுவரை அரங்கேற்றி வருகிறோம்" எனும் தகவலைக்கூறினார்.    அதன்பின் ரவிகுமார், வரதராஜன் இருவரையும்  ஒப்பனை அறையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சி. 

தீவிர நாடக ரசிகர்களை தவிர்த்து, என் போன்ற சாதாரண ரசிகர்களுக்கு வரதராஜன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், மாது பாலாஜி, நீலு போன்றோரின் பெயர்கள் மட்டுமே நன்கு பரிச்சயம் ஆனவையாக இருக்கும். ரவிகுமார் போன்று துணை நடிகர்களாக வருபவர்கள் சிறப்பாக நடிக்கையில் அவர்களின் பெயர்கள் தெரியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நல்லதம்பியாக நடித்தவரை சந்தித்து பேசுகையில் அவர் சொல்லித்தான் நிஜப்பெயர் ரவிக்குமார் எனத்தெரிந்தது எனக்கு. எனவே இனி வரும் காலத்திலாவது நாடகங்கள் நடக்கும் இடத்தில் துணை நடிகர்கள் பெயர்கள் கொண்ட சிறிய போஸ்டரையாவது அரங்கில் வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நடக்குமா???

                                                                              வரதராஜனுடன் நான்...

இரண்டு மணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் தரும் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - டெமாக்ரஸி இன் தேவலோகம்' படைப்பை சென்னையில் பார்க்க விரும்புவோர், நாடகம் நடக்கும் தேதிகளை  இப்பதிவில் இருக்கும் முதல் படத்தை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.


என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - 'சோ' ஸ்வீட் ஹாட்!
.............................................................................

சாப்பாட்டு மேடை:

                                                           மெனுவைப்படிக்க ..படத்தை கிளிக் செய்க.

நாடகம் துவங்க ஒரு மணிநேரம் இருப்பதற்கு முன்பாகவே சென்றுவிட்டதால் சபா வாசலில் இருந்த உட்லண்ட்ஸ் உணவகம் முன்பு சிறிது நேரம் உலா வந்தேன். திறந்த வெளியில் போடப்பட்டிருந்த சேர்கள் அனைத்தும் நிரம்பி வழிய, ஆளாளுக்கு ஐட்டங்களை லபக்கிக்கொண்டு இருந்தனர். அதில் பெரும்பாலானோர் வயதான தம்பதிகள். உணவுகளின் விலை சற்று அதிகம்தான். ஆனால் தரத்தில் குறைவில்லை. 40 ரூபாய்க்கு பூரி செட் ஆர்டர் செய்தால் 15 நிமிடங்கள் கழித்து நான் கேட்டபடி பூரி மட்டுமே வந்தது. மசாலா வாங்க அருகிலிருக்கும் இடத்திற்கு நாம் பாதயாத்திரை செல்ல வேண்டும். காபி ஒன்றின் விலை 20 ரூபாய். குடுத்த காசுக்கு நோட்டுக்கு திருப்தியாக இருந்தது. இடைவேளையின்போது உள்ளே இருந்த கேண்டீனில் சில ரக சிப்ஸ் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருந்தன. 

டிசம்பர் மாத இசைக்கச்சேரி சீசனில் அரங்கிற்கு உள்ளே கலைஞர்களின் பெர்பாமன்சை பார்க்க வருவோரை விட சபா கேண்டீன்களில் அலைமோதுவோர் எண்ணிக்கைதான் அதிகம் என கேள்விப்பட்டதுண்டு. சீசன் வரட்டும். ஒரு கை பார்க்கலாம். மீண்டும் ஒரு மேடை நாடக அனுபவத்துடன் சந்திக்கிறேன். வணக்கம்.

Photos : madrasbhavan.com
Location: Naradha Gana Sabha, Alwarpet, Chennai.
...................................................................................

..........................
My other site:
...........................

.............................................................................
தொடர்புடைய பதிவுகள்:


.............................................................................


             

Thursday, March 22, 2012

ஒரே பேஜாரா கீதுப்பா!

                     
                                                                                                              
இன்னாமோ நம்மல்லாம் சேந்து திப்பு சுல்தான் கத்தியை வச்சி மெரட்டி அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவு தரணும்னு சொன்னா மாதிரி ஓவரா சீனப்போட்டுறாரே இந்தியாவோட ஹெட் மாஸ்டரு. இப்பதான் அர மனசோட 'ரி'ன்ற வார்த்தைய மட்டும் சொல்லி இருக்காரு இந்தாளு. 'சரி'ன்னு முழுசா சொன்னா கிரீடம் எறங்கிடுமாக்கும். 'ச'வே வரதாப்பா நைனா ஒனக்கு? ஒரு மொறையாச்சும் 'பக்கத்து நாட்டு ராட்சச பய பண்ணது தப்பு. அதுக்கு நாங்களும் உடந்தையா இருந்ததை நெனச்சா மனசு கொக்குது' அப்டின்னு சொல்றாரா பாரு. ஒலகத்துலேயே ஒண்ணா நம்பர் ஊமக்குசும்பன்யா நீ.

தீர்மானத்துக்கு ஆதரவு தரலைன்னு சொன்னா இன்னிக்கு உண்ணாவிரதம் இருந்தே தீருவேன்னு லிவிங் வள்ளுவர் கலின்ஜர் ரெண்டு நாளிக்கு முன்னதான் சவுண்ட் உட்டாரு. ஆஹா..ரொம்ப நாள் கழிச்சி நமக்கு செம டைம் பாஸ் கீதுன்னு நெனச்சவன் வாய்ல மண்ண போட்டுட்டார்ய்யா  இந்த 'மண்' மோகனு. போன தபா 'புவ்வா வோணாம்' வெரதத்த தம்மாதூண்டு நேரம் கட புஸ்ட்டு நாஸ்டா துன்ற நேரம் வந்த ஒடனே டப்புனு ஒரு வார்த்த உட்டாரு பாரு எங்காளு..."எலங்கைல ஷூட்டிங்கை நிறுத்திட்டாங்க. அதால நானும் என்னோட 'குறும்பட' ஷூட்டிங்ல இருந்த ஜகா வாங்கிக்கறேன்"..ஆனா ஒன்னு தலிவா, தமிழ்நாட்ல எங்கள மாதிரி 'தீ' 'வீர' ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உன்ன யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது. 

இங்க இந்த கூத்துன்னா வடக்க வேற தினுசான டமாசு. ட்ரெயினு அமிச்சரு த்ரிவேதி டிக்கட் வெலைய ஏத்துனத பாத்து கொந்தளிச்ச மம்தா அத்த உட்டாங்க பாரு சவுண்டு  'டேய் சோமாறி. பாவம் நம்ம நாட்டு ஏள ஜனங்க. அவங்க வவுத்துல அடிச்சிட்டியேடா. ஒன்னப்போயி மந்திரி ஆக்குனேன் பாரு. எம் புத்திய ஹவாய் செருப்பாலேயே அடிச்சிக்கனும். வெலகுடா பதிவில இருந்து. படுவா". அந்தாளும் பேப்பர் போட்டுட்டு போயிட்டாரு பாவம். ரயில்வே பட்ஜெட் போட்டாரே இவரு நம்ம மம்தா அத்த கட்சி ஆளு. ஆனா ட்ரெயின் டிக்கட் ரேட்டை ஒசத்தப்போறதை பத்தி மம்தா அத்த கிட்ட  அவுரு ஒரு வார்த்த கூட சொல்லலியாம். இத நம்ம நம்பணுமாம். 'கேக்கறவன் கேனையா இருந்தா ஸ்டாலின் இந்த வருஷமே கட்சி தலைவர் ஆவாரு'ன்னு சொல்ற மாதிரி கீதே இது!!


"சங்கரன் கோவில்ல ஏ.டி.எம்.கே. கெலிச்சது ஒரு சாதனையா? பவரை யூஸ் பண்ணி  பணத்த கொடுத்து கோப்பைய தட்டிட்டு போறதுல அந்தம்மாவுக்கு என்ன பெரும?"..கேட்டாம் பாருய்யா எங்க கருப்பு பொரட்சி தலைவன். நீ டென்ஷன் ஆவாத தல. பூராவும் போங்காட்டம் ஆடுற கூட்டம். டப்பா டான்ஸ் ஆடுற அளவுக்கு டெபாசிட் போனா போயிட்டு போது.  "அதெல்லாம் ஒத்துக்க முடியாது. எல்லாக்கோட்டையும் அழிங்க. நான் மொதல்ல இருந்த பொரோட்டா சாப்புடறேன்" அப்டின்னு அன்னவுன்ஸ் பண்ணு ஆனஸ்ட் ராஜு. ரீ எலெக்சன் வச்சே ஆகணும். இன்னிக்கு ராவோட ராவா ப்ளைட்ல புட்போர்ட் அடிச்சாவது ஜெனீவா போயி நாயத்த கேட்டாவனும். (அவங்க) நாக்கை புடிங்கிக்கறாப்ல நாலு வார்த்த பேசுனாதான் நமக்கு கெத்து!!

இந்த கச்சி பேஜார் பண்ணுதுன்னு அந்த கச்சிக்கு ஓட்டு போட்டேன். அவன் ஊரை அடிச்சி ப்ரீத்தி மிக்சில போட்டான்னு இன்னொருத்தனுக்கு ஓட்டு போட்டேன். அந்த பொறம்போக்கு மொட்ட மாடில காயப்போட்ட கீஞ்ச ஜட்டிய கூட மிச்சம் வக்காம உருவிட்டு போயிட்டானே.  நாசமா போவ. சாந்தரம் ஒரு ரேட்டுக்கு வித்த தக்காளி மறுநாள் காத்தால டபுளா எகுருது. இந்தக்கொடுமைய தட்டிக்கேக்க கண்டிப்பா எங்க ஆளுங்க வரத்தான் போறாங்க. இன்னா தவ்ளூண்டு லேட் ஆவும். அவ்ளோதான். கோச்சடையான், பில்லா - 2, டுப்பாக்கி எல்லாம் ரிலீஸ் ஆவட்டும். அப்பதாண்டா எங்களுக்கு மூணு வேல சோறு, தொட்டுக்க ஹாட் சிப்ஸு அல்லாம் தப்பாம கெடைக்கும். அப்படியே எங்கள காப்பாத்த ஒருத்தனும் வராக்காட்டியும், கடேசி டைம்ல கமுக்கமா வந்து கரிக்டா காப்பாத்த ஒருத்தர் இருக்காருடா. ஒண்ணா நம்பர் ஓநாய்ங்களுக்கு  ஓயாம ஓட்டை போட்டுட்டு ஒத்த வெரல சூப்பிட்டு திரியற அல்லாருக்கும் அவரு நெருப்பாறுடா!!  

                                                                       
...............................................................................

............................
My other site:
............................

........................................................

சமீபத்தில் எழுதியது:

ஆனந்த விகடனில் பிலாசபி பிரபாகரன் 
........................................................


  

Wednesday, March 21, 2012

பவுன்சர்

 
                             
தமிழனின் தாய்மொழி தமிழ் என்று பெயருக்கு இருந்தாலும் ஆங்கிலம்தான் வழக்கு மொழி என்பது போல், ஹாக்கி தேசிய விளையாட்டாக பெயரளவில் இருப்பினும் இந்த தேசத்தில் கிரிக்கெட் மட்டும்தான் வல்லரசாட்டம்.  கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களுக்கும் இருக்கும் கிரிக்கெட் மோகம்  கல்லூரிக்காலம் வரை எனக்கும் இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி மீது எந்த விருப்பும் கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தீவிர ரசிகன் நான். காரணம்: தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொண்டு விளையாட்டை என்ஜாய் செய்யும் அந்நாட்டு வீரர்களின் குணம். அடுத்த பேவரிட் அணி என்றால் அது பாகிஸ்தான். காரணம்: புதிதாக அறிமுகமாகும் வீரர்கள் அதிவிரைவில் அற்புதமாக ஆட ஆரம்பிப்பது.  இன்றுவரை எனது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. விளையாட்டு, கலை இரண்டையும் அரசியல் ஆக்குதல் அழகல்ல  என்பதற்கு வரலாற்று சான்றுகள் பல. இவ்விரண்டும் மொழி, இன, மத, தேச எல்லைகளைக்கடந்தது என்று சொல்லித்தெரிய வேண்டாம். 

பிரிட்டிஷ்காரன் குடையின்கீழ் இருந்த தேசங்கள் மட்டுமே கிரிக்கெட்டை இன்றுவரை விடாப்பிடியாக பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன. முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான்,  மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த விளையாட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலக விளையாட்டு அரங்கில் கண்காணாத இடத்தில் இருக்கும் இந்த விளையாட்டு நம் தேசத்து ரசிகர்கள் பலருக்கு உயிரினும் மேல். ஐந்து நாட்கள் ஆடியும் முடிவின்றி ட்ரா ஆகும் டெஸ்ட் ஆட்டங்கள் உலக விளையாட்டின் விசித்திரம். வாழ்வில் வெற்றி பெற கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் 5 நாட்கள் செலவிட்டு ஒரு ஆட்டத்தை இந்தியா போன்ற வளரும்/ஏழை நாட்டை சேர்ந்த சராசரி இளைஞன் பார்க்கிறான் என்றால் அதை விடக்கொடிய நிகழ்வு ஏதுமில்லை. 

ஹான்சி க்ரோன்யே...உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆட்டக்காரர். தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று எப்போது அவர் பகிரங்கமாக அறிவித்தாரோ அன்றே இந்த ஆட்டத்தின் மீதான நம்பகத்தன்மை போய் விட்டது பலருக்கு. அசாருதீன், ஜடேஜா தாண்டி முகம்மத் ஆசிப், சல்மான் பட் வரை நீள்கிறது பட்டியல். நாள் முழுக்க செலவு செய்து ஒவ்வொரு ஒருநாள் போட்டியின்போதும் நாம் இந்த விளையாட்டை நேசித்து பார்த்த பொழுதேல்லாம் அறிந்திருக்கவில்லை ஒவ்வொரு பந்திற்கும், ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டு விட்டதென்று. 'இன்னைக்கு இந்தியா கண்டிப்பா ஜெயிக்கும்டா',  'கடைசி பால்ல கண்டிப்பா சிக்ஸ் அடிப்பான் பாரு' என தேசமெங்கும் எத்தனை கோடி பிரார்த்தனைகள். சில நாட்கள் கழித்து அது சூதாட்டம், எனவேதான் அந்த அணி தோற்றது அல்லது ஜெயித்தது என்ற செய்தி கேட்கும்போது உங்கள் மனசாட்சியே உங்களை கேலி செய்ததை சற்று எண்ணிப்பாருங்கள். 

                     
நகரத்தில் நடக்கும் மேட்சை பார்க்க பல கிலோமீட்டர் பயணம் செய்து, அதிகாலை முதல் வரிசையில் நின்று, தடியடி பட்டு டிக்கட் கவுண்டரை நெருங்குகையில் ஹவுஸ்புல் பலகையை காணும் போது விதியை நொந்தென்ன பயன்?  உங்களைப்போன்ற  சாதாரண வசதி படைத்த கிரிக்கெட் ரசிகர்களின் டிக்கெட்டுகளை ஏற்கனவே புளித்த ஏப்பக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று விட்டது கிரிக்கெட் நிர்வாகம் என அவ்வப்போது நாம் காணாத செய்தியா? தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்து அறிவியல், மருத்துவம், சமூக சேவை எனப்பல்வேறு துறைகளில் ஆண்டாண்டு காலமாக இயங்கி வரும் இதயங்கள் பல இருக்க 'சச்சினுக்கு பாரத ரத்னா' தரவேண்டுமென பலத்த குரல்கள் எழும் பாரதத்தின் பரிதாப நிலை கண்டு என் செய்வேன்? 

ஆஸ்திரேலிய பயணம், ஆசியக்கோப்பை, அடுத்தது ஐ.பி.எல். என சலிக்க சலிக்க கிரிக்கெட்.  கிரிக்கெட்.  நம் நாட்டின் மற்ற விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை செய்தாலும் அது ஒரு வரிச்செய்தியாகிறது. ஆனால் போன  வாரம் இந்திய கிரிக்கெட் அணி ஏன் தோற்றது என்பதை இன்றுவரை  விவாதிக்கும் விசித்திர ரசிகர்களை எப்படி பாராட்டினால் தகும்? என் தேசத்து இளைஞர்களின் ஆயிரக்கணக்கான மணிப்பொழுதுகளை தின்று தீர்க்கும் இந்த ஆட்டம் இன்னும் எத்தனை யுகங்கள் இம்மண்ணில் கோலோச்ச உள்ளது? உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட டென்னிஸ், கால்பந்து, பார்முலா ஒன், தடகளம் போன்ற விளையாட்டுகள் கூட அதிகபட்சம் ஒரு சில மணிநேரங்களைத்தான் நம்மிடமிருந்து பறிக்கின்றன. வெறும் 12 நாடுகள் ஆடும் இந்த ஆட்டமோ ஒரு நாள் முழுவதையுமே காவு கேட்கும் அராஜகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்போகிறோம்? 

       
அறிவாற்றலில் இரண்டு நாட்கள் பின்தங்கி இருந்தாலும் நமது வேலையை இன்னொருவன் தட்டிச்செல்லும் இந்த கணினியுகத்தில், இன்னும் எத்தனை நாட்களுக்கு நம் பொன்னான நேரத்தை பன்னாட்டு கம்பனிகளுக்கும்,  இந்த ஆட்டத்தை ஓயாமல் ஒளிபரப்பும் சேனல்களுக்கும் தாரைவார்த்து தந்து கொண்டே இருக்கப்போகிறோம்? இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்காதவன் தேச பக்தனே அல்ல என்று கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு ஒரே கேள்விதான்: நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா?  இதில் எதை தேசபக்தியென வரையறுப்பீர்கள்? 

ஆஸி.யில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் ஆசியக்கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு செல்லாமல் மண்ணைக்கவ்வியதன் மூலம் கோடானுகோடி இந்தியர்களின் நேரங்களை மிச்சப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு மனப்பூர்வமான நன்றி.  வரவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக பல நாட்களை தானம் செய்ய காத்திருக்கும் கலியுக கர்ணர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!
..................................................................................

...........................
My other site:
...........................

.................................................
சமீபத்தில் எழுதியது:


................................................Tuesday, March 20, 2012

எஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணிஎஸ்.வி.சேகர் நாடகம் பார்த்து வெகுநாட்கள் ஆனதால் கடந்த ஞாயிறு வாணிமகாலில் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி பார்க்க உத்தேசித்தேன். பிலாசபி பிரபாகரனும் ஓக்கே போட்டார். வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களை அழைத்தேன். "இன்று நிறைய நேரம் வெளியே இருந்ததால் இனி வருவது கஷ்டமே" எனச்சொன்னார். அவர் சொன்ன தொனி 'வீட்டில் பூரிக்கட்டை பறக்கும்' எனும் அர்த்தத்தில் அமைந்தது. நாடகம் துவங்குவதாக அறிவிப்பு செய்த நேரம்  மாலை 7 மணி. டிக்கட்டை பணம் குடுத்து வாங்க எண்ணிய சமயத்தில் நண்பன் அரவிந்திடம் இருந்து ஒரு கால் வந்தது. "டிக்கட் எடுக்க வேண்டாம். என் அப்பா எஸ்.வி.சேகரின் பள்ளித்தோழர். எஸ்.வி.சேகருக்கு போன் செய்து சொல்லிவிட்டார். நம் மூவருக்கும் காம்ப்ளிமென்ட் டிக்கட் கன்பர்ம்" என்றான். இதுவரை பார்த்த எல்லா நாடகங்களையும் கடைசி அல்லது நடு வரிசையில் நின்றுதான் பார்த்துள்ளேன். இன்னும் முன்பமர்ந்து பார்க்க வேண்டுமெனில் 500, 1000 ரூபாய் குடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும். அந்தளவிற்கு நம்மிடம் கப்பாசிட்டி இல்லாதததால் இதுவரை அப்படியொரு சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனவே நண்பன் சொன்ன செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. நாடக நடிகர்களின் முகபாவங்களை முதல் வரிசையில் இருந்து பார்க்கும் வாய்ப்பு அமையப்போவதை எண்ணி பூரிப்படைந்தது உள்ளம்.  

நான் பார்த்தவரையில் சேகரின் நாடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகிவிடும்.மிகப்பெரிய கலைவாணர் அரங்கத்தில் கூட ஒருமுறை கூட்டம் நிரம்பி வழிந்ததை கண்டுள்ளேன். இதை பிலாசபியிடம் சொன்னபோது "அதெல்லாம் நடக்காது. கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்" என்றார். ஆனால் வழக்கம்போல் ஹவுஸ்புல் ஆனது இந்த ஷோவும். டிக்கட் வாங்கிய அனைவரும் அரங்கினுள் சென்று விட, நாங்கள் சேகருக்காக காத்திருந்தோம். காரில் வந்திறங்கியவர் எங்களைப்பார்த்து "இன்னைக்கி நாடகம் நடக்கறதே சந்தேகம்தான்" என்றார். என்னடா இது சோதனை என புரியாமல் விழித்தோம். ஏற்பாட்டாளர்களிடம் சற்று கோபமாக பேசிவிட்டு காரை கிளப்ப ஆயத்தமானார் சேகர். "இன்னைக்கு நமக்கு அதிர்ஷ்டமில்லை" என்றேன். பிலாசபியோ "சான்சே இல்ல. அவர் போக மாட்டார்" என்று ஆருடம் சொன்னார். நம்மாளு சொன்னது போல அடுத்த சில நிமிடங்களில் கூல் ஆன எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த சம்மதித்து மீண்டும் உள்ளே வந்தார். பிரபாகரா எப்படி இப்படி?


நாடகம் தொடங்கும் முன் ஓரிரு நிமிடங்கள் என்னிடம் உரையாடிய சேகர், "அரசியல் குறித்து கேள்விகள் கேட்டால் தப்பில்லை. நான் மீண்டும் அ.தி.மு,க.வில். சேரப்போகிறேன்" என்றார். தங்களின் லேட்டஸ்ட் நாடகம் என்ன என்ற கேள்விக்கு "கடைசியா போட்ட டிராமாதான். அப்படி பாத்தா இந்த நாடகம்தான் லேட்டஸ்ட்" எனச்சொன்னார். அனாதையாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்துவரும் அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்தேன். நேரம் நகர்ந்து மாலை 7.15 ஐ தொட்டது. உள்ளே ரசிகர்கள் காத்திருக்க, "முதல் வரிசையில் அமர்ந்து கொள்ளுங்கள்" என எங்களுக்கு சிறப்பு அனுமதி தந்துவிட்டு நாடகத்தை துவக்கினார் அவர். 

    
எஸ்.வி.சேகர் டிராமா என்றாலே ஒன் மேன் ஷோ தான். அரசியல், இரட்டை அர்த்தங்கள் சற்று தூக்கலாக இருக்கும். அதற்கு இந்நாடகமும் விதிவிலக்கில்லை. 1979 ஆம் ஆண்டு முதல் இந்த குறிப்பிட்ட நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் சிறப்பம்சம் இடைவேளைக்கு பிறகு வரும் பட்டாபி எம்.எல்.ஏ.வாக வரும் சேகர் நிருபருக்கு தரும் பேட்டிதான். சமகால அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை மாற்றி நையாண்டி செய்வார். இம்முறை ஸ்பெக்ட்ரம் ராசா, சிதம்பரம், கலைஞரின் தீக்குளிப்பு, பட்ஜெட் என சகலத்தையும் கோர்த்து ரவுசு கட்டினார். லேசாக சொதப்பும் சக நடிகர்களை ஸ்பாட் வசனங்களால் கிண்டல் அடிப்பது, மைக், லைட் வெளிச்சம் ஆகியவற்றில் குறை இருப்பின் ஏற்பாட்டாளர்களை வெளிப்படையாக கலாய்ப்பது என நாடகத்தின் இடையே சுவாரஸ்யத்தை சேர்ப்பது இவரின் ஸ்பெஷாலிட்டி.  இம்முறையும் வழக்கம் போல அவை நிகழ்ந்தேறின. 

ரசித்த வசனங்களில் சில: 

அம்மா: "இந்த புடவை கிழிசலை தைக்க கூட முடியல. கண்ணுல கோளாறு. எவ்ளோ நேரந்தான் ஊசில நூலை கோக்க கஷ்டப்படுவனோ.."

சேகர்: எத்தனை வருஷம் ஆனாலும் உன்னால இதை தைக்க முடியாது. ஏன்னா இது குண்டூசி "

அப்பா: "இனிமே நீ இந்த வீட்டு வாசலை மிதிக்க கூடாது" 

சேகர்: "ஏன் வாசல்ல புதுசா சிமென்ட்  பூசி இருக்கியா?"

அப்பா: "நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வருவன்னு கனவு கண்டேன்டா "

சேகர்: "உனக்கு அறிவே இல்லையா? அது எப்படி ஒருத்தனே டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா ஆக முடியும்?" 

                                                                            
இப்படி இரண்டு மணி நேர சிரிப்பு மத்தாப்புக்களுடன் நாடகம் முடிந்தது. மறுநிமிடம் தேசிய கீதம் ஒலித்தது. அதன்பின் பேசிய எஸ்.வி. சேகர் ஞாயிறு அன்று சினிமா, டி.வி. போன்றவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு இந்த ட்ராமாவை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி கூறினார். சில ஆயிரங்கள் மதிப்புள்ள டிக்கட்களை எனக்கும், பிலாசபிக்கும் அன்பளிப்பாக தந்து ஓர் இனிய மேடை நாடக அனுபவத்தை ஏற்படுத்திய  நண்பன் அரவிந்தின் தந்தை மற்றும் எஸ்.வி.சேகருக்கு  நன்றியைக்கூறி வீடு திரும்பினேன்.
  
Photos: madrasbhavan.com
Location: vani mahal, Chennai - 17.
..............................................................

.............................
My other site:
.............................

.......................................................

சமீபத்தில் எழுதியது:

......................................................


Monday, March 19, 2012

கர்ணன் - ஒரு சிறப்பு பார்வைஎம்.ஜி.ஆர்., சிவாஜி எனும் இரு இமயங்கள் நடித்த படங்கள் ஆண்டுகள் அவ்வப்போது வெளியாவதும், அவற்றைக்காண இரு தரப்பு ரசிகர்களும் வயதான காலத்திலும் அரங்குகளை ஆர்வத்துடன் முற்றுகையிடுவதும் கண்டு வந்தோம். சில ஆண்டுகள் முன்பு வரை.  ஆனால் டி.வி. ஆதிக்கம் வந்தபிறகு கிட்டத்தட்ட அனைத்து பழைய படங்களையும் மக்கள் பலமுறை பார்த்தாகிவிட்டதால், சுமாரான  தியேட்டர்கள் கூட இந்த இருபெரும் நடிகர்களின் படங்களை வெளியிடுவதை குறைக்க துவங்கின. ஆனால் கர்ணனுக்கு கிடைத்த புதிய விளம்பர வெளிச்சம் அந்த தொய்வை களைந்து மீண்டும் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றால் அது மிகையில்லை. இதுபோன்ற பழைய தமிழ்ப்படங்களை சென்னையின் முன்னணி தியேட்டரான சத்யம் கடந்த பல வருடங்களாக வெளியிட்டதாக நினைவில்லை. அதிலும் மாலை 6.30 காட்சியில் கர்ணனை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டது மகா ஆச்சர்யம்தான். சுமாராகத்தான் அரங்குகள் நிரம்பும் என எண்ணியிருந்த பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது கர்ணனுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு.

காட்சி துவங்குவதற்காக சத்யம் வாசலில் நின்றிருக்கையில் சிவாஜி காலத்து ரசிகர்கள் சிலருடன் அளவளாவ நேர்ந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்ன தகவல்: "கர்ணன் வெளியான சமயம் சாந்தி தியேட்டரில் புலிக்கூண்டு போன்ற செட் போட்டிருந்தார். அதற்கு போட்டியாக பிளாசாவில் எம்.ஜி.ஆரின்  வேட்டைக்காரன் படத்திற்காக நிஜப்புலி ஒன்றை கூண்டில் அடைத்து அதகளம் செய்தனர். சர்க்கஸ் காட்டி மக்களை ஈர்க்கின்றனர் என சிவாஜி ரசிகர்கள் கேலி செய்ததும் அதை நிறுத்திவிட்டனர் வேட்டைக்காரன் படத்தை எடுத்தவர்கள்". இன்னொருவர் கூறியது: "கர்ணனின் அசல் வெர்ஷன் ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்டது. ஆனால் நாம் பார்த்து வந்தது கேவா கலரில் மட்டுமே. இப்போது மீண்டும் ஈஸ்ட்மென் கலரில் ரிலீஸ் செய்துள்ளனர்.கர்ணனுக்கு தற்போது கிடைத்துள்ள வரவேற்பைக்கண்டு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். விரைவில் இதே போன்று பிரம்மாண்டமாக தலைவர் படத்தை ரீ ரிலீஸ் செய்வார்கள்". தியேட்டருக்குள் சென்றதும் டாக்டர் ருத்ரனிடம் பேசியபொழுது அவர் கூறியது "எனக்கென்னவோ இன்னும் ஓரிரு நாட்களில் கர்ணன் கிரேஸ் சீக்கிரம் குறைந்து விடும் என்றே தோன்றுகிறது" என்றார்.தான் தற்போது இணையத்தில் அதிகம் எழுதுவதில்லை என்றும் சொன்னார். 
                   
                                                                     நடிகர் திலகத்தின் ரசிகர் படை

புதிய தொழில்நுட்பம் என்று கூறி மக்களை ஈர்த்தது எல்லாம் சரி. ஆனால் அதற்கான பலனை ரசிகர்கள் பெரிதாக பெறவில்லை என்பதே உண்மை. பல காட்சிகள் திட்டு திட்டாகவும், சற்று மங்கலாகவும்தான் தெரிந்தன. ஒலி அமைப்பில் அந்தக்குறை இன்றி மெருகேற்றி உள்ளனர். சாவித்திரி,தேவிகா, அசோகன்,எம்.வி.ராஜம்மா,முத்துராமன் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது. கர்ணனுக்கு தேரோட்டும் சல்லியன் வேடத்தில் சில நிமிடங்களே வந்தாலும் சண்முகசுந்தரம்(அக்கா..நான் ரத்த ரத்தமா வாந்தி எடுத்தங்க்கா புகழ் )  மனதில் நிற்கிறார். கலைநயம் மிக்க செட்களை மெச்சும்படி வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் கங்கா. ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட 'இரவும் நிலவும்' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் செவிக்கினிமை. வாழ்க மெல்லிசை மன்னர்கள். 

சிவாஜி தோன்றும் காட்சிகளில் அரங்கில் பலத்த கைத்தட்டல்கள். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிம்மக்குரலோன் ரசிகர்களை வசீகரிப்பதை பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும். முதுகிற்கு பின் கேமரா இருக்கையில் சில நொடிகள் கழித்து முகத்தை எப்படி திருப்பினால் அக்காட்சி கச்சிதமாக அமையும் என்ற வித்தையை கற்று வைத்திருக்காரே...அதுதான் சிவாஜி!!
                                                                        

சிவாஜி வாங்கியதற்கு சற்றும் குறையாமல் கைத்தட்டல்களை அள்ளியவர் சாட்சாத் அந்த கிருஷ்ண பகவான் என்.டி. ஆரேதான். படம் நெடுக உணர்ச்சி பிழம்பாக சிவாஜி இருந்தால், சாந்த சொரூபியாக வந்து நடிகர் திலகத்திற்கு சமமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஆந்திர ஆண்டவர். தேஜஸ் என்று சொல்வார்களே.. அதெல்லாம் எல்லாருக்கும் அமைந்து விடாது. என்.டி.ஆர். போன்றோருக்கு அது ஒரு வரம். இவர் வரும் முதல் காட்சியே அமர்க்களம். கௌரவர் சபைக்கு வரும் கிருஷ்ணருக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருக்கிறான் துரியோதனன்(அசோகன்). அதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன் காலால் தரையை அழுத்த அதன் அதிர்வு தாங்காமல் சிம்மாசனத்தில் இருந்து விழுந்து கிருஷ்ணன் காலடியில் விழுகிறான் துரியோதனன். அப்போது "ஏன் துரியோதனா அவசரம்? நானே உன்னை நோக்கி வர நினைத்தேன். அதற்குள் வேகமாக என் காலில் விழுந்த உன் அன்பும், பண்பும் போற்றத்தக்கது" என என்.டி.ஆர். பேசும் வசனம்...க்ளாஸ்!! நட்பின் வலிமை குறித்து கர்ணன் பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும்  பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை. 


நாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்தும் கர்ணன் போன்ற பழைய படங்கள்   அரங்குகள் நிறைந்து வெற்றிக்கொடி நாட்டுகிறதென்றால் அதற்கு மேம்படுத்தப்பட ஒலி, ஒளி போன்றவற்றின் பங்கு சிறிதளவு மட்டுமே. அவற்றை விட முக்கிய காரணங்கள் எவையெனில் நடிப்பிற்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் சிவாஜி, கச்சிதமாக தேர்ந்து எடுக்கப்பட்ட துணை நடிகர்கள், வசனம், கலை இயக்கம், இசை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றிய கலைஞர்களின் நேர்த்தி எனப்பட்டியலிடலாம். தூங்கி எழுந்தவுடன் பெருங்கலைஞனாக மக்களால் போற்றப்பட வேண்டும் என அவசரப்படும் புதிய நாயகர்களே...முதலில் நீங்கள் கர்ணனை மக்களுடன் பாருங்கள். அப்போது தெரியும் ஏன் சிவாஜி - தி ரியல் மாஸ் என்று. 


அடுத்து இது போன்ற பழைய சினிமாக்களை முன்னணி தியேட்டர்கள் ரிலீஸ் செய்யும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நான் பார்க்க விரும்புவது: கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை, தில்லுமுல்லு. எவர்க்ரீன் படங்களாச்சே!!
..................................................................................


தியேட்டர் சிப்ஸ்: 
சினிமா ரசிகர்களுக்கான அடுத்த கிளாசிக் விருந்து வரும் ஏப்ரல் முதல் வாரம் காத்திருக்கிறது. ஆம். டைட்டானிக்கின் 3-D வெர்ஷன்தான் அது.  
...............................................................................


.........................................................
Photos: madrasbhavan.com
Location: Sathyam cinemas.
........................................................
                    
My other site:
agsivakumar.com

சமீபத்தில் எழுதியது:

கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா                                                

                                                                        

Sunday, March 18, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (18/03/12)தில்: 


இந்தியாவின் முக்கிய நகரங்களில் பரபரப்பாக நடந்து வரும் உலக சீரிஸ் ஹாக்கி போட்டியில் எட்டு அணிகள் மோதி வருகிறன்றன. அதில் சென்னை சிறுத்தைகள் அணி கர்நாடக அணியை நேற்று வென்றதன் மூலம் 2 - வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இம்மாதம் 25 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியுடன் முஷ்டியை முறுக்கவுள்ளது நம்ம சென்னை. 'தில் இருந்தா மோதிப்பாரு.  கோப்பையை வெல்ல காத்திருக்கு எங்க ஊரு'.
.....................................................................................

 பட்ஜெட் பத்மநாபன்:

இதுவரை போட்ட பட்ஜெட்களை விட நடுத்தர மக்களுக்கு பெரிதும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது இம்முறை பிரணாப் போட்ட பட்ஜெட். வெகு சிலரே புழங்கும் பிரிட்ஜ், ஏசி, செல்போன், தங்கம் ஆகியவற்றின் விலைகளை மட்டும் உயர்த்திவிட்டு, உயிர்வாழ அத்யாவசியமான காரணிகளான லவங்கம், ஆமணக்கு, குருவிரொட்டி, வெத்தலை பெட்டி போன்றவற்றின் விலைகளை ஏற்றாமல் இருந்தது வெகுவாக பாராட்டத்தக்கது. பணவீக்கத்தை குறைக்க வேறு வழியில்லை என்று நிதி மந்திரியார் இம்முடிவை எடுத்திருக்கிறார். எனவே மக்களின் மனவீக்கம் பல்கிப்பெருகினால் கம்பேனி குச் நஹி கர் சக்தா ஹை(ஒன்னியும் பண்ண முடியாது. இப்ப இன்னாங்கற நீ?)
................................................................................

சந்தித்த வேளையில்..

                                                                    
ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் இயக்குனர் மிஷ்கின் சந்தியா புத்தக ஸ்டாலில் தென்பட்டார். அவருடன் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிட்டியது. சில நிமிடம் நடந்த சின்னஞ்சிறு பேட்டி கீழே: 

கேள்வி: கொரிய திரைப்படங்களை காப்பி அடிப்பதாக எழும் புகார் குறித்து..

மிஷ்கின்:  அப்படியெல்லாம் இல்லை. இதுவரை நான் அதிகபட்சம் நான்கைந்து கொரியப்படங்களை மட்டுமே பார்த்துள்ளேன். 

கேள்வி: முட்டிக்கு கீழே ஷாட் வைப்பது வெளிநாட்டு படங்களின் தாக்கத்தினாலா?

மிஷ்கின்: கண்டிப்பாக இல்லை. எனக்கு பிடிப்பதால் அப்படி வைக்கிறேன். இணையத்தில் பலர் சுமாராகத்தான் எழுதிகின்றனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். 

கேள்வி: கிராமத்து படங்கள் உங்களிடமிருந்து எப்போது வரும்?

மிஷ்கின்: அதற்கெல்லாம் பாரதிராஜா போன்றோர்தான் சரி. எனக்கு ஒத்து வராது. என் ஸ்டைலையே பின்பற்ற விரும்புகிறேன். 

கேள்வி: இரவு நேரங்களில் கூட எதற்கு கூலிங் கிளாஸ்?

மிஷ்கின்: கிளேர் அடிப்பதால்..சும்மா...

இப்படி எடக்காக கேள்வி கேட்டதற்கு டென்ஷன் ஆவாரோ என்று எண்ணினேன். நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. குறிப்பு: பிரபலங்களை சந்தித்து உரையாடினேன் என்றால் 'சும்மா தமாசு பண்ணாத தம்பி. போட்டோ ஆதாரம் இருக்கா?'என்று நண்பர்கள் சிலர் கொக்கி போடுவதால் வி.ஐ.பி.க்களை சந்தித்தபோது எடுத்த ஸ்டில்களை போட வேண்டியதாகி உள்ளது. :))
....................................................................................... 

தீராத விளையாட்டு பிள்ளை:

'அண்ணன் எப்ப ரிடயர்ட் ஆவான். திண்ணை எப்ப காலியாகும்' என்று எதிர்பார்த்தே ஓய்வு பெற்ற இளம் வீரர்கள் பலருண்டு. அப்படி காத்திருக்கும் மிச்ச சொச்ச பேருக்கும் நாமம் போட்டுள்ளார் சச்சின். தற்போது அளித்த பேட்டியில் "ஒருவன் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெற்றால் அது நாட்டுக்கு செய்யும் துரோகம். எனவே இன்னும் (அவ்வ்) ஆடுவேன்" என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அது என்னங்கய்யா புகழின் உச்சி? ஆஸி. கிட்ட செமத்தியா வாங்கிட்டு, இப்ப பங்களாதேஷ் கிட்டயும் பப்படம் ஆயாச்சி. இதுல எங்க இருந்து வந்துச்சி புகழு? தனிமனித சாதனைய விட அணி ஜெயிச்சாதான் அது அசல் புகழு. பழுத்த அரசிய்லவாதிங்க கூட பதவி வெலகலாம். இந்த ஆளு இப்போதைக்கு...இது ஆவறதில்ல டோய்.
................................................................................

நாட்டாமை: 

'வணக்கம்'.. இது நம்ம சொல்றது. 'வணக்கம்' இது ஒருத்தர் மட்டும் ஸ்பெஷலா சொல்றது. அட இன்னுமா தெரியல? அவங்கதாங்க நம்ம நிர்மலா பெரியசாமி. ஒரு காலத்துல சன் டி.வி.ல இவங்க போடுற வணக்கத்தை கேட்டு பயந்த பின்னதான்  எப்பயும் ஊர்ப்புரணி பேசுற ஆன்ட்டிங்க கூட அலறி அடிச்சிட்டு ந்யூஸ் பாத்தாங்க.இப்ப மேடம் ஜீ தமிழ் சேனல்ல 'சொல்வதெல்லாம் உண்மை' ன்னு ஒரு ப்ரோக்ராமை திங்கள் - வெள்ளி வரை உச்சிவெயில் உங்க மண்டைல சுர்ருன்னு ஏறுற மதிய நேரம் ஒன் TO டூ ஓ க்ளாக் வரை நடத்தறாங்க. மெகா சீரியல், லட்சுமியின் கதையல்ல நிஜம் பாத்து நீங்க அழுததெல்லாம் ஒரு அழுகையா? இதுதாங்க டாப்பு. குடும்பங்களை இணைத்தல், அணைத்தல் இப்படி பற்பல வேலைகள பகுமானமா செய்றாங்க நிர்மலா மேடம். ஒரு தபா பாத்துட்டு சொல்லுங்க. சும்மா உதறி, பதறி, கதறி அழுவீங்க. தமிழ்நாட்ல பொறந்த பாவத்துக்கு இன்னும் என்னெல்லாம் காத்து கெடக்கோ...
.........................................................................................

நல்ல நேரம்: 

ராயப்பேட்டை மணிக்கூண்டு. மின்னொளியில் எடுத்த ஸ்டில்: 

                                                                    Image: madrasbhavan.com

...............................................................................................

மகிழ்ச்சி: 

"எனக்கு மாவு மாவா வருதும்மா" (அவன் - இவன்) புகழ் விஷால் நடித்த(?)  வெடி படத்தின் விமர்சனத்திற்கு நகைச்சுவை பிரிவில் 2011 ஆம் ஆண்டின் ரன்னர் அப் விருது வழங்கிய டெர்ரர் கும்மி குழு மற்றும் நடுவர்களுக்கு என் நன்றிகள். ஏனைய பிரிவுகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக ஹால் ஆப் பேம் விருது வென்ற தோழர் ஜீ அவர்களுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. இதற்கு முன்பு அன்பின்பால் அவார்ட் தந்த ஆமினா, நாஞ்சில் மனோ, சென்னைப்பித்தன், ரஹீம் கஸாலி ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை தேங்க்ஸுங்கோ. பின்னூட்டம் வாயிலாகவும், நேரில், போனில் அவ்வப்போது ஊக்கம் தந்து வரும் அனைவருக்கும் ஜெய் ஹோ. 
.................................................................................................

எவனோ ஒருவன்:

ஆவேசமாக மீடியாவிற்கு பேட்டி அளிக்கும்போதேல்லாம் அண்ணன் ஜே.கே. ரித்தீஷ் எம்.பி. அவர்களை பார்த்து "ஒரு டம்ளர் தண்ணி ஊத்துனா முங்கிடுவ. நீயெல்லாம் பொங்கறியா?" என்று ஒரு அசரீரி கேட்பதாக குற்றச்சாட்டு வருகிறது.தேவையில்லாம சிறுத்தைய சொரண்டி பாக்காதீங்க. சொல்லிட்டோம்.
....................................................................................

சிரித்து வாழ வேண்டும்: 

"அண்ணா நூலகத்தை இடித்தால் நான் தீக்குளிப்பேன்" என்று கலைஞர் பேசியதை கலைஞர் டி.வி.யில் இன்று பார்க்க நேரிட்டது. அவர் அந்த வார்த்தையை சொல்லி முடித்ததும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள்  எல்லோரும் கைதட்டி, 'உய் உய்' என உற்சாகமாக விசில் அடித்தார்கள். இப்பேர்பட்ட  உசித  சிகாமணிகளை பெற என்ன தவம் செய்தீரோ தலைவா!!
......................................................................................

தர்மத்தின் தலைவன்:  


போன வார தினத்தந்தில வந்த வெளம்பரம். என்ன கொடும சரவணன்...

     
..................................................................................  

பொல்லாதவன்: 

இன்று தினமலர்.காமை க்ளிக் செய்து பார்க்கையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தல் குறித்த செய்தியை முகப்பில் போட்டிருந்தனர். "விடியலை நோக்கி ட்டளிக்கிறாராம் வைகோ" என்று நக்கல் வேறு. வைகோ மீது காண்டு இருக்கலாம். அந்த அவரசத்தில் ஓட்டை 'ஒட்டு' என்று டைப் செய்ய வேண்டுமா? அந்த லிங்க்கை க்ளிக் செய்து பார்த்தால் வைகோ பற்றி எந்த செய்தியும் இல்லை. அப்பறம் என்ன வெளக்கெண்ணைக்கு இந்த தலைப்பு?
........................................................................................

வல்லவனுக்கு வல்லவன்: 

நம்மூரை கலக்குவது பவர் ஸ்டார் என்றால், கேரளாவை டரியல் செய்து கொண்டிருப்பது 'சூப்பர் ஸ்டார்' ஸ்டார் சந்தோஷ் பண்டிட். தலைவர் டி.ஆர். போல நடிப்பு, எடிட்டிங், இசை, இயக்கம் என அனைத்திலும் (நம்மையும் சேர்த்து) கலக்கி வருகிறார். சென்ற ஆண்டு இவரின் 'கிருஷ்ணனும், ராதையும்' எனும் காவியம் எதிர்பாராத ஹிட். அதன்பின் வெளியே தலைகாட்டும் போதெல்லாம் ரசிகர்கள்(!) 'கேரளா சினிமாவை கெடுக்க வந்த பயலே' எனத்திட்டி அழுகிய தக்காளி, முட்டை அபிஷேகம் செய்தாலும் அசரவில்லை நம்ம ஆள். அண்ணாத்தையிடமிருந்து  அடுத்து வரவுள்ள அதி அற்புதப்படம்  'சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்'.  அதில் சார் 'ரொமாண்டிக் லுக்' விட்ட 'கொஞ்சி கொஞ்சி' பாடல் உங்களுக்காக. குஷியா என்சாய். கேரளத்து நடிகர் திலகம் நீதாய்யா சந்தோசு!!


....................................................................................

Saturday, March 17, 2012

வூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்!!


                                     (வங்கக்)கடலோரம் வாங்கிய காற்று. குளிராக இருந்தது  நேற்று!! 

நேத்து போட்ட பட்ஜெட்ல வெரைட்டி வெரைட்டியா பிரணாப் முகர்ஜி ஆப்பு வச்சதை பத்தி எந்தக்கவலையும் இல்ல நம்ம சச்சின் தாசர்களுக்கு. எப்படா நம்ம தலைவர் நூறாவது நூறை அடிப்பாருன்னு மாசக்கணக்கா டி.வி. முன்னாடி குத்த வச்சிக்கிட்டு உச்சா கூட போகாமா 'அச்சா' கமன்டரியை கேட்டதுக்கு பலன் ஒரு வழியா கெடச்சிருச்சி. ஒரு காலத்துல இந்தியா ஜெயிக்க அசத்தலா ஆடுன சச்சினை பாத்து இளிச்ச மேனிக்கி வாயை பொளந்துட்டு திரிஞ்ச பயதான் நானும். போகப்போக சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது. உதாரணம்: கோக், பெப்சி மாதிரி மல்டிநேஷனல் கம்பனிங்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மாதிரி ஸ்போர்ட்ஸ் சேனலுங்க (அதுவும் கிரிக்கெட்டுக்கு  தனி சேனலுங்க வேற) எல்லாம் நம்ம நாட்ல "சும்மாவே இருக்கறது சும்மா இல்லடா" கூட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு கரெக்டா குறி வச்சி அடிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க காட்ல அடை மழைதான்!!

மைக்கேல் பெவன், லாரா மாதிரி ஆளுங்க எத்தனையோ தரம் தனி ஆளா போராடி அவங்க டீமை ஜெயிக்க வச்சிருக்காங்க. ஆனா எப்ப நாட்டை விட்டுட்டு சாதனைக்காக சச்சின் ஆட ஆரம்பிச்சாரோ அப்பவே அவர் மேல இருந்த மரியாதை கொறைய ஆரம்பிச்சது. பரிசா கெடச்ச ரேஸ் காரை இந்தியாவுக்கு கொண்டு வர கோடி ரூவா விலக்கு வேணும், புதுசா வாங்குன  வீட்ல நீச்சல் குளம் கட்டிட்டு, அதுக்கு தண்ணீர் வரி போட வேண்டாம்னு அரசை கேட்டுக்கிட்டாரோ அத்தோட அந்தாளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பணால் ஆயிருச்சி. ஜெயிக்காத ஆட்டத்துல என்ன சாதனை செஞ்சாலும் என்ன பெரும?  அதுவும் பங்களாதேஷ் மாதிரி சோட்டா நாடுங்க கிட்ட. 

இவரோட பையன் இந்திய டீமுக்கு ஆட வந்த பின்னால கூட நூறாவது நூறை அடிக்க மாட்டாரு போலன்னு நெனச்சோம். நல்லவேள. சுண்டக்கா டீமான பங்களாதேஷ் கிட்ட வித்தையை முழுசா பிரயோகம் பண்ணி அதை சாதிச்சிட்டாரு சாரு. அடிச்சது 114. மொத்தம் 147 பாலுல. முப்பத்தி மூணு பாலை சுவாகா செஞ்சிட்டாரு அண்ணாத்தை. அப்படி செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இந்தியா ஜெயிச்சிருக்கும். அது யாருக்கு வேணும்? நம்ம ஆளுக்கு சாதனை மட்டும்தானே தேவை. தன்னோட சுயநலத்துக்காக இந்தியாவோட வெற்றியை எத்தனை முறை இவரு காவு தந்துருப்பாருன்னு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும். 

                                         எத்தனைப்பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! 

ஆனா பாவம். அண்ணனோட சந்தோஷம் சில மணிநேரம் கூட நீடிக்கல. ஸ்ட்ராங்கான மிடில் ஆர்டர் பேட்டிங்கால பங்களாதேஷ் பட்டைய கெளப்பிருச்சி. "இப்ப இதுங்கல்லாம் நம்மள யூஸ் பண்ண ஆரம்பிச்சிருச்சா? யூஸ்...." அப்படின்னு வடிவேலு ஒரு குழந்தைய பாத்து சொல்வாரு. அந்த மாதிரி பங்களாதேஷ் பசங்க தோனி டீமை பம்ப் அடிச்சி இருக்காங்க. அடிக்கடி ஷாக் ரிசல்ட் தர்றது ஒண்ணும் இந்த குட்டி ஆசிய அணிக்கு புதுசு இல்ல. இந்த முறையும் அதை செஞ்சி காமிச்சிட்டாங்க.  பலநாள்  பலவார பலமாச ஆசை நிறைவேறுன சந்தோஷத்துல மானஸ்தன் சச்சின் ரிட்டையர் ஆனா புண்ணியமா போகும். 

நாளைய சரித்திரம் சச்சினை பாராட்டி 'கிரிக்கெட்டின் கடவுள்',  'இந்தியாவின் இடிதாங்கி'..இப்படி ஏகப்பட்ட புகழாரம் சூட்டலாம். ஆனா கிரிக்கெட்டை உன்னிப்பா பாக்கற மனசாட்சி இருக்கறவங்களுக்கு தெரியும் இவர் ஒரு பக்கா சுயநலவாதின்னு. உனக்காக செஞ்சுரி போட்டா இந்தியா தோக்கும். நாடு ஜெயிக்க 40 பந்துக்கு 40 ரன் அடிச்சா போதும். உலகம் திரும்பி பாக்கும். இதுதான் நிதர்சனம். இந்தக்கறையை சச்சினால தொடைக்கவே முடியாது. ஆர்ப்பாட்டம் செய்யாத மனுஷன், பலவகை ஷாட்களை அனாசயமாக அடிக்கும் அர்ஜுனன், வாய்த்திமிர் இல்லாதவன்...இந்த மாதிரி பல நல்ல விஷயங்கள் அவர்கிட்ட இருந்தும்...தன்னோட சாதனைக்கு மட்டுமே பல தரம் பந்துகளை வேஸ்ட் செஞ்சி ஆடுன சச்சின்,  வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தப்பான முன்னுதாரணம். இதுல எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல!!
............................................................................................ 
  Friday, March 16, 2012

அடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்                                            டமிலனைத்தவிர எல்லார் கிட்டயும் 'கை' குலுக்கியாச்சி              

வணக்கம் வடக்கத்தி வாத்யாரே,

எப்பிடி இருந்தாலும் நான் மட்டும்தான் பேசப்போறேன். நீங்க வழக்கம்போல கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க. அமெரிக்காக்காரன் எப்ப ஒரு நாட்டு மேல பாசத்தை கொட்டி பாலூட்டி, தயிரூட்டி வளக்கப்போறேன்னு சொல்றானோ அப்பவே அவனுக்கு அந்த நாட்டுல ஒரு கண்ணுன்னு பச்ச மண்ணு கூட பளிச்னு சொல்லும். உங்களுக்கு தெரியாதா என்ன? பக்கத்து தீவுல புண்ணிய ஆட்சி செய்யிற செவப்பு துப்பட்டாக்காரன்(அவன் பேரை சொன்னா ஒரு கண்டைனர் சைஸ் இருக்கற பேஸ்ட்டால பல்லு வெளக்கனாலும் ஸ்மெல் போகாது. அதான்)   அரசுக்கு எதிரா ஓட்டு போட்டா  என்னமோ ஆகுமாமே.  அது இன்னாபா? ஆங்.. 'அண்டை நாடுகளுடனான சுமூக உறவு பாதிக்கும்'னு சோக்கா சொல்றீங்க. காமடி நல்லாத்தான் இருக்கு. ஆனா டைமிங் சரியில்லையே. 

எங்க ஆளுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ். நியாயம், நீதின்னு நாக்கு கூசாம கெட்ட வார்த்தையா பேசுவாங்க. ஒரு தடவ இப்படித்தான் நம்ம கர் 'நாடகக்காரரு'  எஸ்.எம். கிச்சுனா..(அதாங்க 79 வயசுலயும் லட்ச ரூவா செலவு செஞ்சி டாப்புல டோப்பாவை கவுத்தி இருப்பாரே) சிக்குனாரு. அவரு பாவம் ஒருநாளு தலைவலின்னு டீக்குடிக்க வேகமா பைவ் ஸ்டார் ஓட்டல் பக்கம் போயிட்டு இருந்தாரு. அந்த நேரம் பாத்து எவனோ டமிலனாம், வழிய மறிச்சி  ''அய்யா மவராசு. மீன் புடிக்க போனா சப்பமூக்கு டிராகன் நாட்டுக்காரன் கூட சேந்து குட்டித்தீவு ஜிங்களவன் எங்கள அடிச்சே கொல்றானுங்க. நீங்கதான்  காப்பாத்தணும்''....இப்படி சில்லி சென்டிமென்ட் பேசி இருக்கான் .  நம்ம ஆளுக்கு வந்ததே கோவம். சட்டுன்னு 'ஷட் அப் நான்சன்ஸ் அண்ட் பிரிங் மீ எ கப் ஆப் சிலோன் டீ 'ன்னு கத்திப்புட்டாறு. அத்தோட விடாம இன்னா சொன்னாரு தெரியுமா?  ''லட்சக்கணக்கான மீனை நீ புடிச்சி கொழம்பு வச்சி திங்கற. அதுங்க சாகறத தெனம் பாத்து நொந்து மேக்கி நூடுல்ஸ் ஆன ஜிங்களவன் ஏதோ மனித நேயத்தோட சாம்பிளுக்கு சில நூறு பேரை கொன்னதை எல்லாம் ஒரு பிரச்னைன்னு பேசிக்கிட்டு. நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உன் மனு என் டேபிளை விட்டு ஒரு இஞ்ச் நகராது. முதல்ல செத்துப்போன மீனுக்கு எல்லாம் மெரீனா பீச்சோரம் சமாதி கட்டிட்டு பேச வாங்கடா. அமேதில வாங்கி கட்டிக்கிட்டதுலயே எங்க ஆளுங்க எல்லாருக்கும் பின்னால அவிஞ்சி போயி கெடக்கு. படுவாக்களா.  ஓடிப்போயிடுங்க". 

                                            '2014 தேர்தல் வரை இப்படியே கண்டின்யூ பண்ணு சுனா. பானா.' 

இருக்குற கடுப்பு பத்தாதுன்னு அகில உலக ஆலமரத்தடி பஞ்சாயத்துல அமெரிக்காக்காரன் ஓட்டெடுப்பு நடத்தறானாம். அதுக்கு ஆமாம் சாமி போடச்சொல்லி எங்க ஆளுங்க கூச்சல் போட்டு உங்க மானத்த (கருமம். நமக்கு சம்மந்தம் இல்லாத வார்த்தையா வருது. கீ போர்டை டக்குனு  மாத்தணும். என்னாது 'டக்கு'னா என்னன்னே உங்களுக்கு தெரியாதா. அது வந்து..வந்து..ஹி..ஹி..) உசுர வாங்கறாங்க. "ஆதரிச்சி ஓட்டு போடுவீங்களா இல்ல எதிரா ஓட்டு போடுவீங்களா. ரெண்டும் இல்லாம ஜகா வாங்குவீங்களா?" இப்படி பொசுக்குன்னு கொஞ்சங்கூட ஈவு இரக்கமே இல்லாம 'டக்கு'னு பதில் சொல்ல சொல்றாங்களே...நெஞ்சுல தம்மாதூண்டு கூட ஈரம் இல்லாதவங்க. உங்க வாய தெறக்க வக்க "இத்தனை பேரு கத்தறோம். வாயத்தெறந்து பதில் சொன்னா தேஞ்சா போயிடும்", "செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேட இதுதான் வாய்ப்பு"...இப்படி ஏகப்பட்ட ட்ரிக்ஸ யூஸ் பண்ணி வயலன்ட்டா  கூவுனாலும் சைலண்ட்டா சமோசா சாப்புடுற தெகிரியம் எவனுக்குமே வராது வாத்யாரே. 

இவங்க சொல்றதையெல்லாம் கண்டுக்காதீங்க தலைவா (நான் சொல்லலைனாலும் அதான் நடக்கும்). நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நேத்து மத்யானம் கூட வெளிநாட்ல ஒண்ணாப்பு படிக்கற நம்ம வடநாட்டு பையன் கட்டை வெரலை மட்டும் ஜூம் செஞ்சி நார்த் இன்டியன் நியூஸ் சேனல்ல அடிக்கடி போட்டு காட்டுனாங்க. வெள்ளைக்கார பச்சா ஒருத்தன் பென்சில் சீவுரப்ப ப்ளேடால கீறிட்டானாம். நாலு பெரிய சொட்டு, மூணு மினி சொட்டு ரத்தம் கொட்டி இருக்கு. இத சும்மா விடக்கூடாது தல. அந்த நாட்டு அதிகாரிக்கு ஒடனே சம்மன் அனுப்புங்க. மறக்காம அந்த டயலாக்கையும் பேசிருங்க.."கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்". என்ன கொழுப்பு இருந்தா நார்த் இந்தியன் கை மேல கை வச்சிருப்பான் அந்த சோமாறி. நேரம் ஆயிருச்சி. சீக்கிரம் டி.வி.ல வந்து உன் ஸ்டைல்ல 'மியாவ்'னு கத்திட்டு காணாம போய்டு தலைவா. அப்பதான் ஒண்ணாப்பு படிக்கிற வெள்ளைக்கார பயலுக்கு வெல வெலத்து போகும். 

இப்ப நடக்கற மேட்டரை பத்தி ரொம்ப கொளப்பிக்க வேண்டாம் சாரே. நமக்கு அண்டை நாட்டுடனான சுமூக(!) உறவுதான் முக்கியம். தீர்மானத்தை ஆதரிக்கறதுக்கு முன்ன முன்னூறு முறை யோசிங்க. ஏன்னா சப்பைமூக்கனால நமக்கு 2091-ல ஆபத்து வரும்,  அமெரிக்கா பயலுவ  2099-ல  குட்டித்தீவோரமா டென்ட் அடிக்கற காலமும் வரலாம்.  அப்ப எங்கள யாரு காப்பாத்துவா? நீங்க சொல்றதும் நியாயம்தான். எல்லாம் போயி வேலையப்பாருங்கப்பா. அங்கிள் சிப்ஸ் சாப்புட்டமா, ஐ.பி.எல். பாத்தமான்னு இல்லாம..எப்பப்பாரு டமிலன், டமிலுணர்வு, டமிலீலம்,  டமிலக மீனவன்னு அனத்திக்கிட்டு...ரேஸ்கல்ஸ்!!
......................................................................................


.................................
My other site:
................................Related Posts Plugin for WordPress, Blogger...