வேளச்சேரி என்கவுண்டர் குறித்து சூடான விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடந்து வருகின்றன. திருவல்லிக்கேணி மேன்சன்கள் பலவற்றில் போலீஸ் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றதென அங்கு தங்கி இருக்கும் நண்பர் தெரிவித்தார். கொன்னது சரிதான் என்று பொதுமக்கள் பலர் ஷங்கர் பட க்ளைமாக்ஸ் டயலாக்குகளை உதிர்த்து வருகின்றனர். அம்மக்களை 'நடுத்தர வர்க்க மொக்கைகள்' என்று விளிக்கும் கட்சிசார் கொழுந்துகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மேட்டருக்கு வருவோம். ஏனெனில் சிங்கள அரசு தமிழர் பலரை மாஸ் என்கவுண்டர் செய்கையில் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்த கட்சியை சேர்ந்த ஜகதலப்பிரதாபர்கள் இப்போது மனித உரிமை(!) பற்றி பேசுவதை கண்டால்...வேணாம் விடுங்க. கெரகம்!!
மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று தொடர்ந்து மீடியாக்கள் சங்கு ஊத ஆரம்பிக்கையில், அதிலும் குறிப்பாக சாமான்யனே கொந்தளிக்க தொடங்கியதும் வேறு வழியின்றி சில என்கவுண்டர்களை செய்கிறது அரசு. வேளச்சேரியில் நடைபெற்றது ரியலா, போலியா என்று சந்தேகங்கள் வர ஆரம்பித்து உள்ளன. கேமராவில் பதிவான நபரின் உருவத்திற்கு பின்பு பேக் கிரவுண்ட் காட்சிகள் இல்லாமல் வெள்ளையாக தெரிகிறது.அந்த மர்ம நபரின் உருவத்தை மட்டும் கட் செய்து காட்ட வேண்டிய அவசியம் என்ன? , (பணத்தை) சுட்டவன் உடனே வேறு ஊருக்கு தவ்வாமல் எதற்கு வேளச்சேரியில் பம்மி இருக்க வேண்டும்? துப்பு கிடைத்த அரைமணி நேரத்தில் எப்படி போலீஸ் ரவுண்டு கட்டி அடித்தது? கேள்விகள் பல. ஒருவேளை போலி என்கவுண்டர் என்றால் அது மிகவும் வருந்தத்தக்கதே.
சில நாட்களுக்கு முன்பு கூட தொடர்ந்து சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தன் கணவனை கொன்று போட்டிருக்கிறார். பெற்ற மகளையே கற்பழிக்க வந்த மிருகத்தை தடுக்க வேறு வழி தெரியாமல். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரிலீஸ் செய்துள்ளார் மதுரையின் 'ரியல் அஞ்சா சிங்கம்' அஸ்ரா கார்க். ஐயா.. மனித உரிமை அண்ட் (கொக்கரக்) கோ க்ரூப்பை சேர்ந்தவர்களே, தங்கள் மகளை கற்பழிக்க ஒரு கயவன் முயன்றால் அதை வேடிக்கை பார்த்தவாறு "அன்பின் மன்மதக்குஞ்சு, நடுத்தர வர்க்க மொக்கைகள் போல் சட்டென உணர்ச்சி வசப்பட்டு உங்களை கொல்ல நான் முட்டாள் இல்லை. மனித உரிமை ஆர்வலர். அதற்கான ஐ.டி.கார்ட் உள்ளது. (கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை மட்டும் இன்னும் புதுப்பிக்கவில்லை). நீங்கள் பொறுமையாக ரேப்புங்கள். பிறகு இருவரும் ஆட்டோ பிடித்து போகிற வழியில் கீரை பக்கடா சாப்பிட்டுக்கொண்டே காவல் நிலையம் செல்வோம். ஏனெனில் சட்டப்படிதான் யாரையும் தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று பேசுவீர்களா?
அஸ்ரா கார்க்
போலி என்கவுண்டர் செய்யும் போலீசுக்கு மரண தண்டனை தர வேண்டும் என சில நாட்களுக்கு முன்புதான் சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. அதையும் மீறி வேளச்சேரியில் போலி என்கவுண்டர் செய்ய தமிழக போலீஸ் முடிவெடுத்து இருப்பார்களா என்பதும் நம்முள் எழும் முக்கியமான('முக்கிய' 'மான') கேள்வியே. 'வாழும் வள்ளுவர்(!)' டி.வி. இந்த என்கவுன்டரை போஸ்ட் மார்ட்டம் செய்வது அதிசயமல்ல. கூடவே தவசி டி.வி.யும் "சாமீ..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்" என்று என்கவுன்டரை சந்தேகித்து 'புலன் விசாரணை' நடத்தி வருகிறது. தவசி ஐயா நடித்த பல படங்களில் வில்லன்களை மன்னித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினாரா அல்லது சுட்டு பொசுக்கினாரா என்பது அவர் படத்தை ஒன்று விடாமல் பார்க்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கே வெளிச்சம்!!
விஜயகுமார்
மெகா ஸ்டார் கசாப் முதல் கீழ்கட்டளை சோட்டா கிரிமினல்கள் வரை யாருக்கு ஆபத்து என்றாலும் கொக்கரிக்கும் மனிதநேயர்கள் எத்தனை பேர் காலிப்பயல்களின் தோட்டாவிற்கு நேர்மையான போலீஸ்காரர்கள் உயிரை பலி கொடுக்கையில் இதே தீவிரத்தை காட்டி உள்ளனர்? பொதுமக்கள் தரும் ரியாக்சனுக்கு தானும் சேர்ந்து குரல் தந்தால் ஆட்டு மந்தை ஆகிவிடுவோம் என்பதால் தனித்து நிற்க வேண்டும். அப்போதுதான் நாலு பேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள் எனும் ஒரே அல்ப விளம்பரத்திற்காக கொடூர குற்றவாளிகளுக்கு வால் பிடிக்கும் வானரங்களை உள் நாக்கில் சூட் செய்தாலும் தப்பில்லை!!
என்கவுண்டர்கள் தொடர வேண்டுமா? நிறுத்தப்பட வேண்டுமா? என்கிற பட்டிமன்றம் எல்லாம் அப்பறம். ஆனால் இதைக்கேள்விப்பட்டதும் அடுத்த சில நாட்களுக்கேனும் திருட நினைப்பவன் வாலை சுருட்டிக்கொண்டு சிதறி ஓடி இருப்பானே..அது போதும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் கொள்ளை போவது பிளாட்பாரத்தில் 'வானம் கூரை, பூமி பஞ்சுமெத்தை' என்றிருப்பவனின் பணமோ அல்லது ஊரை அடித்து உலையில் போட்ட திடீர் பணக்காரர்கள் பணமோ அல்ல. வருடக்கணக்கில் நாயாய் உழைத்து பிள்ளைகளின் படிப்பு, திருமணத்திற்கு சேர்த்து வைத்த நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பு. அதை சேர்த்து வைக்க எம் மக்கள் படும் பாட்டை அறியாமல் 'மனிதநேயம்' பேசுபவர்களை என்ன சொல்ல?
'சம்பவம் நடக்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், தம்மை தற்காத்து கொள்ள வேண்டியும் கயவர்களை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது', 'எச்சரிக்கை செய்தும் திருந்தாமல் கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறான். இனி பேசிப்பயன் இல்லை' என்று காவல்துறை கையை பிசைந்து கொண்டு இருக்கும் நேரத்தில்...... சுட்டு தள்ளுங்க சார்!!
'சம்பவம் நடக்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், தம்மை தற்காத்து கொள்ள வேண்டியும் கயவர்களை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது', 'எச்சரிக்கை செய்தும் திருந்தாமல் கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறான். இனி பேசிப்பயன் இல்லை' என்று காவல்துறை கையை பிசைந்து கொண்டு இருக்கும் நேரத்தில்...... சுட்டு தள்ளுங்க சார்!!
................................................................................................
.............................
My other site:
.............................
13 comments:
Semaiyaa irukkuthu sir!!!!!!!!!
உண்மையான குற்றவாளிகளா இருந்தா இந்த என்கவுண்டர் வரவேற்கத்தக்கதே
வணக்கம் சிவா சார்! நியாயம் என்னிக்கு ஜெயிச்சிருக்கு?
அப்படி போட்டு தாக்குங்க....
சரியாய் சொன்னிங்க, சிலரெல்லாம் விளம்பரத்துக்காக என்ன வேனா கூவுங்க அதெல்லாம் கண்டுக்க கூடாது,
ZOOOOOOOOOOppar!!
உங்களைப்போல் அவசரக்குடுக்கைகள் முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் போன்றவற்றை ஒருமுறை சீரியசாக படித்துவிட்டு வாருங்கள்,
அவர்கள் குற்றவாளி என்பதை போலிஸ் மட்டும்தான் சொல்கிறது. வங்கி ஊழியர்கள் சுட்டுக்கொன்றபின் வந்து அடையாளம் காட்டினார்கள் என்கிறார்கள்.
செத்துப்போனவனா இனி வந்து தாங்கள்தான் என சொல்லப்போகிறான்.
வெங்காயங்களா....
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
மிக அருமையான பதிவு...மக்கள் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்......
என்கவுன்ட்டர் வரவேற்க தக்கது அது மிக மிக உண்மையாய் இருக்கும் பொழுது !
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
@ கே.ஆர்.பி.செந்தில்
பதிவை நீங்கள் மீண்டும் படித்து பாருங்கள். போலி என்கவுண்டருக்கு என்னைப்போன்றவர்கள் கொடி பிடிக்கவே இல்லை. தெரிந்தவரின் உயிருக்கோ அல்லது உங்களுக்கோ ஆபத்து நெருங்கினால் மனிதநேயம் பேசிக்கொண்டு இருப்பீர்களா? அல்லது சுடுவீர்களா? எல்லாம் அந்த பெரியாருக்கே வெளிச்சம்.
இதற்கே நீங்கள் இப்படி டென்ஷன் ஆவதைப்பார்த்தால் (அவசரக்குடுக்கை, வெங்காயம்...) 'சத்ரியன்' ஆனால் குறைந்தது 50 தோட்டாகளையாவது பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்துவீர்கள் என்பது திண்ணமாக தெரிகிறது. :)
உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்
பல்சுவை பதிவர்கள்
Post a Comment